ஹதீஸ்கள்
#1343
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘உஹுத்’ போரில் கொல்லப்பட்டவர்களில் இரண்டிரண்டு நபர்களை ஒரே ஆடை யில் ‘கஃபன்’ இட்டுவிட்டு, “இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?” எனக் கேட்டார்கள். இருவரில் ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அந்த ஒருவ ரது உடலைக் கப்றின் உட்குழியில் முதலில் வைத்தார்கள். பின்னர் “இவர்களுக்கு மறுமை நாளில் நானே சாட்சியாவேன்” எனக் கூறினார்கள். பின்பு இரத்தத்தோடே அடக்குமாறு பணித்தார்கள். இவர்கள் நீராட்டப்படவோ இவர்களுக்கு (இறுதித் தொழுகை) தொழுவிக்கப்படவோ இல்லை. அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، قال حدثني ابن شهاب، عن عبد الرحمن بن كعب بن مالك، عن جابر بن عبد الله رضى الله عنهما قال كان النبي صلى الله عليه وسلم يجمع بين الرجلين من قتلى احد في ثوب واحد ثم يقول " ايهم اكثر اخذا للقران ". فاذا اشير له الى احدهما قدمه في اللحد وقال " انا شهيد على هولاء يوم القيامة ". وامر بدفنهم في دمايهم، ولم يغسلوا ولم يصل عليهم
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1343
- Book Index
- 98
Grades
- -
