Loading...

Loading...
நூல்கள்
௧௦௩ ஹதீஸ்கள்
அப்துல்லாஹ் பின் முகஃப்பல் அல்முஸனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “மஃக்ரிப் தொழுகைக்கு முன்பாக (இரு ரக்அத்கள்) தொழுங்கள்” என்று சொன்னார்கள். மூன்றாம் முறையாகச் சொல்லும்போது, அதை மக்கள், (கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய) நபிவழியாக எடுத்துக்கொள் வார்கள் என்று அஞ்சி, “இது விரும்பு வோருக்குத்தான்” என்று சொன் னார்கள்.104 அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، عن الحسين، عن ابن بريدة، حدثني عبد الله المزني، عن النبي صلى الله عليه وسلم قال " صلوا قبل صلاة المغرب قال في الثالثة لمن شاء ". كراهية ان يتخذها الناس سنة
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்மீது அவதூறு கற்பித்தவர்கள் அந்த அபாண்டத்தைச் சொன்னபோது, அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களை யும், உசாமா பின் ஸைத் (ரலி) அவர்களை யும் (என்னைப் பற்றி) விசாரிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள். அப்போது வேதஅறிவிப்பு (தாற்காலிகமாக) நின்றுபோயிருந்தது. தம் குடும்பத் தாரை (என்னை)ப் பிரிந்துவிடுவது குறித்து அவ்விருவரிடமும் நபியவர்கள் ஆலோசனை கேட்டார்கள். உசாமா அவர்களோ நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதை எடுத்துரைத்தார்கள். அலீ அவர்களோ “அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அல்லாமல் பெண்கள் பலர் உள்ளனர். பணிப்பெண்ணிடம் (பரீராவிடம்) கேளுங்கள். அவர் உங்களிடம் உண்மை சொல்வார்” என்று கூறினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (பரீராவிடம்) “நீ சந்தேகப்படும்படி எதையேனும் கண்டாயா?” என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, “குழைத்த மாவை அப்படியே போட்டுவிட்டு ஆயிஷா உறங்கிவிடுவார். ஆடு வந்து அதைத் தின்றுவிடும். அத்தகைய (கவனக் குறைவான) இளம் வயது பெண் என்பதற்கு அதிகமாக வேறு (குறை) எதையும் நான் கண்டதில்லை” என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலுக்குச் சென்று) சொற்பொழிவு மேடை (மிம்பர்)மீது நின்று, “முஸ்லிம் களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனைத் தண்டிக்க எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி குறித்து நான் நல்லதையே அறிவேன்” என்று சொன்னார்கள். பிறகு நான் குற்றமற்றவள் என்று (இறைவன் அறிவித்ததை) எடுத்துரைத்தார்கள்.106 இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا الاويسي، حدثنا ابراهيم، عن صالح، عن ابن شهاب، حدثني عروة، وابن المسيب، وعلقمة بن وقاص، وعبيد الله، عن عايشة رضى الله عنها حين قال لها اهل الافك قالت ودعا رسول الله صلى الله عليه وسلم علي بن ابي طالب واسامة بن زيد حين استلبث الوحى يسالهما، وهو يستشيرهما في فراق اهله، فاما اسامة فاشار بالذي يعلم من براءة اهله، واما علي فقال لم يضيق الله عليك، والنساء سواها كثير، وسل الجارية تصدقك. فقال " هل رايت من شىء يريبك ". قالت ما رايت امرا اكثر من انها جارية حديثة السن تنام عن عجين اهلها فتاتي الداجن فتاكله. فقام على المنبر فقال " يا معشر المسلمين من يعذرني من رجل بلغني اذاه في اهلي، والله ما علمت على اهلي الا خيرا ". فذكر براءة عايشة. وقال ابو اسامة عن هشام
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழந்துவிட்டு, “என் வீட்டாரை இகழ்ந்து பேசுகின்ற சிலரைப் பற்றி நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்? ஒருபோதும் என் வீட்டாரிடம் நான் தீமை எதையும் அறிந்ததில்லை” என்று சொன்னார்கள். உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆயிஷா (ரலி) அவர்களிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டபோது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தாய் வீட்டிற்குச் செல்ல எனக்கு அனுமதியளிக் கிறீர்களா?” என்று கேட்டார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவுக்கு அனுமதியளித்து அவர்களுடன் பணியாளையும் அனுப்பிவைத்தார்கள். அன்சாரிகளில் ஒருவர், “இறைவன் தூயவன். இப்படி (அவதூறு) பேசுவது நமக்குத் தகாது. இறைவன் தூயவன். இது மாபெரும் அபாண்டம்” என்று சொன்னார். அத்தியாயம் :
حدثني محمد بن حرب، حدثنا يحيى بن ابي زكرياء الغساني، عن هشام، عن عروة، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم خطب الناس فحمد الله واثنى عليه وقال " ما تشيرون على في قوم يسبون اهلي ما علمت عليهم من سوء قط ". وعن عروة قال لما اخبرت عا��شة بالامر قالت يا رسول الله اتاذن لي ان انطلق الى اهلي. فاذن لها وارسل معها الغلام. وقال رجل من الانصار سبحانك ما يكون لنا ان نتكلم بهذا، سبحانك هذا بهتان عظيم