Loading...
Loading...
நூல்கள்
127 ஹதீஸ்கள்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களிடையே ஒரு காலம் வரும். அப்போது மக்களில் ஒரு குழுவினர் அறப்போருக்குச் செல்வார்கள். அப்போது, (அவர்கள் யார்மீது படை யெடுத்துச் செல்கிறார்களோ) அவர்கள், “உங்களிடையே அல்லாஹ்வின...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரில் சிறந்தவர்கள் என்னுடைய தலைமுறையினரே. பிறகு, (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வரும் தலைமுறையினர் ஆவர். அதற்கு அடுத்து (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வரும் தலைமுற...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களில் சிறந்தவர்கள் என் தலை முறையினர். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். அவர்களுக்குப் பிறகு (சிறந்தவர்கள்) அவர்களையடுத்து வருபவர்கள். பின்னர் ஒரு சமுதாயத்தார்...
பராஉ (ரலி) அவர்கள் கூறிய தாவது: அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிப் (ரலி) அவர்களிட மிருந்து பதின்மூன்று திர்ஹங்கள் கொடுத்து ஓர் ஒட்டகச் சேணத்தை வாங்கினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் (என் தந்தை) ஆஸிபி டம், “(...
அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய தாவது: நபி (ஸல்) அவர்களுடன் நான் (ஸவ்ர்) குகையில் இருந்தபோது அவர்களிடம், “(குகைக்கு மேலிருந்து நம்மைத் தேடிக்கொண்டிருக்கும்) இவர்களில் எவராவது தம் கால்களுக்குக் கீழே (குனிந்து) பார்த்தால் நம்...
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இறப்பதற்குமுன் நோய்வாய்ப் பட்டிருந்தபோது) மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அதில், “அல்லாஹ் ஓர் அடியாருக்கு இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது -...
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் மக்களிடையே சிறந்தவர்கள் இன்னார், இன்னார் என்று மதிப்பிட்டு வந்தோம். (முதலில்) அபூபக்ர் (ரலி) அவர்களைச் சிறந்தவராக மதிப்பிட்டோம். பிறகு உமர் பின்...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இறைவனைத் தவிர வேறு) ஒருவரை நான் உற்ற நண்பராக ஆக்கிக் கொள்ள விரும்பியிருந்தால், அபூபக்ர் அவர்களையே ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், அவர் (மார்க்கத்தில்) என் சகோதரரும், (இன்பத்திலும் துன்பத்த...
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உற்ற நண்பராக எவரையேனும் ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அவரையே (அபூபக்ர் அவர்களையே) ஆக்கிக்கொண்டிருப்பேன். ஆயினும், இஸ்லாத்தின் சகோதரத்துவமே சிறந்ததாகும். இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்க...
அப்துல்லாஹ் பின் அபீமுளைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: கூஃபாவாசிகள்17 இப்னு ஸுபைர் (ரலி) அவர்களிடம் பாட்டனாரின் வாரிசுப் பங்கு குறித்து எழுதிக் கேட்டார்கள். அதற்கு இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள், “நான் இந...
ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி (தேவை ஒன்றை முறையிடு வதற்காக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் அந்தப் பெண்மணியைத் திரும்பவும் வரும்படிக் கட்டளையிட்டார்கள். அந்தப் பெண்மணி, “நான் வ...
ஹம்மாம் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: “(இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் ஐந்து அடிமைகளும் இரண்டு பெண்களும் (அடிமையல்லாத ஆண் களில்) அபூபக்ர் (ரலி) அவர்களும் மட்டுமே இருக்கக் கண...
அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் தமது முழங்கால் வெளியே தெரியுமளவுக்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்தபடி (எங்களை நோக்கி) வந்தார்கள்....
அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் “தாத்துஸ் ஸலாஸில்' எனும் போருக்கான21 படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “மக்களிலேயே உங்களுக்கு மிகப் ப...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: “(இஸ்ரவேலர்களில்) ஓர் ஆட்டிடையர் தம் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது ஓநாய் ஒன்று அவற்றின்மீது பாய்ந்து ஓர் ஆட்டைக் கவ்விக்கொண்டு சென்றது. ஆடு மேய்ப்பவர் அதைத் துரத்திச் சென்றார். ஓநா...
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது (கனவில்) என்னை, வாளி தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிணற்றின் அருகே கண்டேன். அதிலிருந்து அல்லாஹ் நாடிய அளவுக்கு(த் தண்ணீர்) இறைத்தேன். பிறகு அபூகுஹாஃபாவ...
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: “எவன் தன் ஆடையைத் தற்பெருமையின் காரணத்தால் (பூமியில் படும்படி கீழே தொங்கவிட்டு) இழுத்துக்கொண்டு செல்கிறானோ அவனை அல்லாஹ் மறுமை நாளில் ஏறிட்டும் பார்க்கமாட்டான்” என்று அல்லாஹ...
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவர் அல்லாஹ்வின் பாதையில் ஏதேனும் ஒரு ஜோடிப் பொருள்களைச் செலவிட்டாரோ அவர் சொர்க்கத்தின் வாயில்களில் (ஒவ்வொன்றில்) இருந்து “அல்லாஹ்வின் அடியாரே! இது சி...