ஹதீஸ்கள்
#7348
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் இருந்தபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்து, “யூதர்களை நோக்கிச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டு (யூதர்களின் வேத பாடசாலையான) ‘பைத்துல் மித்ராஸ்’ எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு, “யூதர்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; (ஈருலகிலும்) சாந்தி அடைவீர்கள்” என்று அவர்களுக்கு அழைப்புவிடுத்தார்கள். அதற்கு யூதர்கள், “நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள், அபுல்காசிமே!” என்று பதிலளித்தார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இ(ந்த ஒப்புதல் வாக்குமூலத்)தைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்; இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; சாந்தி பெறுவீர்கள்” என்று சொன்னார்கள். அப்போதும் யூதர்கள் “நீங்கள் சொல்ல வேண்டியதைச் சொல்லிவிட்டீர்கள், அபுல் காசிமே!” என்று சொன்னார்கள். உடனே அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதைத்தான் எதிர்பார்க்கிறேன்” என்று கூறிவிட்டுப் பிறகு மூன்றாம் முறையாக (முன்பு போலவே) சொன்னார்கள். பின்னர், “பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக் கும் உரியது. நான் உங்களை இந்த பூமியிலிருந்து நாடு கடத்திட விரும்பு கிறேன். உங்களில் யார் தமது (அசையாச்) சொத்துக்குப் பதிலாக ஏதேனும் (விலை யைப்) பெறுகிறாரோ அவர் அந்தச் சொத்தை விற்றுவிடட்டும். இல்லையென் றால், பூமி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்று சொன்னார்கள்.77 அத்தியாயம் :
حدثنا قتيبة، حدثنا الليث، عن سعيد، عن ابيه، عن ابي هريرة، قال بينا نحن في المسجد خرج رسول الله صلى الله عليه وسلم فقال " انطلقوا الى يهود ". فخرجنا معه حتى جينا بيت المدراس فقام النبي صلى الله عليه وسلم فناداهم فقال " يا معشر يهود اسلموا تسلموا ". فقالوا بلغت يا ابا القاسم. قال فقال لهم رسول الله صلى الله عليه وسلم " ذلك اريد اسلموا تسلموا ". فقالوا قد بلغت يا ابا القاسم. فقال لهم رسول الله صلى الله عليه وسلم " ذلك اريد ". ثم قالها الثالثة فقال " اعلموا انما الارض لله ورسوله واني اريد ان اجليكم من هذه الارض، فمن وجد منكم بماله شييا فليبعه، والا فاعلموا انما الارض لله ورسوله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7348
- Book Index
- 76
Grades
- -
