ஹதீஸ்கள்
#7359
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பச்சை) வெள்ளைப் பூண்டையோ வெங்காயத்தையோ உண்டவர் ‘நம்மிட மிருந்து விலகியிருக்கட்டும்’ அல்லது ‘நமது பள்ளிவாசலிலிருந்து விலகியிருக் கட்டும்’. அவர் தமது இல்லத்திலேயே அமர்ந்துகொள்ளட்டும். இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அப்துல்லாஹ் பின் வஹ்ப் (ரஹ்) அவர் களது அறிவிப்பில் காணப்படுவதாவது: (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம் பச்சைக் காய்கறிகளும் கீரைகளும் உள்ள ஒரு தட்டு கொண்டுவரப்பட்டது. அவற்றில் (துர்) வாடை அடிப்பதை நபி (ஸல்) அவர்கள் உணர்ந்தார்கள். ஆகவே, அவற்றைப் பற்றி விசாரித்தார்கள். அவற்றிலுள்ள கீரைகள் பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள் தம்முடன் இருந்த தோழர்கள் சிலருக்கு அவற்றைக் கொடுக்கும்படி கூறினார்கள். அவ்வாறே கொடுத்தார்கள். அவர்கள் அதை உண்ண விரும்பாமó ருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டபோது, “சாப்பிடுங்கள்; ஏனெனில், நீங்கள் உரையாடாதவர்களுடன் நான் உரையாட வேண்டியுள்ளது” என்று சொன்னார்கள். மற்றோர் அறிவிப்பில், “காய்கறிகள் கொண்ட ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது” என்று இடம்பெற்றுள்ளது. வேறுசில அறிவிப்புகளில் பாத்திரம் பற்றிக் கூறப்படவில்லை.94 அத்தியாயம் :
حدثنا احمد بن صالح، حدثنا ابن وهب، اخبرني يونس، عن ابن شهاب، اخبرني عطاء بن ابي رباح، عن جابر بن عبد الله، قال قال النبي صلى الله عليه وسلم " من اكل ثوما او بصلا، فليعتزلنا او ليعتزل مسجدنا، وليقعد في بيته ". وانه اتي ببدر قال ابن وهب يعني طبقا فيه خضرات من بقول، فوجد لها ريحا فسال عنها اخبر بما فيها من البقول فقال قربوها فقربوها الى بعض اصحابه كان معه، فلما راه كره اكلها قال " كل، فاني اناجي من لا تناجي ". وقال ابن عفير عن ابن وهب بقدر فيه خضرات. ولم يذكر الليث وابو صفوان عن يونس قصة القدر، فلا ادري هو من قول الزهري او في الحديث
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7359
- Book Index
- 86
Grades
- -
