ஹதீஸ்கள்
#1341
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப் பட்டிருந்தபோது, அவர்களின் துணைவி யரில் ஒருவர் அபிசீனியாவில் தாம் பார்த்த ‘மாரியா’ எனப்படும் ஒரு கிறித் தவ ஆலயத்தைப் பற்றிக் கூறினார். அப்போது (ஏற்கெனவே) அபிசீனியா சென்றிருந்த உம்மு சலமா (ரலி), உம்மு ஹபீபா (ரலி) ஆகிய இருவரும் அதன் அழகையும் அதிலுள்ள ஓவியங்களை யும் பற்றி வர்ணிக்கலாயினர். உடனே தலையை உயர்த்திய நபி (ஸல்) அவர்கள், “அவர்களில் நல்லவர் ஒருவர் இறந்துவிட்டால், அவரது அடக்கத் தலத்தின் மீது வழிபாட்டுத் தலத்தை எழுப்பி, அதில் அவருடைய உருவங்களைப் பொறித்துவிடுவார்கள்; அல்லாஹ்விடத்தில் படைப்புகளிலேயே மிக மோசமானவர்கள் இவர்களே” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن هشام، عن ابيه، عن عايشة رضى الله عنها قالت لما اشتكى النبي صلى الله عليه وسلم ذكرت بعض نسايه كنيسة راينها بارض الحبشة، يقال لها مارية، وكانت ام سلمة وام حبيبة رضى الله عنهما اتتا ارض الحبشة، فذكرتا من حسنها وتصاوير فيها، فرفع راسه فقال " اوليك اذا مات منهم الرجل الصالح بنوا على قبره مسجدا، ثم صوروا فيه تلك الصورة، اوليك شرار الخلق عند الله
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1341
- Book Index
- 96
Grades
- -
