Loading...

Loading...
நூல்கள்
௧௫௮ ஹதீஸ்கள்
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கறுப்பு நிற ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் (திடீரென்று) அவர் பற்றி நினைவு வந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அந்த மனிதர் என்ன ஆனார்?” எனக் கேட்டார்கள். அதற்கு (தோழர்கள்) “அல்லாஹ் வின் தூதரே! அவர் இறந்துவிட்டார்” என்றதும், “எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” எனக் கேட்டார்கள். தோழர் கள், அவரைப் பற்றி தகுதிக் குறைவாகக் கருதி, “அவர் இன்னின்னவாறெல்லாம் இருந்தார்” எனக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவரது அடக்கத் தலத்தை (கப்று) எனக்குக் காட்டுங்கள்” என்று கூறி, அங்கு சென்று அவருக்கு (இறுதித் தொழுகை) தொழுதார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن الفضل، حدثنا حماد بن زيد، عن ثابت، عن ابي رافع، عن ابي هريرة رضى الله عنه ان اسود رجلا او امراة كان يقم المسجد فمات، ولم يعلم النبي صلى الله عليه وسلم بموته فذكره ذات يوم فقال " ما فعل ذلك الانسان ". قالوا مات يا رسول الله. قال " افلا اذنتموني ". فقالوا انه كان كذا وكذا قصته. قال فحقروا شانه. قال " فدلوني على قبره ". فاتى قبره فصلى عليه
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியாரின் உடலைக் சவக்குழியில் அடக்கம் செய்துவிட்டு, அவரு டைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் காலணிகள் எழுப்பும் ஓசையை நிச்சயமாக அவர் (மய்யித்) செவியுறுவார். அதற்குள் இரண்டு வானவர்கள் அவரிடம் வந்து அவரை எழுப்பி உட்கார வைத்து, “முஹம்மத் (ஸல்) எனும் இந்த மனிதரைப் பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்?” எனக் கேட்பர். அதற்கு “இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார் என நான் உறுதிகூறுகின்றேன்” என்பார். பிறகு “(நீர் கெட்டவராக இருந்திருந் தால் நரகத்தில் உமக்குக் கிடைக்க விருந்த) தங்குமிடத்தைப் பார்ப்பீராக! (நீர் நல்லவராக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உமக்குச் சொர்க்கத் தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவரிடம் கூறப்படும். அப்போது அவர் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பார். இறைமறுப்பாளராகவோ நயவஞ்சக ராகவோ அவர் இருந்தால் (கேள்வி கேட்கப்பட்டதும்), “எனக்கு (ஒன்றும்) தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக்கொண்டிருந்தேன்” என்பார். அப்போது அவரிடம் “நீ(யாக) எதையும் அறிந்ததுமில்லை; (குர் ஆனை) ஓதி (விளங்கி)யதுமில்லை” என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவருடைய இரு காதுகளுக்கிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்கள் ஆகியோரைத் தவிர, அருகிலுள்ள மற்ற அனைவருக்கும் கேட்கும் அளவுக்கு அவர் அலறுவார்.” இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا عياش، حدثنا عبد الاعلى، حدثنا سعيد، قال وقال لي خليفة حدثنا ابن زريع، حدثنا سعيد، عن قتادة، عن انس رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " العبد اذا وضع في قبره، وتولي وذهب اصحابه حتى انه ليسمع قرع نعالهم، اتاه ملكان فاقعداه فيقولان له ما كنت تقول في هذا الرجل محمد صلى الله عليه وسلم فيقول اشهد انه عبد الله ورسوله. فيقال انظر الى مقعدك من النار، ابدلك الله به مقعدا من الجنة قال النبي صلى الله عليه وسلم فيراهما جميعا واما الكافر او المنافق فيقول لا ادري، كنت اقول ما يقول الناس. فيقال لا دريت ولا تليت. ثم يضرب بمطرقة من حديد ضربة بين اذنيه، فيصيح صيحة يسمعها من يليه الا الثقلين
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் நபி மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூசா (அலை) அவர்கள், (அவரது கண் பிதுங்கும் அளவுக்கு) அவரை அறைந்து விட்டார்கள். உடனே அவர் தம் இறையிடம் திரும்பிச் சென்று, “(இறைவா!) இறக்க விரும்பாத ஓர் அடியாரிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்” என்றார். அந்த வானவருக்கு மீண்டும் கண்ணைக் கொடுத்த இறைவன், “நீர் அவரிடம் திரும்பிச் சென்று, அவரை ஒரு காளை மாட்டின் முதுகில் கையை வைக்கச்சொல்லி, அவரது கை எத்தனை முடிகளை மறைக்கின்றதோ அதில் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு அவர் உயிர் வாழலாம் என்று கூறுவீராக!” என அனுப்பிவைத்தான். (அவ்வாறே அந்த வானவர் மூசா (அலை) அவர்களிடம் வந்து கூறிய போது) மூசா (அலை) அவர்கள், “இறைவா, அதற்குப் பிறகு?” எனக் கேட்டதும் அல்லாஹ், “பிறகு மரணம் தான்” என்றான். உடனே மூசா (அலை) அவர்கள், “அப்படியானால் இப்பொழுதே (தயார்)” எனக் கூறிவிட்டு, அல்லாஹ் விடம் (பைத்துல் மக்திஸ் எனும்) புனிதத் தலத்திலிருந்து கல்லெறியும் தூரத் திலுள்ள இடத்தில் தமது உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக்கொண்டார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும்போது, “நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்தால், அந்த செம்மணற்குன்றுக்கு அருகில் சாலையோரத்தில் மூசா (அலை) அவர்கள் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்” எனக் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا محمود، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن ابن طاوس، عن ابيه، عن ابي هريرة رضى الله عنه قال " ارسل ملك الموت الى موسى عليهما السلام فلما جاءه صكه فرجع الى ربه فقال ارسلتني الى عبد لا يريد الموت. فرد الله عليه عينه وقال ارجع فقل له يضع يده على متن ثور، فله بكل ما غطت به يده بكل شعرة سنة. قال اى رب، ثم ماذا قال ثم الموت. قال فالان. فسال الله ان يدنيه من الارض المقدسة رمية بحجر ". قال قال رسول الله صلى الله عليه وسلم " فلو كنت ثم لاريتكم قبره الى جانب الطريق عند الكثيب الاحمر
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: இரவில் அடக்கம் செய்யப்பட்ட ஒருவருக்காக நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸா தொழுகை தொழ நாடி) தோழர்களுடன் நின்றார்கள். முதலில் “இ(ந்தக் கப்றுக்குரிய)வர் யார்?” எனக் கேட்டார்கள். “இவர் இன்னார்; நேற்றி ரவுதான் அடக்கம் செய்யப்பட்டார்” என (தோழர்கள்) கூறியதும், அவருக் காக (ஜனாஸா தொழுகை) தொழு தார்கள். அத்தியாயம் :
حدثنا عثمان بن ابي شيبة، حدثنا جرير، عن الشيباني، عن الشعبي، عن ابن عباس رضى الله عنهما قال صلى النبي صلى الله عليه وسلم على رجل بعد ما دفن بليلة قام هو واصحابه، وكان سال عنه فقال " من هذا ". فقالوا فلان، دفن البارحة. فصلوا عليه
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப் பட்டிருந்தபோது, அவர்களின் துணைவி யரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த ‘மாரியா’ எனப்படும் ஒரு கிறித் தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்மு சலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களை யும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது அடக்கத் தலத்தின் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்பி, அதில் அவருடைய உருவங்களைப் பொறித்துவிடுவார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்புகளிலேயே மிக மோசமானவர்கள் இவர்களே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت لما اشتكى النبي صلى الله عليه وسلم ذكرت بعض نسايه كنيسة راينها بارض الحبشة، يقال لها مارية، وكانت ام سلمة وام حبيبة رضى الله عنهما اتتا ارض الحبشة، فذكرتا من حسنها وتصاوير فيها، فرفع راسه فقال " اوليك اذا مات منهم الرجل الصالح بنوا على قبره مسجدا، ثم صوروا فيه تلك الصورة، اوليك شرار الخلق عند الله
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் (உம்மு குல்ஸும்) அடக்கத்தில் கலந்துகொண் டோம். அப்போது அடக்கத் தலத்தின் அருகே அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். “கடந்த இரவு தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளாதவர் எவரும் உங்களில் உள்ளாரா?”என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், “நான் உள்ளேன்” என்றதும், “இந்தக் குழியில் இறங்குவீராக!” என்றார்கள். உடனே அவர் குழியில் இறங்கி அடக்கம் செய்தார். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஃபுலைஹ் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (தாம்பத்திய உறவு என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘முகாரஃபத்’ (யுகாரிஃப்) என்பதற்கு ‘பாவம் செய்தல்’ என்பதே (சொற்)பொருளாகும் என நான் கருதுகிறேன். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இச்சொல்லில் இருந்து பிறந்த) ‘யக்தரிஃபூ’ என்ற (6:113 வசனத்தில் உள்ள இறைச்) சொல்லுக்கு, ‘(தீமையைத்) தேடிக்கொள்ளல்’ என்பது பொருளாகும். அத்தியாயம் :
حدثنا محمد بن سنان، حدثنا فليح بن سليمان، حدثنا هلال بن علي، عن انس رضى الله عنه قال شهدنا بنت رسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم جالس على القبر، فرايت عينيه تدمعان فقال " هل فيكم من احد لم يقارف الليلة ". فقال ابو طلحة انا. قال " فانزل في قبرها ". فنزل في قبرها فقبرها. قال ابن المبارك قال فليح اراه يعني الذنب. قال ابو عبد الله {ليقترفوا} اى ليكتسبوا
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘உஹுத்’ போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடை யில் ‘கஃபன்’ இட்டுவிட்டு, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அந்த ஒருவ ரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைத்தார்கள். பின்னர் “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (இறுதித் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، قال حدثني ابن شهاب، عن عبد الرحمن بن كعب بن مالك، عن جابر بن عبد الله رضى الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتلى احد في ثوب واحد ثم يقول " ايهم اكثر اخذا للقران ". فاذا اشير له الى احدهما قدمه في اللحد وقال " انا شهيد على هولاء يوم القيامة ". وامر بدفنهم في دمايهم، ولم يغسلوا ولم يصل عليهم
உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் (தமது இல்லத்திலிருந்து) புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவிப்பதைப் போன்று ‘உஹுத்’ போர் உயிர்த்தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார் கள். பிறகு சொற்பொழிவுமேடை (மிம் பர்)க்குத் திரும்பி வந்து, “உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். மேலும், எனக்கு ‘பூமியின் கருவூலத் திறவுகோல்கள்’ அல்லது ‘பூமியின் திறவுகோல்கள்’ வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை கற்பிப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. எனினும், நீங்கள் உலகத்திற்காக ஒருவரோடொரு வர் போட்டியிட்டு (மோதி)க்கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என்று சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، حدثني يزيد بن ابي حبيب، عن ابي الخير، عن عقبة بن عامر، ان النبي صلى الله عليه وسلم خرج يوما فصلى على اهل احد صلاته على الميت، ثم انصرف الى المنبر فقال " اني فرط لكم، وانا شهيد عليكم، واني والله لانظر الى حوضي الان، واني اعطيت مفاتيح خزاين الارض او مفاتيح الارض واني والله ما اخاف عليكم ان تشركوا بعدي، ولكن اخاف عليكم ان تنافسوا فيها
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், உஹுத் போரில் (உயிர் நீத்தவர்களில்) இரண்டி ரண்டு நபர்களைச் சேர்த்து (ஒரே கப்றில்) அடக்கம் செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن سليمان، حدثنا الليث، حدثنا ابن شهاب، عن عبد الرحمن بن كعب، ان جابر بن عبد الله رضى الله عنهما اخبره ان النبي صلى الله عليه وسلم كان يجمع بين الرجلين من قتلى احد
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “இவர்களை -உஹுத் போரில் இறந்தவர்களை- அவர்களின் இரத்தத் துடனேயே அடக்குங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; மேலும், அவர்களை நபி (ஸல்) அவர்கள், நீராட்டவில்லை. அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا ليث، عن ابن شهاب، عن عبد الرحمن بن كعب، عن جابر، قال قال النبي صلى الله عليه وسلم " ادفنوهم في دمايهم ". يعني يوم احد ولم يغسلهم
حدثنا ابن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا ليث بن سعد، حدثني ابن شهاب، عن عبد الرحمن بن كعب بن مالك، عن جابر بن عبد الله رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم كان يجمع بين الرجلين من قتلى احد في ثوب واحد ثم يقول " ايهم اكثر اخذا للقران ". فاذا اشير له الى احدهما قدمه في اللحد وقال " انا شهيد على هولاء ". وامر بدفنهم بدمايهم، ولم يصل عليهم ولم يغسلهم. واخبرنا الاوزاعي، عن الزهري، عن جابر بن عبد الله رضى الله عنهما كان رسول الله صلى الله عليه وسلم يقول لقتلى احد " اى هولاء اكثر اخذا للقران ". فاذا اشير له الى رجل قدمه في اللحد قبل صاحبه. وقال جابر فكفن ابي وعمي في نمرة واحدة. وقال سليمان بن كثير حدثني الزهري، حدثنا من، سمع جابرا رضى الله عنه

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: “அல்லாஹ் மக்காவைப் புனிதமாக்கி யுள்ளான். எனக்கு முன்புள்ள யாருக் கும் (இங்கு போர் புரிதல்) அனுமதிக்கப் படவில்லை; எனக்குப் பின்பும் யாருக் கும் அனுமதிக்கப்படமாட்டாது. எனக் குக்கூட பகலில் சற்று நேரம் (மக்கா வெற்றிக்காக) அனுமதிக்கப்பட்டது. எனவே, இனி மக்காவில் உள்ள புற்கள் பிடுங்கப்படக் கூடாது; மரங்கள் வெட்டப்படக் கூடாது; வேட்டைப் பிராணிகள் விரட்டியடிக்கப்படக் கூடாது; அறிவிப்புச் செய்பவர்களைத் தவிர வேறு யாரும் இங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருட்களைப் பொறுக்கக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது (என் தந்தை) அப்பாஸ் (ரலி) அவர்கள், “இத்கிர் என்ற புல்லைத் தவிரவா? அது நம் சவக்குழிகளுக்கும் பொற்கொல்லர்களுக்கும் தேவைப்படு கின்றதே?” என்றதும் நபி (ஸல்) அவர்கள், “இத்கிர் என்ற புல்லைத் தவிர” என்றார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள், “நம் சவக்குழிகளுக்கும் வீடுகளுக்கும் (இத்கிர் புல்லைப்) பயன்படுத்தலாம்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாகத் தெரிவித்துள்ளார்கள். ஸஃபிய்யா பின்த் ஷைபா (ரலி) அவர்களும் இதைப் போன்றே அறிவிக்கிறார்கள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நம் உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் பயன்படுத்தலாம்” என்று கூறியதாக தாவூஸ் (ரஹ்) அவர்கள் மற்றோர் அறிவிப்பில் தெரிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن عبد الله بن حوشب، حدثنا عبد الوهاب، حدثنا خالد، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " حرم الله مكة، فلم تحل لاحد قبلي ولا لاحد بعدي، احلت لي ساعة من نهار، لا يختلى خلاها، ولا يعضد شجرها، ولا ينفر صيدها، ولا تلتقط لقطتها الا لمعرف ". فقال العباس رضى الله عنه الا الاذخر لصاغتنا وقبورنا. فقال " الا الاذخر ". وقال ابو هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم " لقبورنا وبيوتنا ". وقال ابان بن صالح عن الحسن بن مسلم، عن صفية بنت شيبة، سمعت النبي صلى الله عليه وسلم مثله. وقال مجاهد عن طاوس عن ابن عباس رضى الله عنهما لقينهم وبيوتهم
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நயவஞ்சகர்களின் தலைவர்) அப்துல்லாஹ் பின் உபை (மரணித்து) சவக்குழிக்குள் வைக்கப்பட்டபிறகு அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள்; அவரது சடலத்தை வெளியே எடுக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அவரது சடலம் வெளியே எடுக்கப்பட்டது. உடனே அதைத் தம் முழங்கால்கள்மீது வைத்து, அதன்மீது தமது உமிழ்நீரை உமிழ்ந்து, தமது மேலங்கியை அதற்கு அணிவித்தார்கள். (இவ்வாறு நபியவர்கள் செய்ததற்குக் காரணம் என்ன என்பதை) அல்லாஹ்வே நன்கறிவான். (இருந்தாலும், நபி (ஸல்) அவர்களின் தந்தையின் சகோதரர்) அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு (அவர் பத்ரில் போர்க் கைதியாகப் பிடிக்கப்பட்டு ஆடையின்றி இருந்தபோது) அப்துல்லாஹ் பின் உபை ஓர் மேலங்கியை அணிவித்தார் (என்பது காரணமாக இருக்கலாம்). இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஒன்றில் சுஃப்யான் பின் உயைனா, அபூஹாரூன் (ரஹ்) ஆகியோர் கூறியிருப்பதாவது: அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்மீது இரு மேலங்கிகள் இருந்தன. அவர்களிடம் அப்துல்லாஹ் பின் உபையின் (முஸ்லிமான) புதல்வர், “அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மேனி யைத் தழுவியுள்ள உங்களது மேலங்கியை என் தந்தைக்கு அணிவியுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். “அப்துல்லாஹ் பின் உபைக்கு நபி (ஸல்) அவர்கள் தமது மேலங்கியை அணிவித்தது, அவர் (பத்ர் போரின் போது கைதான அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு) உதவியதற்கான பிரதி உபகாரம்தான் என்றே பலரும் கருது கின்றனர் என சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال عمرو سمعت جابر بن عبد الله رضى الله عنهما قال اتى رسول الله صلى الله عليه وسلم عبد الله بن ابى بعد ما ادخل حفرته فامر به فاخرج، فوضعه على ركبتيه، ونفث عليه من ريقه، والبسه قميصه، فالله اعلم، وكان كسا عباسا قميصا. قال سفيان وقال ابو هارون وكان على رسول الله صلى الله عليه وسلم قميصان، فقال له ابن عبد الله يا رسول الله، البس ابي قميصك الذي يلي جلدك. قال سفيان فيرون ان النبي صلى الله عليه وسلم البس عبد الله قميصه مكافاة لما صنع
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நடக்கவிருந்தபோது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து, “நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (நாளைய போரில்) முதலில் நான்தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். எனக்குப்பின் நான் விட்டுச்செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிரவுள்ள மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரிய வராகக் கருதவில்லை. என்மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன் சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்” என்றார்கள். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொரு வரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் என் தந்தை அடக்கத் தலத்தில் இருப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் அடக்கத் தலத்திலிருந்து வெளியில் எடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர்போல -அவரது காதைத் தவிர- உடம்பு அப்படியே இருந்தது. அத்தியாயம் :
حدثنا مسدد، اخبرنا بشر بن المفضل، حدثنا حسين المعلم، عن عطاء، عن جابر رضى الله عنه قال لما حضر احد دعاني ابي من الليل فقال ما اراني الا مقتولا في اول من يقتل من اصحاب النبي صلى الله عليه وسلم، واني لا اترك بعدي اعز على منك، غير نفس رسول الله صلى الله عليه وسلم، فان على دينا فاقض، واستوص باخواتك خيرا. فاصبحنا فكان اول قتيل، ودفن معه اخر في قبر، ثم لم تطب نفسي ان اتركه مع الاخر فاستخرجته بعد ستة اشهر، فاذا هو كيوم وضعته هنية غير اذنه
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: என் தந்தையுடன் இன்னொருவர் அடக்கம் செய்யப்பட்டார்; ஆயினும், எனது மனம் அதை விரும்பவில்லை. எனவே, அவரது உடலை வெளியில் எடுத்து, அதைத் தனி கப்றில் அடக்கம் செய்தேன். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سعيد بن عامر، عن شعبة، عن ابن ابي نجيح، عن عطاء، عن جابر رضى الله عنه قال دفن مع ابي رجل فلم تطب نفسي حتى اخرجته فجعلته في قبر على حدة
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு நபர்களாகச் சேர்த்து, (ஒரே ஆடையில் கஃபன் இட்டுவிட்டு), “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக் காட்டப்பட்ட தும், அந்த ஒருவரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைத்தார்கள். பிறகு “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்துடனேயே அவர் களை அடக்குமாறு கட்டளையிட்டார் கள். அவர்களை நபி (ஸல்) அவர்கள் நீராட்டவில்லை. அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا عبد الله، اخبرنا الليث بن سعد، قال حدثني ابن شهاب، عن عبد الرحمن بن كعب بن مالك، عن جابر بن عبد الله رضى الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم يجمع بين رجلين من قتلى احد ثم يقول " ايهم اكثر اخذا للقران ". فاذا اشير له الى احدهما قدمه في اللحد فقال " انا شهيد على هولاء يوم القيامة ". فامر بدفنهم بدمايهم ولم يغسلهم
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (யூதச் சிறுவன்) இப்னு ஸய்யாதை நோக்கி நபி (ஸல்) அவர்கள் ஒரு குழுவுடன் சென்றபோது, அவர்களுடன் உமர் (ரலி) அவர்களும் இருந்தார்கள். பருவ வயதை நெருங்கிவிட்டிருந்த இப்னு ஸய்யாத் ‘பனூ மஃகாலா’ குலத் தாரின் மேட்டுப் பகுதியில் சிறுவர்களு டன் விளையாடிக்கொண்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் (அவனைக்) கையால் தட்டுகின்ற வரை, (நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் வந்திருப்பதை) அவன் உணரவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள் அவனி டம், “நான்தான் இறைத்தூதர் என நீ உறுதிகூறுகின்றாயா?” எனக் கேட்டார் கள். இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர் களை நோட்டமிட்டுவிட்டு, “நீர் எழுதப் படிக்கத் தெரியாதவர்களின் நபி என நான் உறுதிகூறுகின்றேன்” என்று சொன்னான். பிறகு இப்னு ஸய்யாத் நபி (ஸல்) அவர்களிடம், “நான் அல்லாஹ்வின் தூதர் என நீர் உறுதிகூறுகின்றீரா?” எனக் கேட்டான். நபி (ஸல்) அவர்கள் (எதுவும் கேட்காமல்) அவனை விட்டுவிட்டு, “நான் அல்லாஹ்வையும் அவனு டைய தூதர்களையும் நம்பியுள்ளேன்” எனக் கூறினார்கள். பிறகு “(உன் நிலை பற்றி) நீ என்ன நினைக்கிறாய்?” எனக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸய்யாத், “எனக்கு மெய்யான செய்திகளும் (சில சமயம்) பொய்யான செய்திகளும் உதிக்கின்றன” என்றான். நபி (ஸல்) அவர்கள், “உனக்கு இப்பிரச்சினையில் குழப்பம் ஏற்பட்டுள்ளது” என்று கூறிவிட்டு, “நான் (உனக்காக) ஒன்றை மனதில் மறைத்துவைத்துள்ளேன் (அது யாது)?” எனக் கேட்டார்கள். (அப்போது நபியவர்கள் ‘அத்துகான்’ எனும் (44ஆவது) அத்தியாயத்தின் 10ஆவது வசனத்தை மனதிற்குள் நினைத்துக்கொண்டார்கள்.) அதற்கு இப்னு ஸய்யாத், “அது (‘அத்துகான்’ என்பதை) ‘துக்’ என (அரைகுறையாக)ச் சொன்னான். உடனே நபி (ஸல்) அவர்கள், “தூர விலகிப் போ! நீ உனது எல்லையைத் தாண்டிவிட முடியாது” என்றார்கள்.29 அப்போது உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள்! இவனது கழுத்தை வெட்டிவிடு கிறேன்” என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், “இவன் அவனாக (தஜ்ஜாலாக) இருந்தால் இவனைக் கொல்லும் பொறுப்பு உமக்குக் கொடுக்கப்பட வில்லை; இவன் அவனாக இல்லை யெனில் இவனைக் கொல்வதில் உமக்கு எந்தப் பலனும் இல்லை” எனக் கூறினார்கள். பின்னர் (மற்றொரு சந்தர்ப்பத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருக்கும் பேரீச்சம் தோட்டத்திற்குச் சென்றனர். இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்துவிடும் முன் ஒளிந்திருந்து அவனிடமிருந்து எதை யேனும் செவியேற்க வேண்டும் என நபியவர்கள் திட்டமிட்டார்கள். அங்கு இப்னு ஸய்யாத் ஒரு பூம்பட்டுப் போர்வையைப் போர்த்திக்கொண்டு எதையோ முணுமுணுத்தபடி படுத்திருப்பதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாதின் தாய், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஈச்ச மரங்களிடையே ஒளிந்து ஒளிந்து வருவதைப் பார்த்துவிட்டார். உடனே இப்னு ஸய்யாதிடம், “ஸாஃபியே! -இது அவனுடைய பெயர்- “இதோ, முஹம்மத் (வந்து விட்டார்)” என்று கூறியதும், இப்னு ஸய்யாத் குதித்தெழுந்தான். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண், அவனை(ப் பேச)விட்டி ருந்தால் அவன் (தனது நிலையை) வெளிப்படுத்தியிருப்பான்” எனக் கூறினார்கள். இந்த ஹதீஸ் ஐந்து அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் ஓர் அறிவிப்பில், (‘அவனை விட்டுவிட்டார் கள்’ என்பதைக் குறிக்க ‘ரஃபள’ எனும் சொல்லுக்குப் பதிலாக) ‘ரஃபஸ’ எனும் சொல் இடம்பெற்றுள்ளது. (‘முணுமுணுப்பு’ என்பதைக் குறிக்க சில அறிவிப்புகளில்) ‘ரம்ரமா’ என்றும், ‘ஸம்ஸமா’ என்றும், வேறுசில அறிவிப்புகளில் ‘ரம்ஸா’ என்றும் இடம்பெற்றுள்ளது. அத்தியாயம் :

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்குப் பணி விடை செய்துகொண்டிருந்த ஒரு யூதச் சிறுவர் திடீரென நோயுற்றார். எனவே, அவரை நலம் விசாரிக்க நபி (ஸல்) அவர்கள் அவரிடம் சென்றபோது, அவரது தலைமாட்டில் அமர்ந்து கொண்டு, “இஸ்லாத்தை ஏற்றுக் கொள்” என்றார்கள். உடனே அவர் தம்மருகிலிருந்த தந்தையைப் பார்த்தார். அப்போது அவர், “அபுல்காசிம் (நபி (ஸல்) அவர்களின்) சொல்லுக்குக் கட்டுப்படு!” என்றதும், அவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவரை நரகத்திலிருந்து பாதுகாத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்” எனக் கூறியவாறு அங்கிருந்து வெளியேறி னார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد وهو ابن زيد عن ثابت، عن انس رضى الله عنه قال كان غلام يهودي يخدم النبي صلى الله عليه وسلم فمرض، فاتاه النبي صلى الله عليه وسلم يعوده، فقعد عند راسه فقال له " اسلم ". فنظر الى ابيه وهو عنده فقال له اطع ابا القاسم صلى الله عليه وسلم. فاسلم، فخرج النبي صلى الله عليه وسلم وهو يقول " الحمد لله الذي انقذه من النار
حدثنا عبدان، اخبرنا عبد الله، عن يونس، عن الزهري، قال اخبرني سالم بن عبد الله، ان ابن عمر رضى الله عنهما اخبره ان عمر انطلق مع النبي صلى الله عليه وسلم في رهط قبل ابن صياد، حتى وجدوه يلعب مع الصبيان عند اطم بني مغالة، وقد قارب ابن صياد الحلم فلم يشعر حتى ضرب النبي صلى الله عليه وسلم بيده ثم قال لابن صياد " تشهد اني رسول الله ". فنظر اليه ابن صياد فقال اشهد انك رسول الاميين. فقال ابن صياد للنبي صلى الله عليه وسلم اتشهد اني رسول الله فرفضه وقال امنت بالله وبرسله. فقال له " ماذا ترى ". قال ابن صياد ياتيني صادق وكاذب. فقال النبي صلى الله عليه وسلم " خلط عليك الامر " ثم قال له النبي صلى الله عليه وسلم " اني قد خبات لك خبييا ". فقال ابن صياد هو الدخ. فقال " اخسا، فلن تعدو قدرك ". فقال عمر رضى الله عنه دعني يا رسول الله اضرب عنقه. فقال النبي صلى الله عليه وسلم " ان يكنه فلن تسلط عليه، وان لم يكنه فلا خير لك في قتله ". وقال سالم سمعت ابن عمر رضى الله عنهما يقول انطلق بعد ذلك رسول الله صلى الله عليه وسلم وابى بن كعب الى النخل التي فيها ابن صياد وهو يختل ان يسمع من ابن صياد شييا قبل ان يراه ابن صياد فراه النبي صلى الله عليه وسلم وهو مضطجع، يعني في قطيفة له فيها رمزة او زمرة، فرات ام ابن صياد رسول الله صلى الله عليه وسلم وهو يتقي بجذوع النخل فقالت لابن صياد يا صاف وهو اسم ابن صياد هذا محمد صلى الله عليه وسلم. فثار ابن صياد فقال النبي صلى الله عليه وسلم " لو تركته بين ". وقال شعيب في حديثه فرفصه رمرمة، او زمزمة. وقال اسحاق الكلبي وعقيل رمرمة. وقال معمر رمزة