ஹதீஸ்கள்
#2524
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் ஓர் அடிமையில் தமக்குள்ள பங்கை விடுதலை செய்தாரோ அவரிடம் அந்த அடிமையின் நியாய விலையை எட்டுகின்ற அளவுக்குச் செல்வம் இருந்தால் அவன் (முழுவதுமாக) விடுதலை செய்யப்படுவான். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும், ‘‘அவ்வாறு (முழுவதுமாக விடுதலை) செய்ய இயலாவிட்டால், அவர் விடுதலை செய்த (பங்கின்) அளவுக்கே அந்த அடிமையை விடுதலை செய்தவர் ஆவார்” என்று இதன் அறிவிப்பாளரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். ‘‘இது நாஃபிஉ (ரஹ்) அவர்களின் கூற்றா; அல்லது நபிமொழியின் ஒரு பகுதியா என்பது எனக்குத் தெரியாது” என்று அறிவிப்பாளர் அய்யூப் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا حماد، عن ايوب، عن نافع، عن ابن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " من اعتق نصيبا له في مملوك او شركا له في عبد، وكان له من المال ما يبلغ قيمته بقيمة العدل، فهو عتيق ". قال نافع والا فقد عتق منه ما عتق. قال ايوب لا ادري اشىء قاله نافع، او شىء في الحديث
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2524
- Book Index
- 8
Grades
- -
