ஹதீஸ்கள்
#2518
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம், ‘‘எந்த நற்செயல் சிறந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் அவனது பாதை யில் அறப்போர் புரிவதும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். நான், ‘‘எந்த அடிமை(யை விடுதலை செய்வது) சிறந்தது” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘அவர்களில் அதிக விலை கொண்ட அடிமையும் தன் உரிமை யாளர்களிடம் பெறுமதி மிக்க அடிமையும் (தான் சிறந்தவர்கள்)” என்று பதிலளித் தார்கள். நான், ‘‘என்னால் அது (அடிமையை விடுதலை செய்வது) இயலவில்லை யென்றால்?” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘‘பலவீனருக்கு உதவி செய்; அல்லது வேலை இல்லாதவனுக்கு வேலை கொடு!” என்று கூறினார்கள். நான், ‘‘இதுவும் என்னால் இயலவில்லையென் றால்...?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘மக்களுக்குத் தீங்கு செய்யாமல் இரு. ஏனெனில், அதுவும் நீ உனக்கு செய்துகொள்ளும் ஒரு தர்மம் ஆகும்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبيد الله بن موسى، عن هشام بن عروة، عن ابيه، عن ابي مراوح، عن ابي ذر رضى الله عنه قال سالت النبي صلى الله عليه وسلم اى العمل افضل، قال " ايمان بالله، وجهاد في سبيله ". قلت فاى الرقاب افضل قال " اغلاها ثمنا، وانفسها عند اهلها ". قلت فان لم افعل. قال " تعين صانعا او تصنع لاخرق ". قال فان لم افعل. قال " تدع الناس من الشر، فانها صدقة تصدق بها على نفسك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2518
- Book Index
- 2
Grades
- -
