ஹதீஸ்கள்
#2522
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்கிறாரோ அவரிடம் அந்த அடிமையின் (முழு) விலையையும் எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால், அந்த அடிமைக்கு நியாயமான விலை நிர்ணயிக்க வேண்டும். பிறகு அவர் தம் பங்காளிக்கு, அவர்களுக்கான பங்குத் தொகைகளை கொடுத்துவிட்டு, அந்த அடிமையை (முழுமையாக) விடுதலை செய்துவிட வேண்டும். இல்லையென்றால், அவர் எந்த அளவுக்கு விடுதலை செய்தாரோ, அந்த (பங்கின்) அளவிற்குத்தான் விடுதலை செய்தவர் ஆவார். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن نافع، عن عبد الله بن عمر رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال " من اعتق شركا له في عبد، فكان له مال يبلغ ثمن العبد قوم العبد قيمة عدل، فاعطى شركاءه حصصهم وعتق عليه، والا فقد عتق منه ما عتق
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2522
- Book Index
- 6
Grades
- -
