ஹதீஸ்கள்
#7363
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மார்க்கம் சம்பந்தப்பட்ட) எந்த விஷயம் குறித்தும் வேதக்காரர்களிடம் நீங்கள் ஏன் கேட்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருளப் பெற்றுள்ள உங்களது வேதமோ புதியது. கலப்படமில்லாத தூய வேதமாக அதை நீங்கள் ஓதிவருகிறீர்கள். வேதக்காரர்கள் (தமக்கு அருளப்பெற்ற) இறைவேதத்தைத் திரித்து மாற்றம் செய்து, தம் கரங்களால் வேதத்தை (மாற்றி) எழுதிக்கொண்டு, அதன்மூலம் சொற்ப விலையைப் பெறுவதற்காக ‘இது இறைவனிடமிருந்து வந்ததே’ என்று கூறுகிறார்கள் என அல்லாஹ் உங்களுக்குத் தெரிவித்துள்ளான். உங்களுக்குக் கிடைத்துள்ள (மார்க்க) ஞானம், வேதக்காரர்களிடம் கேட்பதிலிருந்து உங்களைத் தடுக்க வில்லையா? அல்லாஹ்வின் மீதாணை யாக! வேதக்காரர்களில் எவரும் உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்தைப் பற்றி உங்களிடம் கேட்பதை நாம் கண்டதில்லையே!98 இதை உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابراهيم، اخبرنا ابن شهاب، عن عبيد الله، ان ابن عباس رضى الله عنهما قال كيف تسالون اهل الكتاب عن شىء، وكتابكم الذي انزل على رسول الله صلى الله عليه وسلم احدث، تقرءونه محضا لم يشب وقد حدثكم ان اهل الكتاب بدلوا كتاب الله وغيروه وكتبوا بايديهم الكتاب وقالوا هو من عند الله. ليشتروا به ثمنا قليلا، الا ينهاكم ما جاءكم من العلم عن مسالتهم، لا والله ما راينا منهم رجلا يسالكم عن الذي انزل عليكم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7363
- Book Index
- 90
Grades
- -
