ஹதீஸ்கள்
#304
ஸஹீஹ் அல்-புகாரீ - Menstrual Periods
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஹஜ்ஜுப் பெருநாள்’ அல்லது ‘நோன்புப் பெருநாள்’ அன்று தொழுகைத் திடலுக்கு (‘முஸல்லா’) புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, “பெண்கள் சமுதாயமே! தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில், நரகவாசிகளில் நீங்களே அதிக எண்ணிக்கையில் எனக்குக் காட்டப் பட்டீர்கள்” என்று குறிப்பிட்டார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?” எனப் பெண்கள் கேட்டதும். “நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனிடம் நன்றி இல்லாதவர்களாக நடந்துகொள்கிறீர்கள். அறிவிலும் மார்க்கத்திலும் குறைபாடுள்ளவர் களாகவும், தீர்க்கமான யோசனை உடைய ஆண்களின் கூர்மையான அறிவைக்கூட (கவர்ச்சியால்) மழுங்கவைப்பவர்களாகவும் (பெண்களாகிய) உங்களைப் போன்று வேறு யாரையும் நான் கண்டதில்லை” என்று கூறினார்கள். அப்போதும் அப்பெண்கள், “மார்க்கத் திலும் அறிவிலும் எங்களிடமுள்ள குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். “பெண் களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத் தில் பாதியல்லவா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், “ஆம் (பாதிதான்)” என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது தான் அவளது அறிவின் குறைபாடாகும்” என்று கூறிவிட்டு, “ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?” என்று கேட்டார்கள். அப்பெண்கள் “ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)” என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறை பாடாகும்” என்று கூறினார்கள் அத்தியாயம் :
حدثنا سعيد بن ابي مريم، قال اخبرنا محمد بن جعفر، قال اخبرني زيد هو ابن اسلم عن عياض بن عبد الله، عن ابي سعيد الخدري، قال خرج رسول الله صلى الله عليه وسلم في اضحى او فطر الى المصلى، فمر على النساء فقال " يا معشر النساء تصدقن، فاني اريتكن اكثر اهل النار ". فقلن وبم يا رسول الله قال " تكثرن اللعن، وتكفرن العشير، ما رايت من ناقصات عقل ودين اذهب للب الرجل الحازم من احداكن ". قلن وما نقصان ديننا وعقلنا يا رسول الله قال " اليس شهادة المراة مثل نصف شهادة الرجل ". قلن بلى. قال " فذلك من نقصان عقلها، اليس اذا حاضت لم تصل ولم تصم ". قلن بلى. قال " فذلك من نقصان دينها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Menstrual Periods
- Hadith Index
- #304
- Book Index
- 9
Grades
- -
