ஹதீஸ்கள்
#1339
ஸஹீஹ் அல்-புகாரீ - Funerals (Al-Janaa'iz)
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: உயிர் பறிக்கும் வானவர் ஒருவர் நபி மூசா (அலை) அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் வந்தபோது மூசா (அலை) அவர்கள், (அவரது கண் பிதுங்கும் அளவுக்கு) அவரை அறைந்து விட்டார்கள். உடனே அவர் தம் இறையிடம் திரும்பிச் சென்று, “(இறைவா!) இறக்க விரும்பாத ஓர் அடியாரிடம் நீ என்னை அனுப்பிவிட்டாய்” என்றார். அந்த வானவருக்கு மீண்டும் கண்ணைக் கொடுத்த இறைவன், “நீர் அவரிடம் திரும்பிச் சென்று, அவரை ஒரு காளை மாட்டின் முதுகில் கையை வைக்கச்சொல்லி, அவரது கை எத்தனை முடிகளை மறைக்கின்றதோ அதில் ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு அவர் உயிர் வாழலாம் என்று கூறுவீராக!” என அனுப்பிவைத்தான். (அவ்வாறே அந்த வானவர் மூசா (அலை) அவர்களிடம் வந்து கூறிய போது) மூசா (அலை) அவர்கள், “இறைவா, அதற்குப் பிறகு?” எனக் கேட்டதும் அல்லாஹ், “பிறகு மரணம் தான்” என்றான். உடனே மூசா (அலை) அவர்கள், “அப்படியானால் இப்பொழுதே (தயார்)” எனக் கூறிவிட்டு, அல்லாஹ் விடம் (பைத்துல் மக்திஸ் எனும்) புனிதத் தலத்திலிருந்து கல்லெறியும் தூரத் திலுள்ள இடத்தில் தமது உயிரைக் கைப்பற்றுமாறு வேண்டிக்கொண்டார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும்போது, “நான் மட்டும் இப்போது அங்கு (பைத்துல் மக்திஸில்) இருந்தால், அந்த செம்மணற்குன்றுக்கு அருகில் சாலையோரத்தில் மூசா (அலை) அவர்கள் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்” எனக் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا محمود، حدثنا عبد الرزاق، اخبرنا معمر، عن ابن طاوس، عن ابيه، عن ابي هريرة رضى الله عنه قال " ارسل ملك الموت الى موسى عليهما السلام فلما جاءه صكه فرجع الى ربه فقال ارسلتني الى عبد لا يريد الموت. فرد الله عليه عينه وقال ارجع فقل له يضع يده على متن ثور، فله بكل ما غطت به يده بكل شعرة سنة. قال اى رب، ثم ماذا قال ثم الموت. قال فالان. فسال الله ان يدنيه من الارض المقدسة رمية بحجر ". قال قال رسول الله صلى الله عليه وسلم " فلو كنت ثم لاريتكم قبره الى جانب الطريق عند الكثيب الاحمر
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Funerals (Al-Janaa'iz)
- Hadith Index
- #1339
- Book Index
- 94
Grades
- -
