ஹதீஸ்கள்
#3348
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உயர்ந்தோன் அல்லாஹ் (மறுமை நாளில்) ஆதம் (அலை) அவர்களை நோக்கி, ‘‘ஆதமே!” என்பான். அதற்கு அவர்கள், ‘‘இதோ! வந்துவிட்டேன். கட்டளையிடு! காத்திருக்கிறேன். நலம் அனைத்தும் உன் கரங்களில்தான்” என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ், ‘‘நீங்கள் நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை (மற்றவர்களிலிருந்து) தனியாகப் பிரித்திடுங்கள்” என்று கூறுவான். ஆதம் (அலை) அவர்கள், ‘‘நரகவாசிகளில் எத்தனை பேரை?” என்று கேட்பார்கள். அதற்கு அவன், ‘‘ஒவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத்தொண்ணுற்றொன்பது பேரை (வெளியே கொண்டுவாருங்கள்)” என்று பதிலளிப்பான். இப்படி அவன் கூறும் வேளையில் (அங்கு நிலவும் பயங்கர சூழ்நிலையின் காரணத்தால்) சிறுவன்கூட நரைத்து (மூப்படைந்து)விடுவான்; கர்ப்பமுள்ள பெண் ஒவ்வொருத்தியும் கர்ப்பத்தை (பீதியின் காரணத்தால் அரைகுறையாக)ப் பிரசவித்து விடுவாள். மக்களை (அச்சத்தால்) போதை யுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள். ஆனால், அவர்கள் (உண்மையிலேயே மதுவால்) போதையுற்றிருக்கமாட்டார்கள். ஆனால், அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும்.” (இவ்வாறு நபியவர்கள் கூறியதும்) உடனே மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நரகத்திலிருந்து (வெளியே கொண்டு வரப்படாத) அந்த ஒரு நபர் எங்களில் யார்?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நற்செய்தி பெறுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தாரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளி யேறாமல் அதனுள்) இருப்பார்கள்.23 பிறகு, என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் சொர்க்கவாசிகளில் கால் பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறினார்கள். உடனே நாங்கள் (இந்த மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியைக் கேட்டு) ‘‘அல்லாஹு அக்பர்” (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறினோம். உடனே அவர்கள், ‘‘சொர்க்கவாசிகளில் நீங்கள் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (மீண்டும் மகிழ்ச்சியால்) ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அவர்கள், ‘‘சொர்க்கவாசி களில் பாதித் தொகையினராக நீங்கள் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என்று கூறினார்கள். நாங்கள் (இப்போதும்), ‘‘அல்லாஹு அக்பர்” என்று கூறினோம். அப்போது அவர்கள், ‘‘நீங்கள் (மஹ்ஷர் மைதானத்தில் கூடியிருக்கும்) மக்களில் வெண்ணிறக் காளையின் மேனியில் உள்ள கருப்பு முடியைப் போலத்தான் இருப்பீர்கள். அல்லது கருநிறக் காளையின் மேனியிலுள்ள வெள்ளை முடியைப் போலத்தான் (மொத்த மக்களில் குறைந்த எண்ணிக்கையில்) இருப்பீர்கள்” என்று கூறினார்கள். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني اسحاق بن نصر، حدثنا ابو اسامة، عن الاعمش، حدثنا ابو صالح، عن ابي سعيد الخدري رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " يقول الله تعالى يا ادم. فيقول لبيك وسعديك والخير في يديك. فيقول اخرج بعث النار. قال وما بعث النار قال من كل الف تسعماية وتسعة وتسعين، فعنده يشيب الصغير، وتضع كل ذات حمل حملها، وترى الناس سكارى، وما هم بسكارى، ولكن عذاب الله شديد ". قالوا يا رسول الله واينا ذلك الواحد قال " ابشروا فان منكم رجل، ومن ياجوج وماجوج الف ". ثم قال " والذي نفسي بيده، اني ارجو ان تكونوا ربع اهل الجنة ". فكبرنا. فقال " ارجو ان تكونوا ثلث اهل الجنة ". فكبرنا. فقال " ارجو ان تكونوا نصف اهل الجنة ". فكبرنا. فقال " ما انتم في الناس الا كالشعرة السوداء في جلد ثور ابيض، او كشعرة بيضاء في جلد ثور اسود
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3348
- Book Index
- 23
Grades
- -
