Loading...

Loading...
நூல்கள்
௧௦௩ ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்து, “யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (யூதர்களின் வேத பாடசாலையான) ‘பைத்துல் மித்ராஸ்’ எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, “யூதர்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; (ஈருலகிலும்) சாந்தி அடைவீர்கள்” என்று அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்கள். அதற்கு யூதர்கள், “நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள், அபுல்காசிமே!” என்று பதிலளித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்; இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; சாந்தி பெறுவீர்கள்” என்று சொன்னார்கள். அப்போதும் யூதர்கள் “நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள், அபுல் காசிமே!” என்று சொன்னார்கள். உடனே அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதைத்தான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுப் பிறகு மூன்றாம் முறையாக (முன்பு போலவே) சொன்னார்கள். பின்னர், “பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக் கும் உரியது. நான் உங்களை இந்த பூமியிலிருந்து நாடு கடத்திட விரும்பு கிறேன். உங்களில் யார் தமது (அசையாச்) சொத்துக்குப் பதிலாக ஏதேனும் (விலை யைப்) பெறுகிறாரோ அவர் அந்தச் சொத்தை விற்றுவிடட்டும். இல்லையென் றால், பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.77 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا الليث، عن سعيد، عن ابيه، عن ابي هريرة، قال بينا نحن في المسجد خرج رسول الله صلى الله عليه وسلم فقال " انطلقوا الى يهود ". فخرجنا معه حتى جينا بيت المدراس فقام النبي صلى الله عليه وسلم فناداهم فقال " يا معشر يهود اسلموا تسلموا ". فقالوا بلغت يا ابا القاسم. قال فقال لهم رسول الله صلى الله عليه وسلم " ذلك اريد اسلموا تسلموا ". فقالوا قد بلغت يا ابا القاسم. فقال لهم رسول الله صلى الله عليه وسلم " ذلك اريد ". ثم قالها الثالثة فقال " اعلموا انما الارض لله ورسوله واني اريد ان اجليكم من هذه الارض، فمن وجد منكم بماله شييا فليبعه، والا فاعلموا انما الارض لله ورسوله
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: “மறுமை நாளில் நூஹ் (அலை) அவர்கள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் (இறைச் செய்தியை) எடுத்துரைத்துவிட்டீர்களா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “ஆம்; (எடுத்துரைத்துவிட்டேன்); என் இறைவா!” என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுடைய சமுதாயத்தாரிடம், “இவர் உங்களுக்கு (இறைச் செய்தியை) எடுத் துரைத்தாரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்களை எச்சரிப்பவர் எவருமே வரவில்லையே?” என்று (பொய்) சொல்வார்கள். அப்போது (நூஹ் (அலை) அவர்களிடம்) அல்லாஹ், “உங்கள் சாட்சிகள் யார்?” என்று கேட்பான். ‘முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களுடைய சமுதாயத்தாரும்தான் (என் சாட்சிகள்)” என்று நூஹ் (அலை) அவர்கள் கூறுவார்கள். அப்போது நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்; (நூஹ் (அலை) அவர்கள் இறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள் என்று) நீங்கள் சாட்சியம் அளிப்பீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும் இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்கு பவர்களாகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக நாம் உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கியிருக்கின்றோம்” எனும் (2:143ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். அதிலுள்ள ‘வசத்தன்’ எனும் சொல்லுக்கு ‘நீதி செலுத்தும் சமுதாயம்’ (அத்லன்) என்று விளக்கம் அளித்தார்கள்.79 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق بن منصور، حدثنا ابو اسامة، حدثنا الاعمش، حدثنا ابو صالح، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " يجاء بنوح يوم القيامة فيقال له هل بلغت فيقول نعم يا رب. فتسال امته هل بلغكم فيقولون ما جاءنا من نذير. فيقول من شهودك فيقول محمد وامته. فيجاء بكم فتشهدون ". ثم قرا رسول الله صلى الله عليه وسلم {وكذلك جعلناكم امة وسطا} قال عدلا {لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا} وعن جعفر بن عون، حدثنا الاعمش، عن ابي صالح، عن ابي سعيد الخدري، عن النبي صلى الله عليه وسلم بهذا
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அதீ அல்அன்சாரி குலத்தைச் சேர்ந்த ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்று (வரும்போது) உயர் ரகப் பேரீச்சம்பழங்களைக் கொண்டுவந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைபரின் பேரீச்சம் பழங்கள் எல்லாமே இப்படித்தான் (உயர் ரகமானதாக) இருக்குமா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டரகப் பேரீச்சம் பழங்களில் இரண்டு ‘ஸாஉ’கள் கொடுத்து ஒரு ஸாஉ (இந்த உயர் ரகப் பேரீச்சம் பழம்) வாங்குவோம்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள். சரிக்குச் சமமாகவே தவிர (வாங்காதீர்கள்). அல்லது மட்டமான பேரீச்சம் பழங்களை விற்றுவிட்டு, அதன் தொகைக்கு உயர் ரகப் பேரீச்சம் பழங்களை வாங்குங்கள். இவ்வாறுதான் நிறுக்கப்படும் பொருட்களின் சட்டமும்” என்று சொன்னார்கள்.81 அத்தியாயம் :
حدثنا اسماعيل، عن اخيه، عن سليمان بن بلال، عن عبد المجيد بن سهيل بن عبد الرحمن بن عوف، انه سمع سعيد بن المسيب، يحدث ان ابا سعيد الخدري، وابا، هريرة حدثاه ان رسول الله صلى الله عليه وسلم بعث اخا بني عدي الانصاري واستعمله على خيبر، فقدم بتمر جنيب فقال له رسول الله صلى الله عليه وسلم " اكل تمر خيبر هكذا ". قال لا والله يا رسول الله انا لنشتري الصاع بالصاعين من الجمع. فقال رسول الله صلى الله عليه وسلم " لا تفعلوا، ولكن مثلا بمثل، او بيعوا هذا واشتروا بثمنه من هذا وكذلك الميزان
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ அதீ அல்அன்சாரி குலத்தைச் சேர்ந்த ஒருவரை கைபர் பகுதியின் அதிகாரியாக அனுப்பிவைத்தார்கள். அவர் சென்று (வரும்போது) உயர் ரகப் பேரீச்சம்பழங்களைக் கொண்டுவந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “கைபரின் பேரீச்சம் பழங்கள் எல்லாமே இப்படித்தான் (உயர் ரகமானதாக) இருக்குமா?” என்று கேட்டார்கள். அவர், “இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மட்டரகப் பேரீச்சம் பழங்களில் இரண்டு ‘ஸாஉ’கள் கொடுத்து ஒரு ஸாஉ (இந்த உயர் ரகப் பேரீச்சம் பழம்) வாங்குவோம்” என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இவ்வாறு செய்யாதீர்கள். சரிக்குச் சமமாகவே தவிர (வாங்காதீர்கள்). அல்லது மட்டமான பேரீச்சம் பழங்களை விற்றுவிட்டு, அதன் தொகைக்கு உயர் ரகப் பேரீச்சம் பழங்களை வாங்குங்கள். இவ்வாறுதான் நிறுக்கப்படும் பொருட்களின் சட்டமும்” என்று சொன்னார்கள்.81 அத்தியாயம் :
حدثنا اسماعيل، عن اخيه، عن سليمان بن بلال، عن عبد المجيد بن سهيل بن عبد الرحمن بن عوف، انه سمع سعيد بن المسيب، يحدث ان ابا سعيد الخدري، وابا، هريرة حدثاه ان رسول الله صلى الله عليه وسلم بعث اخا بني عدي الانصاري واستعمله على خيبر، فقدم بتمر جنيب فقال له رسول الله صلى الله عليه وسلم " اكل تمر خيبر هكذا ". قال لا والله يا رسول الله انا لنشتري الصاع بالصاعين من الجمع. فقال رسول الله صلى الله عليه وسلم " لا تفعلوا، ولكن مثلا بمثل، او بيعوا هذا واشتروا بثمنه من هذا وكذلك الميزان
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீதிபதி தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து சரியான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு இரண்டு நன்மைகள் உண்டு. அவர் தீர்ப்பளிப்பதற்காக ஆய்வு செய்து தவறான தீர்ப்பு வழங்குவாராயின் அவருக்கு ஒரு நன்மை உண்டு. இதை அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதே ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்கள் வாயிலாகவும், அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يزيد، حدثنا حيوة، حدثني يزيد بن عبد الله بن الهاد، عن محمد بن ابراهيم بن الحارث، عن بسر بن سعيد، عن ابي قيس، مولى عمرو بن العاص عن عمرو بن العاص، انه سمع رسول الله صلى الله عليه وسلم يقول " اذا حكم الحاكم فاجتهد ثم اصاب فله اجران، واذا حكم فاجتهد ثم اخطا فله اجر ". قال فحدثت بهذا الحديث ابا بكر بن عمرو بن حزم فقال هكذا حدثني ابو سلمة بن عبد الرحمن عن ابي هريرة. وقال عبد العزيز بن المطلب عن عبد الله بن ابي بكر، عن ابي سلمة، عن النبي صلى الله عليه وسلم مثله
உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் உமர் (ரலி) (அவர்கள் ஆட்சித் தலைவராக இருந்தபோது) அவர்களைச் சந்திக்க அனுமதி கேட்டார்கள். உமர் ஏதோ வேலையாக இருப்பதாகத் தோன்றவே அபூமூசா திரும்பிச் சென்றுவிட்டார்கள். பின்னர் உமர் (ரலி) அவர்கள், “நான் அப்துல்லாஹ் பின் கைஸ் (அபூமூசா-ரலி) அவர்களது குரலைக் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். உமர் (ரலி) அவர்கள், “நீங்கள் இப்படிச் செய்ததற்கு (வராமலிருந்ததற்கு)க் காரணம் என்ன?” என்று (அவர்களிடம்) கேட்க, அபூமூசா (ரலி) அவர்கள், “(மூன்று முறை முகமன் (சலாம்) கூறியும் சந்திக்க அனுமதி கிடைக்காவிட்டால்) திரும்பிச் சென்றுவிடும்படிதான் நமக்குக் கட்டளை யிடப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், “இதற்கு ஒரு சான்றை நீங்கள் என்னிடம் கொண்டுவாருங்கள்; இல்லையேல், உங்கள்மீது நான் நடவடிக்கை எடுப்பேன்” என்று சொன்னார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் (நபியின் இந்தக் கட்டளைக்கு வேறு சாட்சி எவரும் இருக்கிறாரா? என்று அறிவதற்காக) அன்சாரிகளின் ஓர் அவைக்குச் சென்றார்கள். அங்கிருந்தவர்கள், “எங்களில் (வயதில்) சிறியவர்தான் இதற்குச் சாட்சியமளிப்பார்” என்றனர். அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் எழுந்துவந்து, “(ஆம்) நமக்கு இப்படித்தான் கட்டளையிடப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். அதைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்களின் கட்டளைகளில் இது எனக்குத் தெரியாமல் போய்விட்டதே! கடைவீதிகளில் வியாபாரம் செய்துவந்தது என் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டுள்ளது” என்று சொன்னார்கள்.84 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن ابن جريج، حدثني عطاء، عن عبيد بن عمير، قال استاذن ابو موسى على عمر فكانه وجده مشغولا فرجع، فقال عمر الم اسمع صوت عبد الله بن قيس، ايذنوا له. فدعي له فقال ما حملك على ما صنعت فقال انا كنا نومر بهذا. قال فاتني على هذا ببينة او لافعلن بك. فانطلق الى مجلس من الانصار فقالوا لا يشهد الا اصاغرنا. فقام ابو سعيد الخدري فقال قد كنا نومر بهذا. فقال عمر خفي على هذا من امر النبي صلى الله عليه وسلم، الهاني الصفق بالاسواق
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ‘அபூஹுரைரா, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அதிகமான ஹதீஸ்களை அறிவிக்கின்றாரே’ என்று நீங்கள் (குறையாகக்) கூறுகிறீர்கள். (இந்தக் குற்றச்சாட்டு சரியா; தவறா என்பதை அறிய) அல்லாஹ்விடம் குறித்த நேரம் ஒன்று உண்டு. நான் ஓர் ஏழை மனிதன். நான், என் வயிறு நிரம்பினால் போதும் என்ற திருப்தியுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனேயே இருந்து வந்தேன். முஹாஜிர்கள் கடைவீதிகளில் வியாபாரம் செய்வதில் கவனமாக இருந்தார்கள். அன்சாரிகள் தம் (வேளாண்) செல்வங்களில் கவனம் செலுத்தி வந்தார்கள். நான் ஒருநாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்தபோது அவர்கள், “நான் என் சொல்லைச் சொல்லி முடிக்கும்வரை யார் தமது மேல்துண்டை விரித்து வைத்திருந்து பிறகு அதைச் சுருட்டி (நெஞ்சோடு சேர்த்து அணைத்து)க்கொள்கிறாரோ அவர் என்னிடமிருந்து கேட்ட எதையும் ஒருபோதும் மறக்கமாட்டார்” என்று சொன்னார்கள். உடனே நான் என் மீதிருந்த மேலாடையை (எடுத்து) விரித்தேன். நபி (ஸல்) அவர்களைச் சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! நான் நபியவர்களிடமிருந்து கேட்ட எதையும் (அன்றிலிருந்து) மறந்ததில்லை.85 அத்தியாயம் :
حدثنا علي، حدثنا سفيان، حدثني الزهري، انه سمعه من الاعرج، يقول اخبرني ابو هريرة، قال انكم تزعمون ان ابا هريرة، يكثر الحديث على رسول الله صلى الله عليه وسلم والله الموعد، اني كنت امرا مسكينا الزم رسول الله صلى الله عليه وسلم على ملء بطني، وكان المهاجرون يشغلهم الصفق بالاسواق، وكانت الانصار يشغلهم القيام على اموالهم، فشهدت من رسول الله صلى الله عليه وسلم ذات يوم وقال " من يبسط رداءه حتى اقضي مقالتي ثم يقبضه، فلن ينسى شييا سمعه مني ". فبسطت بردة كانت على، فوالذي بعثه بالحق ما نسيت شييا سمعته منه
முஹம்மத் பின் அல்முன்கதிர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் ‘இப்னுஸ் ஸய்யாத்’தான் ‘தஜ்ஜால்’ என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதை நான் பார்த்தேன். அப்போது நான், (ஜாபிர் (ரலி) அவர்களிடம்), “அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறீர்களா?” என்று கேட்டேன். அவர்கள், “நபி (ஸல்) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து இதைக் கூறியதை நான் கேட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதை மறுக்கவில்லை” என்று பதிலளித்தார்கள்.87 அத்தியாயம் :
حدثنا حماد بن حميد، حدثنا عبيد الله بن معاذ، حدثنا ابي، حدثنا شعبة، عن سعد بن ابراهيم، عن محمد بن المنكدر، قال رايت جابر بن عبد الله يحلف بالله ان ابن الصايد الدجال، قلت تحلف بالله. قال اني سمعت عمر يحلف على ذلك عند النبي صلى الله عليه وسلم فلم ينكره النبي صلى الله عليه وسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரை (வைத்திருப்பது), மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்): ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பளிக்கக்கூடியதாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச்சுமையாகும்: அதை இறைவழியில் (நற்காரியங்களுக்குப்) பயன்படுத்துவதற்காக, பசுமையான ‘ஒரு வெட்ட வெளியில்’ அல்லது ‘ஒரு தோட்டத்தில்’ ஒரு நீண்ட கயிற்றால் அதைக் கட்டிவைத்துப் பராமரிக்கின்ற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்கு ‘பசும் புல்வெளியில்’ அல்லது ‘தோட்டத்தில்’ மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதன் பாதச் சுவடுகளும் கெட்டிச் சாணங்களும்கூட அவருக்கு நன்மையாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (அதன் உரிமையாளரான) அவருக்கு இல்லாமல் இருந்தாலும் அதுவும் அவருக்குரிய நன்மையாகவே ஆகும். ஆக, அது அந்த மனிதருக்கு (இவ்விதம்) நற்பலனைத் தேடித்தருகிறது. இன்னொருவர், தம் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதன் பிடரியின் (விற்பனையின் ஸகாத்தை செலுத்தும்) விஷயத்திலும், (அதனால் தாங்க முடிந்த சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அது (வறுமையிóருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன், பெருமைக்காவும் பகட்டுக்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவன் ஆவான். அதன் காரணமாக அது அவனுக்குப் பாவச்சுமையாக ஆகிவிடுகின்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அவற்றைக் குறித்து எந்த கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; ‘எவர் அணுவளவு நன்மை செய்வாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வான்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7, 8) வசனங்களைத் தவிர” என்று பதிலளித்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.91 அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن زيد بن اسلم، عن ابي صالح السمان، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " الخيل لثلاثة لرجل اجر، ولرجل ستر، وعلى رجل وزر، فاما الذي له اجر فرجل ربطها في سبيل الله فاطال في مرج او روضة، فما اصابت في طيلها ذلك المرج والروضة كان له حسنات، ولو انها قطعت طيلها فاستنت شرفا او شرفين كانت اثارها وارواثها حسنات له، ولو انها مرت بنهر فشربت منه ولم يرد ان يسقي به كان ذلك حسنات له، وهي لذلك الرجل اجر، ورجل ربطها تغنيا وتعففا ولم ينس حق الله في رقابها ولا ظهورها، فهى له ستر، ورجل ربطها فخرا ورياء، فهي على ذلك وزر ". وسيل رسول الله صلى الله عليه وسلم عن الحمر قال " ما انزل الله على فيها الا هذه الاية الفاذة الجامعة {فمن يعمل مثقال ذرة خيرا يره * ومن يعمل مثقال ذرة شرا يره}
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, மாதவிடாய் குறித்து, “அதிóருந்து (தூய்மையாகிக்கொள்ள) நாங்கள் எவ்வாறு குளிக்க வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “கஸ்தூரி (நறுமணப் பொருள்) தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்துத்) தூய்மைப்படுத்திக்கொள்” என்று பதிலளித் தார்கள். அந்தப் பெண்மணி, “அல்லாஹ்வின் தூதரே! இதனால் நான் எப்படித் தூய்மைப் படுத்திக்கொள்வேன்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “தூய்மைப்படுத்திக் கொள்” என்று பதிலளித்தார்கள். அப்பெண்மணி (மீண்டும்,) “அதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்திக்கொள்வேன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்), “அதனால் தூய்மைப்படுத்திக்கொள்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து (பஞ்சினால் எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என) அவளுக்கு நான் கற்றுக்கொடுத்தேன்.92 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا ابن عيينة، عن منصور بن صفية، عن امه، عن عايشة، ان امراة، سالت النبي صلى الله عليه وسلم. حدثنا محمد هو ابن عقبة حدثنا الفضيل بن سليمان النميري البصري حدثنا منصور بن عبد الرحمن ابن شيبة حدثتني امي عن عايشة رضى الله عنها ان امراة سالت النبي صلى الله عليه وسلم عن الحيض كيف تغتسل منه قال " تاخذين فرصة ممسكة فتوضيين بها ". قالت كيف اتوضا بها يا رسول الله قال النبي صلى الله عليه وسلم " توضيي ". قالت كيف اتوضا بها يا رسول الله قال النبي صلى الله عليه وسلم " توضيين بها ". قالت عايشة فعرفت الذي يريد رسول الله صلى الله عليه وسلم فجذبتها الى فعلمتها
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உம்மு ஹுஃபைத் பின்த் அல்ஹாரிஸ் பின் ஹஸ்ன் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குச் சிறிது நெய், பாலாடைக் கட்டி, சில உடும்புகள் ஆகியவற்றை அன்பளிப்பாக அனுப்பிவைத்தார்கள். (உணவு வேளையில்) உடும்புகளைக் கொண்டுவருமாறு நபி (ஸல்) அவர்கள் கூற, (அவை கொண்டுவரப்பட்டு) நபி (ஸல்) அவர்களது உணவு விரிப்பில் வைத்து உண்ணப்பட்டன. ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதை அருவருப்பவர்களைப் போன்று அவற்றை உண்ணாமல் விட்டுவிட்டார்கள். (நெய் மற்றும் பாலாடைக் கட்டியை மட்டும் உண்டார்கள்.) உடும்புகள் தடை செய்யப்பட்டவையாய் இருந்திருந்தால் நபி (ஸல்) அவர்களது உணவு விரிப்பில் அவை பரிமாறப்பட்டிருக்கமாட்டா. அவற்றை உண்ணும்படி நபியவர்கள் சொல்லியிருக்கவுமாட்டார்கள்.93 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن ابي بشر، عن سعيد بن جبير، عن ابن عباس، ان ام حفيد بنت الحارث بن حزن، اهدت الى النبي صلى الله عليه وسلم سمنا واقطا واضبا، فدعا بهن النبي صلى الله عليه وسلم فاكلن على مايدته، فتركهن النبي صلى الله عليه وسلم كالمتقذر له، ولو كن حراما ما اكلن على مايدته، ولا امر باكلهن
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பச்சை) வெள்ளைப் பூண்டையோ வெங்காயத்தையோ உண்டவர் ‘நம்மிட மிருந்து விலகியிருக்கட்டும்’ அல்லது ‘நமது பள்ளிவாசலிலிருந்து விலகியிருக் கட்டும்’. அவர் தமது இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர் களது அறிவிப்பில் காணப்படுவதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் பச்சைக் காய்கறிகளும் கீரைகளும் உள்ள ஒரு தட்டு கொண்டுவரப்பட்டது. அவற்றில் (துர்) வாடை அடிப்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, அவற்றைப் பற்றி விசாரித்தார்கள். அவற்றிலுள்ள கீரைகள் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் தம்முடன் இருந்த தோழர்கள் சிலருக்கு அவற்றைக் கொடுக்கும்படி கூறினார்கள். அவ்வாறே கொடுத்தார்கள். அவர்கள் அதை உண்ண விரும்பாமó ருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, “சாப்பிடுங்கள்; ஏனெனில், நீங்கள் உரையாடாதவர்களுடன் நான் உரையாட வேண்டியுள்ளது” என்று சொன்னார்கள். மற்றோர் அறிவிப்பில், “காய்கறிகள் கொண்ட ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது” என்று இடம்பெற்றுள்ளது. வேறுசில அறிவிப்புகளில் பாத்திரம் பற்றிக் கூறப்படவில்லை.94 அத்தியாயம் :
حدثنا احمد بن صالح، حدثنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، اخبرني عطاء بن ابي رباح، عن جابر بن عبد الله، قال قال النبي صلى الله عليه وسلم " من اكل ثوما او بصلا، فليعتزلنا او ليعتزل مسجدنا، وليقعد في بيته ". وانه اتي ببدر قال ابن وهب يعني طبقا فيه خضرات من بقول، فوجد لها ريحا فسال عنها اخبر بما فيها من البقول فقال قربوها فقربوها الى بعض اصحابه كان معه، فلما راه كره اكلها قال " كل، فاني اناجي من لا تناجي ". وقال ابن عفير عن ابن وهب بقدر فيه خضرات. ولم يذكر الليث وابو صفوان عن يونس قصة القدر، فلا ادري هو من قول الزهري او في الحديث
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரி பெண்மணி ஒருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (தம் தேவைகளில்) ஒன்றைக் குறித்துப் பேசினார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்மணிக்கு (பிறகு வருமாறு) உத்தரவிட்டார்கள். அவர், “நான் (திரும்பவும் வரும்போது) தங்களைக் காணாவிட்டால் என்ன செய்வது, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “என்னைக் காணாவிட்டால் அபூபக்ரிடம் செல்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘நான் திரும்பிவரும்போது தாங்கள் இறந்துவிட்டிருந்தால்’ என்பதையே ‘தங்களைக் காணாவிட்டால்’ என்று அப்பெண்மணி குறிப்பிட்டார் என்று கூடுதலாகக் காணப்படுகிறது.95 அத்தியாயம் :
حدثني عبيد الله بن سعد بن ابراهيم، حدثنا ابي وعمي، قالا حدثنا ابي، عن ابيه، اخبرني محمد بن جبير، ان اباه، جبير بن مطعم اخبره ان امراة اتت رسول الله صلى الله عليه وسلم فكلمته في شىء، فامرها بامر فقالت ارايت يا رسول الله ان لم اجدك قال " ان لم تجديني فاتي ابا بكر ". زاد الحميدي عن ابراهيم بن سعد كانها تعني الموت
ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: முஆவியா (ரலி) அவர்கள் (ஹஜ்ஜின்போது) மதீனாவில் குறைஷியர் குழு ஒன்றுக்கு ஹதீஸ்களை அறிவித்ததை நான் கேட்டேன். முஆவியா (ரலி) அவர்கள் கஅபுல் அஹ்பார் (ரலி) அவர்களைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது, “வேதக்காரர்களிடமிருந்து செய்திகளை அறிவிப்பவர்களிலேயே மிகவும் வாய்மையானவர் கஅப் (ரலி) அவர்கள்தான். அப்படியிருந்தும் நாங்கள் அன்னாருடைய செய்திகளில் தவறானவை ஏதும் உண்டா எனச் சோதித்துப் பார்த்து வந்தோம்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
وقال ابو اليمان اخبرنا شعيب، عن الزهري، اخبرني حميد بن عبد الرحمن، سمع معاوية، يحدث رهطا من قريش بالمدينة، وذكر كعب الاحبار فقال ان كان من اصدق هولاء المحدثين الذين يحدثون عن اهل الكتاب، وان كنا مع ذلك لنبلو عليه الكذب
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: வேதக்காரர்(களான யூதர்)கள் தவ்ராத் வேதத்தை ஹீப்ரு (எபிரேயு) மொழியில் ஓதி, அதை அரபு மொழியில் இஸ்லாமியர்களுக்கு விளக்கியும் வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “வேதக்காரர்களை (அவர்கள் சொல்வதெல்லாம் உண்மை என) நம்பவும் வேண்டாம்; (பொய் என) மறுக்கவும் வேண்டாம். மாறாக, (முஸ்லிம்களே!) நீங்கள் கூறுங்கள்: நாங்கள் அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்றதையும் உங்களுக்கு அருளப்பெற்றதையும் நம்புகிறோம்” என்று கூறினார்கள்.97 அத்தியாயம் :
حدثني محمد بن بشار، حدثنا عثمان بن عمر، اخبرنا علي بن المبارك، عن يحيى بن ابي كثير، عن ابي سلمة، عن ابي هريرة، قال كان اهل الكتاب يقرءون التوراة بالعبرانية ويفسرونها بالعربية لاهل الاسلام فقال رسول الله صلى الله عليه وسلم " لا تصدقوا اهل الكتاب، ولا تكذبوهم وقولوا {امنا بالله وما انزل الينا وما انزل اليكم} ". الاية
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மார்க்கம் சம்பந்தப்பட்ட) எந்த விஷயம் குறித்தும் வேதக்காரர்களிடம் நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப் பெற்றுள்ள உங்களது வேதமோ புதியது. கலப்படமில்லாத தூய வேதமாக அதை நீங்கள் ஓதிவருகிறீர்கள். வேதக்காரர்கள் (தமக்கு அருளப்பெற்ற) இறைவேதத்தைத் திரித்து மாற்றம் செய்து, தம் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதிக்கொண்டு, அதன்மூலம் சொற்ப விலையைப் பெறுவதற்காக ‘இது இறைவனிடமிருந்து வந்ததே’ என்று கூறுகிறார்கள் என அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்துள்ளான். உங்களுக்குக் கிடைத்துள்ள (மார்க்க) ஞானம், வேதக்காரர்களிடம் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்க வில்லையா? அல்லாஹ்வின் மீதாணை யாக! வேதக்காரர்களில் எவரும் உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்தைப் பற்றி உங்களிடம் கேட்பதை நாம் கண்டதில்லையே!98 இதை உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابراهيم، اخبرنا ابن شهاب، عن عبيد الله، ان ابن عباس رضى الله عنهما قال كيف تسالون اهل الكتاب عن شىء، وكتابكم الذي انزل على رسول الله صلى الله عليه وسلم احدث، تقرءونه محضا لم يشب وقد حدثكم ان اهل الكتاب بدلوا كتاب الله وغيروه وكتبوا بايديهم الكتاب وقالوا هو من عند الله. ليشتروا به ثمنا قليلا، الا ينهاكم ما جاءكم من العلم عن مسالتهم، لا والله ما راينا منهم رجلا يسالكم عن الذي انزل عليكم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டி ருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள்! (அதன் கருத்தை அறிவதில்) உங்களிடையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று)விடுங்கள். இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.99 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறுகின்றேன்: இந்த ஹதீஸை அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ (ரஹ்) அவர்கள் சல்லாம் பின் முத்தீஉ (ரஹ்) அவர்களிடமிருந்து செவியுற்றார்கள். அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا عبد الرحمن بن مهدي، عن سلام بن ابي مطيع، عن ابي عمران الجوني، عن جندب بن عبد الله، قال قال رسول الله صلى الله عليه وسلم " اقرءوا القران ما ايتلفت قلوبكم فاذا اختلفتم فقوموا عنه ". قال ابو عبد الله سمع عبد الرحمن سلاما
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களின் உள்ளங்கள் ஒன்றுபட்டி ருக்கும்வரை குர்ஆனை ஓதுங்கள். (அதன் கருத்தை அறிவதில்) உங்களி டையே கருத்து வேறுபாடு எழுந்தால் அ(ந்த இடத்)தைவிட்டு எழுந்து (சென்று) விடுங்கள். இதை ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.100 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق، اخبرنا عبد الصمد، حدثنا همام، حدثنا ابو عمران الجوني، عن جندب بن عبد الله، ان رسول الله صلى الله عليه وسلم قال " اقرءوا القران ما ايتلفت عليه قلوبكم، فاذا اختلفتم فقوموا عنه ". وقال يزيد بن هارون عن هارون الاعور، حدثنا ابو عمران، عن جندب، عن النبي صلى الله عليه وسلم
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களது இல்லத்தில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “வாருங் கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நபி (ஸல்) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித்தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம்தான் குர்ஆன் இருக்கின்றதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்” என்று சொன்னார்கள். வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக்கொண்டார்கள். அவர்களில் சிலர், “(நபியவர்கள் கேட்ட எழுதுபொருளை அவர்களிடம்) கொடுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித்தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். வேறுசிலர் உமர் (ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்தபோது நபி (ஸல்) அவர்கள், “என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), “மக்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்சóட்டுக்கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்” என்று கூறுவார்கள்.101 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، عن معمر، عن الزهري، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس، قال لما حضر النبي صلى الله عليه وسلم قال وفي البيت رجال فيهم عمر بن الخطاب قال " هلم اكتب لكم كتابا لن تضلوا بعده ". قال عمر ان النبي صلى الله عليه وسلم غلبه الوجع وعندكم القران، فحسبنا كتاب الله. واختلف اهل البيت واختصموا، فمنهم من يقول قربوا يكتب لكم رسول الله صلى الله عليه وسلم كتابا لن تضلوا بعده. ومنهم من يقول ما قال عمر، فلما اكثروا اللغط والاختلاف عند النبي صلى الله عليه وسلم قال " قوموا عني ". قال عبيد الله فكان ابن عباس يقول ان الرزية كل الرزية ما حال بين رسول الله صلى الله عليه وسلم وبين ان يكتب لهم ذلك الكتاب من اختلافهم ولغطهم
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த மக்களிடையே கூறியதாவது: (‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய தோழர்களான நாங்கள் உம்ராவைச் சேர்க்காமல் ஹஜ்ஜுக்காக மட்டும் இஹ்ராம் கட்டினோம். நபி (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதம் நான்காவது நாள் காலையில் (மக்கா) வந்துசேர்ந்தார்கள். நாங்கள் (உம்ரா முடித்து) வந்தவுடன் இஹ்ராமிலிருந்து வெளியேறும்படி எங்களுக்கு உத்தரவிட்ட நபி (ஸல்) அவர்கள், “இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள்; (உங்கள்) துணைவியருடன் தாம்பத்திய உறவு கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள். ஆனால், அதைக் கட்டாயமாகச் செய்தாக வேண்டும் என்று எங்களுக்குக் கட்டளையிடவில்லை. மாறாக, தாம்பத்திய உறவு கொள்ளலாம் என எங்களுக்கு அனுமதியளித்தார்கள். “நாம் அரஃபாவை அடைய இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் நம் துணைவியருடன் நாம் தாம்பத்திய உறவு கொள்ளும்படி நபியவர்கள் நமக்குக் கட்டளையிட்டார்களே! அப்படியானால், நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா அரஃபா செல்ல வேண்டும்?” என்று நாங்கள் பேசிக்கொள்வதாக நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டியது. -’நாம் தாம்பத்திய உறவு கொண்ட கையோடா?’ என்று சொல்லும்போது ஜாபிர் (ரலி) அவர்கள், ‘இப்படி’ என்று சைகை செய்து கை அசைத்தார்கள்.- உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, “நானே உங்களில் அல்லாஹ்வுக்கு அதிகம் அஞ்சுபவனும், உங்களில் அதிகம் வாய்மையானவனும், உங்களில் அதிகமாக நற்செயல் புரிபவனும் ஆவேன் என்று நீங்கள் அறிந்துள்ளீர்கள். எனது குர்பானி பிராணி (என்னுடன்) இல்லாமலிருந்தால் உங்களைப் போன்றே நானும் இஹ்ராமிலிருந்து விடுபட்டிருப்பேன். ஆகவே, நீங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டுக்கொள்ளுங்கள். நான் பின்னால் தெரிந்துகொண்டதை முன்பே அறிந்திருந்தால் குர்பானி பிராணியை என்னுடன் கொண்டுவந்திருக்கமாட்டேன்” என்று சொன்னார்கள். ஆகவே, நாங்கள் இஹ்ராமிலிருந்து விடுபட்டோம். நபி (ஸல்) அவர்களின் கட்டளையைச் செவியேற்று கீழ்ப்படிந்தோம்.103 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، عن ابن جريج، قال عطاء قال جابر. قال ابو عبد الله وقال محمد بن بكر حدثنا ابن جريج، قال اخبرني عطاء، سمعت جابر بن عبد الله، في اناس معه قال اهللنا اصحاب رسول الله صلى الله عليه وسلم في الحج خالصا ليس معه عمرة قال عطاء قال جابر فقدم النبي صلى الله عليه وسلم صبح رابعة مضت من ذي الحجة فلما قدمنا امرنا النبي صلى الله عليه وسلم ان نحل وقال " احلوا واصيبوا من النساء ". قال عطاء قال جابر ولم يعزم عليهم ولكن احلهن لهم فبلغه انا نقول لما لم يكن بيننا وبين عرفة الا خمس امرنا ان نحل الى نساينا فناتي عرفة تقطر مذاكيرنا المذى قال ويقول جابر بيده هكذا وحركها فقام رسول الله صلى الله عليه وسلم فقال " قد علمتم اني اتقاكم لله واصدقكم وابركم ولولا هديي لحللت كما تحلون فحلوا فلو استقبلت من امري ما استدبرت ما اهديت ". فحللنا وسمعنا واطعنا