Loading...

Loading...
நூல்கள்
௧௬௩ ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறைவா! அய்யாஷ் பின் அபீ ரபீஆவைக் காப்பாற்று. இறைவா! சலமா பின் ஹிஷாமைக் காப்பாற்று. இறைவா! வலீத் பின் அல்வலீதைப் காப்பாற்று. இறைவா! இறைநம்பிக்கையாளர்களில் ஒடுக்கப்பட்டவர்களைக் காப்பாற்று. இறைவா! யிமுளர்’ குலத்தாரின் மீது உன் பிடியை இறுக்குவாயாக! இறைவா! யூசுஃப் அவர்களுடைய சமுதாயத்தாருக்குக் கொடுத்த (கடும் பஞ்சம் நிறைந்த) ஆண்டு களைப் போன்று முளருக்கும் (கடும் வறட்சி நிறைந்த) சில ஆண்டுகளைக் கொடுப்பாயாக!” என்று பிரார்த்தித்தார் கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.60 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، حدثنا ابو الزناد، عن الاعرج، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " اللهم انج عياش بن ابي ربيعة، اللهم انج سلمة بن هشام، اللهم انج الوليد بن الوليد اللهم انج المستضعفين من المومنين، اللهم اشدد وطاتك على مضر، اللهم اجعلها سنين كسني يوسف
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், லூத் (அலை) அவர்களுக் குக் கருணை புரிவானாக! அவர்கள் பலம் வாய்ந்த ஓர் உதவியாளனிடமே தஞ்சம் புகுந்தவர்களாக இருந்தார்கள். யூசுஃப் (அலை) அவர்கள் (அடைபட் டுக்) கிடந்த காலம் நான் சிறையில் (அடைபட்டுக்) கிடக்க நேர்ந்து, பிறகு (அவரிடம் வந்ததைப்போல்) என்னை (விடுதலை செய்ய) அழைப்பவர் என்னிடம் வந்திருந்தால் நான் அதை ஏற்றுக்கொண்டிருப்பேன். (ஆனால், அவர் அவ்வளவு நெடுங்காலம் சிறையில் அடைபட்டுக் கிடந்தும், ‘‘தமது குற்றமற்ற தன்மையை ஏற்று அறிவிக்காத வரை சிறை’லிருந்து வெளியேற மாட்டேன்” என்று கூறிவிட்டார்.)61 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد بن اسماء ابن اخي جويرية حدثنا جويرية بن اسماء، عن مالك، عن الزهري، ان سعيد بن المسيب، وابا، عبيد اخبراه عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " يرحم الله لوطا، لقد كان ياوي الى ركن شديد، ولو لبثت في السجن ما لبث يوسف ثم اتاني الداعي لاجبته
மஸ்ரூக் பின் அல்அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி அவதூறு பேசப்பட்டபோது (நடந்தவை பற்றி அவர்களின் தாயாரான) உம்மு ரூமான் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் சொன்னார்கள்:62 நான் ஆயிஷாவுடன் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், ‘‘இன்னாரை (மிஸ்தஹ் பின் உஸாஸா (ரலி) அவர்களை) அல்லாஹ் நிந்திக்கட்டும்” என்று கூறியபடி வந்தாள். நான், ‘‘ஏன் (இப்படிச் சொல்கிறாய்?)” என்று கேட்டேன். அதற்கு அவள், ‘‘(அவதூறுச்) செய்தியை அவர் (அறியாமையால்) பரப்பிவருகிறார்” என்று பதிலளித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘எந்த (அவ தூறுச்) செய்தியை?” என்று கேட்டார். அவள் அந்த அவதூறுச் செய்தியைத் தெரிவித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘இதை (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களும் (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் செவியுற்றார்களா?” என்று கேட்டார். நான், ‘‘ஆம் (செவியுற்றார்கள்)” என்று பதில் சொன்னேன். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் மூர்ச்சையடைந்து விழுந்துவிட்டார்கள். பிறகு குளிர் காய்ச்சலுடன்தான் மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, ‘‘இவளுக் கென்ன நேர்ந்தது?” என்று கேட்டார்கள். நான், ‘‘தன்னைப் பற்றிப் பேசப்பட்ட அவதூறுச் செய்தியைக் கேள்விப்பட்ட காரணத்தால் அவருக்குச் காய்ச்சல் ஏற்பட்டுவிட்டது” என்று பதிலளித்தேன். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்து கொண்டு, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்பமாட்டீர்கள். நான் (நடந்ததை எடுத்துச் சொல்லி) சமாதானப்படுத்தினாலும் நீங்கள் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை யஅகூப் (அலை) அவர்களுடையவும் அவர்களின் பிள்ளைகளுடையவும் நிலையாகும். (யஅகூப் (அலை) அவர்கள் சொன்னதைப் போன்றே நீங்கள் புனைந்துரைக்கும் விஷயத்தில்) அல்லாஹ்தான் உதவி கோரத் தகுதியானவன் ஆவான்” என்று சொன்னார்கள்.63 உடனே நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள். அதைத் தொடர்ந்து அல்லாஹ், தான் அருளிய (ஆயிஷா (ரலி) அவர்கள் நிரபராதி என்று அறிவிக்கும்) வசனத்தை அருளினான். நபி (ஸல்) அவர்கள் அதை ஆயிஷாவுக்குத் தெரிவித்தார்கள். அதைச் செவியுற்றவுடன் ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘(இதற்காக) அல்லாஹ்வுக்கு (மட்டுமே) நான் நன்றி செலுத்துகிறேன். வேறெவருக்கும் நன்றி செலுத்தமாட்டேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن سلام، اخبرنا ابن فضيل، حدثنا حصين، عن شقيق، عن مسروق، قال سالت ام رومان، وهى ام عايشة، عما قيل فيها ما قيل قالت بينما انا مع عايشة جالستان، اذ ولجت علينا امراة من الانصار، وهى تقول فعل الله بفلان وفعل. قالت فقلت لم قالت انه نما ذكر الحديث. فقالت عايشة اى حديث فاخبرتها. قالت فسمعه ابو بكر ورسول الله صلى الله عليه وسلم قالت نعم. فخرت مغشيا عليها، فما افاقت الا وعليها حمى بنافض، فجاء النبي صلى الله عليه وسلم فقال " ما لهذه ". قلت حمى اخذتها من اجل حديث تحدث به، فقعدت فقالت والله لين حلفت لا تصدقوني، ولين اعتذرت لا تعذروني، فمثلي ومثلكم كمثل يعقوب وبنيه، فالله المستعان على ما تصفون. فانصرف النبي صلى الله عليه وسلم فانزل الله ما انزل، فاخبرها فقالت بحمد الله لا بحمد احد
உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘‘இறுதியில், இறைத்தூதர்கள் (மக்கள்மீது) நம்பிக்கை இழந்து, அவர்க(ளின் ஆதரவாளர்க)ளும் தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ என்று எண்ணத் தொடங்கியபோது, அவர்களுக்கு நமது உதவி வந்தது” (12:110) என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த வசனத்தின் மூலத்தில், (யிதங்களி டம் பொய் சொல்லப்பட்டுவிட்டதோ’ என்பதைக் குறிப்பதற்கான சொல்லை) யிகுஃத்திபூ’ (இறைத்தூதர்கள் பொய்யர்கள் என மக்களால் கருதப்பட்டார்கள்) என்று வாசிக்க வேண்டுமா? அல்லது யிகுஃதிபூ’ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என இறைத்தூதர்களின் ஆதரவாளர்கள் எண்ணினர்) என்று வாசிக்க வேண்டுமா?” என்று நான் கேட்டேன்.64 ‘‘ யிகுத்திபூ’ (தாம் பொய்ப்பிக்கப்பட்டுவிட்டோமோ என்று இறைத்தூதர்கள் கருதலானார்கள் என்றுதான் ஓத வேண்டும்)” என ஆயிஷா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். அதாவது இறைத் தூதர்களை அவர்களின் சமுதாயத்தார் ஏற்க மறுத்தனர். உடனே, ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களுடைய சமுதாயத்தார் தங்களைப் பொய்ப்பிக்கிறார்கள் என்று இறைத்தூதர்கள் சந்தேகிக்கவில்லையே! உறுதியாக நம்பித்தானே இருந்தார்கள்? (ஆனால் யிழன்னூ’ லி நபிமார்கள் சந்தேகித்தார்கள் என்றுதானே குர்ஆனின் இந்த வசனத்தில் இடம்பெற்றுள்ளது. அவ்வாறிருக்க, நீங்கள் கூறுகின்றவாறு எப்படிப் பொருள் கொள்ள முடியும்?)” என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், ‘‘அன்பு (மகனே) உர்வா! அதை அவர்கள் உறுதியாக நம்பத்தான் செய்தார்கள். (எனவே, இந்த வசனத்தில், யிழன்னூ’ என்பதற்கு யிநபிமார்கள் உறுதியாக நம்பினார்கள்’ என்றே பொருள் கொள்ள வேண்டும்; சந்தேகித்தார்கள் என்று பொருள் கொள்ளக் கூடாது)” என்று பதில் கூறினார்கள்.65 அப்போது யிகத் குதிபூ (தங்களிடம் பொய் சொல்லப்பட்டுவிட்டது என்று நபி மார்கள் கருதலானார்கள்)› என்று இருக்க லாமோ...? என நான் கேட்டேன்.66 அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் காப்பாற்றட்டும். நபிமார்கள் தங்கள் இறைவனைப் பற்றி அப்படி (தங்களிடம் இறைவன் பொய் சொல்லிவிட்டதாக) நினைக்கவில்லை.67 இந்த வசனத்தின் பொருளாவது: இறைத்தூதர்களைப் பின்பற்றிய சமுதாயத்தார், தங்கள் இறைவனை நம்பி, இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்று, அதன் பிறகு (தாம் ஏற்றுக்கொண்ட மார்க்கத்தின் பாதையில் நேரிட்ட) துன்பங்கள் தொடர்ந்து நீடித்துக்கொண்டேபோய், இறை உதவியும் வரத் தாமதமாகிக் கொண்டிருந்த அந்த நிலையில்தான், அந்த இறைத் தூதர்கள் தம் சமுதாயத்தாரில் தமது செய்தியைப் பொய்யென்று கருதி, தம்மை ஏற்காமலிருந்துவிட்டவர்களைக் குறித்து நிராசையடைந்துவிட்டனர். மேலும், தம்மை ஏற்றுப் பின்பற்றியவர்கள்கூட (இறை உதவி வரத் தாமதமானதாலும் துன்ப துயரங்கள் நீண்டுகொண்டே போனதாலும்) நமது செய்தியைப் பொய் யென்று கருதுகின்றார்கள் என்றும் அவர்கள் எண்ணலானார்கள். அப்போதுதான் நமது உதவி அவர்களை வந்தடைந் தது.68 அபூஅப்தில்லாஹ் (புகாரீ) கூறு கிறேன்: அல்லாஹ் கூறுகின்றான்: அவர்கள் (தம் சகோதரரான) அவர் (யூசுஃப்) விஷயத்தில் நம்பிக்கை இழந்தபோது (இஸ்தைஅசூ) தனிமையில் ஆலோசனை கலந்தனர் (12:80). யியஇச’ (நம்பிக்கை இழத்தல்) என்பதன் யிஇஸ்தஃப்அல’ வாய் பாடே யிஇஸ்தைஅச’ என்பதாகும். அல்லாஹ்வின் அருள்மீது நம்பிக்கை இழந்துவிடாதீர்கள் (என யஅகூப் கூறினார்). (12:87) அதாவது நம்பிக்கை, எதிர்பார்ப்பைக் கைவிட்டுவிடாதீர்கள். அத்தியாயம் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகனான கண்ணியத்திற்குரியவரின் மகன்தான் கண்ணியத்திற்குரியவர். அவர் இப்ராஹீம் (அலை) அவர்களின் புதல்வரான இஸ்ஹாக் (அலை) அவர்களின் புதல்வரான யஅகூப் (அலை) அவர்களின் புதல்வரான யூசுஃப் (அலை) அவர்களேயாவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
اخبرني عبدة، حدثنا عبد الصمد، عن عبد الرحمن، عن ابيه، عن ابن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " الكريم ابن الكريم ابن الكريم ابن الكريم يوسف بن يعقوب بن اسحاق بن ابراهيم عليهم السلام
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: அய்யூப் (அலை) அவர்கள் தமது ஆடை முழுவதையும் களைந்துவிட்டு குளித்துக்கொண்டிருந்தபோது அவர்கள் மீது தங்கத்தாலான வெட்டுக்கிளி ஒன்றின் கால் வந்து விழுந்தது. உடனே அவர்கள் அதைத் தமது துணியில் எடுக்கலானார்கள். அப்போது அவர்களின் இறைவன் (அவர்களை) அழைத்து, ‘‘அய்யூபே! நீங்கள் பார்க்கின்ற இந்தச் செல்வத்தைவிட்டு உம்மை நான் தன்னிறைவு பெற்றவராக ஆக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு அவர்கள், ‘‘ஆம்; (உண்மைதான்.) என் இறைவா! ஆயினும், உன் அருள்வளத்திலிருந்து நான் தேவையற்றவன் அல்லவே!” என்று பதிலளித்தார்கள்.70 அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد الجعفي، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " بينما ايوب يغتسل عريانا خر عليه رجل جراد من ذهب، فجعل يحثي في ثوبه، فنادى ربه يا ايوب، الم اكن اغنيتك عما ترى قال بلى يا رب، ولكن لا غنى لي عن بركتك
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (முதன் முதலாக தமக்கு வேத அறிவிப்பு அருளப்பட்ட பின்பு) நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) கதீஜா (ரலி) அவர்களிடம், தமது மனம் பதறியவராகத் திரும்பி வந்தார்கள். உடனே கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தம் ஒன்றுவிட்ட சகோதரரும் வேதம் கற்றவருமான) வரகா பின் நவ்ஃபல் அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். வரகா கிறித்தவராக மாறிவிட்டிருந்த ஒரு மனிதராயி ருந்தார். அவர், (நபி ஈசா (அலை) அவர்களுக்கு அருளப்பெற்ற வேதமான) இன்ஜீலை அரபி மொழியில் ஓதிவந்தார். வரகா, நபி (ஸல்) அவர்களிடம், ‘‘நீங்கள் என்ன பார்த்தீர்கள்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் விவரம் தெரிவித்தார்கள். அதைக் கேட்ட வரகா, ‘‘இவர்தான் (இறைத்தூதர்) மூசாவின் மீது அல்லாஹ் இறங்கச் செய்த (வேத அறிவிப்பைக் கொண்டுவரும்) யிநாமூஸ்’ (வானவர்) ஆவார். (மார்க்கப் பிரசாரத்தில் ஈடுபட்டுப் பல சோதனைகளைச் சந்திக்கப்போகிற) உங்களுடைய காலத்தை நான் அடைந்து கொண்டால், உங்களுக்கு வலிமையுடன் கூடிய உதவியை நான் புரிவேன்” என்று கூறினார்.72 யிநாமூஸ்’ என்பவர், பிறருக்கு அறிவிக் காமல் மறைக்கின்ற விஷயங்களை (இறைக் கட்டளைப்படி) இறைத்தூதருக்கு அறிவிக்கும் வானவர் ஆவார். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، قال حدثني عقيل، عن ابن شهاب، سمعت عروة، قال قالت عايشة رضى الله عنها فرجع النبي صلى الله عليه وسلم الى خديجة يرجف فواده، فانطلقت به الى ورقة بن نوفل، وكان رجلا تنصر يقرا الانجيل بالعربية. فقال ورقة ماذا ترى فاخبره. فقال ورقة هذا الناموس الذي انزل الله على موسى، وان ادركني يومك انصرك نصرا موزرا. الناموس صاحب السر الذي يطلعه بما يستره عن غيره
மாலிக் பின் ஸஅஸஆ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட (மிஃராஜ்) இரவைப் பற்றி(ய செய்திகளை) எங்களுக்கு அறிவித் தார்கள்: நான் ஐந்தாவது வானத்திற்குச் சென்றபோது, அங்கே ஹாரூன் அவர்கள் இருந்தார்கள். ஜிப்ரீல் (அலை) அவர்கள், ‘‘இவர்கள்தான் ஹாரூன் அவர்கள். இவர்களுக்கு சலாம் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். அவர்கள் என் சலாமுக்கு பதிலுரைத்தார்கள். பிறகு, ‘‘நல்ல சகோதரரே வருக! நல்ல நபியே வருக!” என்று சொன்னார்கள்.73 இதே நபிமொழி அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து வேறு இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا هدبة بن خالد، حدثنا همام، حدثنا قتادة، عن انس بن مالك، عن مالك بن صعصعة، ان رسول الله صلى الله عليه وسلم حدثهم عن ليلة اسري به حتى اتى السماء الخامسة، فاذا هارون قال هذا هارون فسلم عليه. فسلمت عليه، فرد ثم قال مرحبا بالاخ الصالح والنبي الصالح. تابعه ثابت وعباد بن ابي علي عن انس عن النبي صلى الله عليه وسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என்னை (விண் பயணத்திற்காக) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் நான் மூசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள், ‘ஷனூஆ’ குலத்து மனிதர்களில் ஒருவரைப் போல் (எண்ணெய் தடவிப்) படிந்த தொங்கலான தலை முடியுடையவர்களாக இருந்தார்கள். நான் ஈசா அவர்களைப் பார்த்தேன். அவர்கள் நடுத்தர வயதுடைய சிவப்பான மனிதராகவும் (அப்போதுதான்) குளியலறை’லிருந்து வெளியே வந்த வரைப் போன்றும் இருந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களின் சந்ததி களிலேயே அவர்களுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒப்பாக இருப்பவன் நான்தான். பிறகு என்னிடம் இரண்டு பாத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. அவ்விரண்டில் ஒன்றில் பால் இருந்தது; மற்றொன்றில் மது இருந்தது. (வானவர்) ஜிப்ரீல் அவர்கள், ‘‘இரண்டில் எதை நீங்கள் விரும்புகிறீர் களோ அதை அருந்துங்கள்” என்று கூறி னார்கள். நான் பாலை எடுத்து அருந்தி னேன். ‘‘நீங்கள் இயல்பான (பானத்)தை எடுத்துக்கொண்டீர்கள். மதுவை நீங்கள் எடுத்திருந்தால் உங்கள் சமுதாயம் வழி தவறிப்போயிருக்கும்” என்று சொன் னார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام بن يوسف، اخبرنا معمر، عن الزهري، عن سعيد بن المسيب، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليلة اسري به " رايت موسى واذا رجل ضرب رجل، كانه من رجال شنوءة، ورايت عيسى، فاذا هو رجل ربعة احمر كانما خرج من ديماس، وانا اشبه ولد ابراهيم صلى الله عليه وسلم به، ثم اتيت باناءين، في احدهما لبن، وفي الاخر خمر فقال اشرب ايهما شيت. فاخذت اللبن فشربته فقيل اخذت الفطرة، اما انك لو اخذت الخمر غوت امتك
حدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن قتادة، قال سمعت ابا العالية، حدثنا ابن عم، نبيكم يعني ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال " لا ينبغي لعبد ان يقول انا خير من يونس بن متى ". ونسبه الى ابيه. وذكر النبي صلى الله عليه وسلم ليلة اسري به فقال " موسى ادم طوال كانه من رجال شنوءة ". وقال " عيسى جعد مربوع ". وذكر مالكا خازن النار، وذكر الدجال
حدثني محمد بن بشار، حدثنا غندر، حدثنا شعبة، عن قتادة، قال سمعت ابا العالية، حدثنا ابن عم، نبيكم يعني ابن عباس عن النبي صلى الله عليه وسلم قال " لا ينبغي لعبد ان يقول انا خير من يونس بن متى ". ونسبه الى ابيه. وذكر النبي صلى الله عليه وسلم ليلة اسري به فقال " موسى ادم طوال كانه من رجال شنوءة ". وقال " عيسى جعد مربوع ". وذكر مالكا خازن النار، وذكر الدجال
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது யூதர்கள் ஒரு நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள் லி அதாவது ஆஷூராவுடைய (முஹர்ரம் 10ஆவது) நாளில் (யூதர்கள்) நோன்பு நோற்றுவந்ததை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்லி யூதர்கள், ‘‘இது மாபெரும் நாள். மூசா (அலை) அவர்களை இந்த நாளில்தான் அல்லாஹ் காப்பாற்றினான்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் விதத்தில் நோன்பு நோற்றார்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் அவர்களைவிட மூசா அவர்களுக்கு மிக நெருக்கமானவன்” என்று கூறிவிட்டு, அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் (கூடுதலான) நோன்பு நோற்கும்படி ஆணையிட்டார்கள்.76 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا ايوب السختياني، عن ابن سعيد بن جبير، عن ابيه، عن ابن عباس رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم لما قدم المدينة وجدهم يصومون يوما، يعني عاشوراء، فقالوا هذا يوم عظيم، وهو يوم نجى الله فيه موسى، واغرق ال فرعون، فصام موسى شكرا لله. فقال " انا اولى بموسى منهم ". فصامه وامر بصيامه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்துவிடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியணையின் கால்களில் ஒரு காலைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா, அல்லது யிதூர்’ சீனா மலையில் (இறைவனைச் சந்தித்தபோது) அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டுவிடப்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது. இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.77 அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن عمرو بن يحيى، عن ابيه، عن ابي سعيد رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " الناس يصعقون يوم القيامة، فاكون اول من يفيق، فاذا انا بموسى اخذ بقايمة من قوايم العرش، فلا ادري افاق قبلي، ام جوزي بصعقة الطور
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்கள் மட்டும் இருந்திரா விட்டால் இறைச்சி துர்நாற்றமெடுக்காது. ஹவ்வா (ஏவாள்) அவர்கள் மட்டும் இருந்திராவிட்டால் பெண், தன் கணவனை எக்காலத்திலும் (ஆசையூட்டி) ஏமாற்ற மாட்டாள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.78 அத்தியாயம் :
حدثني عبد الله بن محمد الجعفي، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن همام، عن ابي هريرة رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " لولا بنو اسراييل لم يخنز اللحم، ولولا حواء لم تخن انثى زوجها الدهر
உபைதுல்லாஹ் பின் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹுர்ரு பின் கைஸ் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களுடன் மூசா (அலை) அவர்களு டைய தோழர் யார் என்பது தொடர்பாக (கருத்து வேறுபாடு கொண்டு) தர்க்கித்தார் கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவர் களிர் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள். அவர்கள் இருவரை யும் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களை அழைத்து, ‘‘நானும் என்னுடைய இந்தத் தோழரும், தாம் சந்திக்கவிருப்பவரிடம் செல்ல வேண்டிய பாதையை விசாரித்த மூசா (அலை) அவர்களின் (சந்திப்புக்குரிய) தோழரைக் குறித்து (அவர் யார் என்பதில் கருத்து பேதம் கொண்டு) தர்க்கித்துக் கொண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரைப் பற்றிக் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று வினவினார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ‘‘ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன்” என்றார்கள்: இஸ்ரவேலர்களின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து, மூசா (அலை) அவர்களிடம், ‘‘உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘‘(அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, ‘‘அப்படியல்ல; நம் அடியார் யிகளிர்’ உங்களைவிட அறிந்தவராயிருக்கிறார்” என்று கூறினான். எனவே, மூசா (அலை) அவர்கள் அவரைச் சென்றடைவதற்கான பாதையை விசாரித்தார்கள். ஆகவே, (களிர் (அலை) அவர்களைச் சந்திக்கும் இடம் வந்துவிட்டது என்பதை) மூசா (அலை) அவர்கள் புரிந்துகொள்ள மீன் அடையாளமாக ஆக்கப்பட்டது. மேலும் அவர்களிடம், ‘‘மீனை நீங்கள் தவறவிட்டுவிட்டால் உடனே (வந்த வழியே) திரும்பி வாருங்கள். அப்போது அவரை நீங்கள் சந்திப்பீர்கள்” என்று சொல்லப்பட்டது. அதன்படி, அவர்கள் கடலில் மீனைப் பின்தொடர்ந்து (சென்று)கொண்டிருந்தார் கள். அப்போது மூசா (அலை) அவர்களி டம் அவர்களின் (உதவியாளரான) இளைஞர், ‘‘நான் அந்தப் பாறையின் பக்கம் ஒதுங்கி ஓய்வெடுத்தபோது மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன். அதை நினைவில் வைத்திருக்க விடாமல் ஷைத்தான்தான் அதை எனக்கு மறக் கடித்துவிட்டான்” என்று சொன்னார். உடனே, மூசா (அலை) அவர்கள், ‘‘(அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் நாம் எதிர்பார்த்திருந்தோம்” என்று சொன்னார் கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே நடந்து திரும்பிச் சென்றனர். (வழியில்) களிர் (அலை) அவர்களைச் சந்தித்தனர். பிறகு அல்லாஹ் தன் வேதத்தில் எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.80 அத்தியாயம் :
حدثنا عمرو بن محمد، حدثنا يعقوب بن ابراهيم، قال حدثني ابي، عن صالح، عن ابن شهاب، ان عبيد الله بن عبد الله، اخبره عن ابن عباس، انه تمارى هو والحر بن قيس الفزاري في صاحب موسى، قال ابن عباس هو خضر، فمر بهما ابى بن كعب، فدعاه ابن عباس، فقال اني تماريت انا وصاحبي، هذا في صاحب موسى الذي سال السبيل الى لقيه، هل سمعت رسول الله صلى الله عليه وسلم يذكر شانه قال نعم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " بينما موسى في ملا من بني اسراييل جاءه رجل، فقال هل تعلم احدا اعلم منك قال لا. فاوحى الله الى موسى بلى عبدنا خضر. فسال موسى السبيل اليه، فجعل له الحوت اية، وقيل له اذا فقدت الحوت فارجع، فانك ستلقاه. فكان يتبع الحوت في البحر، فقال لموسى فتاه ارايت اذ اوينا الى الصخرة، فاني نسيت الحوت، وما انسانيه الا الشيطان ان اذكره. فقال موسى ذلك ما كنا نبغ. فارتدا على اثارهما قصصا فوجدا خضرا، فكان من شانهما الذي قص الله في كتابه
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘நவ்ஃப் அல்பிக்காலீ என்பவர், யிகளிர்’ (அலை) அவர்களின் தோழரான மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசா (அலை) அவர்கள் அல்லர்; அவர் வேறொரு மூசாதான் என்று கருதுகிறார்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் பகைவன் பொய் சொல்லிவிட்டான். உபை பின் கஅப் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து நமக்கு அறிவித்து உள்ளார்கள்: (ஒருமுறை) மூசா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களிடையே எழுந்து நின்று உரையாற்றினார்கள். அப்போது அவர்களிடம், ‘‘மக்களிடையே மிகவும் அறிந்தவர் யார்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘நான்தான்” என்று பதிலளித்துவிட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள், ‘‘அல்லாஹ்வே அறிந்தவன்” என்று சொல்லாமல் விட்டுவிட்டார்கள். ஆகவே, அல்லாஹ், மூசா (அலை) அவர்களிடம், ‘‘இல்லை. இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார் ஒருவர் இருக்கிறார். அவர் உங்களைவிட அதிகமாக அறிந்தவர்” என்று சொன்னான். மூசா (அலை) அவர்கள், ‘‘என் இறைவா! அவரை நான் சந்திப்பதற்கு யார் (வழி காட்டுவார்?)” என்று கேட்டார். லிஅறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனி (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்: சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், யிஇறைவா! அவரைச் சந்திப்பதற்கு எனக்கு வழி எப்படி?› என்று மூசா (அலை) அவர்கள் கேட்டதாகவும் சொல்லியிருக்கலாம்லி அதற்கு அல்லாஹ், ‘‘நீங்கள் ஒரு மீனை எடுத்து அதை ஒரு (ஈச்சங்) கூடையில் போட்டுக்கொள்ளுங்கள். (அப்படியே கடற்கரையோரமாக நடந்து செல்லுங்கள்.) நீங்கள் எங்கே அந்த மீனைத் தவறவிடுகிறீர்களோ அங்கேதான் அவர் இருப்பார்” என்று சொன்னான். அதன்படியே மூசா (அலை) அவர்களும் அவர்களுடைய உதவியாளர் யூஷஉ பின் நூன் அவர்களும் ஒரு மீனை எடுத்துக் கூடையில் போட்டுக்கொண்டு நடந்தார்கள். அவர்கள் ஒரு பாறையருகே சென்று சேர்ந்தபோது அங்கே படுத்து ஓய்வெடுத்தார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் தூங்கிவிட்டார்கள். மீன் குதித்து வெளி யேறிக் கடலில் விழுந்தது. அது கடலில் (சுரங்கம்போல்) வழியமைத்துக்கொண்டு (செல்லத் தொடங்கி)விட்டது. மீனின் வழியில் குறுக்கிடாதவாறு நீரோட்டத்தை அல்லாஹ் தடுத்துவிட (மீனைச் சுற்றி) ஒரு வளையம்போல் தண்ணீர் ஆகி விட்டது. மீதமிருந்த இரவும் பகலும் அவர்கள் நடந்து சென்றுகொண்டே யிருந்தார்கள். இறுதியில், அடுத்த நாள் வந்தபோது தம் உதவியாளரை நோக்கி, ‘‘நமது காலைச் சிற்றுண்டியைக் கொண்டுவா! நாம் நமது இந்தப் பயணத்தால் மிகவும் களைப் படைந்துவிட்டோம்” என்று மூசா (அலை) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ் கட்டளையிட்ட இடத்தை மூசா (அலை) அவர்கள் தாண்டிச் செல்லும்வரை அவர்களுக்குக் களைப்பு ஏற்படவில்லை. அவர்களின் உதவியாளர் அவர்களிடம், ‘‘நாம் அந்தப் பாறையில் ஓய்வெடுக்க தங்கினோமே, பார்த்தீர்களா? அங்கேதான் நான் மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன். (அதை நினைவில் வைத்திருக்காதபடி) ஷைத்தான்தான் எனக்கு அதை மறக் கடித்துவிட்டான். அது வியப்பான முறையில் கடலில் வழியமைத்துக்கொண்டு (சென்று)விட்டது” என்று சொன்னார். மீனுக்கு அது (தப்பிக்க) வழியாகவும், அவ்விருவருக்கும் அது வியப்பாகவும் அமைந்தது. மூசா (அலை) அவர்கள் அந்த உதவியாளரிடம், ‘‘அதுதான் நாம் தேடிக்கொண்டிருந்த இடம்” என்று சொன்னார்கள். உடனே அவர்கள் இருவரும் வந்த வழியே திரும்பிச் சென்றார்கள். இறுதியில், அந்தப் பாறையை அடைந்தார்கள். அங்கே ஒரு மனிதர் தம்மை முழுவதுமாக ஆடையால் போர்த்தியவராக (அமர்ந்து) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் கூற, அம்மனிதர் அவர்களுக்குப் பதில் சலாம் சொன்னார். பிறகு, ‘‘உங்களுடைய (இந்தப்) பகுதி யில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எப்படி (வந்தது? நீங்கள் யார்?)” என்று களிர் வினவினார். மூசா (அலை) அவர்கள், ‘‘நான்தான் மூசா” என்று பதிலளித்தார்கள். அதற்கு அம்மனிதர், ‘‘இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘‘ஆம். உங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத்தருவதற்காக நான் உங்களிடம் வந்திருக்கின்றேன்” என்று சொன்னார்கள். அதற்கு அவர், ‘‘மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத்தந்த ஓர் அறிவு என்னி டம் உள்ளது. அதை நீங்கள் அறியமாட்டீர் கள்; அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத்தந்த ஒருவகை அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறியமாட்டேன்” என்று சொன்னார். மூசா (அலை) அவர்கள், ‘‘நான் உங்க ளைத் தொடர்ந்து வரட்டுமா?” என்று கேட்டார்கள். அவர், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது. நீங்கள் அறியாத விஷயத்தை எப்படிச் சகித்துக்கொண்டிருப்பீர்கள்?” என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், ‘‘இன்ஷா அல்லாஹ் (இறைவன் நாடினால்) நீங்கள் என்னைப் பொறுமையாளராகக் காண்பீர்கள். எந்த விவகாரத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்யமாட்டேன்” என்று சொன்னார்கள். பிறகு இருவரும் கடற்கரையோரத்தில் நடந்து சென்றார்கள். அப்போது மரக்கலம் ஒன்று அவர்களைக் கடந்து சென்றது. அதன் உரிமையாளர்(களான ஏழைத் தொழிலாளர்)களிடம் தங்களை ஏற்றிச்செல்லும்படி பேசினார்கள். அவர்கள் களிர் (அலை) அவர்களை அடையாளம் கண்டு அவர்களை வாடகை கேட்காமல் ஏற்றிச்சென்றார்கள். அவர்கள் இருவரும் மரக்கலம் ஏறியபோது சிட்டுக்குருவி ஒன்று வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்தது. பிறகு அது கடலில் (அலகால்) ஒரு முறை அல்லது இருமுறை கொத்தி (நீர் அருந்தி)யது. உடனே மூசா (அலை) அவர்களிடம் களிர் (அலை), ‘‘மூசாவே! இந்தச் சிட்டுக்குருவி தன் அலகால் (கொத்தி நீரருந்தியதால்) இந்தக் கடலிலிருந்து எவ்வளவு (நீரை) எடுத்திருக்குமோ அந்த அளவுதான் என் அறிவும் உங்கள் அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது” என்று கூறி னார்கள். அப்போது கிள்ர் ஒரு கோடரியை எடுத்து மரக்கலத்தின் (அடித்தளப்) பலகை ஒன்றைக் கழற்றிவிட்டார்கள். களிர் (அலை) அவர்கள் வாய்ச்சியின் உதவி யால் (மரக்கலத்தின்) பலகையைக் கழற்றிய பின்புதான் மூசா (அலை) அவர்களுக்குத் தெரியவந்தது. உடனே மூசா (அலை) அவர்கள், ‘‘என்ன காரியம் செய்துவிட்டீர் கள்? வாடகை இல்லாமலே நம்மை ஏற்றி வந்தவர்களின் மரக்கலத்தை வேண்டு மென்றே ஓட்டையாக்கிவிட்டீர்களே! அதில் சவாரி செய்பவர்களை மூழ்கடிக் கவா (இப்படிச் செய்தீர்கள்)? நீங்கள் மிகப்பெரும் (கொடுஞ்)செயலைச் செய்து விட்டீர்கள்” என்று சொன்னார்கள். களிர் (அலை) அவர்கள், ‘‘உங்களால் என்னுடன் பொறுமையோடு இருக்க முடியாது என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா?” என்றார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘நான் மறந்துவிட்டதை வைத்து என்னைத் தண்டித்து (போகச் சொல்லி)விடாதீர்கள். என் விஷயத்தில் கடுமையாக நடந்துகொள்ளாதீர்கள்” என்று சொன்னார்கள். ஆக, மூசா (அலை) அவர்கள் முதல் தடவையாகப் பொறுமை யிழந்தது அவர்கள் மறந்து போனதால்தான். (பிறகு) கடலிலிருந்து அவர்கள் வெளியேறியபோது சிறுவர்களுடன் விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுவனைக் கடந்து சென்றார்கள். களிர் (அலை) அவர்கள் அச்சிறுவனின் தலையைப் பிடித்து, தமது கையால் இப்படிப் பிடுங்கி (தனியே எடுத்து)விட்டார்கள். லிஇந்த இடத்தில் அறிவிப்பாளர் கஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், தம் விரல்நுனிகளை எதையோ பறிப்பதைப்போல் காட்டி சைகை செய்தார்கள்லி அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம், ‘‘ஒரு பாவமும் அறியாத ஒரு (பச்சிளம்) உயிரை யல்லவா நீங்கள் கொன்றுவிட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்க வில்லையே? நீங்கள் மிகவும் தீய செயலைச் செய்துவிட்டீர்கள்” என்று கூறி னார்கள். அதற்கு களிர் (அலை) அவர்கள், ‘‘நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது” என்று நான் (முன்பே) சொல்ல வில்லையா?” என்று சொன்னார்கள். மூசா (அலை) அவர்கள், ‘‘இதற்குப் பின்னால் நான் உங்களிடம் ஏதாவது (விளக்கம்) கேட்டால் என்னை உங்களுடன் வைத்தி ருக்காதீர்கள். என்னிடமிருந்து (பிரிந்து செல்ல) உங்களுக்குத் தக்க காரணம் கிடைத்துவிட்டது” என்றார்கள். மீண்டும் இருவரும் நடந்தார்கள். இறுதியில், ஓர் ஊருக்கு வந்தார்கள். அந்த ஊர் மக்களிடம் உணவு கேட்டார் கள். ஆனால், அவர்கள் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்துவிட்டார்கள். அந்த ஊரில் சாய்ந்தபடி கீழே விழலாமா என யோசித்துக்கொண்டிருந்த சுவர் ஒன்றை இருவரும் கண்டார்கள். (இதைக் கண்ட) உடனே களிர் (அலை) அவர்கள் (இந்தச் சுவரை நிலை நிறுத்துவோம் என்பதற்கு அடையாளமாக) தம் கையால் இப்படிச் சைகை செய்தார்கள். லிஅறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் மேலே ஏதோ ஒரு பொருளைத் தடவுவது போல் சைகை காட்டினார்கள்லி லிமேலும், அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள், ‘‘சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் யிசாய்ந்தபடி’ என்னும் வார்த்தையை ஒரேயொரு முறைதான் சொல்லக் கேட்டேன்” என்று கூறுகிறார்.லி மூசா (அலை) அவர்கள், ‘‘இந்த சமுதாயத்தாரிடம் நாம் வந்து (உணவுகேட்டு)ம் அவர்கள் நமக்கு உணவளிக்கவும் இல்லை; விருந்துபசாரம் செய்யவு மில்லை (அவ்வாறிருந்தும்) வேண்டுமென்றே நீங்கள் அவர்களுடைய சுவரைச் செப்பனிட்டுள்ளீர்கள். நீங்கள் விரும்பியிருந்தால் அதற்குக் கூலி வாங்கியிருக்கலாம்” என்றார்கள். களிர் (அலை) அவர்கள், ‘‘இதுதான் நானும் நீங்களும் பிரிய வேண் டிய நேரம். உங்களால் பொறுமையாக இருக்க முடியாத விஷயங்களின் விளக் கத்தை நான் உங்களுக்கு (இப்போது) அறி வித்துவிடுகிறேன்” என்று கூறினார்கள். லிநபி (ஸல்) அவர்கள், யிமூசா (அலை) அவர்கள் பொறுமையாக இருந்திருக்க வேண்டும் என்று நாம் விரும்பினோம். அவ்வாறிருந்தால், அல்லாஹ் அவ்விரு வரின் நிகழ்ச்சிகள் பற்றி (இன்னும் நிறைய) எடுத்துரைத்திருப்பான்’ என்று சொன்னார்கள். அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள்கூறினார்கள்: ‘‘மூசா பொறுமையாக இருந்திருப்பாரே யானால் அவ்விருவர் பற்றி(ய நிறைய செய்திகள்) நமக்கு அறிவிக்கப்பட்டிருக் கும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவர்களுக்கு முன்னே ஒரு மன்னன் ஆளும் பகுதி இருந்தது. அவன் ஒவ்வொரு பழுதில்லாத ஒழுங்கான மரக்கலத்தையும் நிர்பந்தமாக அபகரித்துக்கொண்டிருந்தான். மேலும், அந்தச் சிறுவனுடைய விஷயம் என்னவெனில், அவன் இறைமறுப்பாள னாக இருந்தான் (கான காஃபிரன்). அவனுடைய தாய் தந்தையர் இறைநம்பிக்கை யாளர்களாக இருந்தனர்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர் அலீ பின் அப்தில்லாஹ் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார் கள்: பிறகு சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் என்னிடம், ‘‘அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் இப்படி ஓதுவதை இரண்டு முறை கேட்டு நான் அதை அவர்களிடமிருந்து ம”ம் செய்திருக்கிறேன். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ‘‘இதை அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து நீங்கள் ம”ம் செய்தீர்களா? அல்லது அம்ர் பின் தீனாரிடமிருந்து கேட்பதற்கு முன்பு வெறெந்த மனிதரிடமிருந்தாவது அதை ம”ம் செய்தீர்களா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘‘வேறெவரிட மிருந்து இதை நான் ம”ம் செய்வேன்? அம்ர் பின் தீனாரிடமிருந்து அதை என்னைத் தவிர வேறெவராவது அறிவித் திருக்கிறார்களா? அவரிடமிருந்து இரண்டு அல்லது மூன்று முறை நான் செவியுற்று அதை ம”ம் செய்திருக்கிறேன்” என்று சொன்னார்கள். 81 அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: களிர் (அலை) அவர்கள் ஒரு காய்ந்த பொட்டல் பூமியின் மீது அமர்ந்தார்கள். உடனே அவர்களுக்குப் பின்னே அது பசுமையான (கதிர்களுடைய)தாக (உயிர் பெற்று) அசையலாயிற்று. அதனால்தான் அவர்களுக்கு யிகளிர்’ (பசுமையானவர்) என்று பெயரிடப்பட்டது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில், சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர் களது அறிவிப்பில் முழு ஹதீஸும் இடம் பெற்றுள்ளது. அத்தியாயம் :
حدثنا محمد بن سعيد الاصبهاني، اخبرنا ابن المبارك، عن معمر، عن همام بن منبه، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " انما سمي الخضر انه جلس على فروة بيضاء فاذا هي تهتز من خلفه خضراء
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இஸ்ரவேலர்களுக்கு, ‘‘(ஊருக்குள் நுழையும்போது) அதன் வாசலில், சிரம் தாழ்த்தியவாறும் யிஹித்தத்துன்’ (யிபாவமன்னிப்புக் கோருகிறோம்’) என்று சொல்லியவாறும் நுழையுங்கள்” என்று கட்டளையிடப்பட்டது. ஆனால், அவர்கள் (யிஹித்தத்துன்’ என்னும் சொல்லை யிஹின்தத்துன்’லிகோதுமை என்று) மாற்றி விட்டார்கள்; தங்கள் புட்டங்களால் தவழ்ந்தபடி (ஊருக்குள்) நுழைந்தார்கள்; மேலும், தீட்டப்படாத ஒரு கோதுமைக்குள் ஒரு தானிய வித்து என்று சொன்னார் கள்.82 இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثني اسحاق بن نصر، حدثنا عبد الرزاق، عن معمر، عن همام بن منبه، انه سمع ابا هريرة رضى الله عنه يقول قال رسول الله صلى الله عليه وسلم " قيل لبني اسراييل ادخلوا الباب سجدا وقولوا حطة. فبدلوا فدخلوا يزحفون على استاههم، وقالوا حبة في شعرة
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூசா (அலை) அவர்கள் மிகவும் வெட்கப்படுபவர்களாகவும் அதிகமாக (தம் உடலை) மறைத்துக்கொள்பவர்களாகவும் இருந்தார்கள். அவர்களுடைய மேனியிலிருந்து சிறிதளவுகூட வெளியே தெரியாது. அவர்கள் (அதிகமாக) வெட்கப்பட்ட காரணத்தால்தான் இப்படி தம் உடலை அவர்கள் மறைத்துக்கொண்டார்கள். அப்போது, இஸ்ரவேலர்களில் அவர்களுக்கு மனவேதனை தர விரும்பியவர்கள் அவர்களுக்குத் துன்பம் தந்தனர்; ‘‘இவருடைய சருமத்தில் ஏதோ குறைபாடு இருப்பதால்தான் இந்த அளவுக்கு இவர் (தமது மேனியை) மறைத்துக்கொள்கிறார். (இவருக்குக்) தொழுநோய் இருக்க வேண்டும்; அல்லது விரை வீக்கம் இருக்க வேண்டும்; அல்லது வேறு ஏதேனும் குறைபாடு இருக்க வேண்டும்” என்று கூறினார்கள். மூசா (அலை) அவர்களைப் பற்றி அவர்கள் சொன்ன குறைகளிலிருந்து அவர் தூய்மையானவர் என்று நிரூபித்திட அல்லாஹ் விரும்பினான். ஆகவே, (இறைவனின் திட்டப்படி) ஒருநாள் மூசா (அலை) அவர்கள் மட்டும் (குளிக்குமிடத் திற்குத்) தனியாகச் சென்று, தம் ஆடைகளை (கழற்றி)க் கல்லின் மீது வைத்துவிட்டுப் பிறகு குளித்தார்கள். குளித்து முடித்தவுடன் தம் துணிகளை எடுத்துக்கொள்வதற்காக அவற்றை நோக்கிச் சென்றார்கள். அப்போது அந்தக் கல் அவர்களுடைய துணியுடன் ஓடலாயிற்று. மூசா (அலை) அவர்கள், தம் தடியை எடுத்துக்கொண்டு கல்லை விரட்டிப் பிடிக்க முனைந்தார்கள். ‘‘கல்லே என் துணி! கல்லே என் துணி!” என்று குரல் எழுப்பலானார்கள். (அதை விரட்டிச் சென்றபடி) இறுதியில் இஸ்ர வேலர்களின் பிரமுகர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அப்போது இஸ்ரவேலர்கள், மூசா (அலை) அவர்கள் அல்லாஹ்வின் படைப்புகளிலேயே மிக அழகானவர்களாக இருப்பதை, அவர்களை ஆடையில்லா கோலத்தில் கண்டதன் மூலம் பார்த்துக்கொண்டார்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து மூசா (அலை) அவர்களை அல்லாஹ் தூய்மை யாளராக ஆக்கினான். கல் (ஓடாமல்) நின்றுவிட்டது. உடனே மூசா (அலை) அவர்கள், தமது துணியை எடுத்துக்கொண்டு (கோபத்தில்) தம் கைத்தடியால் அந்தக் கல்லை அடிக்க லானார்கள். (அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அல்லாஹ்வின் மீதாணையாக! அந்தக் கல்லின் மீது அவர்கள் (தடியால்) அடித்த காரணத்தால் மூன்று அல்லது நான்கு அல்லது ஐந்து வடுக்கள் ஏற் பட்டன. இந்த நிகழ்ச்சியைத்தான், ‘‘இறைநம்பிக்கையாளர்களே! மூசாவுக்குத் துன்பம் தந்தவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள். அவர்கள் (இட்டுக்கட்டிக்) கூறியவற்றிலிருந்து மூசா தூய்மையானவர் என்று அல்லாஹ் நிரூபித்துவிட்டான். மேலும், அவர் அல்லாஹ்விடம் கண்ணியத்திற்குரியவராக இருந்தார்” (33:69) எனும் இறைவசனம் குறிக்கின்றது.83 இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثني اسحاق بن ابراهيم، حدثنا روح بن عبادة، حدثنا عوف، عن الحسن، ومحمد، وخلاس، عن ابي هريرة رضى الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم " ان موسى كان رجلا حييا ستيرا، لا يرى من جلده شىء، استحياء منه، فاذاه من اذاه من بني اسراييل، فقالوا ما يستتر هذا التستر الا من عيب بجلده، اما برص واما ادرة واما افة. وان الله اراد ان يبريه مما قالوا لموسى فخلا يوما وحده فوضع ثيابه على الحجر ثم اغتسل، فلما فرغ اقبل الى ثيابه لياخذها، وان الحجر عدا بثوبه، فاخذ موسى عصاه وطلب الحجر، فجعل يقول ثوبي حجر، ثوبي حجر، حتى انتهى الى ملا من بني اسراييل، فراوه عريانا احسن ما خلق الله، وابراه مما يقولون، وقام الحجر فاخذ ثوبه فلبسه، وطفق بالحجر ضربا بعصاه، فوالله ان بالحجر لندبا من اثر ضربه ثلاثا او اربعا او خمسا، فذلك قوله {يا ايها الذين امنوا لا تكونوا كالذين اذوا موسى فبراه الله مما قالوا وكان عند الله وجيها}
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒருமுறை (போரில் கிடைத்த பொருட்களைப்) பங்கிட் டார்கள். அப்போது ஒருமனிதர், ‘‘நிச்சயம் இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்” என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அதைத் தெரிவித்தேன். (அதைக் கேட்டு) அவர்கள் கோபமடைந்தார்கள். எந்த அளவுக்கென்றால் கோப(த்தின் அடையாள)த்தை நான் அவர்களின் முகத்தில் கண்டேன். பிறகு, ‘‘மூசா (அலை) அவர்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! இதை விட மிக அதிகமாக அவர் புண்படுத்தப் பட்டார்; இருப்பினும் அவர் (பொறுமை யுடன்) சகித்துக்கொண்டார்” என்று சொன் னார்கள்.84 அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن الاعمش، قال سمعت ابا وايل، قال سمعت عبد الله رضى الله عنه قال قسم النبي صلى الله عليه وسلم قسما، فقال رجل ان هذه لقسمة ما اريد بها وجه الله. فاتيت النبي صلى الله عليه وسلم فاخبرته، فغضب حتى رايت الغضب في وجهه، ثم قال " يرحم الله موسى قد اوذي باكثر من هذا فصبر
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، عن ابن شهاب، قال اخبرني عروة، انه سال عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم ارايت قوله {حتى اذا استياس الرسل وظنوا انهم قد كذبوا} او كذبوا. قالت بل كذبهم قومهم. فقلت والله لقد استيقنوا ان قومهم كذبوهم وما هو بالظن. فقالت يا عرية، لقد استيقنوا بذلك. قلت فلعلها او كذبوا. قالت معاذ الله، لم تكن الرسل تظن ذلك بربها واما هذه الاية قالت هم اتباع الرسل الذين امنوا بربهم وصدقوهم، وطال عليهم البلاء، واستاخر عنهم النصر حتى اذا استياست ممن كذبهم من قومهم، وظنوا ان اتباعهم كذبوهم جاءهم نصر الله. قال ابو عبد الله {استياسوا} افتعلوا من ييست. {منه} من يوسف. {لا تياسوا من روح الله} معناه الرجاء
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا عمرو بن دينار، قال اخبرني سعيد بن جبير، قال قلت لابن عباس ان نوفا البكالي يزعم ان موسى صاحب الخضر ليس هو موسى بني اسراييل، انما هو موسى اخر. فقال كذب عدو الله حدثنا ابى بن كعب عن النبي صلى الله عليه وسلم " ان موسى قام خطيبا في بني اسراييل، فسيل اى الناس اعلم فقال انا. فعتب الله عليه اذ لم يرد العلم اليه. فقال له بلى، لي عبد بمجمع البحرين هو اعلم منك. قال اى رب ومن لي به وربما قال سفيان اى رب وكيف لي به قال تاخذ حوتا، فتجعله في مكتل، حيثما فقدت الحوت فهو ثم وربما قال فهو ثمه واخذ حوتا، فجعله في مكتل، ثم انطلق هو وفتاه يوشع بن نون، حتى اتيا الصخرة، وضعا رءوسهما فرقد موسى، واضطرب الحوت فخرج فسقط في البحر، فاتخذ سبيله في البحر سربا، فامسك الله عن الحوت جرية الماء، فصار مثل الطاق، فقال هكذا مثل الطاق. فانطلقا يمشيان بقية ليلتهما ويومهما، حتى اذا كان من الغد قال لفتاه اتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نصبا. ولم يجد موسى النصب حتى جاوز حيث امره الله. قال له فتاه ارايت اذ اوينا الى الصخرة فاني نسيت الحوت، وما انسانيه الا الشيطان ان اذكره، واتخذ سبيله في البحر عجبا، فكان للحوت سربا ولهما عجبا. قال له موسى ذلك ما كنا نبغي، فارتدا على اثارهما قصصا، رجعا يقصان اثارهما حتى انتهيا الى الصخرة، فاذا رجل مسجى بثوب، فسلم موسى، فرد عليه. فقال وانى بارضك السلام. قال انا موسى. قال موسى بني اسراييل قال نعم، اتيتك لتعلمني مما علمت رشدا. قال يا موسى اني على علم من علم الله، علمنيه الله لا تعلمه وانت على علم من علم الله علمكه الله لا اعلمه. قال هل اتبعك قال {انك لن تستطيع معي صبرا * وكيف تصبر على ما لم تحط به خبرا} الى قوله {امرا} فانطلقا يمشيان على ساحل البحر، فمرت بهما سفينة، كلموهم ان يحملوهم، فعرفوا الخضر، فحملوه بغير نول، فلما ركبا في السفينة جاء عصفور، فوقع على حرف السفينة، فنقر في البحر نقرة او نقرتين، قال له الخضر يا موسى، ما نقص علمي وعلمك من علم الله الا مثل ما نقص هذا العصفور بمنقاره من البحر. اذ اخذ الفاس فنزع لوحا، قال فلم يفجا موسى الا وقد قلع لوحا بالقدوم. فقال له موسى ما صنعت قوم حملونا بغير نول، عمدت الى سفينتهم فخرقتها لتغرق اهلها، لقد جيت شييا امرا. قال الم اقل انك لن تستطيع معي صبرا. قال لا تواخذني بما نسيت ولا ترهقني من امري عسرا، فكانت الاولى من موسى نسيانا. فلما خرجا من البحر مروا بغلام يلعب مع الصبيان، فاخذ الخضر براسه فقلعه بيده هكذا واوما سفيان باطراف اصابعه كانه يقطف شييا فقال له موسى اقتلت نفسا زكية بغير نفس لقد جيت شييا نكرا. قال الم اقل لك انك لن تستطيع معي صبرا. قال ان سالتك عن شىء بعدها فلا تصاحبني، قد بلغت من لدني عذرا. فانطلقا حتى اذا اتيا اهل قرية استطعما اهلها فابوا ان يضيفوهما فوجدا فيها جدارا يريد ان ينقض مايلا اوما بيده هكذا واشار سفيان كانه يمسح شييا الى فوق، فلم اسمع سفيان يذكر مايلا الا مرة قال قوم اتيناهم فلم يطعمونا ولم يضيفونا عمدت الى حايطهم لو شيت لاتخذت عليه اجرا. قال هذا فراق بيني وبينك، سانبيك بتاويل ما لم تستطع عليه صبرا". قال النبي صلى الله عليه وسلم " وددنا ان موسى كان صبر، فقص الله علينا من خبرهما ". قال سفيان قال النبي صلى الله عليه وسلم " يرحم الله موسى، لو كان صبر يقص علينا من امرهما ". وقرا ابن عباس امامهم ملك ياخذ كل سفينة صالحة غصبا، واما الغلام فكان كافرا وكان ابواه مومنين. ثم قال لي سفيان سمعته منه مرتين وحفظته منه. قيل لسفيان حفظته قبل ان تسمعه من عمرو، او تحفظته من انسان فقال ممن اتحفظه ورواه احد عن عمرو غيري سمعته منه مرتين او ثلاثا وحفظته منه