Loading...

Loading...
நூல்கள்
௧௬௩ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (ஒருமுறை) என்னிடம் நடுக்கத்துடன் வந்து, ‘‘அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை. நெருங்கிவிட்ட ஒரு தீமையின் காரணத்தால் அரபியருக்குக் கேடு நேரவிருக்கின்றது. இன்று யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவர் இதைப் போல் திறக்கப்பட்டுவிட்டது” என்று தம் கட்டை விரலையும் அதற்கடுத்துள்ள விரலையும் இணைத்து வளையமிட்டுக் காட்டியபடி கூறினார்கள். அப்போது நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நம்மிடையே நல்லவர்கள் இருக்க, நாம் அழிந்துவிடுவோமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘‘ஆம்; தீமை பெருகிவிட்டால்...” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، عن عروة بن الزبير، ان زينب ابنة ابي سلمة، حدثته عن ام حبيبة بنت ابي سفيان، عن زينب ابنة جحش رضى الله عنهن ان النبي صلى الله عليه وسلم دخل عليها فزعا يقول " لا اله الا الله، ويل للعرب من شر قد اقترب فتح اليوم من ردم ياجوج وماجوج مثل هذه ". وحلق باصبعه الابهام والتي تليها. قالت زينب ابنة جحش فقلت يا رسول الله انهلك وفينا الصالحون قال " نعم، اذا كثر الخبث
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரின் தடைச் சுவரிலிருந்து அல்லாஹ் இதைப்போல் (சிறிது) திறந்துவிட்டான்” என்று கூறி தமது கையால் (அரபி எண் வடிவில்) 90 என்று மடித்துக்காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا مسلم بن ابراهيم، حدثنا وهيب، حدثنا ابن طاوس، عن ابيه، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " فتح الله من ردم ياجوج وماجوج مثل هذا ". وعقد بيده تسعين
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம் (அலை) அவர்களை நோக்கி, ‘‘ஆதமே!” என்பான். அதற்கு அவர்கள், ‘‘இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், ‘‘நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்” என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள், ‘‘நரகவாசிகளில் எத்தனை பேரை?” என்று கேட்பார்கள். அதற்கு அவன், ‘‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத்தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டுவாருங்கள்)” என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுவான்; கர்ப்பமுள்ள பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதை யுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.” (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நற்செய்தி பெறுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளி யேறாமல் அதனுள்) இருப்பார்கள்.23 பிறகு, என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) ‘‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். உடனே அவர்கள், ‘‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அவர்கள், ‘‘சொர்க்கவாசி களில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அப்போது அவர்கள், ‘‘நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போலத்தான் இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போலத்தான் (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்” என்று கூறினார்கள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني اسحاق بن نصر، حدثنا ابو اسامة، عن الاعمش، حدثنا ابو صالح، عن ابي سعيد الخدري رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " يقول الله تعالى يا ادم. فيقول لبيك وسعديك والخير في يديك. فيقول اخرج بعث النار. قال وما بعث النار قال من كل الف تسعماية وتسعة وتسعين، فعنده يشيب الصغير، وتضع كل ذات حمل حملها، وترى الناس سكارى، وما هم بسكارى، ولكن عذاب الله شديد ". قالوا يا رسول الله واينا ذلك الواحد قال " ابشروا فان منكم رجل، ومن ياجوج وماجوج الف ". ثم قال " والذي نفسي بيده، اني ارجو ان تكونوا ربع اهل الجنة ". فكبرنا. فقال " ارجو ان تكونوا ثلث اهل الجنة ". فكبرنا. فقال " ارجو ان تكونوا نصف اهل الجنة ". فكبرنا. فقال " ما انتم في الناس الا كالشعرة السوداء في جلد ثور ابيض، او كشعرة بيضاء في جلد ثور اسود
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் (மறுமை நாளில் காலில்) செருப்பணியாதவர்களாகவும் நிர்வாண மானவர்களாகவும், ஆண் குறிகளின் நுனித் தோல் நீக்கப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். பிறகு, ‘‘நாம் முதன் முதலாகப் படைத்ததைப் போன்றே அதை மீண்டும் படைப்போம். இது நம்மீது (பொறுப்பாகிவிட்ட நமது) வாக்குறுதியாகும். இதை நாம் நிச்சயம் செய்யவிருக்கின் றோம்” (21:104) என்னும் இறைவசனத்தை ஓதினார்கள். மறுமை நாளில் (நபிமார்களில்) முதன் முதலாக (சொர்க்கத்தின்) ஆடை அணிவிக் கப்படுபவர்கள் இப்ராஹீம் அவர்கள் ஆவார். என் தோழர்களில் சிலர் இடப் பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், ‘‘இவர்கள் என் தோழர்கள். இவர்கள் என் தோழர்கள்” என்று (அவர் களை விட்டுவிடும்படி) கூறுவேன். அப்போது, ‘‘தாங்கள் இவர்களைப் பிரிந்(து மரணித்)ததிலிருந்து இவர்கள் தம் மார்க்கத்தைவிட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்” என்று கூறப்படும். அப்போது, (அல்லாஹ்வின்) நல்லடியார் (ஈசா (அலை) அவர்கள்) கூறியதைப் போல், ‘‘நான் அவர்களோடு இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்ப வனாக இருந்தேன். நீ என்னைத் திரும்ப அழைத்துக்கொண்டபோது நீயே அவர்களையும் கண்காணிப்பவனாக இருந்தாய். மேலும், நீ (இப்போது) அவர்களுக்குத் தண்டனை அளித்தால் அவர்கள் நிச்சயமாக உன் அடிமைகளே. நீ அவர்களை மன்னித்தாலும் (அப்போதும்) நீயே யாவற்றையும் மிகைத்தவனும் நுண்ணறிவுடையவனுமாய் இருக்கின்றாய்” (5:117லி118) எனும் இறைவசனங்களை (பதிலாக)க் கூறுவேன். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، حدثنا المغيرة بن النعمان، قال حدثني سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " انكم محشورون حفاة عراة غرلا ثم قرا – {كما بدانا اول خلق نعيده وعدا علينا انا كنا فاعلين} واول من يكسى يوم القيامة ابراهيم، وان اناسا من اصحابي يوخذ بهم ذات الشمال فاقول اصحابي اصحابي. فيقول، انهم لم يزالوا مرتدين على اعقابهم منذ فارقتهم. فاقول كما قال العبد الصالح {وكنت عليهم شهيدا ما دمت فيهم} الى قوله {الحكيم}
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும் புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நான் உங்களிடம், எனக்கு மாறுசெய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?” என்று கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை, ‘‘இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்” என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்தமாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையைவிட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக் கூடியது?” என்று கேட்பார்கள். அப்போது உயர்ந்தோன் அல்லாஹ் இப்ராஹீம் (அலை) அவர்களிடம், ‘‘நான் சொர்க்கத்தை இறைமறுப்பாளர்களுக்குத் தடை செய்துவிட்டேன் (ஹராமாக்கிவிட்டேன்)” என்று பதிலளிப்பான். பிறகு ‘‘இப்ராஹீமே! உம்முடைய கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறதென்று பார்ப்பீராக!” என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது, அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.25 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل بن عبد الله، قال اخبرني اخي عبد الحميد، عن ابن ابي ذيب، عن سعيد المقبري، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " يلقى ابراهيم اباه ازر يوم القيامة، وعلى وجه ازر قترة وغبرة، فيقول له ابراهيم الم اقل لك لا تعصني فيقول ابوه فاليوم لا اعصيك. فيقول ابراهيم يا رب، انك وعدتني ان لا تخزيني يوم يبعثون، فاى خزى اخزى من ابي الابعد فيقول الله تعالى اني حرمت الجنة على الكافرين، ثم يقال يا ابراهيم ما تحت رجليك فينظر فاذا هو بذيخ ملتطخ، فيوخذ بقوايمه فيلقى في النار
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவினுள் நுழைந்தார்கள். அங்கு இப்ராஹீம் (அலை) அவர்களின் உருவப் படத்தையும் மரியம் (அலை) அவர்களின் உருவப் படத்தையும் கண்டார்கள். அப்போது, இந்தக் குறைஷியரோ உருவம் உள்ள வீட்டில் (இறை கருணை யைக் கொணரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதைக் கேள்விப்பட்டி ருக்கிறார்களே! இது இப்ராஹீமின் உருவம். (இதில், அவர் தம் கையில் இருக்கும் அம்புகளால்) குறி சொல்பவராக நிற்கிறாரே அவருக்கென்ன? (அவருக்கும் குறி சொல்வதற்கும் என்ன சம்பந்தம்?)” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى بن سليمان، قال حدثني ابن وهب، قال اخبرني عمرو، ان بكيرا، حدثه عن كريب، مولى ابن عباس عن ابن عباس رضى الله عنهما قال دخل النبي صلى الله عليه وسلم البيت فوجد فيه صورة ابراهيم وصورة مريم فقال " اما لهم، فقد سمعوا ان الملايكة لا تدخل بيتا فيه صورة، هذا ابراهيم مصور فما له يستقسم
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் உருவப்படங்களைப் பார்த்த போது அவற்றை அழிக்கும்படி உத்தர விட்டு. அவ்வாறே அவை அழிக்கப்பட்ட பின்புதான் அதனுள் நுழைந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களையும் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் அவர்கள் தம் கையில் குறிசொல்லும் அம்புகளைப் பிடித்தபடி இருக்கும் நிலையில் (உருவங்களாகப்) பார்த்தார்கள். அப்போது, ‘‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷியரை) அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இருவரும் ஒருபோதும் அம்புகளின் மூலம் குறி பார்த்ததில்லை” என்று கூறினார்கள்.26 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، عن معمر، عن ايوب، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم لما راى الصور في البيت لم يدخل، حتى امر بها فمحيت، وراى ابراهيم واسماعيل عليهما السلام بايديهما الازلام فقال " قاتلهم الله، والله ان استقسما بالازلام قط
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி (ஸல்) அவர்களிடம்) ‘‘அல்லாஹ் வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத் திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ‘‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்” என்று பதிலளித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படி யென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான அல்லாஹ் வின் தூதர் (இஸ்ஹாக்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் (யஅகூப்) உடைய மகனான அல்லாஹ்வின் தூதர் யூசுஃப் அவர்கள்தான்!” என்று பதிலளித்தார்கள். அதற்கு மக்கள், ‘‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியர் பரம்பரைகள்) குறித்தா கேட்கிறீர் கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர் களாயிருந்தவர்கள்தான் இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றுக்கொண்டால்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا يحيى بن سعيد، حدثنا عبيد الله، قال حدثني سعيد بن ابي سعيد، عن ابيه، عن ابي هريرة رضى الله عنه قيل يا رسول الله، من اكرم الناس قال " اتقاهم ". فقالوا ليس عن هذا نسالك. قال " فيوسف نبي الله ابن نبي الله ابن نبي الله ابن خليل الله ". قالوا ليس عن هذا نسالك. قال " فعن معادن العرب تسالون خيارهم في الجاهلية خيارهم في الاسلام اذا فقهوا ". قال ابو اسامة ومعتمر عن عبيد الله عن سعيد عن ابي هريرة عن النبي صلى الله عليه وسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னிடம் இன்றிரவு (கனவில்) இரு வானவர்கள் (ஜிப்ரீலும் மீக்காயிலும்) வந்தார்கள். பிறகு நாங்கள் உயரமான ஒரு மனிதரிடம் சென்றோம். நீளத்தின் காரணத்தால் அவரது தலையை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள்தான் இப்ராஹீம் (அலை) அவர்கள் ஆவார். இதை சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.27 அத்தியாயம் :
حدثنا مومل، حدثنا اسماعيل، حدثنا عوف، حدثنا ابو رجاء، حدثنا سمرة، قال قال رسول الله صلى الله عليه وسلم " اتاني الليلة اتيان، فاتينا على رجل طويل، لا اكاد ارى راسه طولا، وانه ابراهيم صلى الله عليه وسلم
முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இருக்கும்போது மக்கள், ‘‘தஜ்ஜாலின் இரு கண்களுக்கிடையே யிகாஃபிர்’ (நிராகரிப்ப வன்) என்றோ யிகாஃப், ஃபா, ரா’ என்றோ எழுதப்பட்டிருக்கும். (என்பது உண் மையா?)” என்று பேசிக்கொண்டார்கள். அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: நான் இப்படிச் செவியுறவில்லை. ஆனால், நபி (ஸல்) அவர்கள், ‘‘இப்ராஹீம் (அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவர்களாக இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்) என்றால் உங்கள் தோழரை (என்னை)ப் பாருங்கள். மூசா (அலை) அவர்களோ சுருள்முடி உடைய வர்களாகவும், மாநிறம் கொண்டவர்களாக வும் இருந்தார்கள். ஈச்ச மர நாரினாலான கடிவாளம் இடப்பட்ட சிவப்பு நிற ஒட்டகத்தின் மீது பயணம் செய்வார்கள். அவர்கள் (ஹஜ்ஜின்போது ‘அல்அஸ்ரக்’ எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்று உள்ளது” என்று கூறினார்கள்.28 அத்தியாயம் :
حدثني بيان بن عمرو، حدثنا النضر، اخبرنا ابن عون، عن مجاهد، انه سمع ابن عباس رضى الله عنهما وذكروا له الدجال بين عينيه مكتوب كافر او ك ف ر. قال لم اسمعه ولكنه قال " اما ابراهيم فانظروا الى صاحبكم، واما موسى فجعد ادم على جمل احمر مخطوم بخلبة، كاني انظر اليه انحدر في الوادي
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள், தமது எண்பதாவது வயதில் யிகத்தூம்’ (எனும் யிவாய்ச்சி’யின்) மூலமாக விருத்தசேதனம் செய்துகொண்டார்கள்.29 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا مغيرة بن عبد الرحمن القرشي، عن ابي الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " اختتن ابراهيم عليه السلام وهو ابن ثمانين سنة بالقدوم ". حدثنا ابو اليمان اخبرنا شعيب حدثنا ابو الزناد " بالقدوم ". مخففة. تابعه عبد الرحمن بن اسحاق عن ابي الزناد. تابعه عجلان عن ابي هريرة. ورواه محمد بن عمرو عن ابي سلمة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن تليد الرعيني، اخبرنا ابن وهب، قال اخبرني جرير بن حازم، عن ايوب، عن محمد، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " لم يكذب ابراهيم الا ثلاثا
நபி (ஸல்) அவர்கள் சொன்ன தாக) அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றில் இரண்டு வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தில் சொன்னவையாகும். அவை: 1. (அவரை இணைவைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது,) ‘‘நான் நோயுற்றிருக்கின்றேன்” என்று (அதில் கலந்துகொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியது.30 2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடரியை மாட்டி விட்டு மக்கள், ‘‘இப்படிச் செய்தது யார்?” என்று கேட்டபோது,) ‘‘ஆயினும், இவர்களில் பெரியதான இந்தச் சிலைதான் இதைச் செய்தது” என்று கூறியது.31 3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு:) ஒருநாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள்.32 அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) ‘‘இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார்: அவருடன் மனிதர்களிலேயே மிக அழகான பெண்ணும் இருக்கிறாள்” என்று கூறப்பட்டது. உடனே இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச்சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பி னான். (அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, ‘‘இவர் யார்?” என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘என் சகோதரி” என்று பதிலளித் தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று, ‘‘சாராவே! பூமியின் மீது உன்னையும் என்னையும் தவிர இறைநம்பிக்கை உடையவர் (தற்போது) எவரும் இல்லை. இவனோ என்னிடம் உன்னைப் பற்றிக் கேட்டுவிட்டான். நான், ‘நீ என் சகோதரி’ என்று அவனுக்குத் தெரிவித்துவிட்டேன். ஆகவே, நீ (உண்மையைச் சொல்லி) என்னைப் பொய்யனாக்கிவிடாதே” என்று கூறினார்கள் அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான். சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்றபோது அவன் அவரைத் தன் கையால் தழுவ முயன்றான். உடனே அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப் பட்டான். அவன் (சாரா (அலை) அவர்களிடம்,) ‘‘அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்யமாட்டேன்” என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, இரண்டாவது முறையாக அவர்களை அணைக்க முயன்றான். முன்பு போலவே மீண்டும் தண்டிக்கப்பட்டான். அல்லது அதைவிடக் கடுமையாகத் தண்டிக்கப் பட்டான். அப்போதும், ‘‘எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ் விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்யமாட்டேன்” என்று சொன் னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான். பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, ‘‘நீங்கள் என்னிடம், ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டுவந்துள்ளீர்கள்” என்று சொன்னான். பிறகு ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான். சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, யிஎன்ன நடந்தது?› என்று கேட்டார்கள். அவர், ‘‘அல்லாஹ் நிராகரிப்பாளனின் லிஅல்லது தீயவனின்லி சூழ்ச்சியை முறியடித்து அவன் மீதே திருப்பிவிட்டான். ஹாஜரைப் பணிப்பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்.33 (அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்:) வான் மழை (பிரதேச) மக்களே! அவர் (ஹாஜர்)தான் உங்கள் தாயார்.34 அத்தியாயம் :
உம்மு ஷரீக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார் கள். மேலும் அவர்கள், ‘‘அது இப்ராஹீம் (அலைலி அவர்கள் தீக் குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக் கெதிராக ஊதிவிட்டுக்கொண்டிருந்தது” என்றும் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، او ابن سلام عنه اخبرنا ابن جريج، عن عبد الحميد بن جبير، عن سعيد بن المسيب، عن ام شريك رضى الله عنها ان رسول الله صلى الله عليه وسلم امر بقتل الوزغ وقال " كان ينفخ على ابراهيم عليه السلام
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘‘எவர் இறைநம்பிக்கை கொண்டு, பிறகு தம் இறைநம்பிக்கையில் அநீதியைக் கலக்காது இருக்கிறார்களோ அவர்களுக்கே நிம்மதி உண்டு. அவர்களே நல்வழி பெற்றவர்களாவர்” (6:82) எனும் இறை வசனம் அருளப்பட்டபோது, நாங்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! எங்களில் தமக்கு அநீதியிழைத்துக்கொள்ளாதவர் எவர்தான் இருக்கிறார்?” என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘‘(அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. யிதங்கள் இறை நம்பிக்கையில் இணைவைப்பு எனும் அநீதியைக் கலந்துவிடாதவர்கள் என்றுதான் அதற்குப் பொருள். (அறிஞர்) லுக்மான் அவர்கள் தம் மகனுக்கு, யிஎன் அன்பு மகனே! அல்லாஹ்வுக்கு இணை வைக்காதே. இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும்’ என்று சொன்ன(தாக குர்ஆனில் 31:13ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறுவ)தை நீங்கள் கேட்கவில்லையா?” என்று பதிலளித்தார்கள்.35 அத்தியாயம் :
حدثنا عمر بن حفص بن غياث، حدثنا ابي، حدثنا الاعمش، قال حدثني ابراهيم، عن علقمة، عن عبد الله رضى الله عنه قال لما نزلت {الذين امنوا ولم يلبسوا ايمانهم بظلم} قلنا يا رسول الله اينا لا يظلم نفسه قال " ليس كما تقولون {لم يلبسوا ايمانهم بظلم} بشرك، اولم تسمعوا الى قول لقمان لابنه {يا بنى لا تشرك بالله ان الشرك لظلم عظيم}
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருநாள் (விருந்தின்போது) நபி (ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டுவரப் பட்டது. அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் மறுமை நாளில் முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்றுதிரட்டுவான். அழைப்பவனின் குரலை அவர்கள் கேட்பார்கள்; அனை வரின் பார்வைக்கும் அவர்கள் தென்படு வார்கள்; சூரியன் அவர்களுக்கு அருகில் வரும்” என்று கூறிவிட்டு ‘ஷஃபாஅத்’ எனும் பரிந்துரை தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள். பிறகு அவர்கள் (மக்கள்) இப்ராஹீம் (அலை) அவர்களிடம் வருவார்கள். ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரும் பூமியில் அவனது நண்பருமாவீர்கள். எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்துரையுங்கள்” என்று கூறுவார்கள். அவர்கள், தாம் சொன்ன பொய்களை நினைவுகூர்ந்து, (இன்று) என்னைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன். நீங்கள் மூசா (அலை) அவர்களிடம் செல்லுங்கள்” என்று பதிலளிப்பார்கள்.36 நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதே போன்று அனஸ் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق بن ابراهيم بن نصر، حدثنا ابو اسامة، عن ابي حيان، عن ابي زرعة، عن ابي هريرة رضى الله عنه قال اتي النبي صلى الله عليه وسلم يوما بلحم فقال " ان الله يجمع يوم القيامة الاولين والاخرين في صعيد واحد، فيسمعهم الداعي، وينفدهم البصر، وتدنو الشمس منهم فذكر حديث الشفاعة فياتون ابراهيم فيقولون انت نبي الله وخليله من الارض، اشفع لنا الى ربك. فيقول فذكر كذباته نفسي نفسي اذهبوا الى موسى ". تابعه انس عن النبي صلى الله عليه وسلم
حدثني احمد بن سعيد ابو عبد الله، حدثنا وهب بن جرير، عن ابيه، عن ايوب، عن عبد الله بن سعيد بن جبير، عن ابيه، عن ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " يرحم الله ام اسماعيل، لولا انها عجلت لكان زمزم عينا معينا ". قال الانصاري حدثنا ابن جريج، اما كثير بن كثير فحدثني قال اني وعثمان بن ابي سليمان جلوس مع سعيد بن جبير، فقال ما هكذا حدثني ابن عباس، قال اقبل ابراهيم باسماعيل وامه عليهم السلام وهى ترضعه، معها شنة لم يرفعه ثم جاء بها ابراهيم وبابنها اسماعيل
حدثني احمد بن سعيد ابو عبد الله، حدثنا وهب بن جرير، عن ابيه، عن ايوب، عن عبد الله بن سعيد بن جبير، عن ابيه، عن ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " يرحم الله ام اسماعيل، لولا انها عجلت لكان زمزم عينا معينا ". قال الانصاري حدثنا ابن جريج، اما كثير بن كثير فحدثني قال اني وعثمان بن ابي سليمان جلوس مع سعيد بن جبير، فقال ما هكذا حدثني ابن عباس، قال اقبل ابراهيم باسماعيل وامه عليهم السلام وهى ترضعه، معها شنة لم يرفعه ثم جاء بها ابراهيم وبابنها اسماعيل
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: பெண்கள் முதன் முதலாக இடுப்புக் கச்சை அணிந்தது இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயார் ஹாஜர் (அலை) அவர்களின் தரப்பிலிருந்துதான். சாரா (அலை) அவர்களுக்குத் தம்மால் ஏற்பட்ட பாதிப்பை நீக்குவதற்காக அவர்கள் ஓர் இடுப்புக் கச்சையை அணிந்துகொண் டார்கள்.38 பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், ஹாஜர் (தம் மகன்) இஸ்மாயீலுக்குப் பாலூட்டிக்கொண்டிருக்கும் கால கட்டத்தில் இருவரையும் கொண்டுவந்து அவர்களை கஅபாவின் மேல்பகுதியில் (இப்போதுள்ள) ஸம்ஸம் கிணற்றிற்குமேல் பெரிய மரம் ஒன்றின் அருகே வைத்துவிட்டார்கள். அந்த நாளில் மக்காவில் எவரும் இருக்க வில்லை. அங்கு தண்ணீர்கூடக் கிடையாது. இருந்தும் அவ்விருவரையும் அங்கே இருக்கச் செய்தார்கள். அவர்களுக்கு அருகே பேரீச்சம்பழம் கொண்ட தோல்பை ஒன்றையும் தண்ணீருடன் கூடிய தண்ணீர்பை ஒன்றையும் வைத்தார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் (அவர்களை அங்கேயே விட்டுவிட்டு தமது நாட்டிற்கு) திரும்பிச் சென்றார்கள். அப்போது அவர்களை இஸ்மாயீலின் அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் பின்தொடர்ந்து வந்து, ‘‘இப்ராஹீமே! மனிதரோ வேறெந்தப் பொருளுமோ இல்லாத இந்தப் பள்ளத்தாக்கில் எங்களை விட்டுவிட்டு நீங்கள் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். இப்படிப் பலமுறை அவர்களிடம் கேட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அவரைத் திரும்பிப் பார்க்காமல் நடக்கலானார்கள். ஆகவே, அவர்களிடம் ஹாஜர் (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்தான் உங்களுக்கு இப்படிக் கட்டளையிட்டானா?” என்று கேட்க, அவர்கள், யிஆம்’ என்று சொன்னார்கள். அதற்கு ஹாஜர் (அலை) அவர்கள், ‘‘அப்படியென்றால் அவன் எங்களைக் கைவிடமாட்டான்” என்று சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் (சிறிது தூரம்) நடந்து சென்று மலைக்குன்றின் அருகே, அவர்களை எவரும் பார்க்காத இடத்திற்கு வந்தபோது, தமது முகத்தை இறையில்லம் கஅபாவின் பக்கம் திருப்பி, தம் இரு கரங்களையும் உயர்த்தி, இந்தச் சொற்களால் பிரார்த்தித்தார்கள்: ‘‘எங்கள் இறைவா! (உன் ஆணைப்படி) நான் என் மக்களில் சிலரை இந்த வேளாண்மையில்லாத பள்ளத்தாக்கில் கண்ணியத்திற்குரிய உன் இல்லத்திற்கு அருகில் குடியமர்த்திவிட்டேன். எங்கள் இறைவா! இவர்கள் (இங்கு) தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக (இவ்வாறு செய்தேன்). எனவே, இவர்கள் மீது அன்பு கொள்ளும்படி மக்களின் உள்ளங்களை ஆக்குவாயாக! மேலும், இவர்களுக்கு உண்பதற்கான பொருள்களை வழங்குவாயாக! இவர்கள் நன்றியுடையவர் களாய் இருப்பார்கள்” என்று இறைஞ்சி னார்கள். (அல்குர்ஆன் 14:37) இஸ்மாயீலின் அன்னை, இஸ்மாயீ லுக்குப் பாலூட்டவும் அந்தத் தண்ணீரிலிருந்து (தாகத்திற்கு நீர்) அருந்தவும் தொடங் கினார்கள். தண்ணீர்பையில் இருந்த தண்ணீர் தீர்ந்துவிட்டபோது அவரும் தாகத்திற்குள்ளானார். அவருடைய மகனும் தாகத்திற்குள்ளானார். தம் மகன் (தாகத்தால்) புரண்டு புரண்டு அழுவதை லிஅல்லது தரையில் காலை அடித்துக்கொண்டு அழுவதைலி அவர்கள் பார்க்கலானார்கள். அதைப் பார்க்கப் பிடிக்காமல் (சிறிது தூரம்) நடந்தார்கள். பூமியில் தமக்கு மிக அண்மையிலுள்ள மலையாக ஸஃபாவைக் கண்டார்கள். அதன் மீது (ஏறி) நின்றுகொண்டு (மனிதர்கள்) யாராவது கண்ணுக்குத் தென்படுகிறார்களா என்று நோட்டமிட்டபடி பள்ளத்தாக்கை நோக்கிப் பார்வையைச் செலுத்தினார்கள். எவரையும் அவர்கள் காணவில்லை. ஆகவே, ஸஃபாவிலிருந்து இறங்கிவிட்டார்கள். இறுதியில் பள்ளத்தாக்கை அவர்கள் அடைந்தபோது தமது மேலங்கியின் ஓரத்தை உயர்த்திக்கொண்டு சிரமப்பட்டு ஓடும் ஒரு மனிதனைப்போன்று ஓடிச்சென்று பள்ளத்தாக்கைக் கடந்தார் கள். பிறகு மர்வா மலைக் குன்றுக்கு வந்து அதன் மீது (ஏறி) நின்று யாராவது தென்படுகிறார்களா என்று நோட்டமிட் டார்கள். எவரையும் காணவில்லை. இவ்வாறே ஏழு முறைகள் செய்தார்கள். லிஇப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: ‘‘இதுதான் (இன்று ஹஜ்ஜில்) மக்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே செய்கின்ற யிசஃயு’ (தொங்கோட்டம்) ஆகும்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்லி பிறகு அவர்கள் மர்வாவின் மீது ஏறி நின்றுகொண்டபோது ஒரு குரலைக் கேட்டார்கள். உடனே, ‘‘சும்மாயிரு” என்று தமக்கே கூறிக்கொண்டார்கள். பிறகு, காதைத் தீட்டிக்கொண்டு கேட்டார்கள். அப்போதும் (அதே போன்ற குரலைச்) செவியுற்றார்கள். உடனே, ‘‘(அல்லாஹ்வின் அடியாரே!) நீங்கள் சொன்னதை நான் செவியுற்றேன். உங்களிடம் உதவியாளர் எவரேனும் இருந்தால் (என்னிடம் அனுப்பி என்னைக் காப்பாற்றுங்கள்)” என்று சொன்னார்கள். அப்போது அங்கே தம்முன் வானவர் ஒருவரை (இப்போதுள்ள) ஸம்ஸம் (கிணற்றின்) அருகே கண்டார்கள். அந்த வானவர் தம் குதிகாலால் (மண்ணில்) தோண்டினார். லிஅல்லது ‘‘தமது இறக்கையால் தோண்டினார்கள்” என்று அறிவிப்பாளர் சொல்லியிருக்கலாம்லி அதன் விளைவாகத் தண்ணீர் வெளிப்பட்டது. உடனே ஹாஜர் (அலை) அவர்கள் அதை ஒரு தடாகம்போல் (கையில்) அமைக்க லானார்கள்; அதைத் தம் கையால் இப்படி (‘‘ஓடிவிடாதே! நில்” என்று சைகை செய்து) சொன்னார்கள். அந்தத் தண்ணீரை அள்ளித் தமது தண்ணீர்பையில் ஊற்றலானார்கள். அவர்கள் அள்ளியெடுக்க எடுக்க அது பொங்கியபடியே இருந்தது. ‘‘நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ், இஸ்மாயீல் (அலை) அவர்களின் அன்னைக் குக் கருணைபுரிவானாக! ஸம்ஸம் நீரை அவர் அப்படியே விட்டுவிட்டிருந்தால் லிஅல்லது அந்தத் தண்ணீரிலிருந்து அள்ளியிருக்காவிட்டால்லி ஸம்ஸம் நீர் பூமியில் ஓடும் ஓர் ஊற்றாக மாறிவிட்டி ருக்கும்’ என்று சொன்னார்கள்” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித் தார்கள். பிறகு, அன்னை ஹாஜர் அவர்கள் (ஸம்ஸம் தண்ணீரை) தாமும் அருந்தி தம் குழந்தைக்கும் ஊட்டினார்கள். அப்போது அந்த வானவர் அவர்களிடம், ‘‘நீங்கள் (கேட்பாரற்று) வீணாக அழிந்துபோய் விடுவீர்கள் என்று அஞ்ச வேண்டாம். ஏனெனில், இங்கு இந்தக் குழந்தையும் இவருடைய தந்தையும் சேர்ந்து (புதுப்பித் துக்) கட்டவிருக்கின்ற அல்லாஹ்வின் இல்லம் உள்ளது. அல்லாஹ் தன்னைச் சார்ந்தோரைக் கைவிடமாட்டான்” என்று சொன்னார். இறையில்லமான கஅபா, மேட்டைப் போன்று பூமியிலிருந்து உயர்ந்திருந்தது. வெள்ளங்கள் வந்து அதன் வலப் பக்கமாகவும் இடப் பக்கமாக வும் (வழிந்து) சென்றுவிடும். இவ்வாறே அன்னை ஹாஜர் (அலை) அவர்கள் (தண்ணீர் குடித்துக்கொண்டும் பாலூட்டிக் கொண்டும்) இருந்தார்கள். இந்நிலையில் (யமன் நாட்டைச் சேர்ந்த) ஜுர்ஹும் குலத்தாரின் ஒரு குழுவினர் லிஅல்லது ஜுர்ஹும் குலத்தாரில் ஒரு வீட்டார்லி அவர்களைக் கடந்து சென்றார்கள். அவர்கள் யிகதா’ எனும் கணவாயின் வழியாக முன்னோக்கி வந்து மக்காவின் கீழ்ப்பகுதியில் தங்கினர். அப்போது தண்ணீரின் மீதே வட்டமடித்துப் பறக்கும் (வழக்கமுடைய) ஒரு வகைப் பறவையைக் கண்டு, ‘‘இந்தப் பறவை தண்ணீரின் மீதுதான் வட்டமடித்துக்கொண்டிருக்க வேண்டும்; நாம் இந்தப் பள்ளத்தாக்கைப் பற்றி முன்பே அறிந்திருக்கிறோம். அப்போது இதில் தண்ணீர் இருந்ததில்லையே” என்று (வியப்புடன்) பேசிக்கொண்டார்கள். பிறகு அவர்கள் ஒரு தூதுவரை அல்லது இரு தூதுவர்களை செய்தி அறிந்து வர அனுப்பினார்கள். அவர்கள் (சென்று பார்த்தபோது) அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டார்கள். உடனே அவர்கள் (தம் குலத்தாரிடம்) திரும்பிச் சென்று அங்கே தண்ணீர் இருப்பதைத் தெரிவித்தார்கள். உடனே அக்குலத்தார், இஸ்மாயீ லின் அன்னை தண்ணீரருகே இருக்க முன்னே சென்று, ‘‘நாங்கள் உங்களிடம் தங்கிக்கொள்ள எங்களுக்கு நீங்கள் அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்க, அவர்கள், ‘‘ஆம் (அனுமதியளிக்கிறேன்); ஆனால், தண்ணீரில் உங்களுக்கு உரிமை ஏதும் இருக்காது” என்று சொன்னார்கள். அவர்கள், ‘‘சரி” என்று சம்மதித்தனர். லி”(ஜுர்ஹும் குலத்தார் தங்கிக் கொள்ள அனுமதிகேட்ட) அந்தச் சந்தர்ப்பம் இஸ்மாயீலின் தாயாருக்கு, அவர்கள் (தனிமையால் துன்பமடைந்து) மக்களுடன் கலந்து வாழ்வதை விரும்பிக் கொண்டிருந்த வேளையில் வாய்த்தது’ என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார் கள்...” என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்லி ஆகவே, அவர்கள் அங்கே தங்கினார் கள். தங்கள் நெருங்கிய உறவினர்களுக்கும் சொல்லியனுப்ப, அவர்களும் (வந்து) அவர்களுடன் தங்கினார்கள். அதன் விளைவாக அக்குலத்தைச் சேர்ந்த பல வீடுகள் மக்காவில் தோன்றிவிட்டன. குழந்தை இஸ்மாயீல் (வளர்ந்து) வாலிபரானார். ஜுர்ஹும் குலத்தாரிடமிருந்து அவர் அரபு மொழியைக் கற்றுக்கொண்டார். அவர் வாலிபரானபோது அவர்களுக்குப் பிரியமானவராகவும் அவர்களுக்கு மிக விருப்பமானவராகவும் ஆகிவிட்டார். பருவ வயதை அவர் அடைந்தபோது அவருக்கு அவர்கள் தம்மிலிருந்தே ஒரு பெண்ணை மணமுடித்துவைத்தனர். இஸ்மாயீலின் தாயார் (ஹாஜர்) இறந்துவிட்டார். இஸ்மாயீல் (அலை) அவர்கள் மணம் புரிந்துகொண்ட பின்பு இப்ராஹீம் (அலை) அவர்கள், தாம் விட்டுச்சென்ற (தம் மனைவி, மகன் ஆகிய)வர்களின் நிலையை அறிந்துகொள்வதற்காக (திரும்பி) வந்தார்கள். அப்போது இஸ்மாயீல் (அலை) அவர்களை (அவர்களது வீட்டில்) காணவில்லை. ஆகவே, இஸ்மாயீலின் மனைவியிடம் இஸ்மாயீலைக் குறித்து விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘‘எங்களுக்காக உணவு தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். பிறகு அவரிடம் அவர்களுடைய வாழ்க்கை நிலை பற்றியும் பொருளாதாரம் பற்றியும் விசாரித்தார்கள். அதற்கு அவர், ‘‘நாங்கள் மோசமான நிலையில் உள்ளோம். நாங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறோம்” என்று இப்ராஹீம் (அலை) அவர்களிடம் முறையிட்டார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உன் கணவர் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் உரைத்து அவரது நிலைப்படியை மாற்றிவிடும்படி சொல்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, எவரோ வந்து சென்றிருப்பதுபோல் உணர்ந்தார்கள். ஆகவே, ‘‘எவரேனும் உங்களிடம் வந்தார்களா?” என்று கேட்டார்கள். அவ ருடைய மனைவி, ‘‘ஆம்; இப்படிப்பட்ட (அடையாளங்கள்கொண்ட) பெரியவர் ஒருவர் வந்தார்; எங்களிடம் உங்களைப் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு (விவரம்) தெரிவித்தேன். என்னிடம், யிஉங்கள் வாழ்க்கை நிலை எப்படியுள்ளது?› என்று கேட்டார். நான் அவரிடம், யிநாங்கள் பெரும் சிரமத்திலும் கஷ்டத்திலும் இருக்கிறோம்’ என்று சொன்னேன்” என்று பதிலளித்தார். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உன்னிடம் தம் விருப்பம் எதையாவது அவர் தெரிவித்தாரா?” என்று கேட்க, அதற்கு அவர், ‘‘ஆம்; உங்களுக்குத் தமது சார்பாக சலாம் உரைக்கும்படி எனக்கு உத்தரவிட்டு, யிஉன் நிலைப்படியை மாற்றிவிடு’ என்று (உங்களிடம் சொல்லச்) சொன்னார்” என்று பதிலளித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அவர் என் தந்தைதான். உன்னைவிட்டுப் பிரிந்துவிடும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார். ஆகவே, நீ உன் (தாய்) வீட்டாருடன் போய்ச் சேர்ந்துகொள்” என்று சொல்லிவிட்டு, உடனே அவரை மணவிலக்குச் செய்துவிட்டார். பின்னர் ஜுர்ஹும் குலத்தாரிலிருந்தே வேறொரு பெண்ணை மணமுடித்துக் கொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், இறைவன் நாடிய காலம்வரை அவர்களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார். அதன் பிறகு அவர்களிடம் சென்றார். ஆனால், இஸ்மாயீல் (அலை) அவர்களை (இந்த முறையும்) அவர் (அங்கு) காணவில்லை. ஆகவே, இஸ் மாயீல் (அலை) அவர்களுடைய (புதிய) துணைவியாரிடம் சென்று இஸ்மாயீலைப் பற்றி விசாரித்தார். அதற்கு அவர், ‘‘எங்களுக்காக வரு மானம் தேடி வெளியே சென்றிருக்கிறார்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் (நலம்தானா)?” என்று கேட்டார்கள் மேலும், அவர்களுடைய பொருளாதார நிலை குறித்தும் மற்ற நிலைமைகள் குறித்தும் அவரிடம் விசாரித்தார். அதற்கு இஸ்மாயீ லின் துணைவியார், ‘‘நாங்கள் நலத்துடனும் வசதியுடனும் இருக்கிறோம்” என்று சொல்லிவிட்டு வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வைப் புகழ்ந்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உங்கள் உணவு என்ன?” என்று கேட்க அவர், ‘‘இறைச்சி” என்று பதிலளித்தார். அவர்கள், ‘‘உங்கள் பானம் எது?” என்று கேட்க, ‘‘தண்ணீர்” என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! இவர்களுக்கு இறைச்சியிலும் தண்ணீரிலும் வளத்தை அளிப்பாயாக!” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அந்த நேரத்தில் அவர்களிடம் உணவு தானியம் எதுவும் இருக்கவில்லை. அப்படி எதுவும் இருந்திருந்தால் அதிலும் வளம் வழங்கும்படி இப்ராஹீம் (அலை) அவர்கள் பிரார்த்தித்திருப்பார்கள். ஆகவேதான், மக்காவைத் தவிர பிற இடங்களில் அவ்விரண்டையும் (இறைச்சியையும் தண்ணீரையும்) வழக்கமாகப் பயன்படுத்திவருபவர்களுக்கு அவை ஒத்துக்கொள்வதேயில்லை” என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உன் கணவன் வந்தால் அவருக்கு (என் சார்பாக) சலாம் சொல். அவரது (வீட்டு) நிலைப்படியை உறுதிப்படுத்தி வைக்கும்படி சொல்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் (வீட்டிற்குத் திரும்பி) வந்தபோது, ‘‘உங்களிடம் யாரேனும் வந்தார்களா?” என்று கேட்க, அவருடைய மனைவி, ‘‘ஆம்; எங்களிடம் அழகிய தோற்றமுடைய முதியவர் ஒருவர் வந்தார்” என்று (சொல்லிவிட்டு) அவரைப் புகழ்ந் தார். (பிறகு தொடர்ந்து) ‘‘என்னிடம் நமது பொருளாதார நிலை எப்படியுள்ளது என்று கேட்டார். நான், யிநாங்கள் நலமுடன் இருக் கிறோம்’ என்று தெரிவித்தேன்” என்று பதில் சொன்னார். ‘‘அவர், உனக்கு அறிவுரை ஏதும் சொன்னாரா?” என்று இஸ்மாயீல் (அலை) கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘ஆம்; உங்களுக்கு சலாம் உரைக்கிறார்; உங்கள் நிலைப்படியை உறுதிப்படுத்திக்கொள்ளும் படி உங்களுக்குக் கட்டளையிடுகிறார்” என்று சொன்னார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அவர் என் தந்தை; நீதான் அந்த நிலைப்படி. உன்னை (மணவிலக்குச் செய்யாமல்) அப்படியே (மனைவியாக) வைத்துக்கொள்ளும்படி எனக்கு உத்தரவிட்டுள்ளார்” என்று சொன்னார்கள். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ் நாடிய காலம்வரை அவர் களை(ப் பார்க்க வராமல்) விலகி வாழ்ந்தார்கள். அதன் பிறகு, (ஒருநாள்) இஸ்மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற்றின் அருகேயிருக்கும் பெரிய மரத்திற்குக் கீழே தனது அம்பு ஒன்றைச் செதுக்கிக்கொண்டிருந்தபோது அவரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களைக் கண்டதும் இஸ்மாயீல் (அலை) அவர்கள், அவர்களை நோக்கி எழுந்து சென்றார்கள். (நெடு நாட்கள் பிரிந்து மீண்டும் சந்திக்கும்போது) தந்தை மகனுடனும் மகன் தந்தையுடனும் எப்படி நடந்துகொள்வார்களோ அப்படி நடந்துகொண்டார்கள். (பாசத்தோடும் நெகிழ்வோடும் வரவேற்றார்கள்.) பிறகு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இஸ்மாயீலே! அல்லாஹ் எனக்கு ஒரு விஷயத்தை (நிறைவேற்றும்படி) உத்தர விட்டுள்ளான்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உங்கள் இறைவன் உங்களுக்குக் கட்டளையிட்டதை நிறைவேற்றுங்கள்” என்று சொன்னார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘நீ எனக்கு அந்த விஷயத்தை நிறைவேற்ற உதவுவாயா?” என்று கேட்க, இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘உங்களுக்கு நான் உதவுகிறேன்” என்று பதிலளித்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘அப்படி யென்றால், நான் இந்த இடத்தில் ஓர் இறையில்லத்தை (புதுப்பித்துக்) கட்ட வேண்டுமென்று எனக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்” என்று சொல்லிவிட்டு, சுற்றியிருந்த இடங்களைவிட உயரமாக இருந்த ஒரு மேட்டைச் சுட்டிக் காட்டினார்கள். அப்போது இருவரும் இறையில்லம் கஅபாவின் அடித்தளங்களை உயர்த்திக் கட்டினார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து கொடுக்கலானார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டலானார்கள். கட்டடம் உயர்ந்தபோது இஸ்மாயீல் (அலை) அவர்கள், (மகாமு இப்ராஹீம் என்று அழைக் கப்படும்) இந்தக் கல்லைக் கொண்டுவந்து இப்ராஹீம் (அலை) அவர்களுக்காக வைத்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் அதன்மீது (ஏறி) நின்று கஅபாவைக் கட்டலானார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தரலா னார்கள். அப்போது இருவருமே, ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தத் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக!. நிச்சயம் நீயே நன்கு செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். அறிவிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: இருவரும் அந்த ஆலயத்தைச் சுற்றிலும் வட்டமிட்டு நடந்தபடி, ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயம் நீயே நன்கு செவியுறுபவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றாய்” (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்தவாறு (கஅபாவைப் புதுப்பித்துக் கட்டத்) தொடங்கினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய மனைவி (சாரா லிஅலை) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது39 இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை யும் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாரையும் அழைத்துக்கொண்டு (மக்காவை நோக்கிச்) சென்றார்கள். அப்போது அவர்களுடன் தண்ணீருள்ள தோல்பை ஒன்று இருந்தது. இஸ்மாயீலின் தாயார் அதிலிருந்து தண்ணீர் குடிக்கத் தொடங்கினார். அவர்களுடைய குழந்தை இஸ்மாயீலுக்காகப் பால் சுரக்கலாயிற்று. பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா வந்துசேர்ந்தார்கள். அங்கே ஒரு பெரிய மரத்திற்குக் கீழே ஹாஜரை விட்டுவிட்டு தம் குடும்பத்தாரிடம் (சாராவிடம்) இப்ராஹீம் திரும்பினார். அவரைப் பின்தொடர்ந்து வந்த இஸ்மாயீலின் அன்னை (ஹாஜர்), யிகதாஉ’ என்னும் இடத்தை அடைந்தவுடன் ‘‘இப்ராஹீமே! எங்களை யாரிடம் விட்டுச் செல்கிறீர்கள்?” என்று பின்னாலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டார். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்விடம்...” என்றார். ‘‘அப்படியானால், அல்லாஹ்வின் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு” என்றார் ஹாஜர். பின்னர் திரும்பி வந்து தோல்பையி லிருந்து நீர் அருந்தினார். அவருடைய குழந்தைக்காகப் பால் சுரந்தது. பின்னர் தண்ணீர் தீர்ந்தவுடன் அவர் (தமக்குள்), ‘‘நான் போய் (மலைமீதேறி) நோட்ட மிட்டால் எவராவது எனக்குத் தென்பட லாம்” என்று கூறிக்கொண்டார்; பிறகு, ஸஃபா மலைக் குன்றுக்குச் சென்று ஏறிக்கொண்டார். அவர் (அங்கிருந்து) நோட்டமிட்டார்; எவராவது தமக்குத் தென்படுகின்றாரா என்று பார்த்தார். ஆனால், எவரும் அவருக்குத் தென்பட வில்லை. ஆகவே, பள்ளத்தாக்கிற்குச் சென்றார். அங்கு சென்றுசேர்ந்ததும் ஓடிச்சென்று யிமர்வா’வை அடைந்தார். அப்படிப் பல சுற்றுகள் ஓடினார். பிறகு, ‘‘நான் போய் குழந்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் (நன்றாயிருக்குமே)” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். ஆகவே, (மலைக்குச்) சென்று நோட்ட மிட்டார். ஆனாலும், குழந்தை இஸ்மாயீல் அதே நிலையில்தான் (அழுதபடி) இறப்பதற்குமுன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக்கொண்டிருந்தார். அவருடைய (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஆகவே, அவர் (தமக்குள்) ‘‘நான் போய் நோட்டமிட்டால் எவராவது தென்படக்கூடும்” என்று கூறிக்கொண்டு (மீண்டும்) சென்று ஸஃபா மலைக் குன்றின் மீதேறிப் பார்த்தார்; பார்த்தார்; (பார்த்துக்கொண்டேயிருந்தார்.) எவரும் அவருக்குத் தென்படவில்லை. இவ்வாறே ஏழு சுற்றுகளை நிறைவுசெய்து விட்டார். பிறகு, ‘‘குழந்தை என்ன செய்கிறது என்று நான் போய் பார்த்து வந்தால் (நன்றாயிருக்குமே)” என்று (தமக்குள்) கூறிக்கொண்டார். அந்த நேரத்தில் குரல் ஒன்று வந்தது. (அதைக் கேட்டு) அவர், ‘‘உங்களால் நன்மை செய்ய முடியுமாயின் நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார். அங்கே (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். தம் குதிகாலால் இப்படி சைகை செய்து பூமியில் தம் குதிகாலை (பள்ளம் விழும்படி) அழுத்தினார்கள். தண்ணீர் பீறிட்டு வந்தது. இஸ்மாயீலின் தாயார் பதறிப்போய் (அதை அணைகட்டி வைக்கப்) பள்ளம் தோண்டலானார். அபுல்காசிம் (ஸல்) அவர்கள், ‘‘அவர் அப்படியே விட்டிருந்தால் தண்ணீர் வெளியே ஓடக்கூடியதாக இருந்திருக்கும்” என்று சொன்னார்கள். உடனே அவர் அந்தத் தண்ணீரைக் குடிக்கலானார். அவரது பால் அவரது குழந்தைக்காகச் சுரந்த வண்ணமிருந்தது. அப்போது ஜுர்ஹும் குலத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தபோது பறவையொன்றைக் கண்டார்கள். அதை அவர்கள் (இதுவரை அப்பகுதியில் இல்லாத) புதுமையான ஒன்றாகக் கருதினார்கள். ஆகவே, ‘‘பறவை நீர் நிலையின் அருகில்தானே இருக்கும்” என்று பேசிக்கொண்டார்கள். தங்கள் தூதுவரை அவர்கள் அனுப்பி வைக்க, அவர் சென்று பார்த்தபோது அவர்கள் (இஸ்மாயீல், அவருடைய தாயார்) இருவரும் நீர் நிலை அருகே இருக்கக் கண்டார். உடனே தம் குலத்தாரிடம் வந்து அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்தார். அவர்கள் (அன்னை) ஹாஜர் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘இஸ்மாயீலின் அன்னையே! நாங்கள் உங்களுடன் இருக்க லிஅல்லது உங்களுடன் வசிக்கலி எங்களுக்கு அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்டார்கள். (அவர்கள் அனுமதி யளிக்கவே அங்கேயே வசிக்கலானார்கள்.) ஹாஜருடைய மகன் (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) பருவ வயதையடைந்தார். ஜுர்ஹும் குலத்தாரிலேயே ஒரு பெண்ணை மணந்துகொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (ஒருநாள் தம் மனைவியையும் மகனையும் ‘அவர்கள் என்ன ஆனார்கள்’ என்று பார்த்துவிட்டு வரலாமென)த் தோன்றியது. ஆகவே, தம் வீட்டாரிடம் (முதல் மனைவி சாராவிடம்) நான் (மக்காவில்) விட்டுவந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்துவரப் போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டு (மக்கா) சென்று (இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவி யிடம்) சலாம் சொல்லி, ‘‘இஸ்மாயீல் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவி, அவர் ‘‘வேட்டையாடச் சென்றுவிட்டார்” என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘அவர் வந்தால், யிஉன் நிலைப்படியை மாற்றிவிடு’ என்று (நான் கட்டளையிட்டதாக) சொல்லிவிடு” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் வந்த போது அவருடைய மனைவி அதை அவருக்குத் தெரிவித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘நீதான் நிலைப்படி. ஆகவே, நீ உன் வீட்டாரிடம் சென்று விடு” என்று சொன்னார்கள். மீண்டும் (சிறிது காலத்திற்குப் பிறகு) இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (மக்காவில் உள்ள மனைவி, மகனைப் பார்த்துவிட்டு வரலாமென்று) தோன்றவே தம் வீட்டாரிடம், ‘‘நான் (மக்காவில்) விட்டுவந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்துவரப் போகிறேன்” என்று சொன்னார்கள். பிறகு (மக்காவிற்குச்) சென்று, ‘‘இஸ்மாயீல் எங்கே?” என்று (அவருடைய மனைவியிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘வேட்டையாடச் சென்றிருக்கிறார்” என்று பதிலளித்தார். பிறகு ‘‘நீங்கள் (எங்களிடம்) தங்கி உண்ணவும் பருகவும்மாட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உங்கள் உணவும் உங்கள் பானமும் எவை?” என்று வினவ அவர், ‘‘எங்கள் உணவு இறைச்சியாகும். எங்கள் பானம் தண்ணீராகும்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! இவர்களுக்கு இவர்களின் உணவிலும் பானத்திலும் வளத்தை அளிப்பாயாக!” என்று வேண்டினார்கள். அபுல்காசிம் (ஸல்) அவர்கள், ‘‘(மக்கா வின் உணவிலும் பானத்திலும்) இப்ராஹீம் (அலை) அவர்களது பிரார்த்தனையின் காரணத்தால்தான் வளம் அளிக்கப்பட் டுள்ளது” என்று சொன்னார்கள். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (மீண்டும் ஒருமுறை இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பார்த்து வர வேண்டும்போல்) தோன்றியது. உடனே அவர்கள் (மக்கா) செல்ல, அங்கு இஸ் மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற் றுக்குப் பின்பக்கத்தில் தமது அம்பைச் சீர் செய்துகொண்டிருக்கக் கண்டார்கள். ‘‘இஸ் மாயீலே! உன் இறைவன் தனக்கு ஓர் இல்லத்தை நான் (புதுப்பித்துக்) கட்ட வேண்டுமேன்று எனக்குக் கட்டளை யிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கீழ்ப் படியுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘(அதைக் கட்டுவதற்கு) நீ எனக்கு உதவ வேண்டு மென்றும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அப்படியாயின் நான் (உதவி) செய்கிறேன்” என்று சொன்னார்கள். உடனே இருவரும் தயாராகி, இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டத் தொடங்க, இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து தரலானார் கள். இருவரும் (அப்போது), ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய் (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். இறுதி யில் கட்டடம் எழும்பியது. பெரியவ(ர் இப்ராஹீம் அன்னா)ருக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே, (யிமகாமு இப்ராஹீம்’ என்றழைக்கப்படும்) இந்தக் கல்மீது நின்று கொண்டார்கள். அவர்களுக்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தரலானார்கள். இருவரும் ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்பாயாக! நிச்சயமாக, நீயே செவியுறு பவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டி ருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن محبوب، حدثنا حماد بن زيد، عن ايوب، عن محمد، عن ابي هريرة رضى الله عنه قال لم يكذب ابراهيم عليه السلام الا ثلاث كذبات ثنتين منهن في ذات الله عز وجل، قوله {اني سقيم } وقوله {بل فعله كبيرهم هذا}، وقال بينا هو ذات يوم وسارة اذ اتى على جبار من الجبابرة فقيل له ان ها هنا رجلا معه امراة من احسن الناس، فارسل اليه، فساله عنها. فقال من هذه قال اختي، فاتى سارة قال يا سارة، ليس على وجه الارض مومن غيري وغيرك، وان هذا سالني، فاخبرته انك اختي فلا تكذبيني. فارسل اليها، فلما دخلت عليه ذهب يتناولها بيده، فاخذ فقال ادعي الله لي ولا اضرك. فدعت الله فاطلق، ثم تناولها الثانية، فاخذ مثلها او اشد فقال ادعي الله لي ولا اضرك. فدعت فاطلق. فدعا بعض حجبته فقال انكم لم تاتوني بانسان، انما اتيتموني بشيطان. فاخدمها هاجر فاتته، وهو قايم يصلي، فاوما بيده مهيا قالت رد الله كيد الكافر او الفاجر في نحره، واخدم هاجر. قال ابو هريرة تلك امكم يا بني ماء السماء
وحدثني عبد الله بن محمد، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن ايوب السختياني، وكثير بن كثير بن المطلب بن ابي وداعة،، يزيد احدهما على الاخر عن سعيد بن جبير، قال ابن عباس اول ما اتخذ النساء المنطق من قبل ام اسماعيل، اتخذت منطقا لتعفي اثرها على سارة، ثم جاء بها ابراهيم، وبابنها اسماعيل وهى ترضعه حتى وضعهما عند البيت عند دوحة، فوق زمزم في اعلى المسجد، وليس بمكة يوميذ احد، وليس بها ماء، فوضعهما هنالك، ووضع عندهما جرابا فيه تمر وسقاء فيه ماء، ثم قفى ابراهيم منطلقا فتبعته ام اسماعيل فقالت يا ابراهيم اين تذهب وتتركنا بهذا الوادي الذي ليس فيه انس ولا شىء فقالت له ذلك مرارا، وجعل لا يلتفت اليها فقالت له الله الذي امرك بهذا قال نعم. قالت اذا لا يضيعنا. ثم رجعت، فانطلق ابراهيم حتى اذا كان عند الثنية حيث لا يرونه استقبل بوجهه البيت، ثم دعا بهولاء الكلمات ورفع يديه، فقال {ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع} حتى بلغ {يشكرون}. وجعلت ام اسماعيل ترضع اسماعيل، وتشرب من ذلك الماء، حتى اذا نفد ما في السقاء عطشت وعطش ابنها، وجعلت تنظر اليه يتلوى او قال يتلبط فانطلقت كراهية ان تنظر اليه، فوجدت الصفا اقرب جبل في الارض يليها، فقامت عليه ثم استقبلت الوادي تنظر هل ترى احدا فلم تر احدا، فهبطت من، الصفا حتى اذا بلغت الوادي رفعت طرف درعها، ثم سعت سعى الانسان المجهود، حتى جاوزت الوادي، ثم اتت المروة، فقامت عليها ونظرت هل ترى احدا، فلم تر احدا، ففعلت ذلك سبع مرات قال ابن عباس قال النبي صلى الله عليه وسلم " فذلك سعى الناس بينهما ". فلما اشرفت على المروة سمعت صوتا، فقالت صه. تريد نفسها، ثم تسمعت، فسمعت ايضا، فقالت قد اسمعت، ان كان عندك غواث. فاذا هي بالملك، عند موضع زمزم، فبحث بعقبه او قال بجناحه حتى ظهر الماء، فجعلت تحوضه وتقول بيدها هكذا، وجعلت تغرف من الماء في سقايها، وهو يفور بعد ما تغرف قال ابن عباس قال النبي صلى الله عليه وسلم " يرحم الله ام اسماعيل لو تركت زمزم او قال لو لم تغرف من الماء لكانت زمزم عينا معينا ". قال فشربت وارضعت ولدها، فقال لها الملك لا تخافوا الضيعة، فان ها هنا بيت الله، يبني هذا الغلام، وابوه، وان الله لا يضيع اهله. وكان البيت مرتفعا من الارض كالرابية، تاتيه السيول فتاخذ عن يمينه وشماله، فكانت كذلك، حتى مرت بهم رفقة من جرهم او اهل بيت من جرهم مقبلين من طريق كداء فنزلوا في اسفل مكة، فراوا طايرا عايفا. فقالوا ان هذا الطاير ليدور على ماء، لعهدنا بهذا الوادي وما فيه ماء، فارسلوا جريا او جريين، فاذا هم بالماء، فرجعوا فاخبروهم بالماء، فاقبلوا، قال وام اسماعيل عند الماء فقالوا اتاذنين لنا ان ننزل عندك فقالت نعم، ولكن لا حق لكم في الماء. قالوا نعم. قال ابن عباس قال النبي صلى الله عليه وسلم " فالفى ذلك ام اسماعيل، وهى تحب الانس " فنزلوا وارسلوا الى اهليهم، فنزلوا معهم حتى اذا كان بها اهل ابيات منهم، وشب الغلام، وتعلم العربية منهم، وانفسهم واعجبهم حين شب، فلما ادرك زوجوه امراة منهم، وماتت ام اسماعيل، فجاء ابراهيم، بعد ما تزوج اسماعيل يطالع تركته، فلم يجد اسماعيل، فسال امراته عنه فقالت خرج يبتغي لنا. ثم سالها عن عيشهم وهييتهم فقالت نحن بشر، نحن في ضيق وشدة. فشكت اليه. قال فاذا جاء زوجك فاقريي عليه السلام، وقولي له يغير عتبة بابه. فلما جاء اسماعيل، كانه انس شييا، فقال هل جاءكم من احد قالت نعم، جاءنا شيخ كذا وكذا، فسالنا عنك فاخبرته، وسالني كيف عيشنا فاخبرته انا في جهد وشدة. قال فهل اوصاك بشىء قالت نعم، امرني ان اقرا عليك السلام، ويقول غير عتبة بابك. قال ذاك ابي وقد امرني ان افارقك الحقي باهلك. فطلقها، وتزوج منهم اخرى، فلبث عنهم ابراهيم ما شاء الله ثم اتاهم بعد، فلم يجده، فدخل على امراته، فسالها عنه. فقالت خرج يبتغي لنا. قال كيف انتم وسالها عن عيشهم، وهييتهم. فقالت نحن بخير وسعة. واثنت على الله. فقال ما طعامكم قالت اللحم. قال فما شرابكم قالت الماء. فقال اللهم بارك لهم في اللحم والماء. قال النبي صلى الله عليه وسلم " ولم يكن لهم يوميذ حب، ولو كان لهم دعا لهم فيه ". قال فهما لا يخلو عليهما احد بغير مكة الا لم يوافقاه. قال فاذا جاء زوجك فاقريي عليه السلام، ومريه يثبت عتبة بابه، فلما جاء اسماعيل قال هل اتاكم من احد قالت نعم اتانا شيخ حسن الهيية، واثنت عليه، فسالني عنك فاخبرته، فسالني كيف عيشنا فاخبرته انا بخير. قال فاوصاك بشىء قالت نعم، هو يقرا عليك السلام، ويامرك ان تثبت عتبة بابك. قال ذاك ابي، وانت العتبة، امرني ان امسكك. ثم لبث عنهم ما شاء الله، ثم جاء بعد ذلك، واسماعيل يبري نبلا له تحت دوحة قريبا من زمزم، فلما راه قام اليه، فصنعا كما يصنع الوالد بالولد والولد بالوالد، ثم قال يا اسماعيل، ان الله امرني بامر. قال فاصنع ما امرك ربك. قال وتعينني قال واعينك. قال فان الله امرني ان ابني ها هنا بيتا. واشار الى اكمة مرتفعة على ما حولها. قال فعند ذلك رفعا القواعد من البيت، فجعل اسماعيل ياتي بالحجارة، وابراهيم يبني، حتى اذا ارتفع البناء جاء بهذا الحجر فوضعه له، فقام عليه وهو يبني، واسماعيل يناوله الحجارة، وهما يقولان {ربنا تقبل منا انك انت السميع العليم}. قال فجعلا يبنيان حتى يدورا حول البيت، وهما يقولان {ربنا تقبل منا انك انت السميع العليم}
حدثنا عبد الله بن محمد، حدثنا ابو عامر عبد الملك بن عمرو، قال حدثنا ابراهيم بن نافع، عن كثير بن كثير، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال لما كان بين ابراهيم وبين اهله ما كان، خرج باسماعيل وام اسماعيل، ومعهم شنة فيها ماء، فجعلت ام اسماعيل تشرب من الشنة فيدر لبنها على صبيها حتى قدم مكة، فوضعها تحت دوحة، ثم رجع ابراهيم الى اهله، فاتبعته ام اسماعيل، حتى لما بلغوا كداء نادته من ورايه يا ابراهيم الى من تتركنا قال الى الله. قالت رضيت بالله. قال فرجعت فجعلت تشرب من الشنة ويدر لبنها على صبيها، حتى لما فني الماء قالت لو ذهبت فنظرت لعلي احس احدا. قال فذهبت فصعدت الصفا فنظرت ونظرت هل تحس احدا فلم تحس احدا، فلما بلغت الوادي سعت واتت المروة ففعلت ذلك اشواطا، ثم قالت لو ذهبت فنظرت ما فعل تعني الصبي فذهبت فنظرت، فاذا هو على حاله كانه ينشغ للموت، فلم تقرها نفسها، فقالت لو ذهبت فنظرت لعلي احس احدا، فذهبت فصعدت الصفا فنظرت ونظرت فلم تحس احدا، حتى اتمت سبعا، ثم قالت لو ذهبت فنظرت ما فعل، فاذا هي بصوت فقالت اغث ان كان عندك خير. فاذا جبريل، قال فقال بعقبه هكذا، وغمز عقبه على الارض، قال فانبثق الماء، فدهشت ام اسماعيل فجعلت تحفز. قال فقال ابو القاسم صلى الله عليه وسلم " لو تركته كان الماء ظاهرا ". قال فجعلت تشرب من الماء، ويدر لبنها على صبيها قال فمر ناس من جرهم ببطن الوادي، فاذا هم بطير، كانهم انكروا ذاك، وقالوا ما يكون الطير الا على ماء. فبعثوا رسولهم، فنظر فاذا هم بالماء، فاتاهم فاخبرهم فاتوا اليها، فقالوا يا ام اسماعيل، اتاذنين لنا ان نكون معك او نسكن معك فبلغ ابنها فنكح فيهم امراة، قال ثم انه بدا لابراهيم فقال لاهله اني مطلع تركتي. قال فجاء فسلم فقال اين اسماعيل فقالت امراته ذهب يصيد. قال قولي له اذا جاء غير عتبة بابك. فلما جاء اخبرته قال انت ذاك فاذهبي الى اهلك. قال ثم انه بدا لابراهيم فقال لاهله اني مطلع تركتي. قال فجاء فقال اين اسماعيل فقالت امراته ذهب يصيد، فقالت الا تنزل فتطعم وتشرب فقال وما طعامكم وما شرابكم قالت طعامنا اللحم، وشرابنا الماء. قال اللهم بارك لهم في طعامهم وشرابهم. قال فقال ابو القاسم صلى الله عليه وسلم " بركة بدعوة ابراهيم ". قال ثم انه بدا لابراهيم فقال لاهله اني مطلع تركتي. فجاء فوافق اسماعيل من وراء زمزم، يصلح نبلا له، فقال يا اسماعيل، ان ربك امرني ان ابني له بيتا. قال اطع ربك. قال انه قد امرني ان تعينني عليه. قال اذا افعل. او كما قال. قال فقاما فجعل ابراهيم يبني، واسماعيل يناوله الحجارة، ويقولان {ربنا تقبل منا انك انت السميع العليم} قال حتى ارتفع البناء وضعف الشيخ على نقل الحجارة، فقام على حجر المقام، فجعل يناوله الحجارة، ويقولان {ربنا تقبل منا انك انت السميع العليم}