ஹதீஸ்கள்
#2517
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
அலீ பின் ஹுசைன் (ரஹ்)2 அவர்களின் தோழரான சயீத் பின் மர் ஜானா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ‘‘ஒரு முஸ்லிமான (அடிமை) மனிதரை யார் விடுதலை செய்கிறாரோ, (விடுதலை செய்யப்பட்ட) அந்த முஸ்லிமின் ஒவ் வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை அல்லாஹ் நரகத்திலிருந்து (விடுவித்துக்) காப்பாற்று வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக என்னிடம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள். உடனே நான், இந்த நபிமொழியை அலீ பின் ஹுசைன் (ரஹ்) அவர்களிடம் கொண்டுசென்றேன். இதைக் கேட்ட அன்னார் தம் அடிமை ஒருவரை விடுதலை செய்ய விரும்பினார்கள். அந்த அடிமைக்கு (விலையாக) அப்துல்லாஹ் பின் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் பத்தாயிரம் திர்ஹங்களையோ ஆயிரம் தீனார்களையோ அன்னாரிடம் கொடுத்திருந்தார்கள். அவ்வாறிருந்தும் (அந்தப் பணத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டு) அந்த அடிமையை அன்னார் விடுதலை செய்துவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا عاصم بن محمد، قال حدثني واقد بن محمد، قال حدثني سعيد ابن مرجانة، صاحب علي بن حسين قال لي ابو هريرة رضى الله عنه قال النبي صلى الله عليه وسلم " ايما رجل اعتق امرا مسلما استنقذ الله بكل عضو منه عضوا منه من النار ". قال سعيد ابن مرجانة فانطلقت الى علي بن حسين فعمد علي بن حسين رضى الله عنهما الى عبد له قد اعطاه به عبد الله بن جعفر عشرة الاف درهم او الف دينار فاعتقه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2517
- Book Index
- 1
Grades
- -
