ஹதீஸ்கள்
#2533
ஸஹீஹ் அல்-புகாரீ - Manumission of Slaves
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: உத்பா பின் அபீவக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களி டம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணு டைய மகனைப் பற்றி, ‘‘அவன் என் மகன்” என்று கூறி, அவனைப் பிடித்து வரும்படி உறுதிமொழி வாங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது (மக்கா நகருக்கு) வந்திருந்த சமயம், சஅத் (ரலி) அவர்கள் ஸம்ஆவுடைய அடிமைப் பெண்ணின் மகனைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். ஸம்ஆவின் (சொந்த) மகன் அப்த் (ரலி) அவர்களையும் தம்முடன் அழைத்து வந்தார். பிறகு சஅத் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரரின் மகன். என் சகோதரர் என்னிடம், இவன் தன் மகன் என்று (கூறி இவனை அழைத்து வர) உறுதிமொழி வாங்கியுள்ளார்” என்று கூறினார்கள். அப்த் பின் ஸம்ஆ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன்; என் தந்தை ஸம்ஆவின் அடிமைப் பெண் பெற்றெடுத்த மகன்; என் தந்தையின் படுக்கையில் (என் தந்தையின் அதிகாரத்தில் இவனுடைய தாய் இருந்தபோது) பிறந்தவன்” என்று கூறினார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண் ணுடைய மகனைப் பார்த்தார்கள். அவன் மக்களில் உத்பாவிற்கு மிகவும் ஒப்பான வனாக இருந்ததைக் கண்டார்கள். (ஸம்ஆ வின் மகன் அப்த் (ரலி) அவர்களை நோக்கி) ‘‘அப்த் பின் ஸம்ஆவே! அவன் உனக்கே உரியவன்” என்று கூறினார்கள். அவன் அப்துவின் தந்தை ஸம்ஆவின் படுக்கையில் பிறந்தவன் எனும் காரணத்தால் இப்படிக் கூறினார்கள். (பிறகு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியார் சவ்தா (ரலி) அவர்களை நோக்கி,) ‘‘ஸம்ஆவின் மகள் சவ்தாவே! இவன் பார்வையில் படாத வண்ணம் நீ திரையிட்டுக்கொள்” என்று கூறினார்கள். தோற்றத்தில் உத்பாவுக்கு ஒப்பாக அவன் இருந்ததைக் கண்ட காரணத்தால்தான் நபி (ஸல்) அவர்கள் இப்படிக் கட்டளையிட்டார்கள். சவ்தா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் மனைவியாக இருந்தார்கள்.10 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال حدثني عروة بن الزبير، ان عايشة رضى الله عنها قالت ان عتبة بن ابي وقاص عهد الى اخيه سعد بن ابي وقاص ان يقبض اليه ابن وليدة زمعة، قال عتبة انه ابني. فلما قدم رسول الله صلى الله عليه وسلم زمن الفتح اخذ سعد ابن وليدة زمعة. فاقبل به الى رسول الله صلى الله عليه وسلم واقبل معه بعبد بن زمعة. فقال سعد يا رسول الله هذا ابن اخي عهد الى انه ابنه. فقال عبد بن زمعة يا رسول الله هذا اخي ابن وليدة زمعة، ولد على فراشه. فنظر رسول الله صلى الله عليه وسلم الى ابن وليدة زمعة، فاذا هو اشبه الناس به، فقال رسول الله صلى الله عليه وسلم " هو لك يا عبد بن زمعة ". من اجل انه ولد على فراش ابيه، قال رسول الله صلى الله عليه وسلم " احتجبي منه يا سودة بنت زمعة ". مما راى من شبهه بعتبة. وكانت سودة زوج النبي صلى الله عليه وسلم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Manumission of Slaves
- Hadith Index
- #2533
- Book Index
- 17
Grades
- -
