ஹதீஸ்கள்
#1351
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுத் போர் நடக்கவிருந்தபோது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து, “நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (நாளைய போரில்) முதலில் நான்தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகிறேன். எனக்குப்பின் நான் விட்டுச்செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிரவுள்ள மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரிய வராகக் கருதவில்லை. என்மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உன் சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்துகொள்” என்றார்கள். மறுநாள் (போரில்) அவர்தான் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொரு வரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் என் தந்தை அடக்கத் தலத்தில் இருப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் அடக்கத் தலத்திலிருந்து வெளியில் எடுத்தேன். அப்போது அன்றுதான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர்போல -அவரது காதைத் தவிர- உடம்பு அப்படியே இருந்தது. அத்தியாயம் :
حدثنا مسدد، اخبرنا بشر بن المفضل، حدثنا حسين المعلم، عن عطاء، عن جابر رضى الله عنه قال لما حضر احد دعاني ابي من الليل فقال ما اراني الا مقتولا في اول من يقتل من اصحاب النبي صلى الله عليه وسلم، واني لا اترك بعدي اعز على منك، غير نفس رسول الله صلى الله عليه وسلم، فان على دينا فاقض، واستوص باخواتك خيرا. فاصبحنا فكان اول قتيل، ودفن معه اخر في قبر، ثم لم تطب نفسي ان اتركه مع الاخر فاستخرجته بعد ستة اشهر، فاذا هو كيوم وضعته هنية غير اذنه
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1351
- Book Index
- 105
Grades
- -
