ஹதீஸ்கள்
#7366
ஸஹீஹ் அல்-புகாரீ - Holding Fast to the Qur'an and Sunnah
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது, அவர்களது இல்லத்தில் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் உள்பட பலர் இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் “வாருங் கள்; உங்களுக்கு நான் ஒரு மடலை எழுதித்தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள் (மக்களிடம்), “நபி (ஸல்) அவர்களை (நோயின்) வேதனை மிகைத்துவிட்டது. (எழுதித்தருமாறு அவர்களை தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம்தான் குர்ஆன் இருக்கின்றதே! நமக்கு (அந்த) இறைவேதமே போதும்” என்று சொன்னார்கள். வீட்டிலிருந்தவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக்கொண்டார்கள். அவர்களில் சிலர், “(நபியவர்கள் கேட்ட எழுதுபொருளை அவர்களிடம்) கொடுங்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு ஒரு மடலை எழுதித்தருவார்கள். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழிதவறமாட்டீர்கள்” என்று சொன்னார்கள். வேறுசிலர் உமர் (ரலி) அவர்கள் சொன்னதையே சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு அருகே மக்களின் கூச்சலும் குழப்பமும் சச்சரவும் மிகுந்தபோது நபி (ஸல்) அவர்கள், “என்னைவிட்டு எழுந்து செல்லுங்கள்” என்று சொன்னார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு), “மக்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்சóட்டுக்கொண்டதால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்கள் எழுதித்தர நினைத்த மடலுக்கும் இடையே குறுக்கீடு ஏற்பட்டதுதான் சோதனையிலும் பெரும் சோதனையாகும்” என்று கூறுவார்கள்.101 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، عن معمر، عن الزهري، عن عبيد الله بن عبد الله، عن ابن عباس، قال لما حضر النبي صلى الله عليه وسلم قال وفي البيت رجال فيهم عمر بن الخطاب قال " هلم اكتب لكم كتابا لن تضلوا بعده ". قال عمر ان النبي صلى الله عليه وسلم غلبه الوجع وعندكم القران، فحسبنا كتاب الله. واختلف اهل البيت واختصموا، فمنهم من يقول قربوا يكتب لكم رسول الله صلى الله عليه وسلم كتابا لن تضلوا بعده. ومنهم من يقول ما قال عمر، فلما اكثروا اللغط والاختلاف عند النبي صلى الله عليه وسلم قال " قوموا عني ". قال عبيد الله فكان ابن عباس يقول ان الرزية كل الرزية ما حال بين رسول الله صلى الله عليه وسلم وبين ان يكتب لهم ذلك الكتاب من اختلافهم ولغطهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Holding Fast to the Qur'an and Sunnah
- Hadith Index
- #7366
- Book Index
- 93
Grades
- -
