ஹதீஸ்கள்
#1337
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: பள்ளிவாசலைப் பெருக்குபவராக இருந்த கறுப்பு நிற ஓர் ஆணோ பெண்ணோ இறந்துவிட்டார். அவர் இறந்துவிட்ட செய்தி நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் (திடீரென்று) அவர் பற்றி நினைவு வந்ததும் நபி (ஸல்) அவர்கள், “அந்த மனிதர் என்ன ஆனார்?” எனக் கேட்டார்கள். அதற்கு (தோழர்கள்) “அல்லாஹ் வின் தூதரே! அவர் இறந்துவிட்டார்” என்றதும், “எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” எனக் கேட்டார்கள். தோழர் கள், அவரைப் பற்றி தகுதிக் குறைவாகக் கருதி, “அவர் இன்னின்னவாறெல்லாம் இருந்தார்” எனக் கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், “அவரது அடக்கத் தலத்தை (கப்று) எனக்குக் காட்டுங்கள்” என்று கூறி, அங்கு சென்று அவருக்கு (இறுதித் தொழுகை) தொழுதார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن الفضل، حدثنا حماد بن زيد، عن ثابت، عن ابي رافع، عن ابي هريرة رضى الله عنه ان اسود رجلا او امراة كان يقم المسجد فمات، ولم يعلم النبي صلى الله عليه وسلم بموته فذكره ذات يوم فقال " ما فعل ذلك الانسان ". قالوا مات يا رسول الله. قال " افلا اذنتموني ". فقالوا انه كان كذا وكذا قصته. قال فحقروا شانه. قال " فدلوني على قبره ". فاتى قبره فصلى عليه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1337
- Book Index
- 92
Grades
- -
