ஹதீஸ்கள்
#7357
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, மாதவிடாய் குறித்து, “அதிóருந்து (தூய்மையாகிக்கொள்ள) நாங்கள் எவ்வாறு குளிக்க வேண்டும்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “கஸ்தூரி (நறுமணப் பொருள்) தடவப்பட்ட பஞ்சுத் துண்டு ஒன்றை எடுத்து அதனால் (உன் மறைவிடத்தைத் துடைத்துத்) தூய்மைப்படுத்திக்கொள்” என்று பதிலளித் தார்கள். அந்தப் பெண்மணி, “அல்லாஹ்வின் தூதரே! இதனால் நான் எப்படித் தூய்மைப் படுத்திக்கொள்வேன்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “தூய்மைப்படுத்திக் கொள்” என்று பதிலளித்தார்கள். அப்பெண்மணி (மீண்டும்,) “அதனால் நான் எப்படித் தூய்மைப்படுத்திக்கொள்வேன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்), “அதனால் தூய்மைப்படுத்திக்கொள்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள் என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டு அந்தப் பெண்மணியை என் பக்கம் இழுத்து (பஞ்சினால் எப்படித் தூய்மைப்படுத்த வேண்டும் என) அவளுக்கு நான் கற்றுக்கொடுத்தேன்.92 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا يحيى، حدثنا ابن عيينة، عن منصور بن صفية، عن امه، عن عايشة، ان امراة، سالت النبي صلى الله عليه وسلم. حدثنا محمد هو ابن عقبة حدثنا الفضيل بن سليمان النميري البصري حدثنا منصور بن عبد الرحمن ابن شيبة حدثتني امي عن عايشة رضى الله عنها ان امراة سالت النبي صلى الله عليه وسلم عن الحيض كيف تغتسل منه قال " تاخذين فرصة ممسكة فتوضيين بها ". قالت كيف اتوضا بها يا رسول الله قال النبي صلى الله عليه وسلم " توضيي ". قالت كيف اتوضا بها يا رسول الله قال النبي صلى الله عليه وسلم " توضيين بها ". قالت عايشة فعرفت الذي يريد رسول الله صلى الله عليه وسلم فجذبتها الى فعلمتها
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7357
- Book Index
- 84
Grades
- -
