ஹதீஸ்கள்
#7349
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: “மறுமை நாளில் நூஹ் (அலை) அவர்கள் கொண்டுவரப்படுவார்கள். அவர்களிடம், “நீங்கள் (இறைச் செய்தியை) எடுத்துரைத்துவிட்டீர்களா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “ஆம்; (எடுத்துரைத்துவிட்டேன்); என் இறைவா!” என்று பதிலளிப்பார்கள். உடனே, அவர்களுடைய சமுதாயத்தாரிடம், “இவர் உங்களுக்கு (இறைச் செய்தியை) எடுத் துரைத்தாரா?” என்று கேட்கப்படும். அதற்கு அவர்கள், “எங்களை எச்சரிப்பவர் எவருமே வரவில்லையே?” என்று (பொய்) சொல்வார்கள். அப்போது (நூஹ் (அலை) அவர்களிடம்) அல்லாஹ், “உங்கள் சாட்சிகள் யார்?” என்று கேட்பான். ‘முஹம்மத் (ஸல்) அவர்களும் அவர்களுடைய சமுதாயத்தாரும்தான் (என் சாட்சிகள்)” என்று நூஹ் (அலை) அவர்கள் கூறுவார்கள். அப்போது நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள்; (நூஹ் (அலை) அவர்கள் இறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள் என்று) நீங்கள் சாட்சியம் அளிப்பீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, “நீங்கள் மக்களுக்குச் சான்று வழங்குபவர்களாகவும் இறைத்தூதர் உங்களுக்குச் சான்று வழங்கு பவர்களாகவும் திகழ்ந்திட வேண்டும் என்பதற்காக நாம் உங்களை நடுநிலையான சமுதாயமாக ஆக்கியிருக்கின்றோம்” எனும் (2:143ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். அதிலுள்ள ‘வசத்தன்’ எனும் சொல்லுக்கு ‘நீதி செலுத்தும் சமுதாயம்’ (அத்லன்) என்று விளக்கம் அளித்தார்கள்.79 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا اسحاق بن منصور، حدثنا ابو اسامة، حدثنا الاعمش، حدثنا ابو صالح، عن ابي سعيد الخدري، قال قال رسول الله صلى الله عليه وسلم " يجاء بنوح يوم القيامة فيقال له هل بلغت فيقول نعم يا رب. فتسال امته هل بلغكم فيقولون ما جاءنا من نذير. فيقول من شهودك فيقول محمد وامته. فيجاء بكم فتشهدون ". ثم قرا رسول الله صلى الله عليه وسلم {وكذلك جعلناكم امة وسطا} قال عدلا {لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا} وعن جعفر بن عون، حدثنا الاعمش، عن ابي صالح، عن ابي سعيد الخدري، عن النبي صلى الله عليه وسلم بهذا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7349
- Book Index
- 77
Grades
- -
