ஹதீஸ்கள்
#7360
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அன்சாரி பெண்மணி ஒருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (தம் தேவைகளில்) ஒன்றைக் குறித்துப் பேசினார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்மணிக்கு (பிறகு வருமாறு) உத்தரவிட்டார்கள். அவர், “நான் (திரும்பவும் வரும்போது) தங்களைக் காணாவிட்டால் என்ன செய்வது, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “என்னைக் காணாவிட்டால் அபூபக்ரிடம் செல்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஹுமைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், ‘நான் திரும்பிவரும்போது தாங்கள் இறந்துவிட்டிருந்தால்’ என்பதையே ‘தங்களைக் காணாவிட்டால்’ என்று அப்பெண்மணி குறிப்பிட்டார் என்று கூடுதலாகக் காணப்படுகிறது.95 அத்தியாயம் :
حدثني عبيد الله بن سعد بن ابراهيم، حدثنا ابي وعمي، قالا حدثنا ابي، عن ابيه، اخبرني محمد بن جبير، ان اباه، جبير بن مطعم اخبره ان امراة اتت رسول الله صلى الله عليه وسلم فكلمته في شىء، فامرها بامر فقالت ارايت يا رسول الله ان لم اجدك قال " ان لم تجديني فاتي ابا بكر ". زاد الحميدي عن ابراهيم بن سعد كانها تعني الموت
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7360
- Book Index
- 87
Grades
- -
