Loading...

Loading...
நூல்கள்
௩௩ ஹதீஸ்கள்
அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: தபூக் போரின்போது நபி (ஸல்) அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள். அப்போது அவர்கள், ‘‘இறுதி நாள் வருவதற்கு முன்பு (அதற்குரிய) ஆறு அடையாளங்கள் நிகழும். அவற்றை எண்ணிக்கொள்” என்றார்கள்: 1. எனது மரணம். 2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல். 3. ஆடுகளுக்கு ஏற்படும் (ஒரு வகை) நோயைப் போன்ற கொள்ளை நோய் உங்களைப் பீடித்தல். (அதனால் ஏராளமானவர்கள் இறந்துபோய் விடுவார்கள்.) 4. பிறகு செல்வம் பெருகி வழியும். எந்த அளவுக்கென்றால் ஒரு வருக்கு நூறு பொற்காசுகள் கொடுக்கப்பட்ட பின்பும் (அதனை அற்பமாகக் கருதி) அவர் அதிருப்தியுடனிருப்பார். 5. பிறகு தீமையொன்று தோன்றும். அரபுகளின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது. 6. பிறகு உங்களுக்கும் (கிழக்கு ரோமானியரான) மஞ்சள் நிறத்தாருக்கும் இடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும். (அதை மதிக்காமல்) அவர்கள் (உங்களை) மோசடி செய்துவிடுவார்கள். பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே (அணி வகுத்து) அவர்கள் வருவார்கள். ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.31 அத்தியாயம் :
حدثنا الحميدي، حدثنا الوليد بن مسلم، حدثنا عبد الله بن العلاء بن زبر، قال سمعت بسر بن عبيد الله، انه سمع ابا ادريس، قال سمعت عوف بن مالك، قال اتيت النبي صلى الله عليه وسلم في غزوة تبوك، وهو في قبة من ادم فقال " اعدد ستا بين يدى الساعة، موتي، ثم فتح بيت المقدس، ثم موتان ياخذ فيكم كقعاص الغنم، ثم استفاضة المال حتى يعطى الرجل ماية دينار فيظل ساخطا، ثم فتنة لا يبقى بيت من العرب الا دخلته، ثم هدنة تكون بينكم وبين بني الاصفر فيغدرون، فياتونكم تحت ثمانين غاية، تحت كل غاية اثنا عشر الفا
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னை அபூபக்ர் (ரலி) அவர்கள் யியவ்முந் நஹ்ர்’ (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாள்) அன்று மதீனாவில் பொது அறிவிப்பு கள் செய்பவர்களுடன் (அவர்களில் ஒருவனாக) அனுப்பினார்கள்.32 (அவர்கள் செய்யச்சொன்ன பொது அறிவிப்பு இதுதான்:) இந்த ஆண்டிற்குப் பிறகு இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லத்தை (கஅபாவை) நிர்வாணமாக எவரும் தவாஃப் செய்யக் கூடாது. மேலும், யிஹஜ்ஜுல் அக்பர்’ (பெரிய ஹஜ்) உடைய நாள் என்பது இந்த யியவ்முந் நஹ்ர்’ (துல்ஹிஜ்ஜா பத்தாம் நாள்)தான். இது, யிபெரிய ஹஜ்’ என்று அழைக்கப்பட்டதற்குக் காரணம் மக்கள் (உம்ராவை) யிசிறிய ஹஜ்’ என்று அழைத்ததேயாகும். அபூபக்ர் (ரலி) அவர்கள் அந்த ஆண்டில் (இணைவைக்கும்) மக்களிடம் (இஸ்லாமிய அரசு செய்துகொண்ட) ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டதாக அறிவித்துவிட்டார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் யிவிடைபெறும் ஹஜ்’ செய்த ஆண்டில் இணைவைப்பாளர் எவரும் ஹஜ் செய்யவில்லை.33 அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، اخبرنا حميد بن عبد الرحمن، ان ابا هريرة، قال بعثني ابو بكر رضى الله عنه فيمن يوذن يوم النحر بمنى لا يحج بعد العام مشرك، ولا يطوف بالبيت عريان. ويوم الحج الاكبر يوم النحر، وانما قيل الاكبر من اجل قول الناس الحج الاصغر. فنبذ ابو بكر الى الناس في ذلك العام، فلم يحج عام حجة الوداع الذي حج فيه النبي صلى الله عليه وسلم مشرك
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான்கு குணங்கள் யாரிடம் குடி கொண்டுள்ளனவோ அவர் அப்பட்டமான நயவஞ்சகர் ஆவார். பேசும்போது பொய் சொல்வதும், வாக்குறுதியளித்தால் (அதற்கு) மாறு செய்வதும், ஒப்பந்தம் செய்து கொண்டால் (நம்பிக்கை) மோசடி செய்வ தும், வழக்காடினால் அவமதிப்பதும்தான் அவை. யாரிடம் இவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவர் அதை விட்டுவிடும்வரை அவருள் நயவஞ்சகத் தின் ஒரு குணம் குடியிருக்கும். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.34 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا جرير، عن الاعمش، عن عبد الله بن مرة، عن مسروق، عن عبد الله بن عمرو رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم " اربع خلال من كن فيه كان منافقا خالصا من اذا حدث كذب، واذا وعد اخلف، واذا عاهد غدر واذا خاصم فجر، ومن كانت فيه خصلة منهن كانت فيه خصلة من النفاق حتى يدعها
அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து குர்ஆனையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர வேறெதையும் எழுதிவைக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் (இந்த ஏட்டில்), ‘‘மதீனா நகரம் யிஆயிர்’ மலையிலிருந்து இன்ன இடம்வரை புனிதமானதாகும். யார் இங்கு (மார்க்கத்தில்) புதிய (கருத்து அல்லது செயல்பாடு) ஒன்றைத் தோற்றுவிக்கிறாரோ, அல்லது அவருக்கு அடைக்கலம் அளிக்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மற்றும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவரிட மிருந்து கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படாது. முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும். (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற் குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதே யாகும்.) அவர்களில் சாமானியர்கூட அடைக்கலம் தரலாம். ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக் கலத்தை யார் முறிக்கிறாரோ அவர்மீது அல்லாஹ்வுடைய சாபமும் வானவர்களு டைய சாபமும் மற்றும் மக்கள் அனைவரு டைய சாபமும் ஏற்படும். அவரிடமிருந்து கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படாது. விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்(னை விடுதலை செய்த எஜமானர்களான தன்) காப்பாளர்களின் அனுமதியின்றிப் பிறரைத் தன் எஜமானர்களாக ஆக்கிக்கொண்டால், அவன்மீதும் அல்லாஹ்வுடைய சாபமும் வானவர்களுடைய சாபமும் மற்றும் மக்கள் அனை வருடைய சாபமும் ஏற்படும். அவன் செய்த கடமையான வழிபாடு, கூடுதலான வழிபாடு எதுவுமே ஏற்றுக்கொள்ளப்படாது.35 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن الاعمش، عن ابراهيم التيمي، عن ابيه، عن علي رضى الله عنه قال ما كتبنا عن النبي صلى الله عليه وسلم الا القران، وما في هذه الصحيفة، قال النبي صلى الله عليه وسلم " المدينة حرام ما بين عاير الى كذا، فمن احدث حدثا، او اوى محدثا، فعليه لعنة الله والملايكة والناس اجمعين، لا يقبل منه عدل ولا صرف، وذمة المسلمين واحدة يسعى بها ادناهم. فمن اخفر مسلما فعليه لعنة الله والملايكة والناس اجمعين، لا يقبل منه صرف ولا عدل، ومن والى قوما بغير اذن مواليه فعليه لعنة الله والملايكة والناس اجمعين، لا يقبل منه صرف ولا عدل
சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘(இஸ்லாமிய நாட்டில் வாழும் பிற மதத்தாரிடமிருந்து) ஒரேயொரு தங்க நாணயத்தையோ பொற்காசையோகூடப் பெற முடியாத காலம் வரும்போது உங்கள் நிலை எப்படியிருக்கும்?” என்று கேட்டார்கள். அப்போது ‘‘அபூஹுரைராவே! அவ்வாறு (ஒரு காலம்) ஏற்படும் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஹுûரா (ரலி) அவர்கள், ‘‘ஆம். அபூஹுரைராவின் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! இதை நான் உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான நபி (ஸல்) அவர்களிடமிருந்து கேட்டுத்தான் சொல்கிறேன்” என்று பதிலளித்தார்கள். அப்போது மக்கள், ‘‘எதனால் அத்தகைய காலம் ஏற்படும்?” என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் (அடைக் கலப்) பொறுப்பும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (அடைக்கலப்) பொறுப் பும் அவமதிக்கப்படும். (அதாவது முஸ்லிம்கள் ஒப்பந்தப்படி நடக்காமல் நம்பிக்கை மோசடி செய்வார்கள்.) அப்போது அல்லாஹ் பிற மதத்தாரின் உள்ளங்களுக்குத் துணிவைத் தந்து விடுவான். அவர்கள் தங்கள் கரங்களில் இருப்பவற்றைத் தடுத்துக்கொள்வார்கள். (ஜிஸ்யா வரி கட்ட மறுத்துப் போர் புரியவும் துணிந்துவிடுவார்கள்.) அத்தியாயம் :
قال ابو موسى حدثنا هاشم بن القاسم، حدثنا اسحاق بن سعيد، عن ابيه، عن ابي هريرة رضى الله عنه قال كيف انتم اذا لم تجتبوا دينارا ولا درهما فقيل له وكيف ترى ذلك كاينا يا ابا هريرة قال اي والذي نفس ابي هريرة بيده عن قول الصادق المصدوق. قالوا عم ذاك قال تنتهك ذمة الله وذمة رسوله صلى الله عليه وسلم، فيشد الله عز وجل قلوب اهل الذمة، فيمنعون ما في ايديهم
சுலைமான் பின் மஹ்ரான் அல்அஃமஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம், ‘‘ஸிஃப்பீன் போரில் நீங்கள் கலந்துகொண்டீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஆம். (நான் அப்போரில் கலந்துகொண்டேன்.) மேலும், நான் சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டேன்: (நான் இந்தப் போரில் ஈடுபாடு கொள்ளாதது குறித்து என்னைக் குற்றம்சாட்டாதீர்கள்.) உங்கள் கருத்தையே குற்றம்சாட்டுங்கள். அபூஜந்தல் அபயம் தேடிவந்த (ஹுதைபியா உடன்படிக்கையின்) நாளில் நபி (ஸல்) அவர்களின் கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன். (அத்தகைய மன நிலையில் அன்று நான் இருந்தேன்.) (அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக் கொண்டது. எங்களுக்குச் சிரமம்தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை நாங்கள் அடைய (முடக்கப் பட்ட) அந்த வாட்களே வழிவகுத்தன. ஆனால், இது வேறு விஷயம். (முஸ்லிம் களுக்கிடையே மூண்டுவிட்ட இந்தப் போரில் ஈடுபடுவது அழிவைத்தான் தரும்)” என்று சொன்னார்கள்.36 அத்தியாயம் :
حدثنا عبدان، اخبرنا ابو حمزة، قال سمعت الاعمش، قال سالت ابا وايل شهدت صفين قال نعم، فسمعت سهل بن حنيف، يقول اتهموا رايكم، رايتني يوم ابي جندل ولو استطيع ان ارد، امر النبي صلى الله عليه وسلم لرددته، وما وضعنا اسيافنا على عواتقنا لامر يفظعنا الا اسهلن بنا الى امر، نعرفه غير امرنا هذا
அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ஸிஃப்பீன் (போரில்) இருந் தோம். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் எழுந்து நின்று சொன்னார் கள்: மக்களே! (யாரையும் போரில் கலந்து கொள்ளாததற்காகக் குற்றம்சாட்டாதீர்கள்.) உங்களை நீங்களே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். ஏனெனில், நாங்கள் ஹுதைபியா உடன்படிக்கையின்போது நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். போர் புரிவது உசிதமானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் அவர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டோம்.) அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, ‘‘அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (நாம் சத்தியத்தில் இருக்கின்றோம்; அவர்கள் அசத்தியத்தில் இருக்கின்றனர்)” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள், ‘‘போரில் கொலை யுண்டுவிடும்போது நம் வீரர்கள் சொர்க்கத் திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்தி லும் இருப்பார்கள் இல்லையா?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம்” என்று பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், ‘‘அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் திரும்பிவிடுவதா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்கமாட்டான்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களிடம் தாம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்” என்று கூறினார்கள். அப்போது (யிஉமக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துவிட்டோம்’ என்று தொடங்கும்) ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48ஆவது) அத்தியாயம் அருளப்பட்டது. அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமருக்கு இறுதிவரை ஓதிக்காட்டினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! வெற்றியா அது?” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (வெற்றிதான்)” என்று பதிலளித் தார்கள்.37 அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، حدثنا يحيى بن ادم، حدثنا يزيد بن عبد العزيز، عن ابيه، حدثنا حبيب بن ابي ثابت، قال حدثني ابو وايل، قال كنا بصفين فقام سهل بن حنيف فقال ايها الناس اتهموا انفسكم فانا كنا مع رسول الله صلى الله عليه وسلم يوم الحديبية، ولو نرى قتالا لقاتلنا، فجاء عمر بن الخطاب فقال يا رسول الله، السنا على الحق وهم على الباطل فقال " بلى ". فقال اليس قتلانا في الجنة وقتلاهم في النار قال " بلى ". قال فعلى ما نعطي الدنية في ديننا انرجع ولما يحكم الله بيننا وبينهم فقال " ابن الخطاب، اني رسول الله، ولن يضيعني الله ابدا ". فانطلق عمر الى ابي بكر فقال له مثل ما قال للنبي صلى الله عليه وسلم فقال انه رسول الله، ولن يضيعه الله ابدا. فنزلت سورة الفتح، فقراها رسول الله صلى الله عليه وسلم على عمر الى اخرها. فقال عمر يا رسول الله، اوفتح هو قال " نعم
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: குறைஷியர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒப்பந்தம் செய்தி ருந்த (ஹுதைபியா உடன்படிக்கையின்) காலகட்டத்தில் என் தாயார் இணைவைப்ப வராக தன் தந்தையுடன் (என் பாட்ட னாருடன்) என்னிடம் வந்திருந்தார்கள். ஆகவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கோரியவளாக, ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயார் என்னிடம் ஆசையோடு வந்திருக்கிறார். நான் அவரது உறவைப் பேணி நடந்து கொள்ளலாமா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘‘அவரது உறவைப் பேணி நடந்துகொள்” என்று கூறினார்கள்.38 அத்தியாயம் :
حدثنا قتيبة بن سعيد، حدثنا حاتم، عن هشام بن عروة، عن ابيه، عن اسماء ابنة ابي بكر رضى الله عنهما قالت قدمت على امي وهى مشركة في عهد قريش، اذ عاهدوا رسول الله صلى الله عليه وسلم ومدتهم، مع ابيها، فاستفتت رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله، ان امي قدمت على، وهى راغبة، افاصلها قال " نعم، صليها
பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஹுதைபியா ஆண்டில்) நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்கா வினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாட்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் ஆயுதங்களை உறைகளில் இட்டபடிதான் நுழைய வேண்டும் என்றும் அவர்களில் எவரையும் (தமது மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) விதிகளை அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் எழுதலானார்கள். அப்போது அவர்கள், ‘‘இது அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தமாகும்” என்று எழுதினார்கள். மக்காவாசிகள், ‘‘நீங்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்கா வினுள் நுழைய விடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்றுக்கொண்டு) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, யிஇது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் செய்துகொண்ட சமாதான ஒப்பந்தம்’ என எழுதுங்கள்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதுதான். மேலும், அல்லாஹ் வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதரும் ஆவேன்” என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். ஆகவே, அலீ (ரலி) அவர்களிடம், ‘அல்லாஹ் வின் தூதர் எனும் சொல்லை அழித்துவிடுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை ஒருபோதும் அழிக்கமாட்டேன்” என்று மறுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்” என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி (ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாட்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, ‘‘உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும்படி கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள். உடனே, அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஆம் (புறப்பட வேண்டியதுதான்)” என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள்.39 அத்தியாயம் :
حدثنا احمد بن عثمان بن حكيم، حدثنا شريح بن مسلمة، حدثنا ابراهيم بن يوسف بن ابي اسحاق، قال حدثني ابي، عن ابي اسحاق، قال حدثني البراء رضى الله عنه ان النبي صلى الله عليه وسلم لما اراد ان يعتمر ارسل الى اهل مكة يستاذنهم ليدخل مكة، فاشترطوا عليه ان لا يقيم بها الا ثلاث ليال، ولا يدخلها الا بجلبان السلاح، ولا يدعو منهم احدا، قال فاخذ يكتب الشرط بينهم علي بن ابي طالب، فكتب هذا ما قاضى عليه محمد رسول الله. فقالوا لو علمنا انك رسول الله لم نمنعك ولبايعناك، ولكن اكتب هذا ما قاضى عليه محمد بن عبد الله. فقال " انا والله محمد بن عبد الله وانا والله رسول الله ". قال وكان لا يكتب قال فقال لعلي " امح رسول الله ". فقال علي والله لا امحاه ابدا. قال " فارنيه ". قال فاراه اياه، فمحاه النبي صلى الله عليه وسلم بيده، فلما دخل ومضى الايام اتوا عليا فقالوا مر صاحبك فليرتحل. فذكر ذلك لرسول الله صلى الله عليه وسلم فقال " نعم " ثم ارتحل
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒருமுறை (கஅபா அருகே) நபி (ஸல்) அவர்கள் (தொழுது) சிரவணக்கம் (ஸஜ்தா) செய்துகொண்டிருக்க, அவர்களைச் சுற்றிலும் குறைஷி இணைவைப்பாளர்கள் இருந்தனர். அப்போது (குறைஷித் தலைவன்) உக்பா பின் அபீமுஐத், நபி (ஸல்) அவர்களை நோக்கி ஒட்டகத்தின் (கர்ப்பத்திலுள்ள) குட்டியை மூடியிருக்கும் சவ்வைக் கொண்டுவந்து, அதை நபி (ஸல்) அவர்களுடைய முதுகின் மீது எறிந்துவிட்டான். நபி (ஸல்) அவர்கள், ஃபாத்திமா (ரலி) அவர்கள் வரும்வரை (ஸஜ்தாவிலிருந்து) தமது தலையை உயர்த்தவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் வந்தவுடன் (அந்தக் கழிவை) நபி (ஸல்) அவர்களின் முதுகி லிருந்து அகற்றிவிட்டார்கள். மேலும், அதைச் செய்தவனுக்கெதிராகப் பிரார்த் தனை செய்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! குறைஷியரில் முக்கியப் பிரமுகர்களை நீ கவனித்துக்கொள்வாயாக!. இறைவா! அபூஜஹ்ல் பின் ஹிஷாம், உத்பா பின் ரபீஆ, ஷைபா பின் ரபீஆ, உக்பா பின் அபீமுஐத், உமய்யா பின் கலஃப் லிஅல்லது உபை பின் கலஃப்லி ஆகியோரை நீ கவனித்துக்கொள்வாயாக!” என்று பிரார்த்தித்தார்கள். நான் இவர்களையெல்லாம் பத்ர் போரில் கொல்லப்பட்டுக் கிணற்றில் போடப்பட்டிருக்கக் கண்டேன்; உமய்யா வைத் தவிர லிஅல்லது உபையைத் தவிர. ஏனெனில், அவர் பருமனான மனிதனாக இருந்தார்லி அவரை அவர்கள் (முஸ்லிம் வீரர்கள்) இழுத்துச் சென்றபோது அவர் கிணற்றில் போடப்படுவதற்கு முன்பே அவருடைய மூட்டுகள் துண்டாகி (தனித் தனியாகக் கழன்று)விட்டன.41 அத்தியாயம் :
حدثنا عبدان بن عثمان، قال اخبرني ابي، عن شعبة، عن ابي اسحاق، عن عمرو بن ميمون، عن عبد الله رضى الله عنه قال بينا رسول الله صلى الله عليه وسلم ساجد وحوله ناس من قريش من المشركين اذ جاء عقبة بن ابي معيط بسلى جزور، فقذفه على ظهر النبي صلى الله عليه وسلم فلم يرفع راسه حتى جاءت فاطمة عليها السلام فاخذت من ظهره، ودعت على من صنع ذلك، فقال النبي صلى الله عليه وسلم " اللهم عليك الملا من قريش، اللهم عليك ابا جهل بن هشام، وعتبة بن ربيعة، وشيبة بن ربيعة، وعقبة بن ابي معيط، وامية بن خلف او ابى بن خلف ". فلقد رايتهم قتلوا يوم بدر، فالقوا في بير، غير امية او ابى، فانه كان رجلا ضخما، فلما جروه تقطعت اوصاله قبل ان يلقى في البير
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று உண்டு. இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் அறிவிக் கின்றனர். அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘நடப்படு கின்ற கொடி ஒன்று உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். மற்றொருவர், ‘‘அது மறுமை நாளில் காட்டப்படும். அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படு வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن سليمان الاعمش، عن ابي وايل، عن عبد الله.وعن ثابت، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " لكل غادر لواء يوم القيامة قال احدهما ينصب وقال الاخر يرى يوم القيامة يعرف به
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் மறுமை நாளில் (அடையாளக்) கொடி ஒன்று உண்டு. இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அனஸ் (ரலி) ஆகியோர் அறிவிக் கின்றனர். அறிவிப்பாளர்களில் ஒருவர், ‘‘நடப்படு கின்ற கொடி ஒன்று உண்டு” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். மற்றொருவர், ‘‘அது மறுமை நாளில் காட்டப்படும். அதைக் கொண்டு அந்த மோசடிக்காரன் அடையாளம் காணப்படு வான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். அத்தியாயம் :
حدثنا ابو الوليد، حدثنا شعبة، عن سليمان الاعمش، عن ابي وايل، عن عبد الله.وعن ثابت، عن انس، عن النبي صلى الله عليه وسلم قال " لكل غادر لواء يوم القيامة قال احدهما ينصب وقال الاخر يرى يوم القيامة يعرف به
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: மோசடி செய்பவன் ஒவ்வொரு வனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்ச மிட்டு)க்(காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும். இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறர்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد، عن ايوب، عن نافع، عن ابن عمر رضى الله عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم يقول " لكل غادر لواء ينصب لغدرته
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, ‘‘இனி (மக்கா விலிருந்து) புலம்பெயர்தல் (ஹிஜ்ரத்) என்பது கிடையாது. ஆயினும், அறப்போர் புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் கொள்வதும்தான் உள்ளது. நீங்கள் போருக்குப் புறப்படும்படி அழைக்கப்பட்டால் போருக்குச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். மேலும், மக்கா வெற்றியின்போது, ‘‘(மக்களே!) வானங்களையும் பூமியையும் படைத்த நாள் முதலாய் இந்த நகரத்தை அல்லாஹ் புனிதமாக்கியுள்ளான். அல்லாஹ் புனிதமாக்கிய காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமான தாகவே இருக்கும். எனக்கு முன்னர் வாழ்ந்த யாருக்கும் இங்கு போர் புரிய அனுமதி தரப்படவில்லை. எனக்கும்கூட (மக்கா வெற்றியின்போது) பகலின் சிறிது நேரத்தில் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி வழங்கப்பட்டது. அல்லாஹ் இந்த நகரத்தைப் புனிதப் படுத்தியுள்ள காரணத்தால் இது மறுமை நாள்வரை புனிதமானதாகவே திகழும். அதன் முட்கள் பிடுங்கப்படக் கூடாது. அதன் வேட்டைப் பிராணியை விரட்டக் கூடாது. அங்கு கீழே விழுந்து கிடக்கும் பொருளை, அதை அறிவிப்புச் செய்பவர் தவிர வேறெவரும் எடுக்கக் கூடாது. அங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக் கூடாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதரே! ‘இத்கிர்’ புல்லைத் தவிரவா? ஏனெனில், அது மக்களின் வீடுகளுக்கும் அவர்களின் உலோகத் தொழிலாளர்களுக்கும் பயன்படுகிறதே!” என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(ஆம்) இத்கிரைத் தவிர” என்று பதிலளித்தார்கள்.42 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا جرير، عن منصور، عن مجاهد، عن طاوس، عن ابن عباس رضى الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم يوم فتح مكة " لا هجرة ولكن جهاد ونية، واذا استنفرتم فانفروا ". وقال يوم فتح مكة " ان هذا البلد حرمه الله يوم خلق السموات والارض، فهو حرام بحرمة الله الى يوم القيامة، وانه لم يحل القتال فيه لاحد قبلي، ولم يحل لي الا ساعة من نهار، فهو حرام بحرمة الله الى يوم القيامة، لا يعضد شوكه، ولا ينفر صيده، ولا يلتقط لقطته الا من عرفها، ولا يختلى خلاه ". فقال العباس يا رسول الله الا الاذخر، فانه لقينهم ولبيوتهم. قال " الا الاذخر