ஹதீஸ்கள்
#7370
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அல்லாஹ்வைப் போற்றிப் புகழந்துவிட்டு, “என் வீட்டாரை இகழ்ந்து பேசுகின்ற சிலரைப் பற்றி நீங்கள் எனக்கு என்ன ஆலோசனை சொல்கிறீர்கள்? ஒருபோதும் என் வீட்டாரிடம் நான் தீமை எதையும் அறிந்ததில்லை” என்று சொன்னார்கள். உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஆயிஷா (ரலி) அவர்களிடம் விஷயம் தெரிவிக்கப்பட்டபோது அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என் தாய் வீட்டிற்குச் செல்ல எனக்கு அனுமதியளிக் கிறீர்களா?” என்று கேட்டார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் ஆயிஷாவுக்கு அனுமதியளித்து அவர்களுடன் பணியாளையும் அனுப்பிவைத்தார்கள். அன்சாரிகளில் ஒருவர், “இறைவன் தூயவன். இப்படி (அவதூறு) பேசுவது நமக்குத் தகாது. இறைவன் தூயவன். இது மாபெரும் அபாண்டம்” என்று சொன்னார். அத்தியாயம் :
حدثني محمد بن حرب، حدثنا يحيى بن ابي زكرياء الغساني، عن هشام، عن عروة، عن عايشة، ان رسول الله صلى الله عليه وسلم خطب الناس فحمد الله واثنى عليه وقال " ما تشيرون على في قوم يسبون اهلي ما علمت عليهم من سوء قط ". وعن عروة قال لما اخبرت عا��شة بالامر قالت يا رسول الله اتاذن لي ان انطلق الى اهلي. فاذن لها وارسل معها الغلام. وقال رجل من الانصار سبحانك ما يكون لنا ان نتكلم بهذا، سبحانك هذا بهتان عظيم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7370
- Book Index
- 97
Grades
- -
