ஹதீஸ்கள்
#309
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாச-ல்) நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் துணைவியரில் ஒருவர் ‘இஃதிகாஃப்’ இருந்தார். அவர் உயர் இரத்தப்போக்கி னால் இரத்தத்தைக் காண்பவராயிருந்தார். இந்நிலையில் சில சமயங்களில் இரத்தத் தின் காரணமாகத் தமக்குக் கீழே கையலம்பும் பாத்திரத்தை அவர் வைப்பார். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான கா-த் பின் மிஹ்ரான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: “ஆயிஷா (ரலி) அவர்கள் (ஒரு முறை) குசும்பப் பூவின் (சாய) நீரைப் பார்த்துவிட்டு, “இ(தன் நிறமான)து இன்னவளுக்கு ஏற்படுகின்ற ஒன்றைப் போன்றதுதான்” என்று குறிப்பிட்டதாகவும் இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق، قال حدثنا خالد بن عبد الله، عن خالد، عن عكرمة، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم اعتكف معه بعض نسايه وهى مستحاضة ترى الدم، فربما وضعت الطست تحتها من الدم. وزعم ان عايشة رات ماء العصفر فقالت كان هذا شىء كانت فلانة تجده
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #309
- Book Index
- 14
Grades
- -
