Loading...

Loading...
நூல்கள்
௩௦௯ ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நாங்கள் (ஹுனைன் அல்லது கைபர் போரில்) கலந்துகொண்டோம். தம்மை முஸ்லிம் என்று கூறிக்கொண்ட ஒரு மனிதரைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘இவர் நரகவாசி களில் ஒருவர்” என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது அம்மனிதர் கடுமையாகப் போரிட்டார். அப்போது அவருக்குக் காயம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் எவரைக் குறித்து, யிஇவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டீர் களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்” என்று கூறப்பட்டது. அப்போதும் நபி (ஸல்) அவர்கள், ‘‘அவர் நரகத்திற்கே செல்வார்” என்று கூறினார்கள். மக்களில் சிலர் (நபி (ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பைச்) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருக்க, ‘‘அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்களுக்கு இந்தச் செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவேன் என்பதற்கு நானே சாட்சியம் கூறுகிறேன்” என்று கூறினார்கள். பிறகு, பிலால் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட, அவர்கள் மக்களிடையே, ‘‘முஸ்லிமான ஆன்மாதான் சொர்க்கத்திற்குச் செல்ல முடியும். அல்லாஹ் இந்த மார்க்கத் திற்குப் பாவியான மனிதராலும் வலுவூட்டு கின்றான்” என்று பொதுஅறிவிப்புச் செய்தார்கள்.179 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، ح وحدثني محمود بن غيلان، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن الزهري، عن ابن المسيب، عن ابي هريرة رضى الله عنه قال شهدنا مع رسول الله صلى الله عليه وسلم فقال لرجل ممن يدعي الاسلام " هذا من اهل النار ". فلما حضر القتال قاتل الرجل قتالا شديدا، فاصابته جراحة فقيل يا رسول الله، الذي قلت انه من اهل النار فانه قد قاتل اليوم قتالا شديدا وقد مات. فقال النبي صلى الله عليه وسلم " الى النار ". قال فكاد بعض الناس ان يرتاب، فبينما هم على ذلك اذ قيل انه لم يمت، ولكن به جراحا شديدا. فلما كان من الليل لم يصبر على الجراح، فقتل نفسه، فاخبر النبي صلى الله عليه وسلم بذلك فقال " الله اكبر، اشهد اني عبد الله ورسوله ". ثم امر بلالا فنادى بالناس " انه لا يدخل الجنة الا نفس مسلمة، وان الله ليويد هذا الدين بالرجل الفاجر
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (மூத்தா போரின்போது போர்க்கள நிகழ்ச்சிகளை மதீனாவில் இருந்தபடியே விவரித்து,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.180 உரையில், ‘‘இப்போது (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் பின் அல் ஹாரிஸா பிடித்துக்கொண்டார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அதை ஜஅஃபர் பின் அபீதாலிப் பிடித்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அப்துல்லாஹ் பின் ரவாஹா எடுத்தார். இப்போது அவரும் கொல்லப்பட்டு விட்டார். பிறகு காலித் பின் அல்வலீத் (நமது) உத்தரவு இன்றியே (கொடியை) எடுத்துக் கொண்டுவிட்டார். அல்லாஹ் அவருக்கே வெற்றி வாய்ப்பை அளித்துவிட்டான்” என்று கூறிவிட்டு, ‘‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக் காது” என்றோ, ‘‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சி யளிக்காது” என்றோ சொன்னார்கள்.181 இதைச் சொல்லும்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீர் சொரிந்துகொண்டிருந்தன.182 அத்தியாயம் :
حدثنا يعقوب بن ابراهيم، حدثنا ابن علية، عن ايوب، عن حميد بن هلال، عن انس بن مالك رضى الله عنه قال خطب رسول الله صلى الله عليه وسلم فقال " اخذ الراية زيد فاصيب، ثم اخذها جعفر فاصيب، ثم اخذها عبد الله بن رواحة فاصيب، ثم اخذها خالد بن الوليد عن غير امرة ففتح عليه، وما يسرني او قال ما يسرهم انهم عندنا ". وقال وان عينيه لتذرفان
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுவிட்டதாகக் கூறினர்.183 மேலும், தம் சமுதாயத்தாருக்கெதிராக ஒரு படையனுப்பி உதவுமாறு நபி (ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக்கொண்ட னர். நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளில் எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள். அவர்களை நாங்கள் யிகாரீகள்’ (குர்ஆனை ம”ம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்துவந்தோம். அவர்கள் பகலில் விறகு சேகரிப்பார்கள்; இரவில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக்கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர். இறுதியில், யிபிஃரு மஊனா’184 எனுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்று விட்டனர். (செய்தி அறிந்த) நபி (ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்கெதிராகப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறைவசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதிவந்தோம். ‘‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்துவிட்டோம்; அவன் எங்களைக் குறித்துத் திருப்தி அடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தி அடைந் தோம் என்று எங்கள் சமுதாயத்தாருக்கு எங்களைப் பற்றித் தெரிவித்துவிடுங்கள்” என்பதே அந்த வசனம். பின்னர், இந்த வசனத்தை ஓதுவது (இறைவனாலேயே) ரத்து செய்யப்பட்டு விட்டது.185 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا ابن ابي عدي، وسهل بن يوسف، عن سعيد، عن قتادة، عن انس رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم اتاه رعل وذكوان وعصية وبنو لحيان، فزعموا انهم قد اسلموا، واستمدوه على قومهم، فامدهم النبي صلى الله عليه وسلم بسبعين من الانصار قال انس كنا نسميهم القراء، يحطبون بالنهار ويصلون بالليل، فانطلقوا بهم حتى بلغوا بير معونة غدروا بهم وقتلوهم، فقنت شهرا يدعو على رعل وذكوان وبني لحيان. قال قتادة وحدثنا انس انهم قرءوا بهم قرانا الا بلغوا عنا قومنا بانا قد لقينا ربنا فرضي عنا وارضانا. ثم رفع ذلك بعد
அபூதல்ஹா ஸைத் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத் தாரை வெற்றிகொண்டால் (அவர்களின்) திறந்த வெளிப்பகுதியில் மூன்று நாட்கள் தங்குவார்கள். இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الرحيم، حدثنا روح بن عبادة، حدثنا سعيد، عن قتادة، قال ذكر لنا انس بن مالك عن ابي طلحة رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم انه كان اذا ظهر على قوم اقام بالعرصة ثلاث ليال. تابعه معاذ وعبد الاعلى حدثنا سعيد عن قتادة عن انس عن ابي طلحة عن النبي صلى الله عليه وسلم
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிஜிஅரானா’வி லிருந்து (புறப்பட்டு) உம்ரா செய்தார்கள். அங்குதான் ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை அவர்கள் பங்கிட்டார்கள்.186 அத்தியாயம் :
حدثنا هدبة بن خالد، حدثنا همام، عن قتادة، ان انسا، اخبره قال اعتمر النبي صلى الله عليه وسلم من الجعرانة، حيث قسم غنايم حنين
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னுடைய குதிரை ஒன்று (என்னைக் கீழே வீழ்த்திவிட்டு ஓடிச்) சென்றது. அதை எதிரிகள் பிடித்துக்கொண்டனர். பின்னர், முஸ்லிம்கள் எதிரிகளை வென்ற போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் அது என்னிடம் திருப்பித் தரப்பட்டுவிட்டது. (இவ்வாறே) என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடி (கிழக்கு) ரோமானி யருடன் சேர்ந்துகொண்டான். ரோமர்களை முஸ்லிம்கள் வெற்றி கொண்டபோது அந்த அடிமையை காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
قال ابن نمير حدثنا عبيد الله، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال ذهب فرس له، فاخذه العدو، فظهر عليه المسلمون فرد عليه في زمن رسول الله صلى الله عليه وسلم، وابق عبد له فلحق بالروم، فظهر عليهم المسلمون، فرده عليه خالد بن الوليد بعد النبي صلى الله عليه وسلم
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய அடிமையொருவன் தப்பியோடி (கிழக்கு) ரோமானியருடன் சேர்ந்துகொண்டான். காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் அந்த ரோமர்களை வெற்றி கொண்டபோது, அவனை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். (இவ்வாறே) இப்னு உமர் (ரலி) அவர்களின் குதிரையொன்று ஓடிப்போய் (கிழக்கு) ரோமானியர்களிடம் சிக்கிக்கொண்டது. (கிழக்கு) ரோமை காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் வெற்றி கொண்டார்கள். அப்போது அதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: (குதிரை ஓடிப்போனது என்பதைக் குறிக்க மூலத்தில்) யிஆர’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இது (அடிப்படையில்), காட்டுக் கழுதையைக் குறிக்கும் ‘அய்ர்’ எனும் சொல்லில் இருந்து வந்தது. இங்கு இது, வெருண்டோடுவதைக் குறிக்கும். அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا يحيى، عن عبيد الله، قال اخبرني نافع، ان عبدا، لابن عمر ابق فلحق بالروم، فظهر عليه خالد بن الوليد، فرده على عبد الله، وان فرسا لابن عمر عار فلحق بالروم، فظهر عليه فردوه على عبد الله. قال ابو عبد الله عار مشتق من العير وهو حمار وحش اي هرب
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்கள் (கிழக்கு ரோமானியரைப் போர்க் களத்தில்) சந்தித்தபோது நான் ஒரு குதிரையின் மீது (பயணித்தபடி) இருந்தேன்; அப்போது முஸ்லிம்களின் (படைத்) தலைவராக காலித் பின் அல்வலீத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அவரை அபூபக்ர் (ரலி) அவர்கள் (தளபதியாக) அனுப்பியிருந் தார்கள். (எனது) அந்தக் குதிரையை எதிரிகள் பிடித்துக்கொண்டனர். எதிரிகள் தோற்கடிக்கப்பட்டபோது காலித் பின் அல் வலீத் (ரலி) அவர்கள் எனது குதிரையைத் திருப்பித் தந்துவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا زهير، عن موسى بن عقبة، عن نافع، عن ابن عمر رضى الله عنهما انه كان على فرس يوم لقي المسلمون، وامير المسلمين يوميذ خالد بن الوليد، بعثه ابو بكر، فاخذه العدو، فلما هزم العدو رد خالد فرسه
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அகழ்ப் போரின்போது) நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டி ஒன்றை அறுத்தோம்; நான் ஒரு ‘ஸாஉ’ தொலி நீக்கப்படாத கோதுமையை அரைத்து மாவாக்கியுள் ளேன்; ஆகவே, தாங்களும் வேறு சிலரும் (சேர்ந்து அதை உண்பதற்கு) வாருங்கள்” என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘அகழ்வாசிகளே! ஜாபிர் விருந்துணவு தயாரித்திருக்கிறார். விரைந்து வாருங்கள்” என்று உரத்த குரலில் அழைத்தார்கள்.188 அத்தியாயம் :
حدثنا عمرو بن علي، حدثنا ابو عاصم، اخبرنا حنظلة بن ابي سفيان، اخبرنا سعيد بن ميناء، قال سمعت جابر بن عبد الله رضى الله عنهما قال قلت يا رسول الله، ذبحنا بهيمة لنا، وطحنت صاعا من شعير، فتعال انت ونفر، فصاح النبي صلى الله عليه وسلم فقال " يا اهل الخندق، ان جابرا قد صنع سورا، فحى هلا بكم
உம்மு காலித் பின்த் காலித் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் (சிறுமியாக இருந்தபோது) என் தந்தையுடன் சென்றேன். அப்போது நான் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(இவள்) நன்றாயிருக் கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்” என்று சொன்னார்கள். நான் (நபி (ஸல்) அவர் களின் இரு தோள்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன். உடனே என் தந்தை என்னை அதட்டினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(குழந்தைதானே!) அவளை (விளையாட) விடுவீராக!” என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழைய தாக்கிக்) கிழித்து நைந்துபோகச்செய்துவிடு. பிறகும் அதைக் கிழித்து நைந்துபோகச் செய்துவிடு. மீண்டும் அதைக் கிழித்து நைந்துபோகச்செய்துவிடு” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) அவர்கள், ‘‘அந்தச் சட்டை, பழுத்துப்போய் மக்களால் பேசப் படும் அளவுக்கு உம்மு காலித் (ரலி) அவர்கள் நெடுங்காலம் வாழ்ந்தார்கள்” என்று கூறுகிறார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறிய யிசனா’ (நன்றாயிருக்கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச் சொல்லாகும்” என்றும் கூறுகிறார்கள்.189 அத்தியாயம் :
حدثنا حبان بن موسى، اخبرنا عبد الله، عن خالد بن سعيد، عن ابيه، عن ام خالد بنت خالد بن سعيد، قالت اتيت رسول الله صلى الله عليه وسلم مع ابي وعلى قميص اصفر، قال رسول الله صلى الله عليه وسلم " سنه سنه ". قال عبد الله وهى بالحبشية حسنة. قالت فذهبت العب بخاتم النبوة، فزبرني ابي قال رسول الله صلى الله عليه وسلم " دعها ". ثم قال رسول الله " ابلي واخلفي، ثم ابلي واخلفي، ثم ابلي واخلفي ". قال عبد الله فبقيت حتى ذكر
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள் (சிறுவராயிருந்தபோது) தர்மப் பொருளாக வந்த பேரீச்சம் பழங்களிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தமது வாயில் வைத்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் பாரசீக மொழியில், ‘கிஹ், கிஹ்’ (சீ, சீ என்று சொல்லிவிட்டு) ‘‘நாம் தர்மப் பொருளைச் சாப்பிடமாட்டோம் என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டார்கள்.190 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن محمد بن زياد، عن ابي هريرة رضى الله عنه ان الحسن بن علي، اخذ تمرة من تمر الصدقة، فجعلها في فيه، فقال النبي صلى الله عليه وسلم بالفارسية " كخ كخ، اما تعرف انا لا ناكل الصدقة
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று, போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத் தார்கள். அப்போது பின்வருமாறு கூறி னார்கள்: ‘‘மறுமை நாளில் தமது கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்துகொண்டு வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்) அப்போது நான், ‘‘உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்’ என்று கூறிவிடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தமது கழுத்தில் கத்திக்கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்” என்று கூறிவிடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் பொன் அல்லது வெள்ளியைச் சுமந்து கொண்டு வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்க ளில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகத்தி லேயே) சொல்லிவிட்டேன்” என்று கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையேனும் தமது கழுத்தில் சுமந்து கொண்டு வந்து ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்” என்று (அபயம் தேடி) அலறிய நிலையில் உங்க ளில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (சொல்ல வேண்டியதை உலகத்திலேயே) சொல்லிவிட்டேன்” என்று கூறி விடுவேன்.191 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن ابي حيان، قال حدثني ابو زرعة، قال حدثني ابو هريرة رضى الله عنه قال قام فينا النبي صلى الله عليه وسلم فذكر الغلول فعظمه وعظم امره قال " لا الفين احدكم يوم القيامة على رقبته شاة لها ثغاء على رقبته فرس له حمحمة يقول يا رسول الله، اغثني. فاقول لا املك لك شييا، قد ابلغتك. وعلى رقبته بعير له رغاء، يقول يا رسول الله اغثني. فاقول لا املك لك شييا، قد ابلغتك. وعلى رقبته صامت، فيقول يا رسول الله اغثني. فاقول لا املك لك شييا، قد ابلغتك. او على رقبته رقاع تخفق، فيقول يا رسول الله اغثني. فاقول لا املك لك شييا، قد ابلغتك ". وقال ايوب عن ابي حيان فرس له حمحمة
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் பயணச் சுமை களுக்குக் காவலராக ‘கிர்கிரா’ எனப்படும் மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ஒருநாள்) இறந்துவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘அவர் நரகத்தில் நுழைவார்” என்று கூறினார்கள். (இதைக் கேட்டு) நபித்தோழர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அங்கு அவர் மோசடி செய்து (திருடி) எடுத்துவைத்திருந்த மேலங்கி ஒன்றைக் கண்டார்கள்.193 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: (என் ஆசிரியர்) முஹம்மத் பின் சலாம் (ரஹ்) அவர்கள், (‘கிர்கிரா’வை) யிகர்கரா’ என்று உச்சரிக்க வேண்டும் என்று கூறினார்கள். அது இவ்வாறும் உச்சரிக்கப்பட்டுள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، عن عمرو، عن سالم بن ابي الجعد، عن عبد الله بن عمرو، قال كان على ثقل النبي صلى الله عليه وسلم رجل يقال له كركرة فمات، فقال رسول الله صلى الله عليه وسلم " هو في النار ". فذهبوا ينظرون اليه فوجدوا عباءة قد غلها. قال ابو عبد الله قال ابن سلام كركرة، يعني بفتح الكاف، وهو مضبوط كذا
ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் யிதுல்ஹுலைஃபா’வில் இருந்தோம். அப்போது மக்களுக்குப் பசி ஏற்பட்டது. எங்களுக்கு (போர்ச் செல்வங்களாக)ச் சில ஒட்டகங்களும் ஆடுகளும் கிடைத்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். ஆகவே, மக்கள் அவசரப்பட்டுப் பாத்திரங்களை அடுப்புகளில் வைத்து (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன. பிறகு (அவற்றை) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்திற்குப் பத்து ஆடுகள் விகிதம் பங்கிட்டார்கள். அவற்றில் ஓர் ஒட்டகம் வெருண்டோடிவிட்டது மக்களிடம் குறைந்த எண்ணிக்கையிலேயே குதிரைகள் இருந்தன. மக்கள் அந்த ஒட்டகத்தைத் தேடிச் சென்றனர். அது அவர்களைக் களைப்படையச் செய்து விட்டது. ஒரு மனிதர் அதை நோக்கி ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அந்த ஒட்டகத்தை (ஓட முடியாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘காட்டு மிருகங்களில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்று இந்தப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை உள்ளன. உங்களிடமிருந்து வெருண்டோடிவிடுபவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள். நான், ‘‘(ஒட்டகங்களை அறுக்க வாட்களை இன்று பயன்படுத்திவிட்டால்) எங்களிடம் வாட்கள் இல்லாத நிலையில் நாளை (போர்க் களத்தில்) எதிரிகளைச் சந்திக்க நேரிடுமோ என்று நாங்கள் அஞ்சுகிறோம்; அல்லது எதிர்பார்க்கிறோம். ஆகவே, நாங்கள் (அவற்றை வாட்களால் அறுக்காமல்) மூங்கில்களால் அறுக்கலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இரத்தத்தை ஓடச்செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப்பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப்படும்போது) அதன்மீது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை நீங்கள் உண்ணலாம்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப்பட்டதைத் தவிர! இதைப் பற்றி நான் உங்களுக்குச் சொல்கிறேன்: பற்களோ எலும்பாகும். நகங்களோ அபிசீனியர்களின் கத்தி களாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.194 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا ابو عوانة، عن سعيد بن مسروق، عن عباية بن رفاعة، عن جده، رافع قال كنا مع النبي صلى الله عليه وسلم بذي الحليفة، فاصاب الناس جوع واصبنا ابلا وغنما، وكان النبي صلى الله عليه وسلم في اخريات الناس، فعجلوا فنصبوا القدور، فامر بالقدور فاكفيت، ثم قسم فعدل عشرة من الغنم ببعير، فند منها بعير، وفي القوم خيل يسير فطلبوه فاعياهم، فاهوى اليه رجل بسهم، فحبسه الله فقال " هذه البهايم لها اوابد كاوابد الوحش، فما ند عليكم فاصنعوا به هكذا ". فقال جدي انا نرجو او نخاف ان نلقى العدو غدا وليس معنا مدى، افنذبح بالقصب فقال " ما انهر الدم وذكر اسم الله فكل، ليس السن والظفر، وساحدثكم عن ذلك، اما السن فعظم، واما الظفر فمدى الحبشة
ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘துல்கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்கமாட்டீர் களா?” என்று கேட்டார்கள். அது யிகஸ்அம்’ குலத்தாரிடையே யியமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்பட்டுவந்த ஓர் ஆலயமாக இருந்தது. நான் ‘அஹ்மஸ்’ குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது பேருடன் புறப்பட் டேன். அவர்கள் (சிறந்த) குதிரைப் படை வீரர்களாக இருந்தனர். ‘‘என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை” என்று நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். ஆகவே, அவர்கள் என் நெஞ்சில் அடித்தார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களின் விரல்கள் பதிந்த அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள் ‘‘இறைவா! இவரை உறுதிப்படுத்துவாயாக! இவரை நல்வழி காட்டுபவராகவும் நல்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். நான் அதை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்துவிட்டேன். நபி (ஸல்) அவர்களுக்கு அதை (உடைத்து எரித்துவிட்டது) பற்றிய நற்செய்தி தெரிவிக்கச் சொல்லி ஆளனுப்பினேன். என்னுடைய தூதுவர், ‘‘அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்திய (மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீதாணையாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத்தான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) ‘அஹ்மஸ்’ குலத்தாருக்கும் அவர்களுடைய குதிரைப் படையினருக்கும் வளம் வழங்குமாறு பலமுறை அல்லாஹ்விடம் பிரார்த்தித் தார்கள்.195 இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن المثنى، حدثنا يحيى، حدثنا اسماعيل، قال حدثني قيس، قال قال لي جرير بن عبد الله رضى الله عنه قال لي رسول الله صلى الله عليه وسلم " الا تريحني من ذي الخلصة ". وكان بيتا فيه خثعم يسمى كعبة اليمانية، فانطلقت في خمسين وماية من احمس، وكانوا اصحاب خيل، فاخبرت النبي صلى الله عليه وسلم اني لا اثبت على الخيل، فضرب في صدري حتى رايت اثر اصابعه في صدري فقال " اللهم ثبته واجعله هاديا مهديا ". فانطلق اليها فكسرها وحرقها، فارسل الى النبي صلى الله عليه وسلم يبشره فقال رسول جرير يا رسول الله، والذي بعثك بالحق، ما جيتك حتى تركتها كانها جمل اجرب، فبارك على خيل احمس ورجالها خمس مرات. قال مسدد بيت في خثعم
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றி கொள்ளப்பட்ட நாளில் நபி (ஸல்) அவர்கள், ‘‘(மக்காவிலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) இனி கிடையாது. ஆயினும், அறப்போரும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் (நிய்யத்) கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போர் புரியப் புறப்படுமாறு அழைக் கப்பட்டால் உடனே புறப்பட்டுவிடுங்கள்” என்று கூறினார்கள்.197 அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، حدثنا شيبان، عن منصور، عن مجاهد، عن طاوس، عن ابن عباس رضى الله عنهما قال قال النبي صلى الله عليه وسلم يوم فتح مكة " لا هجرة ولكن جهاد ونية، واذا استنفرتم فانفروا
முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சகோதரர் முஜாலித் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘‘இவர் (என் சகோதரர்) முஜாலித்; தங்களிடம் ஹிஜ்ரத் செய்வதாக உறுதி மொழியளிக்(க வந்திருக்)கிறார்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் (புலம் பெயர்தல்) கிடையாது. ஆயினும், நான் இவரிடம் இஸ்லாத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி வாங்கு வேன்”என்று கூறினார்கள்.198 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا يزيد بن زريع، عن خالد، عن ابي عثمان النهدي، عن مجاشع بن مسعود، قال جاء مجاشع باخيه مجالد بن مسعود الى النبي صلى الله عليه وسلم فقال هذا مجالد يبايعك على الهجرة. فقال " لا هجرة بعد فتح مكة، ولكن ابايعه على الاسلام
முஜாஷிஉ பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சகோதரர் முஜாலித் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘‘இவர் (என் சகோதரர்) முஜாலித்; தங்களிடம் ஹிஜ்ரத் செய்வதாக உறுதி மொழியளிக்(க வந்திருக்)கிறார்” என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் (புலம் பெயர்தல்) கிடையாது. ஆயினும், நான் இவரிடம் இஸ்லாத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி வாங்கு வேன்”என்று கூறினார்கள்.198 அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا يزيد بن زريع، عن خالد، عن ابي عثمان النهدي، عن مجاشع بن مسعود، قال جاء مجاشع باخيه مجالد بن مسعود الى النبي صلى الله عليه وسلم فقال هذا مجالد يبايعك على الهجرة. فقال " لا هجرة بعد فتح مكة، ولكن ابايعه على الاسلام
அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் உபைத் பின் உமைர் (ரஹ்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (முஸ்தலிஃபாவில்) ‘ஸபீர்’ மலையருகே தங்கியிருந்தார்கள்.199 அவர்கள் எங்களிடம், ‘‘நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மக்காவின் வெற்றியை அளித்த பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்யும் (புலம்பெயரும்) கடமை நீங்கிவிட்டது” என்று சொன்னார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال عمرو وابن جريج سمعت عطاء، يقول ذهبت مع عبيد بن عمير الى عايشة رضى الله عنها وهى مجاورة بثبير فقالت لنا انقطعت الهجرة منذ فتح الله على نبيه صلى الله عليه وسلم مكة
சஅத் பின் உபைதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உஸ்மான் (ரலி) அவர்களின் ஆதர வாளர்களில் ஒருவரான அபூஅப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான இப்னு அத்திய்யா (ரஹ்) அவர்களிடம் இப்படிக் கூறினார்கள்: உங்கள் தோழர் (அலீ) அவர்களுக்கு இரத்தம் சிந்துவதற்கான துணிவைக் கொடுத்தது எது என்று நான் அறிவேன். (ஏனெனில்) அவர் (பின்வருமாறு) சொல்ல நான் கேட்டிருக்கிறேன்: என்னையும் ஸுபைர் (ரலி) அவர்களை யும் நபி (ஸல்) அவர்கள் அனுப்பி, ‘‘நீங்கள் இன்ன யிரவ்ளா’ எனும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கு ஒரு பெண்ணை நீங்கள் காண்பீர்கள். அவளிடம் ஹாத்திப் (பின் அபீபல்த்தஆ) ஒரு கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்கள். நாங்கள் யிரவ்ளா’வுக்குச் சென்று, ‘‘கடிதம் (எங்கே)?” என்று (அப்பெண்ணிடம்) கேட்டோம். அந்தப் பெண், ‘‘அவர் என்னிடம் (கடிதம் எதுவும்) கொடுக்கவில்லை” என்று கூறினாள். நாங்கள், ‘‘நீயாக அதை வெளியே எடுக்கிறாயா? அல்லது நான் உன் ஆடையைக் களைந்து சோதிக்கட்டுமா?” என்று கேட்டோம். உடனே, அவள் தன் (நீண்ட கூந்தல் தொட்டுக்கொண்டிருக்கும்) இடுப்பிலிருந்து (கடிதத்தை) வெளியே எடுத்தாள். (கடிதம் கிடைத்த) உடனே நபி (ஸல்) அவர்கள், ஹாத்திப் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். ஹாத்திப் அவர்கள் (வந்து), ‘‘(அல்லாஹ்வின் தூதரே!) அவசரப்படாதீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இறைமறுப்பாளனு மில்லை; இஸ்லாத்தின் மீது எனக்கு நேசத்தைத் தவிர வேறெதுவும் அதிகரிக்க வுமில்லை. தங்கள் தோழர்கள் அனைவருக் குமே மக்காவில் அவர்களுடைய மனைவி மக்களையும் அவர்களின் செல்வத்தையும் எவர் மூலமாக அல்லாஹ் பாதுகாப்பானோ அத்தகையோர் இருக்கின்றனர். ஆனால், எனக்கோ எவருமே இல்லை. ஆகவே, அவர்களிடம் எனக்கு (ஆதரவுக்) கரம் இருக்க வேண்டுமென விரும்பினேன்” என்று கூறினார்கள். அவர்களின் இந்த வாக்குமூலத்தை நபி (ஸல்) அவர்கள் உண்மையென ஏற்றுக்கொண்டார்கள். ஆனால், உமர் (ரலி) அவர்கள், ‘‘என்னை விடுங்கள்; அவரது கழுத்தை வெட்டிவிடுகிறேன். ஏனென்றால், அவர் நயவஞ்சகராகி விட்டார்” என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்களுக்கென்ன தெரியும்? பத்ர் போரில் கலந்துகொண்டவர்களை நோக்கி, ‘நீங்கள் விரும்பியதைச் செய்துகொள்ளுங்கள்’ என்று அல்லாஹ் கூறிவிட்டிருக்கலாம்” எனச் சொன்னார்கள்.200 நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொல்லைக் கேட்டிருந்ததுதான் அலீ (ரலி) அவர்களுக்கு இந்தத் துணிவைத் தந்திருக்கிறது. (இவ்வாறு அபூஅப்திர் ரஹ்மான் கூறினார்.) அத்தியாயம் :
حدثني محمد بن عبد الله بن حوشب الطايفي، حدثنا هشيم، اخبرنا حصين، عن سعد بن عبيدة، عن ابي عبد الرحمن، وكان، عثمانيا فقال لابن عطية وكان علويا اني لاعلم ما الذي جرا صاحبك على الدماء سمعته يقول بعثني النبي صلى الله عليه وسلم والزبير، فقال " ايتوا روضة كذا، وتجدون بها امراة اعطاها حاطب كتابا ". فاتينا الروضة فقلنا الكتاب. قالت لم يعطني. فقلنا لتخرجن او لاجردنك. فاخرجت من حجزتها، فارسل الى حاطب فقال لا تعجل، والله ما كفرت ولا ازددت للاسلام الا حبا، ولم يكن احد من اصحابك الا وله بمكة من يدفع الله به عن اهله وماله، ولم يكن لي احد، فاحببت ان اتخذ عندهم يدا. فصدقه النبي صلى الله عليه وسلم. قال عمر دعني اضرب عنقه، فانه قد نافق. فقال " ما يدريك لعل الله اطلع على اهل بدر، فقال اعملوا ما شيتم ". فهذا الذي جراه