ஹதீஸ்கள்
#307
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு பெண் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒரு பெண்ணின் ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், அவள் என்ன செய்ய வேண்டும், என்கிறீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் ஒரு பெண்ணுடைய ஆடையில் மாதவிடாய் இரத்தம் பட்டு விட்டால், (அது காய்ந்துவிட்டிருந்தால்) அதைச் சுரண்டிவிட்டுப் பின்னர் அந்த இடத்தில் (சிறிது சிறிதாகத்) தண்ணீர் தெளித்து(க் கழுவி)க்கொள்ளட்டும்! பின்னர் அந்த ஆடையுடன் தொழுது கொள்ளட்டும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، قال اخبرنا مالك، عن هشام، عن فاطمة بنت المنذر، عن اسماء بنت ابي بكر، انها قالت سالت امراة رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله، ارايت احدانا اذا اصاب ثوبها الدم من الحيضة، كيف تصنع فقال رسول الله صلى الله عليه وسلم " اذا اصاب ثوب احداكن الدم من الحيضة، فلتقرصه ثم لتنضحه بماء، ثم لتصلي فيه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #307
- Book Index
- 12
Grades
- -
