ஹதீஸ்கள்
#3089
ஸஹீஹ் அல்-புகாரீ - Fighting for the Cause of Allah
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தபூக் போரிலிருந்து) மதீனா நகருக்கு வந்தபோது ஒட்டகத்தையோ மாட்டையோ அறுத்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் முஆத் பின் முஆத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் பின்வரும் தகவல்கள் கூடுதலாகக் காணப்படுகிறது. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இரண்டு ‘ஊக்கியாக்’களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹங்களைக் கொடுத்து என்னிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள். (மதீனாவிற்கு அருகி லுள்ள) ‘ஸிரார்’ எனுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அறுக்கப் பட்டது. அதை அனைவரும் உண்டார் கள். மதீனாவுக்கு வந்தபோது பள்ளி வாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்கள் தொழும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (தொழுது முடித்த) பிறகு, ஒட்டகத்தின் விலையை எனக்கு நிறுத்துத் தந்தார்கள். அத்தியாயம் :
حدثني محمد، اخبرنا وكيع، عن شعبة، عن محارب بن دثار، عن جابر بن عبد الله رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم لما قدم المدينة نحر جزورا او بقرة. زاد معاذ عن شعبة عن محارب سمع جابر بن عبد الله اشترى منى النبي صلى الله عليه وسلم بعيرا بوقيتين ودرهم او درهمين، فلما قدم صرارا امر ببقرة فذبحت فاكلوا منها، فلما قدم المدينة امرني ان اتي المسجد فاصلى ركعتين، ووزن لي ثمن البعير
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Fighting for the Cause of Allah
- Hadith Index
- #3089
- Book Index
- 293
Grades
- -
