ஹதீஸ்கள்
#296
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (என் தந்தை) உர்வா (ரஹ்) அவர்களிடம், “மாதவிடாய் ஏற்பட்டுள்ள ஒரு பெண் எனக்குப் பணிவிடை செய்யலாமா? அல்லது பெருந்துடக்குடைய (குளியல் கடமையான) மனைவி என்னை நெருங்கலாமா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு, “இதுவெல்லாம் என்னைப் பொறுத்தவரையில் இயல்பான விஷயம்தான். (மாதவிடாய் அல்லது பெருந்துடக்கு ஏற்பட்ட என் மனைவியர்) ஒவ்வொருவரும் எனக்குப் பணிவிடை செய்துகொண்டுதானிருக்கிறார்கள். அவ்வாறு செய்வதில் எவர்மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில்(கூட) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தலை வாரிவிட்டுள்ளார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-ல் ‘இஃதிகாஃப்’ இருந்துகொண்டிருந்தார்கள். (பள்ளிவாசலை ஒட்டி அமைந்துள்ள) தமது அறையி-ருக்கும் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அவர்கள் தமது தலையை நீட்ட, மாதவிடாய் நிலையி-ருந்த ஆயிஷா (ரலி) அவர்கள் நபியவர் களுக்குத் தலைவாரி விடுவார்கள். இதை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்” என்று உர்வா (ரஹ்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #296
- Book Index
- 3
Grades
- -