ஹதீஸ்கள்
#3086
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் அபூதல்ஹா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களுடன் (போரிலிருந்து) மதீனா நோக்கிச் சென்றுகொண்டிருந்தோம். நபி (ஸல்) அவர்களுடன் ஸஃபிய்யா (ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்களை நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக்கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதளவு தூரத்தைக் கடந்து வந்துகொண்டிருந்தபோது வழியில் வாகனம் சறுக்கி விழுந்தது. நபி (ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே விழுந்தார்கள். அறிவிப்பாளர் யஹ்யா பின் அபீஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அனஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் என்று எண்ணுகிறேன்: அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து குதித்து இறங்கி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்குக் காயம் எதுவும் ஏற்பட்டதா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘இல்லை. ஆயினும், நீ அந்தப் பெண்ணைக் கவனி” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் தமது துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக்கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்கள் இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்கள்மீது அத்துணி யைப் போட்டார்கள். உடனே அப் பெண்மணி (ஸஃபிய்யா (ரலி) அவர்கள்) எழுந்துகொண்டார்கள். பிறகு அபூதல்ஹா அவர்கள், அவர்கள் (நபியவர்கள் மற்றும் அன்னை ஸஃபிய்யா) இருவருக்காகவும் அவர்களின் வாகனத்தைச் சீராக்கித் தந்தவுடன் இருவரும் ஏறிக்கொண்ட னர். பிறகு, அனைவரும் பயணத்தைத் தொடர்ந்தனர். மதீனாவின் அருகே வந்த போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பாவமன்னிப் புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனை வழிபட்டவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்குள் நுழையும்வரை இவ்வாறு கூறிக்கொண்டே யிருந்தார்கள். அத்தியாயம் :
حدثنا علي، حدثنا بشر بن المفضل، حدثنا يحيى بن ابي اسحاق، عن انس بن مالك رضى الله عنه انه اقبل هو وابو طلحة مع النبي صلى الله عليه وسلم ومع النبي صلى الله عليه وسلم صفية مردفها على راحلته، فلما كانوا ببعض الطريق عثرت الناقة، فصرع النبي صلى الله عليه وسلم والمراة، وان ابا طلحة قال احسب قال اقتحم عن بعيره فاتى رسول الله صلى الله عليه وسلم فقال يا نبي الله جعلني الله فداءك، هل اصابك من شىء قال " لا، ولكن عليك بالمراة ". فالقى ابو طلحة ثوبه على وجهه، فقصد قصدها فالقى ثوبه عليها، فقامت المراة، فشد لهما على راحلتهما فركبا، فساروا حتى اذا كانوا بظهر المدينة او قال اشرفوا على المدينة قال النبي صلى الله عليه وسلم " ايبون تايبون عابدون لربنا حامدون ". فلم يزل يقولها حتى دخل المدينة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3086
- Book Index
- 290
Grades
- -
