ஹதீஸ்கள்
#3085
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் யிஉஸ்ஃபானி’லிருந்து (போர் முடிந்து) திரும்பியபோது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். (தம் துணைவியார்) ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களை (வாகனத்தில்) தமக்குப் பின்னே அமர்த்திக்கொண்டிருந்தார்கள். அவர்களது ஒட்டகம் கால் சறுக்கிவிட அவர்களிருவரும் ஒருசேரக் கீழே விழுந்தார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் (தமது வாகனத்திலிருந்து) கீழே குதித்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக!” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(முதலில்) அந்தப் பெண்ணை (ஸஃபிய்யாவை) கவனிப்பீராக!” என்று கூறினார்கள். உடனே அபூதல்ஹா (ரலி) அவர்கள் ஒரு துணியைத் தமது முகத்தின் மீது போட்டு மூடிக்கொண்டு ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் சென்று அவர்கள்மீது அந்தத் துணியைப் போட்டார்கள். பிறகு இருவருக்கும் அவர்களின் வாகனத்தைச் சீராக்கிக்கொடுத்தார்கள். உடனே அவ்விருவரும் (வாகனத்தில்) ஏறிக்கொண்டார்கள். நாங்கள் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டோம். நாங்கள் மதீனாவை நெருங்கியவுடன் நபி (ஸல்) அவர்கள், ‘‘பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனையே வழிபட்டவர்களாக, (அவனைப் போற்றிப்) புகழ்ந்தவர்களாக நாங்கள் திரும்பிக் கொண்டிருக்கின்றோம்” என்று கூறினார்கள். மதீனாவிற்குள் நுழையும்வரை அவர்கள் இவ்வாறு சொல்லிக்கொண்டிருந் தார்கள். அத்தியாயம் :
حدثنا ابو معمر، حدثنا عبد الوارث، قال حدثني يحيى بن ابي اسحاق، عن انس بن مالك رضى الله عنه قال كنا مع النبي صلى الله عليه وسلم مقفله من عسفان، ورسول الله صلى الله عليه وسلم على راحلته، وقد اردف صفية بنت حيى، فعثرت ناقته فصرعا جميعا، فاقتحم ابو طلحة فقال يا رسول الله، جعلني الله فداءك. قال " عليك المراة ". فقلب ثوبا على وجهه واتاها، فالقاها عليها واصلح لهما مركبهما فركبا، واكتنفنا رسول الله صلى الله عليه وسلم، فلما اشرفنا على المدينة قال " ايبون تايبون عابدون لربنا حامدون ". فلم يزل يقول ذلك حتى دخل المدينة
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3085
- Book Index
- 289
Grades
- -
