ஹதீஸ்கள்
#3400
ஸஹீஹ் அல்-புகாரீ - Prophets
உபைதுல்லாஹ் பின் அப்தில் லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஹுர்ரு பின் கைஸ் அல்ஃபஸாரீ (ரலி) அவர்களுடன் மூசா (அலை) அவர்களு டைய தோழர் யார் என்பது தொடர்பாக (கருத்து வேறுபாடு கொண்டு) தர்க்கித்தார் கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அவர் களிர் (அலை) அவர்கள்தான்” என்று கூறினார்கள். அவர்கள் இருவரை யும் உபை பின் கஅப் (ரலி) அவர்கள் கடந்து சென்றார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உபை பின் கஅப் (ரலி) அவர்களை அழைத்து, ‘‘நானும் என்னுடைய இந்தத் தோழரும், தாம் சந்திக்கவிருப்பவரிடம் செல்ல வேண்டிய பாதையை விசாரித்த மூசா (அலை) அவர்களின் (சந்திப்புக்குரிய) தோழரைக் குறித்து (அவர் யார் என்பதில் கருத்து பேதம் கொண்டு) தர்க்கித்துக் கொண்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரைப் பற்றிக் கூற நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்று வினவினார்கள். அதற்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள், ‘‘ஆம்; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறக் கேட்டேன்” என்றார்கள்: இஸ்ரவேலர்களின் பிரமுகர்கள் நிறைந்த ஓர் அவையில் ஒரு மனிதர் வந்து, மூசா (அலை) அவர்களிடம், ‘‘உங்களைவிட அதிகமாக அறிந்தவர் எவரையாவது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். மூசா (அலை) அவர்கள், ‘‘(அப்படி எவரும் இருப்பதாக) எனக்குத் தெரியவில்லை” என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ் மூசா (அலை) அவர்களுக்கு, ‘‘அப்படியல்ல; நம் அடியார் யிகளிர்’ உங்களைவிட அறிந்தவராயிருக்கிறார்” என்று கூறினான். எனவே, மூசா (அலை) அவர்கள் அவரைச் சென்றடைவதற்கான பாதையை விசாரித்தார்கள். ஆகவே, (களிர் (அலை) அவர்களைச் சந்திக்கும் இடம் வந்துவிட்டது என்பதை) மூசா (அலை) அவர்கள் புரிந்துகொள்ள மீன் அடையாளமாக ஆக்கப்பட்டது. மேலும் அவர்களிடம், ‘‘மீனை நீங்கள் தவறவிட்டுவிட்டால் உடனே (வந்த வழியே) திரும்பி வாருங்கள். அப்போது அவரை நீங்கள் சந்திப்பீர்கள்” என்று சொல்லப்பட்டது. அதன்படி, அவர்கள் கடலில் மீனைப் பின்தொடர்ந்து (சென்று)கொண்டிருந்தார் கள். அப்போது மூசா (அலை) அவர்களி டம் அவர்களின் (உதவியாளரான) இளைஞர், ‘‘நான் அந்தப் பாறையின் பக்கம் ஒதுங்கி ஓய்வெடுத்தபோது மீனை மறந்து (தவற விட்டு)விட்டேன். அதை நினைவில் வைத்திருக்க விடாமல் ஷைத்தான்தான் அதை எனக்கு மறக் கடித்துவிட்டான்” என்று சொன்னார். உடனே, மூசா (அலை) அவர்கள், ‘‘(அது நம்மைவிட்டு நழுவிச் செல்லும்) அந்தச் சந்தர்ப்பத்தைத்தான் நாம் எதிர்பார்த்திருந்தோம்” என்று சொன்னார் கள். பிறகு இருவரும் தம் சுவடுகளின் வழியே நடந்து திரும்பிச் சென்றனர். (வழியில்) களிர் (அலை) அவர்களைச் சந்தித்தனர். பிறகு அல்லாஹ் தன் வேதத்தில் எடுத்துரைத்துள்ள அவ்விருவர் தொடர்பான நிகழ்வுகள் நடைபெற்றன.80 அத்தியாயம் :
حدثنا عمرو بن محمد، حدثنا يعقوب بن ابراهيم، قال حدثني ابي، عن صالح، عن ابن شهاب، ان عبيد الله بن عبد الله، اخبره عن ابن عباس، انه تمارى هو والحر بن قيس الفزاري في صاحب موسى، قال ابن عباس هو خضر، فمر بهما ابى بن كعب، فدعاه ابن عباس، فقال اني تماريت انا وصاحبي، هذا في صاحب موسى الذي سال السبيل الى لقيه، هل سمعت رسول الله صلى الله عليه وسلم يذكر شانه قال نعم سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " بينما موسى في ملا من بني اسراييل جاءه رجل، فقال هل تعلم احدا اعلم منك قال لا. فاوحى الله الى موسى بلى عبدنا خضر. فسال موسى السبيل اليه، فجعل له الحوت اية، وقيل له اذا فقدت الحوت فارجع، فانك ستلقاه. فكان يتبع الحوت في البحر، فقال لموسى فتاه ارايت اذ اوينا الى الصخرة، فاني نسيت الحوت، وما انسانيه الا الشيطان ان اذكره. فقال موسى ذلك ما كنا نبغ. فارتدا على اثارهما قصصا فوجدا خضرا، فكان من شانهما الذي قص الله في كتابه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Prophets
- Hadith Index
- #3400
- Book Index
- 73
Grades
- -
