Loading...
Loading...
நூல்கள்
43 ஹதீஸ்கள்
அலீ பின் ஹுசைன் (ரஹ்)2 அவர்களின் தோழரான சயீத் பின் மர் ஜானா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை யார் விடுதலை செய்கிறாரோ, (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ் வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை ச...
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் அவனது பாதை யில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள...
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் சந்திர (அல்லது சூரிய) கிரகணத்தின்போது அடிமைகளை விடுதலை செய்யும்படி கட்டளையிடப் பட்டிருந்தோம். அத்தியாயம் :
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: இருவருக்குக் கூட்டான ஓர் அடிமையை (அவ்விருவரில்) ஒருவர் விடுதலை செய்தால், அவர் வசதியானவராக இருக்கும்போது அந்த அடிமைக்கு (நியாயமான) விலை மதிப்பிடப்பட்டு (அதையும் அவரே செலுத்தி) பின்னர் அவன் வி...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்க...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அவ்வடிமையின் (முழு) விலையை எட்டுகின்ற அளவிற்குச் செல்வம் இருந் தால், அந்த அடிமையை முழுமையாக விடுதலை செய்வது அவரது...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ அவரிடம் அந்த அடிமையின் நியாய விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால் அவன் (முழுவதுமாக) விடுதலை செய்யப்படுவான். இதை இப்னு உமர் (ரலி...
நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: பங்குதாரர்கள் பலருக்கும் கூட்டான ஓர் அடிமையில் அல்லது அடிமைப் பெண்ணில் தமது பங்கை (பங்குதாரர்களில்) ஒருவர் விடுதலை செய்வது தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் தீர்ப்பு வழங்கிவந்தார்கள். அத்...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எவர் ஓர் அடிமையிலுள்ள (தமது) பங்கை விடுதலை செய்துவிட்டாரோ அவர்... (என்று ஹதீஸ் தொடங்கி அடுத்த ஹதீஸில் உள்ள தகவல்கள் இடம் பெறு கின்றன.) இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: எவர் ஓர் அடிமையில் (தமக்குள்ள) ஒரு பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் (போதிய) செல்வம் இருக்கு மாயின், தமது செல்வத்திலிருந்தே அவ்வடிமையை (முழுவதுமாக) விடுதலை செய்வது அவர்மீது கடமையாகும். (அவரிட...
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் ஊசலாடும் தீய எண்ணங்களை, அவர்கள் (அதன்படி) செயல்படாத வரை அல்லது (அதை வெளிப்படுத்திப்) பேசாத வரை எனக்காக அல்லாஹ் மன்னிக்கின்றான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறி...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: செயல்கள் (அனைத்தும்) எண்ணங் களைப் பொறுத்தே அமைகின்றன. ஒரு மனிதனுக்கு அவன் எதை எண்ணியிருந் தானோ அதுதான் கிடைக்கும். ஒருவர் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் புலம்பெயர்ந்து (ஹிஜ்ரத்)...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இஸ்லாத்தை ஏற்க விரும்பி (நபி (ஸல்) அவர்களிடம்) சென்று கொண்டிருந்தபொழுது என்னுடன் என் அடிமையும் இருந்தார். (வழியில்) அவர் என்னையும் நான் அவரையும் பிரிந்து வழிமாறிச் சென்றுவிட்டோம்....
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவிற்கு) நபி (ஸல்) அவர்களைக் காணவந்தபோது பாதையில், எவ்வளவு நீண்ட களைப்பூட்டும் இரவு! இருந்தாலும் காத்தது அந்த இரவுதான்! இறைமறுப்பு இல்லத்திலிரு...
கைஸ் பின் அபீஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தேடி (நபி (ஸல்) அவர்களை நோக்கி மதீனா) வந்தபோது, அவர்களுடன் ஓர் அடிமையும் இருந்தார். அவர்கள் பாதையறியாமல் ஒருவரையொருவர் பிரிந்து போய்விட்டா...
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களி டம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணு டைய மகனைப் பற்றி, ‘‘அவன் என் மகன்” என்று கூறி, அவனைப் பிடித்து வரும்படி உறுதிமொழி வாங்கியி...
ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எங்களில் ஒருவர் தம் அடிமை ஒருவனை பின்தேதியிட்டு விடுதலை செய்திருந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த அடிமையை அழைத்து (ஏலத்தில்) விற்றுவிட்டார்கள். அந்த அடிமை, (அப்துல்லாஹ் பின்...
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (முன்னாள்) அடிமைக்கு வாரிசாகின்ற உரிமையை விற்பதையும் (அன்பளிப்பாக) வழங்குவதையும் தடை செய்தார்கள். அத்தியாயம் :
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (அடிமைப் பெண்ணான) பரீராவை விலைக்கு வாங்கினேன். அப்போது அவருடைய உரிமையாளர்கள், அவருக்கு வாரிசாகும் உரிமை தமக்கே உரியதாக இருக்க வேண்டும் என்று நிபந்தனையிட்டார்கள். நான் இதை நபி (ஸல்) அவ...