ஹதீஸ்கள்
#294
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (‘விடைபெறும்’ ஹஜ்ஜுக்காகப்) புறப்பட்டுச் சென்றோம். ஹஜ்ஜைத் தவிர வேறெதையும் நாங்கள் எண்ணியிருக்கவில்லை. (மக்காவுக்கு அருகிலுள்ள) ‘சரிஃப்’ எனும் இடத்தில் நாங்கள் இருந்தபோது, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. இந்நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அப்போது நான் அழுதுகொண்டிருக்கவே, “உனக்கு என்ன நேர்ந்தது? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?” என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இது (மாதவிடாய்), அல்லாஹ் ஆதமின் பெண் மக்களுக்கு எழுதிவிட்ட விதி யாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் (கிரியைகள்) அனைத்தை யும் நீயும் நிறைவேற்று. ஆனால், இறையில்லம் கஅபாவை மட்டும் சுற்றி (தவாஃப்) வராதே” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்த ஹஜ்ஜின்போது) தம் மனைவியர் சார்பாக மாட்டை அறுத்(து குர்பானி கொடுத்)தார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، قال حدثنا سفيان، قال سمعت عبد الرحمن بن القاسم، قال سمعت القاسم، يقول سمعت عايشة، تقول خرجنا لا نرى الا الحج، فلما كنا بسرف حضت، فدخل على رسول الله صلى الله عليه وسلم وانا ابكي قال " ما لك انفست ". قلت نعم. قال " ان هذا امر كتبه الله على بنات ادم، فاقضي ما يقضي الحاج، غير ان لا تطوفي بالبيت ". قالت وضحى رسول الله صلى الله عليه وسلم عن نسايه بالبقر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #294
- Book Index
- 1
Grades
- -
