ஹதீஸ்கள்
#313
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
உம்மு அத்திய்யா நுசைபா பின்த் கஅப் (ரலி) அவர்கள் கூறியதாவது: இறந்துபோன எவருக்காகவும் மூன்று நாட்களுக்குமேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென (பெண்களாகிய) நாங்கள் (நபியவர்களால்) தடை விதிக்கப்பட்டிருந்தோம்; ஆனால், (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்களில்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ, சாயமிட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால், நெய்வதற்குமுன் நூ-ல் சாயமிடப்பட்ட (‘அஸ்ப்’ எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்து கொள்ளலாம்.) எங்களில் ஒரு பெண் குளித்து மாதவிடாயி-ருந்து தூய்மையடையும் போது, ‘ளிஃபார்’ நகரத்து (யமன்) ‘குஸ்த்’ (ஜாதிக் கோஷ்டக்) கட்டைத் துண்டைப் பயன்படுத்திக்கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. மேலும், நாங்கள் ‘ஜனாஸா’வைத் தொடர்ந்து செல்ல வேண்டாமெனத் தடை விதிக்கப்பட்டி ருந்தோம். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن عبد الوهاب، قال حدثنا حماد بن زيد، عن ايوب، عن حفصة قال ابو عبد الله او هشام بن حسان عن حفصة، عن ام عطية قالت كنا ننهى ان نحد على ميت فوق ثلاث، الا على زوج اربعة اشهر وعشرا، ولا نكتحل ولا نتطيب ولا نلبس ثوبا مصبوغا الا ثوب عصب، وقد رخص لنا عند الطهر اذا اغتسلت احدانا من محيضها في نبذة من كست اظفار، وكنا ننهى عن اتباع الجنايز. قال رواه هشام بن حسان عن حفصة عن ام عطية عن النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #313
- Book Index
- 18
Grades
- -
