ஹதீஸ்கள்
#7356
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குதிரை (வைத்திருப்பது), மூன்று பேருக்கு (மூன்று வகையான விளைவுகளைத் தருவதாகும்): ஒரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத் தருவதாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பளிக்கக்கூடியதாகும்; இன்னொரு மனிதருக்குப் பாவச்சுமையாகும்: அதை இறைவழியில் (நற்காரியங்களுக்குப்) பயன்படுத்துவதற்காக, பசுமையான ‘ஒரு வெட்ட வெளியில்’ அல்லது ‘ஒரு தோட்டத்தில்’ ஒரு நீண்ட கயிற்றால் அதைக் கட்டிவைத்துப் பராமரிக்கின்ற மனிதருக்கு அது (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தரும். அந்தக் குதிரை தன்(னைக் கட்டியிருக்கும்) கயிற்றின் நீளத்திற்கு ஏற்ப எந்த அளவு தொலைவிற்கு ‘பசும் புல்வெளியில்’ அல்லது ‘தோட்டத்தில்’ மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அது தன் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஓரிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றாலும் அதன் பாதச் சுவடுகளும் கெட்டிச் சாணங்களும்கூட அவருக்கு நன்மையாக மாறும். அந்தக் குதிரை ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால், அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் (அதன் உரிமையாளரான) அவருக்கு இல்லாமல் இருந்தாலும் அதுவும் அவருக்குரிய நன்மையாகவே ஆகும். ஆக, அது அந்த மனிதருக்கு (இவ்விதம்) நற்பலனைத் தேடித்தருகிறது. இன்னொருவர், தம் தேவைகளை நிறைவு செய்துகொள்ளவும் பிறரிடம் கையேந்துவதிலிருந்து தம்மைத் தற்காத்துக்கொள்ளவும் அதைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவர் ஆவார். மேலும், அதன் பிடரியின் (விற்பனையின் ஸகாத்தை செலுத்தும்) விஷயத்திலும், (அதனால் தாங்க முடிந்த சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கி வைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்றிட) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அது (வறுமையிóருந்து அவரைக் காக்கும்) திரையாகும். மற்றொருவன், பெருமைக்காவும் பகட்டுக்காகவும் அதனைக் கட்டிவை(த்துப் பராமரி)க்கின்றவன் ஆவான். அதன் காரணமாக அது அவனுக்குப் பாவச்சுமையாக ஆகிவிடுகின்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கழுதைகளைக் குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அவற்றைக் குறித்து எந்த கட்டளையையும் அல்லாஹ் எனக்கு அருளவில்லை; ‘எவர் அணுவளவு நன்மை செய்வாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவன் அணுவளவு தீமை புரிந்திருந்தானோ அவனும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வான்’ எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7, 8) வசனங்களைத் தவிர” என்று பதிலளித்தார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.91 அத்தியாயம் :
حدثنا اسماعيل، حدثني مالك، عن زيد بن اسلم، عن ابي صالح السمان، عن ابي هريرة رضى الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال " الخيل لثلاثة لرجل اجر، ولرجل ستر، وعلى رجل وزر، فاما الذي له اجر فرجل ربطها في سبيل الله فاطال في مرج او روضة، فما اصابت في طيلها ذلك المرج والروضة كان له حسنات، ولو انها قطعت طيلها فاستنت شرفا او شرفين كانت اثارها وارواثها حسنات له، ولو انها مرت بنهر فشربت منه ولم يرد ان يسقي به كان ذلك حسنات له، وهي لذلك الرجل اجر، ورجل ربطها تغنيا وتعففا ولم ينس حق الله في رقابها ولا ظهورها، فهى له ستر، ورجل ربطها فخرا ورياء، فهي على ذلك وزر ". وسيل رسول الله صلى الله عليه وسلم عن الحمر قال " ما انزل الله على فيها الا هذه الاية الفاذة الجامعة {فمن يعمل مثقال ذرة خيرا يره * ومن يعمل مثقال ذرة شرا يره}
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7356
- Book Index
- 83
Grades
- -
