ஹதீஸ்கள்
#302
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் துணைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ள போது, அவரை அணைத்துக்கொள்ள அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரும்பினால், மாதவிடாய் (இரத்தம் கொட்டும்) ஆரம்ப வேளையில் கீழாடையை அணிந்துகொள்ளுமாறு கட்டளையிடுவார்கள். பின்னர் அவரை அணைத்துக் கொள்வார்கள். நபி (ஸல்) அவர்கள் தமது மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டதைப் போன்று உங்களில் யார் தமது மனதைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியும்? (அவ்வாறிருந்தும் ஆடைக்கு மேல்தான் அனுபவித்தார்கள்.) இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسماعيل بن خليل، قال اخبرنا علي بن مسهر، قال اخبرنا ابو اسحاق هو الشيباني عن عبد الرحمن بن الاسود، عن ابيه، عن عايشة، قالت كانت احدانا اذا كانت حايضا، فاراد رسول الله صلى الله عليه وسلم ان يباشرها، امرها ان تتزر في فور حيضتها ثم يباشرها. قالت وايكم يملك اربه كما كان النبي صلى الله عليه وسلم يملك اربه. تابعه خالد وجرير عن الشيباني
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #302
- Book Index
- 7
Grades
- -
