ஹதீஸ்கள்
#1342
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகளின் (உம்மு குல்ஸும்) அடக்கத்தில் கலந்துகொண் டோம். அப்போது அடக்கத் தலத்தின் அருகே அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். “கடந்த இரவு தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ளாதவர் எவரும் உங்களில் உள்ளாரா?”என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அபூதல்ஹா (ரலி) அவர்கள், “நான் உள்ளேன்” என்றதும், “இந்தக் குழியில் இறங்குவீராக!” என்றார்கள். உடனே அவர் குழியில் இறங்கி அடக்கம் செய்தார். (இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஃபுலைஹ் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (தாம்பத்திய உறவு என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) ‘முகாரஃபத்’ (யுகாரிஃப்) என்பதற்கு ‘பாவம் செய்தல்’ என்பதே (சொற்)பொருளாகும் என நான் கருதுகிறேன். அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்: (இச்சொல்லில் இருந்து பிறந்த) ‘யக்தரிஃபூ’ என்ற (6:113 வசனத்தில் உள்ள இறைச்) சொல்லுக்கு, ‘(தீமையைத்) தேடிக்கொள்ளல்’ என்பது பொருளாகும். அத்தியாயம் :
حدثنا محمد بن سنان، حدثنا فليح بن سليمان، حدثنا هلال بن علي، عن انس رضى الله عنه قال شهدنا بنت رسول الله صلى الله عليه وسلم ورسول الله صلى الله عليه وسلم جالس على القبر، فرايت عينيه تدمعان فقال " هل فيكم من احد لم يقارف الليلة ". فقال ابو طلحة انا. قال " فانزل في قبرها ". فنزل في قبرها فقبرها. قال ابن المبارك قال فليح اراه يعني الذنب. قال ابو عبد الله {ليقترفوا} اى ليكتسبوا
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1342
- Book Index
- 97
Grades
- -
