Loading...

Loading...
நூல்கள்
௩௦௯ ஹதீஸ்கள்
இப்னு அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம், ‘‘நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக் கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘ஆம், நபி (ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றிக்கொண்டார்கள்; உங்களை விட்டுவிட்டார்கள்” என்று பதிலளித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي الاسود، حدثنا يزيد بن زريع، وحميد بن الاسود، عن حبيب بن الشهيد، عن ابن ابي مليكة، قال ابن الزبير لابن جعفر رضى الله عنهم اتذكر اذ تلقينا رسول الله صلى الله عليه وسلم انا وانت وابن عباس قال نعم، فحملنا وتركك
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (சிறுவர்களாயிருந்தபோது மற்ற) சிறுவர்களுடன் சேர்ந்து (தபூக் போரிலிருந்து திரும்பி வரும்) அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களை வரவேற் பதற்காக யிவதா’ மலைக் குன்றை நோக்கிச் சென்றோம்.201 அத்தியாயம் :
حدثنا مالك بن اسماعيل، حدثنا ابن عيينة، عن الزهري، قال قال السايب بن يزيد رضى الله عنه ذهبنا نتلقى رسول الله صلى الله عليه وسلم مع الصبيان الى ثنية الوداع
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (அறப்போரிலிருந்து) திரும்பிச் செல்லும்போது மூன்று முறை ‘அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பின்வருமாறு கூறுவார்கள்: ஆயிபூன இன் ஷாஅல்லாஹ், தாயிபூன, ஆபிதூன ஹாமிதூன லி ரப்பினா சாஜிதூன. ஸதக்கல்லாஹு வஅதஹு, வ நஸர அப்தஹு, வ ஹஸமல் அஹ்ஸாப வஹ்தஹு. (பொருள்: இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர் களாகவும், வழிபட்டவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டி விட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்துவிட்டான்; தன்னந்தனியாகக் கூட்டுப்படைகளைத் தோற்கடித்து விட்டான்.202 அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا جويرية، عن نافع، عن عبد الله رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم كان اذا قفل كبر ثلاثا قال " ايبون ان شاء الله تايبون عابدون حامدون لربنا ساجدون، صدق الله وعده، ونصر عبده، وهزم الاحزاب وحده
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிஉஸ்ஃபானி’லிருந்து (போர் முடிந்து) திரும்பியபோது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். (தம் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களை (வாகனத்தில்) தமக்குப் பின்னே அமர்த்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது ஒட்டகம் கால் சறுக்கிவிட அவர்களிருவரும் ஒருசேரக் கீழே விழுந்தார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) கீழே குதித்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக!” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(முதலில்) அந்தப் பெண்ணை (ஸஃபிய்யாவை) கவனிப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் ஒரு துணியைத் தமது முகத்தின் மீது போட்டு மூடிக்கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் சென்று அவர்கள்மீது அந்தத் துணியைப் போட்டார்கள். பிறகு இருவருக்கும் அவர்களின் வாகனத்தைச் சீராக்கிக்கொடுத்தார்கள். உடனே அவ்விருவரும் (வாகனத்தில்) ஏறிக்கொண்டார்கள். நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டோம். நாங்கள் மதீனாவை நெருங்கியவுடன் நபி (ஸல்) அவர்கள், ‘‘பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனையே வழிபட்டவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும்வரை அவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந் தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، قال حدثني يحيى بن ابي اسحاق، عن انس بن مالك رضى الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم مقفله من عسفان، ورسول الله صلى الله عليه وسلم على راحلته، وقد اردف صفية بنت حيى، فعثرت ناقته فصرعا جميعا، فاقتحم ابو طلحة فقال يا رسول الله، جعلني الله فداءك. قال " عليك المراة ". فقلب ثوبا على وجهه واتاها، فالقاها عليها واصلح لهما مركبهما فركبا، واكتنفنا رسول الله صلى الله عليه وسلم، فلما اشرفنا على المدينة قال " ايبون تايبون عابدون لربنا حامدون ". فلم يزل يقول ذلك حتى دخل المدينة
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் அபூதல்ஹா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் (போரிலிருந்து) மதீனா நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர்களுடன் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்களை நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதளவு தூரத்தைக் கடந்து வந்துகொண்டிருந்தபோது வழியில் வாகனம் சறுக்கி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே விழுந்தார்கள். அறிவிப்பாளர் யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அனஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என்று எண்ணுகிறேன்: அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து குதித்து இறங்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்குக் காயம் எதுவும் ஏற்பட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை. ஆயினும், நீ அந்தப் பெண்ணைக் கவனி” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக்கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்கள்மீது அத்துணி யைப் போட்டார்கள். உடனே அப் பெண்மணி (ஸஃபிய்யா (ரலி) அவர்கள்) எழுந்துகொண்டார்கள். பிறகு அபூதல்ஹா அவர்கள், அவர்கள் (நபியவர்கள் மற்றும் அன்னை ஸஃபிய்யா) இருவருக்காகவும் அவர்களின் வாகனத்தைச் சீராக்கித் தந்தவுடன் இருவரும் ஏறிக்கொண்ட னர். பிறகு, அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். மதீனாவின் அருகே வந்த போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பாவமன்னிப் புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனை வழிபட்டவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும்வரை இவ்வாறு கூறிக்கொண்டே யிருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا علي، حدثنا بشر بن المفضل، حدثنا يحيى بن ابي اسحاق، عن انس بن مالك رضى الله عنه انه اقبل هو وابو طلحة مع النبي صلى الله عليه وسلم ومع النبي صلى الله عليه وسلم صفية مردفها على راحلته، فلما كانوا ببعض الطريق عثرت الناقة، فصرع النبي صلى الله عليه وسلم والمراة، وان ابا طلحة قال احسب قال اقتحم عن بعيره فاتى رسول الله صلى الله عليه وسلم فقال يا نبي الله جعلني الله فداءك، هل اصابك من شىء قال " لا، ولكن عليك بالمراة ". فالقى ابو طلحة ثوبه على وجهه، فقصد قصدها فالقى ثوبه عليها، فقامت المراة، فشد لهما على راحلتهما فركبا، فساروا حتى اذا كانوا بظهر المدينة او قال اشرفوا على المدينة قال النبي صلى الله عليه وسلم " ايبون تايبون عابدون لربنا حامدون ". فلم يزل يقولها حتى دخل المدينة
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நாங்கள் (பயணம் முடிந்து) மதீனாவிற்குத் திரும்பி வந்தபோது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘‘பள்ளிவாசலில் நுழைந்து இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று கூறினார்கள்.203 அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا شعبة، عن محارب بن دثار، قال سمعت جابر بن عبد الله، رضى الله عنهما قال كنت مع النبي صلى الله عليه وسلم في سفر فلما قدمنا المدينة قال لي " ادخل المسجد فصل ركعتين
கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து யிளுஹா’ (முற்பகல்) நேரத்தில் திரும்பி வந்தால் பள்ளிவாசலில் நுழைந்து உட்காரு வதற்கு முன்பாக இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو عاصم، عن ابن جريج، عن ابن شهاب، عن عبد الرحمن بن عبد الله بن كعب، عن ابيه، وعمه، عبيد الله بن كعب عن كعب رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم كان اذا قدم من سفر ضحى دخل المسجد، فصلى ركعتين قبل ان يجلس
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் போரிலிருந்து) மதீனா நகருக்கு வந்தபோது ஒட்டகத்தையோ மாட்டையோ அறுத்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஆத் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வரும் தகவல்கள் கூடுதலாகக் காணப்படுகிறது. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரண்டு ‘ஊக்கியாக்’களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹங்களைக் கொடுத்து என்னிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். (மதீனாவிற்கு அருகி லுள்ள) ‘ஸிரார்’ எனுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அறுக்கப் பட்டது. அதை அனைவரும் உண்டார் கள். மதீனாவுக்கு வந்தபோது பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (தொழுது முடித்த) பிறகு, ஒட்டகத்தின் விலையை எனக்கு நிறுத்துத் தந்தார்கள். அத்தியாயம் :
حدثني محمد، اخبرنا وكيع، عن شعبة، عن محارب بن دثار، عن جابر بن عبد الله رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة نحر جزورا او بقرة. زاد معاذ عن شعبة عن محارب سمع جابر بن عبد الله اشترى منى النبي صلى الله عليه وسلم بعيرا بوقيتين ودرهم او درهمين، فلما قدم صرارا امر ببقرة فذبحت فاكلوا منها، فلما قدم المدينة امرني ان اتي المسجد فاصلى ركعتين، ووزن لي ثمن البعير
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘இரண்டு ரக்அத்கள் தொழுவீராக!” என்று (என்னிடம்) கூறினார்கள். ‘ஸிரார்’ என்பது மதீனாவின் (கிழக்கே) ஓர் ஓரத்திலுள்ள ஓரிடமாகும். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن محارب بن دثار، عن جابر، قال قدمت من سفر فقال النبي صلى الله عليه وسلم " صل ركعتين ". صرار موضع ناحية بالمدينة