ஹதீஸ்கள்
#3365
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய மனைவி (சாரா லிஅலை) அவர்களுக்குமிடையே மனத்தாங்கல் ஏற்பட்டபோது39 இப்ராஹீம் (அலை) அவர்கள் இஸ்மாயீல் (அலை) அவர்களை யும் இஸ்மாயீல் (அலை) அவர்களின் தாயாரையும் அழைத்துக்கொண்டு (மக்காவை நோக்கிச்) சென்றார்கள். அப்போது அவர்களுடன் தண்ணீருள்ள தோல்பை ஒன்று இருந்தது. இஸ்மாயீலின் தாயார் அதிலிருந்து தண்ணீர் குடிக்கத் தொடங்கினார். அவர்களுடைய குழந்தை இஸ்மாயீலுக்காகப் பால் சுரக்கலாயிற்று. பின்னர் இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்கா வந்துசேர்ந்தார்கள். அங்கே ஒரு பெரிய மரத்திற்குக் கீழே ஹாஜரை விட்டுவிட்டு தம் குடும்பத்தாரிடம் (சாராவிடம்) இப்ராஹீம் திரும்பினார். அவரைப் பின்தொடர்ந்து வந்த இஸ்மாயீலின் அன்னை (ஹாஜர்), யிகதாஉ’ என்னும் இடத்தை அடைந்தவுடன் ‘‘இப்ராஹீமே! எங்களை யாரிடம் விட்டுச் செல்கிறீர்கள்?” என்று பின்னாலிருந்து இப்ராஹீம் (அலை) அவர்களைக் கூப்பிட்டுக் கேட்டார். அதற்கு அவர், ‘‘அல்லாஹ்விடம்...” என்றார். ‘‘அப்படியானால், அல்லாஹ்வின் மீது எனக்கு முழு நம்பிக்கை உண்டு” என்றார் ஹாஜர். பின்னர் திரும்பி வந்து தோல்பையி லிருந்து நீர் அருந்தினார். அவருடைய குழந்தைக்காகப் பால் சுரந்தது. பின்னர் தண்ணீர் தீர்ந்தவுடன் அவர் (தமக்குள்), ‘‘நான் போய் (மலைமீதேறி) நோட்ட மிட்டால் எவராவது எனக்குத் தென்பட லாம்” என்று கூறிக்கொண்டார்; பிறகு, ஸஃபா மலைக் குன்றுக்குச் சென்று ஏறிக்கொண்டார். அவர் (அங்கிருந்து) நோட்டமிட்டார்; எவராவது தமக்குத் தென்படுகின்றாரா என்று பார்த்தார். ஆனால், எவரும் அவருக்குத் தென்பட வில்லை. ஆகவே, பள்ளத்தாக்கிற்குச் சென்றார். அங்கு சென்றுசேர்ந்ததும் ஓடிச்சென்று யிமர்வா’வை அடைந்தார். அப்படிப் பல சுற்றுகள் ஓடினார். பிறகு, ‘‘நான் போய் குழந்தை என்ன செய்கிறது என்று பார்த்தால் (நன்றாயிருக்குமே)” என்று தமக்குள் சொல்லிக்கொண்டார். ஆகவே, (மலைக்குச்) சென்று நோட்ட மிட்டார். ஆனாலும், குழந்தை இஸ்மாயீல் அதே நிலையில்தான் (அழுதபடி) இறப்பதற்குமுன் மூச்சுத் திணறுவதைப் போல் முனகிக்கொண்டிருந்தார். அவருடைய (பெற்ற) மனம் அவரை நிம்மதியாக இருக்கவிடவில்லை. ஆகவே, அவர் (தமக்குள்) ‘‘நான் போய் நோட்டமிட்டால் எவராவது தென்படக்கூடும்” என்று கூறிக்கொண்டு (மீண்டும்) சென்று ஸஃபா மலைக் குன்றின் மீதேறிப் பார்த்தார்; பார்த்தார்; (பார்த்துக்கொண்டேயிருந்தார்.) எவரும் அவருக்குத் தென்படவில்லை. இவ்வாறே ஏழு சுற்றுகளை நிறைவுசெய்து விட்டார். பிறகு, ‘‘குழந்தை என்ன செய்கிறது என்று நான் போய் பார்த்து வந்தால் (நன்றாயிருக்குமே)” என்று (தமக்குள்) கூறிக்கொண்டார். அந்த நேரத்தில் குரல் ஒன்று வந்தது. (அதைக் கேட்டு) அவர், ‘‘உங்களால் நன்மை செய்ய முடியுமாயின் நீங்கள் எங்களைக் காப்பாற்றுங்கள்” என்று சொன்னார். அங்கே (வானவர்) ஜிப்ரீல் அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். தம் குதிகாலால் இப்படி சைகை செய்து பூமியில் தம் குதிகாலை (பள்ளம் விழும்படி) அழுத்தினார்கள். தண்ணீர் பீறிட்டு வந்தது. இஸ்மாயீலின் தாயார் பதறிப்போய் (அதை அணைகட்டி வைக்கப்) பள்ளம் தோண்டலானார். அபுல்காசிம் (ஸல்) அவர்கள், ‘‘அவர் அப்படியே விட்டிருந்தால் தண்ணீர் வெளியே ஓடக்கூடியதாக இருந்திருக்கும்” என்று சொன்னார்கள். உடனே அவர் அந்தத் தண்ணீரைக் குடிக்கலானார். அவரது பால் அவரது குழந்தைக்காகச் சுரந்த வண்ணமிருந்தது. அப்போது ஜுர்ஹும் குலத்தைச் சேர்ந்த மக்கள் சிலர் பள்ளத்தாக்கின் மையப் பகுதிக்கு வந்தபோது பறவையொன்றைக் கண்டார்கள். அதை அவர்கள் (இதுவரை அப்பகுதியில் இல்லாத) புதுமையான ஒன்றாகக் கருதினார்கள். ஆகவே, ‘‘பறவை நீர் நிலையின் அருகில்தானே இருக்கும்” என்று பேசிக்கொண்டார்கள். தங்கள் தூதுவரை அவர்கள் அனுப்பி வைக்க, அவர் சென்று பார்த்தபோது அவர்கள் (இஸ்மாயீல், அவருடைய தாயார்) இருவரும் நீர் நிலை அருகே இருக்கக் கண்டார். உடனே தம் குலத்தாரிடம் வந்து அவர்களுக்கு விஷயத்தைத் தெரிவித்தார். அவர்கள் (அன்னை) ஹாஜர் (அலை) அவர்களிடம் சென்று, ‘‘இஸ்மாயீலின் அன்னையே! நாங்கள் உங்களுடன் இருக்க லிஅல்லது உங்களுடன் வசிக்கலி எங்களுக்கு அனுமதியளிப்பீர்களா?” என்று கேட்டார்கள். (அவர்கள் அனுமதி யளிக்கவே அங்கேயே வசிக்கலானார்கள்.) ஹாஜருடைய மகன் (இஸ்மாயீல் (அலை) அவர்கள்) பருவ வயதையடைந்தார். ஜுர்ஹும் குலத்தாரிலேயே ஒரு பெண்ணை மணந்துகொண்டார். பிறகு இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (ஒருநாள் தம் மனைவியையும் மகனையும் ‘அவர்கள் என்ன ஆனார்கள்’ என்று பார்த்துவிட்டு வரலாமென)த் தோன்றியது. ஆகவே, தம் வீட்டாரிடம் (முதல் மனைவி சாராவிடம்) நான் (மக்காவில்) விட்டுவந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்துவரப் போகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டு (மக்கா) சென்று (இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவி யிடம்) சலாம் சொல்லி, ‘‘இஸ்மாயீல் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்களின் மனைவி, அவர் ‘‘வேட்டையாடச் சென்றுவிட்டார்” என்று பதிலளித்தார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘அவர் வந்தால், யிஉன் நிலைப்படியை மாற்றிவிடு’ என்று (நான் கட்டளையிட்டதாக) சொல்லிவிடு” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள் வந்த போது அவருடைய மனைவி அதை அவருக்குத் தெரிவித்தார். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘நீதான் நிலைப்படி. ஆகவே, நீ உன் வீட்டாரிடம் சென்று விடு” என்று சொன்னார்கள். மீண்டும் (சிறிது காலத்திற்குப் பிறகு) இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (மக்காவில் உள்ள மனைவி, மகனைப் பார்த்துவிட்டு வரலாமென்று) தோன்றவே தம் வீட்டாரிடம், ‘‘நான் (மக்காவில்) விட்டுவந்த என் செல்வங்களைப் பற்றி அறிந்துவரப் போகிறேன்” என்று சொன்னார்கள். பிறகு (மக்காவிற்குச்) சென்று, ‘‘இஸ்மாயீல் எங்கே?” என்று (அவருடைய மனைவியிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், ‘‘வேட்டையாடச் சென்றிருக்கிறார்” என்று பதிலளித்தார். பிறகு ‘‘நீங்கள் (எங்களிடம்) தங்கி உண்ணவும் பருகவும்மாட்டீர்களா?” என்று கேட்டார். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘உங்கள் உணவும் உங்கள் பானமும் எவை?” என்று வினவ அவர், ‘‘எங்கள் உணவு இறைச்சியாகும். எங்கள் பானம் தண்ணீராகும்” என்று சொன்னார். இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘இறைவா! இவர்களுக்கு இவர்களின் உணவிலும் பானத்திலும் வளத்தை அளிப்பாயாக!” என்று வேண்டினார்கள். அபுல்காசிம் (ஸல்) அவர்கள், ‘‘(மக்கா வின் உணவிலும் பானத்திலும்) இப்ராஹீம் (அலை) அவர்களது பிரார்த்தனையின் காரணத்தால்தான் வளம் அளிக்கப்பட் டுள்ளது” என்று சொன்னார்கள். பிறகு, இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு (மீண்டும் ஒருமுறை இஸ்மாயீல் (அலை) அவர்களைப் பார்த்து வர வேண்டும்போல்) தோன்றியது. உடனே அவர்கள் (மக்கா) செல்ல, அங்கு இஸ் மாயீல் (அலை) அவர்கள் ஸம்ஸம் கிணற் றுக்குப் பின்பக்கத்தில் தமது அம்பைச் சீர் செய்துகொண்டிருக்கக் கண்டார்கள். ‘‘இஸ் மாயீலே! உன் இறைவன் தனக்கு ஓர் இல்லத்தை நான் (புதுப்பித்துக்) கட்ட வேண்டுமேன்று எனக்குக் கட்டளை யிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். அதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் உங்கள் இறைவனுக்குக் கீழ்ப் படியுங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், ‘‘(அதைக் கட்டுவதற்கு) நீ எனக்கு உதவ வேண்டு மென்றும் அவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான்” என்று சொன்னார்கள். இஸ்மாயீல் (அலை) அவர்கள், ‘‘அப்படியாயின் நான் (உதவி) செய்கிறேன்” என்று சொன்னார்கள். உடனே இருவரும் தயாராகி, இப்ராஹீம் (அலை) அவர்கள் கட்டத் தொடங்க, இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களைக் கொண்டுவந்து தரலானார் கள். இருவரும் (அப்போது), ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப் பணியை) ஏற்றுக்கொள்வாயாக! நிச்சயம், நீயே செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவாய் (அல்குர்ஆன் 2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள். இறுதி யில் கட்டடம் எழும்பியது. பெரியவ(ர் இப்ராஹீம் அன்னா)ருக்கு கற்களைத் தூக்கி வைக்க முடியவில்லை. எனவே, (யிமகாமு இப்ராஹீம்’ என்றழைக்கப்படும்) இந்தக் கல்மீது நின்று கொண்டார்கள். அவர்களுக்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் கற்களை எடுத்துத் தரலானார்கள். இருவரும் ‘‘இறைவா! எங்களிடமிருந்து (இந்தப் புனிதப்பணியை) ஏற்பாயாக! நிச்சயமாக, நீயே செவியுறு பவனும் நன்கறிந்தவனும் ஆவாய்” (2:127) என்று பிரார்த்தித்துக்கொண்டி ருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا ابو عامر عبد الملك بن عمرو، قال حدثنا ابراهيم بن نافع، عن كثير بن كثير، عن سعيد بن جبير، عن ابن عباس رضى الله عنهما قال لما كان بين ابراهيم وبين اهله ما كان، خرج باسماعيل وام اسماعيل، ومعهم شنة فيها ماء، فجعلت ام اسماعيل تشرب من الشنة فيدر لبنها على صبيها حتى قدم مكة، فوضعها تحت دوحة، ثم رجع ابراهيم الى اهله، فاتبعته ام اسماعيل، حتى لما بلغوا كداء نادته من ورايه يا ابراهيم الى من تتركنا قال الى الله. قالت رضيت بالله. قال فرجعت فجعلت تشرب من الشنة ويدر لبنها على صبيها، حتى لما فني الماء قالت لو ذهبت فنظرت لعلي احس احدا. قال فذهبت فصعدت الصفا فنظرت ونظرت هل تحس احدا فلم تحس احدا، فلما بلغت الوادي سعت واتت المروة ففعلت ذلك اشواطا، ثم قالت لو ذهبت فنظرت ما فعل تعني الصبي فذهبت فنظرت، فاذا هو على حاله كانه ينشغ للموت، فلم تقرها نفسها، فقالت لو ذهبت فنظرت لعلي احس احدا، فذهبت فصعدت الصفا فنظرت ونظرت فلم تحس احدا، حتى اتمت سبعا، ثم قالت لو ذهبت فنظرت ما فعل، فاذا هي بصوت فقالت اغث ان كان عندك خير. فاذا جبريل، قال فقال بعقبه هكذا، وغمز عقبه على الارض، قال فانبثق الماء، فدهشت ام اسماعيل فجعلت تحفز. قال فقال ابو القاسم صلى الله عليه وسلم " لو تركته كان الماء ظاهرا ". قال فجعلت تشرب من الماء، ويدر لبنها على صبيها قال فمر ناس من جرهم ببطن الوادي، فاذا هم بطير، كانهم انكروا ذاك، وقالوا ما يكون الطير الا على ماء. فبعثوا رسولهم، فنظر فاذا هم بالماء، فاتاهم فاخبرهم فاتوا اليها، فقالوا يا ام اسماعيل، اتاذنين لنا ان نكون معك او نسكن معك فبلغ ابنها فنكح فيهم امراة، قال ثم انه بدا لابراهيم فقال لاهله اني مطلع تركتي. قال فجاء فسلم فقال اين اسماعيل فقالت امراته ذهب يصيد. قال قولي له اذا جاء غير عتبة بابك. فلما جاء اخبرته قال انت ذاك فاذهبي الى اهلك. قال ثم انه بدا لابراهيم فقال لاهله اني مطلع تركتي. قال فجاء فقال اين اسماعيل فقالت امراته ذهب يصيد، فقالت الا تنزل فتطعم وتشرب فقال وما طعامكم وما شرابكم قالت طعامنا اللحم، وشرابنا الماء. قال اللهم بارك لهم في طعامهم وشرابهم. قال فقال ابو القاسم صلى الله عليه وسلم " بركة بدعوة ابراهيم ". قال ثم انه بدا لابراهيم فقال لاهله اني مطلع تركتي. فجاء فوافق اسماعيل من وراء زمزم، يصلح نبلا له، فقال يا اسماعيل، ان ربك امرني ان ابني له بيتا. قال اطع ربك. قال انه قد امرني ان تعينني عليه. قال اذا افعل. او كما قال. قال فقاما فجعل ابراهيم يبني، واسماعيل يناوله الحجارة، ويقولان {ربنا تقبل منا انك انت السميع العليم} قال حتى ارتفع البناء وضعف الشيخ على نقل الحجارة، فقام على حجر المقام، فجعل يناوله الحجارة، ويقولان {ربنا تقبل منا انك انت السميع العليم}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3365
- Book Index
- 39
Grades
- -
