ஹதீஸ்கள்
#306
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: பாத்திமா பின்த் அபீஹுபைஷ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! (நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) ஏற்படும் பெண் ஆவேன்; தொடர்ந்து எனக்கு உதிரப் போக்கு ஏற்பட்டுக்கொண்டிருப்பதால்) நான் சுத்தமாவதில்லை. நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இல்லை; தொழுகையை விட்டுவிடாதே. ஏனெனில்,) இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும்; மாத விடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு. (உனக்குரிய) மாதவிடாய்க் காலம் கழிந்ததும் இரத்தத்தைக் கழுவிவிட்டுத் தொழுதுகொள்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن هشام بن عروة، عن ابيه، عن عايشة، انها قالت قالت فاطمة بنت ابي حبيش لرسول الله صلى الله عليه وسلم يا رسول الله اني لا اطهر، افادع الصلاة فقال رسول الله صلى الله عليه وسلم " انما ذلك عرق وليس بالحيضة، فاذا اقبلت الحيضة فاتركي الصلاة، فاذا ذهب قدرها فاغسلي عنك الدم وصلي
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #306
- Book Index
- 11
Grades
- -
