Loading...

Loading...
நூல்கள்
௪௦ ஹதீஸ்கள்
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் நாங்கள் எண்ணியிருக்கவில்லை. (மக்காவுக்கு அருகிலுள்ள) ‘சரிஃப்’ எனும் இடத்தில் நாங்கள் இருந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதுகொண்டிருக்கவே, “உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மாதவிடாய்), அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு எழுதிவிட்ட விதி யாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தை யும் நீயும் நிறைவேற்று. ஆனால், இறையில்லம் கஅபாவை மட்டும் சுற்றி (தவாஃப்) வராதே” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின்போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا سفيان، قال سمعت عبد الرحمن بن القاسم، قال سمعت القاسم، يقول سمعت عايشة، تقول خرجنا لا نرى الا الحج، فلما كنا بسرف حضت، فدخل على رسول الله صلى الله عليه وسلم وانا ابكي قال " ما لك انفست ". قلت نعم. قال " ان هذا امر كتبه الله على بنات ادم، فاقضي ما يقضي الحاج، غير ان لا تطوفي بالبيت ". قالت وضحى رسول الله صلى الله عليه وسلم عن نسايه بالبقر
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு தலை வாரிவிடுவேன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال حدثنا مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، قالت كنت ارجل راس رسول الله صلى الله عليه وسلم وانا حايض
ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் எனக்குப் பணிவிடை செய்யலாமா? அல்லது பெருந்துடக்குடைய (குளியல் கடமையான) மனைவி என்னை நெருங்கலாமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “இதுவெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் இயல்பான விஷயம்தான். (மாதவிடாய் அல்லது பெருந்துடக்கு ஏற்பட்ட என் மனைவியர்) ஒவ்வொருவரும் எனக்குப் பணிவிடை செய்துகொண்டுதானிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதில் எவர்மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில்(கூட) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலை வாரிவிட்டுள்ளார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் ‘இஃதிகாஃப்’ இருந்துகொண்டிருந்தார்கள். (பள்ளிவாசலை ஒட்டி அமைந்துள்ள) தமது அறையி-ருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் தமது தலையை நீட்ட, மாதவிடாய் நிலையி-ருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் நபியவர் களுக்குத் தலைவாரி விடுவார்கள். இதை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، قال اخبرنا هشام بن يوسف، ان ابن جريج، اخبرهم قال اخبرني هشام، عن عروة، انه سيل اتخدمني الحايض او تدنو مني المراة وهى جنب فقال عروة كل ذلك على هين، وكل ذلك تخدمني، وليس على احد في ذلك باس، اخبرتني عايشة انها كانت ترجل تعني راس رسول الله صلى الله عليه وسلم وهي حايض، ورسول الله صلى الله عليه وسلم حينيذ مجاور في المسجد، يدني لها راسه وهى في حجرتها، فترجله وهى حايض
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் என் மடியில் தலை வைத்துப் படுத்துக்கொண்டு குர்ஆன் ஓதுவார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم الفضل بن دكين، سمع زهيرا، عن منصور ابن صفية، ان امه، حدثته ان عايشة حدثتها ان النبي صلى الله عليه وسلم كان يتكي في حجري وانا حايض، ثم يقرا القران
நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன், கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஒரு கறுப்புப் போர்வைக்குள் படுத்திருந்தேன். அப்போது எனக்கு மாதவிடாய் ஏற் பட்டுவிட்டது. உடனே நான் (அங்கிருந்து) மெல்ல நழுவி(ச் சென்று) மாதவிடாய்(க் கால)த் துணியை எடுத்து (அணிந்து) கொண்டேன். “உனக்கு மாதவிடாய் (நிஃபாஸ்) ஏற்பட்டுவிட்டதா?” என்று நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். அப்போது அவர்கள் என்னை (தம்மருகில்) அழைத்தார்கள். நான் (சென்று) அவர்களுடன் அந்தக் கறுப்புப் போர்வைக்குள் படுத்துக்கொண்டேன். அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، قال حدثنا هشام، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، ان زينب ابنة ام سلمة، حدثته ان ام سلمة حدثتها قالت، بينا انا مع النبي، صلى الله عليه وسلم مضطجعة في خميصة اذ حضت، فانسللت فاخذت ثياب حيضتي قال " انفست ". قلت نعم. فدعاني فاضطجعت معه في الخميلة
حدثنا قبيصة، قال حدثنا سفيان، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عايشة، قالت كنت اغتسل انا والنبي، صلى الله عليه وسلم من اناء واحد، كلانا جنب. وكان يامرني فاتزر، فيباشرني وانا حايض. وكان يخرج راسه الى وهو معتكف، فاغسله وانا حايض
حدثنا قبيصة، قال حدثنا سفيان، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عايشة، قالت كنت اغتسل انا والنبي، صلى الله عليه وسلم من اناء واحد، كلانا جنب. وكان يامرني فاتزر، فيباشرني وانا حايض. وكان يخرج راسه الى وهو معتكف، فاغسله وانا حايض
حدثنا قبيصة، قال حدثنا سفيان، عن منصور، عن ابراهيم، عن الاسود، عن عايشة، قالت كنت اغتسل انا والنبي، صلى الله عليه وسلم من اناء واحد، كلانا جنب. وكان يامرني فاتزر، فيباشرني وانا حايض. وكان يخرج راسه الى وهو معتكف، فاغسله وانا حايض
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ள போது, அவரை அணைத்துக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினால், மாதவிடாய் (இரத்தம் கொட்டும்) ஆரம்ப வேளையில் கீழாடையை அணிந்துகொள்ளுமாறு கட்டளையிடுவார்கள். பின்னர் அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டதைப் போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைக்கு மேல்தான் அனுபவித்தார்கள்.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسماعيل بن خليل، قال اخبرنا علي بن مسهر، قال اخبرنا ابو اسحاق هو الشيباني عن عبد الرحمن بن الاسود، عن ابيه، عن عايشة، قالت كانت احدانا اذا كانت حايضا، فاراد رسول الله صلى الله عليه وسلم ان يباشرها، امرها ان تتزر في فور حيضتها ثم يباشرها. قالت وايكم يملك اربه كما كان النبي صلى الله عليه وسلم يملك اربه. تابعه خالد وجرير عن الشيباني
மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரை -அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது- அணைத்துக்கொள்ள விரும்பினால், கீழாடையைக் கட்டிக்கொள்ளுமாறு கட்டளையிடுவார்கள். இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو النعمان، قال حدثنا عبد الواحد، قال حدثنا الشيباني، قال حدثنا عبد الله بن شداد، قال سمعت ميمونة، كان رسول الله صلى الله عليه وسلم اذا اراد ان يباشر امراة من نسايه امرها فاتزرت وهى حايض. ورواه سفيان عن الشيباني
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ அல்லது ‘நோன்புப் பெருநாள்’ அன்று தொழுகைத் திடலுக்கு (‘முஸல்லா’) புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர் களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட (கவர்ச்சியால்) மழுங்கவைப்பவர்களாகவும் (பெண்களாகிய) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள். அப்போதும் அப்பெண்கள், “மார்க்கத் திலும் அறிவிலும் எங்களிடமுள்ள குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண் களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத் தில் பாதியல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதிதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறிவிட்டு, “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்டார்கள். அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறை பாடாகும்” என்று கூறினார்கள் அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، قال اخبرنا محمد بن جعفر، قال اخبرني زيد هو ابن اسلم عن عياض بن عبد الله، عن ابي سعيد الخدري، قال خرج رسول الله صلى الله عليه وسلم في اضحى او فطر الى المصلى، فمر على النساء فقال " يا معشر النساء تصدقن، فاني اريتكن اكثر اهل النار ". فقلن وبم يا رسول الله قال " تكثرن اللعن، وتكفرن العشير، ما رايت من ناقصات عقل ودين اذهب للب الرجل الحازم من احداكن ". قلن وما نقصان ديننا وعقلنا يا رسول الله قال " اليس شهادة المراة مثل نصف شهادة الرجل ". قلن بلى. قال " فذلك من نقصان عقلها، اليس اذا حاضت لم تصل ولم تصم ". قلن بلى. قال " فذلك من نقصان دينها
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (‘விடைபெறும்’) ஹஜ் செய்யும் எண்ணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் (மதீனாவி-ருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவுக்கு அருகிலுள்ள) ‘சரிஃப்’ எனும் இடத்துக்கு நாங்கள் வந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இந்நிலை யில் நான் அழுதுகொண்டிருந்தேன். அப்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து, “ஏன் அழுகிறாய்?” என்று கேட்டார்கள். நான், “இந்த ஆண்டு அல்லாஹ்வின் மீதாணையாக! என்னால் ஹஜ் செய்ய முடியாது என்றே நினைக்கிறேன்” என்றேன். “உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?” என்று கேட்டார்கள். நான் “ஆம்” என்றேன். நபி (ஸல்) அவர்கள், “இது ஆதமின் பெண் மக்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட ஒன்றாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தையும் நீயும் நிறைவேற்றிக்கொள். ஆயினும், தூய்மை யாகும்வரை இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வராதே” என்றார்கள் அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا عبد العزيز بن ابي سلمة، عن عبد الرحمن بن القاسم، عن القاسم بن محمد، عن عايشة، قالت خرجنا مع النبي صلى الله عليه وسلم لا نذكر الا الحج، فلما جينا سرف طمثت، فدخل على النبي صلى الله عليه وسلم وانا ابكي فقال {ما يبكيك}. قلت لوددت والله اني لم احج العام. قال {لعلك نفست}. قلت نعم. قال " فان ذلك شىء كتبه الله على بنات ادم، فافعلي ما يفعل الحاج، غير ان لا تطوفي بالبيت حتى تطهري
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! (நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் பெண் ஆவேன்; தொடர்ந்து எனக்கு உதிரப் போக்கு ஏற்பட்டுக்கொண்டிருப்பதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இல்லை; தொழுகையை விட்டுவிடாதே. ஏனெனில்,) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; மாத விடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு. (உனக்குரிய) மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுதுகொள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، انها قالت قالت فاطمة بنت ابي حبيش لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله اني لا اطهر، افادع الصلاة فقال رسول الله صلى الله عليه وسلم " انما ذلك عرق وليس بالحيضة، فاذا اقبلت الحيضة فاتركي الصلاة، فاذا ذهب قدرها فاغسلي عنك الدم وصلي
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒரு பெண்ணின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், (அது காய்ந்துவிட்டிருந்தால்) அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் (சிறிது சிறிதாகத்) தண்ணீர் தெளித்து(க் கழுவி)க்கொள்ளட்டும்! பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن هشام، عن فاطمة بنت المنذر، عن اسماء بنت ابي بكر، انها قالت سالت امراة رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله، ارايت احدانا اذا اصاب ثوبها الدم من الحيضة، كيف تصنع فقال رسول الله صلى الله عليه وسلم " اذا اصاب ثوب احداكن الدم من الحيضة، فلتقرصه ثم لتنضحه بماء، ثم لتصلي فيه
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்படும்போது, அவர் தமது ஆடையில் இரத்தம் பட்ட இடத்தைச் சுத்தம் செய்ய நினைத்தால், ஆடையி-ருந்து (காய்ந்துவிட்ட) இரத்தத்தைச் சுரண்டிவிட்டு, அந்த இடத்தைக் கழுவுவார். பின்னர் (மன நிம்மதிக்காக) ஆடை யின் மற்ற பகுதிகளிலும் தண்ணீர் தெளித்து, அந்த ஆடையுடன் (மாத விடாய் குளியலுக்குப்பின்) தொழுது கொள்வார். அத்தியாயம் :
حدثنا اصبغ، قال اخبرني ابن وهب، قال اخبرني عمرو بن الحارث، عن عبد الرحمن بن القاسم، حدثه عن ابيه، عن عايشة، قالت كانت احدانا تحيض، ثم تقترص الدم من ثوبها عند طهرها فتغسله، وتنضح على سايره، ثم تصلي فيه
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ல்) நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் துணைவியரில் ஒருவர் ‘இஃதிகாஃப்’ இருந்தார். அவர் உயர் இரத்தப்போக்கி னால் இரத்தத்தைக் காண்பவராயிருந்தார். இந்நிலையில் சில சமயங்களில் இரத்தத் தின் காரணமாகத் தமக்குக் கீழே கையலம்பும் பாத்திரத்தை அவர் வைப்பார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான கா-த் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “ஆயிஷா (ரலி) அவர்கள் (ஒரு முறை) குசும்பப் பூவின் (சாய) நீரைப் பார்த்துவிட்டு, “இ(தன் நிறமான)து இன்னவளுக்கு ஏற்படுகின்ற ஒன்றைப் போன்றதுதான்” என்று குறிப்பிட்டதாகவும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق، قال حدثنا خالد بن عبد الله، عن خالد، عن عكرمة، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم اعتكف معه بعض نسايه وهى مستحاضة ترى الدم، فربما وضعت الطست تحتها من الدم. وزعم ان عايشة رات ماء العصفر فقالت كان هذا شىء كانت فلانة تجده
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களுடைய துணைவியரில் ஒருவர் ‘இஃதிகாஃப்’ இருந்தார். அப்போது அவர் குசும்பப் பூவின் நீரின் நிறத்தில் உதிரப்போக்கைக் காண்பவராக இருந்தார். அவர் தொழும்போது அவருக்குக் கீழே கையலம்பும் பாத்திரம் இருக்கும். அத்தியாயம் :
حدثنا قتيبة، قال حدثنا يزيد بن زريع، عن خالد، عن عكرمة، عن عايشة، قالت اعتكفت مع رسول الله صلى الله عليه وسلم امراة من ازواجه، فكانت ترى الدم والصفرة، والطست تحتها وهى تصلي
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: இறைநம்பிக்கையாளர்களின் அன்னை யரில் (நபியவர்களின் துணைவியரில்) ஒருவர் உயர் இரத்தப்போக்கு உடையவ ராய் இருக்கும் நிலையில் ‘இஃதிகாஃப்’ இருந்தார். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا معتمر، عن خالد، عن عكرمة، عن عايشة، ان بعض، امهات المومنين اعتكفت وهى مستحاضة
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் சிலருக்கு ஒரேயோர் ஆடை மட்டுமே இருக்கும். அதில்தான் அவருக்கு மாதவிடாய் ஏற்படும். இரத்தம் ஏதேனும் அந்த ஆடையில் பட்டு(க் காய்ந்து)விட்டால், தமது உமிழ் நீரைத் தொட்டு அந்த இடத்தில் வைத்துத் தமது நகத்தால் சுரண்டிவிடுவார். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، قال حدثنا ابراهيم بن نافع، عن ابن ابي نجيح، عن مجاهد، قال قالت عايشة ما كان لاحدانا الا ثوب واحد تحيض فيه، فاذا اصابه شىء من دم، قالت بريقها فقصعته بظفرها
உம்மு அத்திய்யா நுசைபா பின்த் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறந்துபோன எவருக்காகவும் மூன்று நாட்களுக்குமேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென (பெண்களாகிய) நாங்கள் (நபியவர்களால்) தடை விதிக்கப்பட்டிருந்தோம்; ஆனால், (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்களில்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ, சாயமிட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால், நெய்வதற்குமுன் நூ-ல் சாயமிடப்பட்ட (‘அஸ்ப்’ எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்து கொள்ளலாம்.) எங்களில் ஒரு பெண் குளித்து மாதவிடாயி-ருந்து தூய்மையடையும் போது, ‘ளிஃபார்’ நகரத்து (யமன்) ‘குஸ்த்’ (ஜாதிக் கோஷ்டக்) கட்டைத் துண்டைப் பயன்படுத்திக்கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், நாங்கள் ‘ஜனாஸா’வைத் தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடை விதிக்கப்பட்டி ருந்தோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن عبد الوهاب، قال حدثنا حماد بن زيد، عن ايوب، عن حفصة قال ابو عبد الله او هشام بن حسان عن حفصة، عن ام عطية قالت كنا ننهى ان نحد على ميت فوق ثلاث، الا على زوج اربعة اشهر وعشرا، ولا نكتحل ولا نتطيب ولا نلبس ثوبا مصبوغا الا ثوب عصب، وقد رخص لنا عند الطهر اذا اغتسلت احدانا من محيضها في نبذة من كست اظفار، وكنا ننهى عن اتباع الجنايز. قال رواه هشام بن حسان عن حفصة عن ام عطية عن النبي صلى الله عليه وسلم