Loading...

Loading...
நூல்கள்
௩௩ ஹதீஸ்கள்
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال سمعت عمرا، قال كنت جالسا مع جابر بن زيد وعمرو بن اوس، فحدثهما بجالة، سنة سبعين عام حج مصعب بن الزبير باهل البصرة عند درج زمزم قال كنت كاتبا لجزء بن معاوية عم الاحنف، فاتانا كتاب عمر بن الخطاب قبل موته بسنة فرقوا بين كل ذي محرم من المجوس. ولم يكن عمر اخذ الجزية من المجوس. حتى شهد عبد الرحمن بن عوف ان رسول الله صلى الله عليه وسلم اخذها من مجوس هجر
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، قال سمعت عمرا، قال كنت جالسا مع جابر بن زيد وعمرو بن اوس، فحدثهما بجالة، سنة سبعين عام حج مصعب بن الزبير باهل البصرة عند درج زمزم قال كنت كاتبا لجزء بن معاوية عم الاحنف، فاتانا كتاب عمر بن الخطاب قبل موته بسنة فرقوا بين كل ذي محرم من المجوس. ولم يكن عمر اخذ الجزية من المجوس. حتى شهد عبد الرحمن بن عوف ان رسول الله صلى الله عليه وسلم اخذها من مجوس هجر
மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது: யிபனூ ஆமிர் பின் லுஅய்’ குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் பத்ர் போரில் கலந்து கொண்டவருமான அம்ர் பின் அவ்ஃப் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை பஹ்ரைனிலிருந்து யிஜிஸ்யா’ வரியை வசூலித்து வரும்படி அனுப்பி னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அக்னி ஆராதனையாளர்களான) பஹ்ரைன்வாசிகளுடன் சமாதான ஒப்பந் தம் செய்துகொண்டு அவர்களுக்கு அலா பின் அல்ஹள்ரமீ (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்திருந்தார்கள்.4 அபூஉபைதா (ரலி) அவர்கள் பஹ்ரை னிலிருந்து நிதியுடன் வந்தார்கள். அபூ உபைதா (ரலி) அவர்கள் வந்திருப்பதைக் கேள்விப்பட்டு அன்சாரிகள் நபி (ஸல்) அவர்களிடம் செல்ல, அது ஃபஜ்ர் தொழுகையின் நேரமாக அமைந்துவிட்டது. நபி (ஸல்) அவர்கள் மக்களுடன் தொழுது முடித்துத் திரும்ப, அன்சாரிகள் நபியவர் களிடம் சைகையால் கேட்டார்கள். (ஆர்வத்துடனிருந்த) அவர்களைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துவிட்டு, ‘‘அபூஉபைதா ஏதோ கொண்டுவந்திருக்கிறார் என நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் என நான் நினைக்கிறேன்” என்று கூற, அன்சாரிகள், ‘‘ஆம், அல்லாஹ்வின் தூதரே!” என்று பதிலளித்தார்கள். ‘‘ஆகவே, ஒரு மகிழ்ச்சியான செய்தி! உங்களுக்கு மகிழ்வைத் தரும் நிகழ்ச்சி நடக்குமென்று நம்புங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டுவிடும் என்று நான் அஞ்சவில்லை. ஆயினும், உங்களுக்கு முன்னிருந்தவர் களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போன்று உங்களுக் கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டு, அவர்கள் அதற்காகப் போட்டியிட்டதைப் போன்று நீங்களும் போட்டியிட, அவர்களை அது அழித்துவிட்டதைப் போன்று உங்களையும் அது அழித்து விடுமோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، قال حدثني عروة بن الزبير، عن المسور بن مخرمة، انه اخبره ان عمرو بن عوف الانصاري وهو حليف لبني عامر بن لوى وكان شهد بدرا اخبره ان رسول الله صلى الله عليه وسلم بعث ابا عبيدة بن الجراح الى البحرين ياتي بجزيتها، وكان رسول الله صلى الله عليه وسلم هو صالح اهل البحرين وامر عليهم العلاء بن الحضرمي، فقدم ابو عبيدة بمال من البحرين، فسمعت الانصار بقدوم ابي عبيدة فوافت صلاة الصبح مع النبي صلى الله عليه وسلم، فلما صلى بهم الفجر انصرف، فتعرضوا له، فتبسم رسول الله صلى الله عليه وسلم حين راهم وقال " اظنكم قد سمعتم ان ابا عبيدة قد جاء بشىء ". قالوا اجل يا رسول الله. قال " فابشروا واملوا ما يسركم، فوالله لا الفقر اخشى عليكم، ولكن اخشى عليكم ان تبسط عليكم الدنيا كما بسطت على من كان قبلكم، فتنافسوها كما تنافسوها وتهلككم كما اهلكتهم
حدثنا الفضل بن يعقوب، حدثنا عبد الله بن جعفر الرقي، حدثنا المعتمر بن سليمان، حدثنا سعيد بن عبيد الله الثقفي، حدثنا بكر بن عبد الله المزني، وزياد بن جبير، عن جبير بن حية، قال بعث عمر الناس في افناء الامصار يقاتلون المشركين، فاسلم الهرمزان فقال اني مستشيرك في مغازي هذه. قال نعم، مثلها ومثل من فيها من الناس من عدو المسلمين مثل طاير له راس وله جناحان وله رجلان، فان كسر احد الجناحين نهضت الرجلان بجناح والراس، فان كسر الجناح الاخر نهضت الرجلان والراس، وان شدخ الراس ذهبت الرجلان والجناحان والراس، فالراس كسرى، والجناح قيصر، والجناح الاخر فارس، فمر المسلمين فلينفروا الى كسرى. وقال بكر وزياد جميعا عن جبير بن حية قال فندبنا عمر واستعمل علينا النعمان بن مقرن، حتى اذا كنا بارض العدو، وخرج علينا عامل كسرى في اربعين الفا، فقام ترجمان فقال ليكلمني رجل منكم. فقال المغيرة سل عما شيت. قال ما انتم قال نحن اناس من العرب كنا في شقاء شديد وبلاء شديد، نمص الجلد والنوى من الجوع، ونلبس الوبر والشعر، ونعبد الشجر والحجر، فبينا نحن كذلك، اذ بعث رب السموات ورب الارضين تعالى ذكره وجلت عظمته الينا نبيا من انفسنا، نعرف اباه وامه، فامرنا نبينا رسول ربنا صلى الله عليه وسلم ان نقاتلكم حتى تعبدوا الله وحده او تودوا الجزية، واخبرنا نبينا صلى الله عليه وسلم عن رسالة ربنا انه من قتل منا صار الى الجنة في نعيم لم ير مثلها قط، ومن بقي منا ملك رقابكم. فقال النعمان ربما اشهدك الله مثلها مع النبي صلى الله عليه وسلم فلم يندمك ولم يخزك، ولكني شهدت القتال مع رسول الله صلى الله عليه وسلم كان اذا لم يقاتل في اول النهار انتظر حتى تهب الارواح وتحضر الصلوات
حدثنا الفضل بن يعقوب، حدثنا عبد الله بن جعفر الرقي، حدثنا المعتمر بن سليمان، حدثنا سعيد بن عبيد الله الثقفي، حدثنا بكر بن عبد الله المزني، وزياد بن جبير، عن جبير بن حية، قال بعث عمر الناس في افناء الامصار يقاتلون المشركين، فاسلم الهرمزان فقال اني مستشيرك في مغازي هذه. قال نعم، مثلها ومثل من فيها من الناس من عدو المسلمين مثل طاير له راس وله جناحان وله رجلان، فان كسر احد الجناحين نهضت الرجلان بجناح والراس، فان كسر الجناح الاخر نهضت الرجلان والراس، وان شدخ الراس ذهبت الرجلان والجناحان والراس، فالراس كسرى، والجناح قيصر، والجناح الاخر فارس، فمر المسلمين فلينفروا الى كسرى. وقال بكر وزياد جميعا عن جبير بن حية قال فندبنا عمر واستعمل علينا النعمان بن مقرن، حتى اذا كنا بارض العدو، وخرج علينا عامل كسرى في اربعين الفا، فقام ترجمان فقال ليكلمني رجل منكم. فقال المغيرة سل عما شيت. قال ما انتم قال نحن اناس من العرب كنا في شقاء شديد وبلاء شديد، نمص الجلد والنوى من الجوع، ونلبس الوبر والشعر، ونعبد الشجر والحجر، فبينا نحن كذلك، اذ بعث رب السموات ورب الارضين تعالى ذكره وجلت عظمته الينا نبيا من انفسنا، نعرف اباه وامه، فامرنا نبينا رسول ربنا صلى الله عليه وسلم ان نقاتلكم حتى تعبدوا الله وحده او تودوا الجزية، واخبرنا نبينا صلى الله عليه وسلم عن رسالة ربنا انه من قتل منا صار الى الجنة في نعيم لم ير مثلها قط، ومن بقي منا ملك رقابكم. فقال النعمان ربما اشهدك الله مثلها مع النبي صلى الله عليه وسلم فلم يندمك ولم يخزك، ولكني شهدت القتال مع رسول الله صلى الله عليه وسلم كان اذا لم يقاتل في اول النهار انتظر حتى تهب الارواح وتحضر الصلوات
அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்துகொண்டோம். ‘அய்லா’வின் அரசர் நபி (ஸல்) அவர்களுக்கு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதை ஒன்றை அன்பளிப்புச் செய்தார்.7 அவருக்கு நபி (ஸல்) அவர்கள் சால்வையொன்றை (அனுப்பி) அணிவித்தார்கள். மேலும், அவர்கள் தமது ஊரிலேயே (பாதுகாப்போடு) வாழலாம் என மன்னருக்கு (பதில் கடிதம்) எழுதினார்கள்.8 அத்தியாயம் :
حدثنا سهل بن بكار، حدثنا وهيب، عن عمرو بن يحيى، عن عباس الساعدي، عن ابي حميد الساعدي، قال غزونا مع النبي صلى الله عليه وسلم تبوك، واهدى ملك ايلة للنبي صلى الله عليه وسلم بغلة بيضاء، وكساه بردا، وكتب له ببحرهم
ஜுவைரிய்யா பின் குதாமா அத் தமீமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் உமர் பின் அல் கத்தாப் (ரலி) அவர்களிடம், ‘‘எங்களுக்கு அறிவுரை கூறுங்கள், இறைநம்பிக்கை யாளர்களின் தலைவரே!” என்று கேட் டோம். அப்போது உமர் (ரலி) அவர்கள், ‘‘(இஸ்லாமிய அரசின் கீழுள்ள முஸ்லிமல்லாதவர்களைக் காக்கும்) அல்லாஹ்வின் பொறுப்பை நிறைவேற்றும்படி உங்களுக்கு நான் அறிவுரை கூறுகின்றேன். ஏனெனில், அது உங்கள் நபியின் பொறுப்பும் உங்கள் குடும்பத்தாரின் வாழ்வாதாரமும் ஆகும்” என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا ادم بن ابي اياس، حدثنا شعبة، حدثنا ابو جمرة، قال سمعت جويرية بن قدامة التميمي، قال سمعت عمر بن الخطاب رضى الله عنه قلنا اوصنا يا امير المومنين. قال اوصيكم بذمة الله، فانه ذمة نبيكم، ورزق عيالكم
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளை, அவர்களுக்கு பஹ்ரைனின் நிலங்களை வருவாய் மானியமாக எழுதித் தருவதற்காக அழைத்தார்கள். அன்சாரிகள், ‘‘அல்லாஹ் வின் மீதாணையாக! எங்கள் குறைஷி சகோதரர்களுக்கும் இதே போன்று எழுதித்தரும்வரை நாங்கள் (இவற்றை) ஏற்றுக்கொள்ளமாட்டோம்” என்று கூறி விட்டார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அது குறைஷியருக்குக் கிடைக்கும்; அல்லாஹ் அதை விரும்பும்பட்சத்தில்” என்று கூறினார்கள். குறைஷியருக்கும் எழுதித்தரும்படி அன்சாரிகள் (தொடர்ந்து) வற்புறுத்திக் கூறினார்கள். அப்போது, நபி (ஸல்) அவர்கள், ‘‘(அன்சாரிகளே!) எனக்குப்பின் (சிறிது காலத்திற்குள்ளாகவே) உங்களைவிடப் பிறருக்கு (ஆட்சியதிகாரத்தில்) முன்னு ரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆகவே, (மறுமையில், எனக்குச் சொந்த மான) தடாகத்தின் அருகே என்னைச் சந்திக்கும் (காலம்)வரை பொறுமையைக் கைக்கொள்ளுங்கள்” என்று சொன்னார் கள்.10 அத்தியாயம் :
حدثنا احمد بن يونس، حدثنا زهير، عن يحيى بن سعيد، قال سمعت انسا رضى الله عنه قال دعا النبي صلى الله عليه وسلم الانصار ليكتب لهم بالبحرين فقالوا لا والله حتى تكتب لاخواننا من قريش بمثلها. فقال ذاك لهم ما شاء الله على ذلك يقولون له قال " فانكم سترون بعدي اثرة، فاصبروا حتى تلقوني على الحوض
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை), ‘‘நம்மிடம் பஹ்ரைனின் நிதி வந்தால் உமக்கு நான் இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்” என்று (மூன்று முறை) என்னிடம் சொல்லியிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் பஹ்ரைனின் நிதி வர, அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவருக்காவது ஏதேனும் வாக்களித்திருந்(து அதை நிறைவேற்றும் முன்பாக அவர்கள் இறந்து விட்டிருந்)தால் அவர் என்னிடம் வரட்டும்” என்று கூறினார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிநம்மிடம் பஹ்ரைனின் செல்வம் வந்தால் உமக்கு இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள் என்னிடம், ‘‘அதை அள்ளிப் போட்டுக்கொள்வீராக” என்று சொன்னார்கள். நான் அதை நிறைவாக அள்ளிப் போட்டுக்கொண்டேன். அவர்கள் என்னிடம், ‘‘அதை எண்ணிக் கொள்வீராக” என்று சொன்னார்கள். நான் அதை எண்ணிப்பார்த்தேன். அது ஐநூறு இருந்தது. ஆகவே, அவர்கள் எனக்கு (மொத்தம்) ஆயிரத்து ஐநூறு கொடுத் தார்கள்.11 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا اسماعيل بن ابراهيم، قال اخبرني روح بن القاسم، عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله رضى الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم قال لي " لو قد جاءنا مال البحرين قد اعطيتك هكذا وهكذا وهكذا ". فلما قبض رسول الله صلى الله عليه وسلم وجاء مال البحرين قال ابو بكر من كانت له عند رسول الله صلى الله عليه وسلم عدة فلياتني. فاتيته فقلت ان رسول الله صلى الله عليه وسلم قد كان قال لي " لو قد جاءنا مال البحرين لاعطيتك هكذا وهكذا وهكذا ". فقال لي احثه. فحثوت حثية فقال لي عدها. فعددتها فاذا هي خمسماية، فاعطاني الفا وخمسماية. وقال ابراهيم بن طهمان عن عبد العزيز بن صهيب، عن انس، اتي النبي صلى الله عليه وسلم بمال من البحرين فقال " انثروه في المسجد " فكان اكثر مال اتي به رسول الله صلى الله عليه وسلم اذ جاءه العباس فقال يا رسول الله، اعطني اني فاديت نفسي وفاديت عقيلا. قال " خذ ". فحثا في ثوبه، ثم ذهب يقله، فلم يستطع. فقال امر بعضهم يرفعه الى. قال " لا ". قال فارفعه انت على. قال " لا ". فنثر منه، ثم ذهب يقله فلم يرفعه. فقال امر بعضهم يرفعه على. قال " لا ". قال فارفعه انت على. قال " لا ". فنثر ثم احتمله على كاهله ثم انطلق، فما زال يتبعه بصره حتى خفي علينا عجبا من حرصه، فما قام رسول الله صلى الله عليه وسلم وثم منها درهم
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை), ‘‘நம்மிடம் பஹ்ரைனின் நிதி வந்தால் உமக்கு நான் இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்” என்று (மூன்று முறை) என்னிடம் சொல்லியிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபின் பஹ்ரைனின் நிதி வர, அபூபக்ர் (ரலி) அவர்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவருக்காவது ஏதேனும் வாக்களித்திருந்(து அதை நிறைவேற்றும் முன்பாக அவர்கள் இறந்து விட்டிருந்)தால் அவர் என்னிடம் வரட்டும்” என்று கூறினார்கள். உடனே நான் அவர்களிடம் சென்று, ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யிநம்மிடம் பஹ்ரைனின் செல்வம் வந்தால் உமக்கு இப்படி, இப்படி, இப்படி (அள்ளிக்) கொடுப்பேன்’ என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள்” என்று கூறினேன். அப்போது அவர்கள் என்னிடம், ‘‘அதை அள்ளிப் போட்டுக்கொள்வீராக” என்று சொன்னார்கள். நான் அதை நிறைவாக அள்ளிப் போட்டுக்கொண்டேன். அவர்கள் என்னிடம், ‘‘அதை எண்ணிக் கொள்வீராக” என்று சொன்னார்கள். நான் அதை எண்ணிப்பார்த்தேன். அது ஐநூறு இருந்தது. ஆகவே, அவர்கள் எனக்கு (மொத்தம்) ஆயிரத்து ஐநூறு கொடுத் தார்கள்.11 அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا اسماعيل بن ابراهيم، قال اخبرني روح بن القاسم، عن محمد بن المنكدر، عن جابر بن عبد الله رضى الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم قال لي " لو قد جاءنا مال البحرين قد اعطيتك هكذا وهكذا وهكذا ". فلما قبض رسول الله صلى الله عليه وسلم وجاء مال البحرين قال ابو بكر من كانت له عند رسول الله صلى الله عليه وسلم عدة فلياتني. فاتيته فقلت ان رسول الله صلى الله عليه وسلم قد كان قال لي " لو قد جاءنا مال البحرين لاعطيتك هكذا وهكذا وهكذا ". فقال لي احثه. فحثوت حثية فقال لي عدها. فعددتها فاذا هي خمسماية، فاعطاني الفا وخمسماية. وقال ابراهيم بن طهمان عن عبد العزيز بن صهيب، عن انس، اتي النبي صلى الله عليه وسلم بمال من البحرين فقال " انثروه في المسجد " فكان اكثر مال اتي به رسول الله صلى الله عليه وسلم اذ جاءه العباس فقال يا رسول الله، اعطني اني فاديت نفسي وفاديت عقيلا. قال " خذ ". فحثا في ثوبه، ثم ذهب يقله، فلم يستطع. فقال امر بعضهم يرفعه الى. قال " لا ". قال فارفعه انت على. قال " لا ". فنثر منه، ثم ذهب يقله فلم يرفعه. فقال امر بعضهم يرفعه على. قال " لا ". قال فارفعه انت على. قال " لا ". فنثر ثم احتمله على كاهله ثم انطلق، فما زال يتبعه بصره حتى خفي علينا عجبا من حرصه، فما قام رسول الله صلى الله عليه وسلم وثم منها درهم
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாத) ஓர் ஒப்பந்தப் பிரஜையைக் கொல்பவன் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகரமாட்டான். அதன் வாடையோ நாற்பதாண்டு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும். இதை அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا قيس بن حفص، حدثنا عبد الواحد، حدثنا الحسن بن عمرو، حدثنا مجاهد، عن عبد الله بن عمرو رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " من قتل معاهدا لم يرح رايحة الجنة، وان ريحها توجد من مسيرة اربعين عاما
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் பள்ளிவாசலில் இருந்தபோது நபி (ஸல்) அவர்கள் (தமது அறை’லிருந்து) வெளியே வந்து, ‘‘யூதர்களை நோக்கி நடங்கள்” என்று கூறினார்கள். உடனே நாங்கள் புறப்பட்டுச் சென்று யிபைத்துல் மித்ராஸ்’ எனுமிடத்தை அடைந்தோம்.15 அப்போது நபியவர்கள், இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்; பாதுகாப்புப் பெறுவீர்கள். மேலும், பூமி அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்துகொள்ளுங்கள். நான் உங்களை இந்தப் பூமியிலிருந்து நாடு கடத்திட விரும்புகிறேன். உங்களில் ஒருவருக்கு, (கையில் எடுத்துச் செல்ல முடியாத) அவரது செல்வத்திற்குப் பகரமாக ஏதேனும் கிடைத்தால் அதை அவர் விற்றுவிடட்டும். இல்லையெனில், பூமியானது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உரியது என்பதை அறிந்து கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.16 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، قال حدثني سعيد المقبري، عن ابيه، عن ابي هريرة رضى الله عنه قال بينما نحن في المسجد خرج النبي صلى الله عليه وسلم فقال " انطلقوا الى يهود ". فخرجنا حتى جينا بيت المدراس فقال " اسلموا تسلموا، واعلموا ان الارض لله ورسوله، واني اريد ان اجليكم من هذه الارض، فمن يجد منكم بماله شييا فليبعه، والا فاعلموا ان الارض لله ورسوله
சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ‘‘(அந்த) வியாழக்கிழமை! எப்படிப்பட்ட வியாழக்கிழமை (தெரியுமா)?” என்று சொல்லிவிட்டு சிறு சரளைக் கற்களை அவர்களின் கண்ணீர் நனைத்துவிடும் அளவுக்கு அழுதார்கள். நான், ‘‘இப்னு அப் பாஸ் (ரலி) அவர்களே! வியாழக்கிழமை (அப்படி) என்ன (நடந்தது)?” என்று கேட்டேன். அவர்கள், ‘‘(அன்றுதான்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை கடுமையானது. அப்போது அவர்கள், ‘‘என்னிடம் தோள்பட்டை எலும்பு ஒன்றைக் கொண்டுவாருங்கள். உங்க ளுக்கு ஒரு மடலை (இறுதியுபதேசத்தை) நான் எழுதுகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவறமாட்டீர்கள்” என்று கூறினார்கள். மக்கள் (கருத்து பேதம் கொண்டு) சச்சரவிட்டுக்கொண்டார்கள்.17 ஆனால், ஓர் இறைத்தூதர் அருகில் சச்சரவிட்டுக்கொள்ளல் தகாத செயலாகும். மக்கள், ‘‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத்தில் பேசுகிறார்களா? அவர் களிடமே (விளக்கம்) கேளுங்கள்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘என்னை விட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியைவிட நான் இப்போதுள்ள இந்த (இறை நினைவில் லயித்திருக்கும்) நிலையே சிறந்தது” என்று கூறிவிட்டு மூன்று விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்: (அந்த மூன்று விஷயங்களாவன:) இணைவைப்பாளர்களை அரபு தீப கற்பத்திலிருந்து வெளியேற்றிவிடுங்கள். நான் (வெளிநாட்டிலிருந்து வரும்) தூதுக் குழுக்களுக்குப் பரிசுகள் வழங்கி வந்ததைப் போன்றே நீங்களும் பரிசுகளை வழங்கிவாருங்கள்.18 (அறிவிப்பாளர்தொடர்ந்து கூறுகிறார்:) மூன்றாவது கட்டளை ஒன்று, நபி (ஸல்) அவர்கள் சொல்லாமல் மௌனமாக இருந்துவிட்டிருக்க வேண்டும்; அல்லது அதை அவர்கள் கூறி (இந்நிகழ்ச்சியை எனக்கு அறிவித்தவரும் கூறி) நான் அதை மறந்துவிட்டிருக்க வேண்டும். (எப்படியாயினும், மூன்றாவதும்) ஒரு நல்ல விஷயம் தான். சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், ‘‘இப்படிச் சொன்ன அறிவிப்பாளர், சுலைமான் பின் அபில்முஸ்லிம் அல் அஹ்வல் (ரஹ்) அவர்கள்தான்” என்று கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، حدثنا ابن عيينة، عن سليمان الاحول، سمع سعيد بن جبير، سمع ابن عباس رضى الله عنهما يقول يوم الخميس، وما يوم الخميس ثم بكى حتى بل دمعه الحصى. قلت يا ابا عباس، ما يوم الخميس قال اشتد برسول الله صلى الله عليه وسلم وجعه فقال " ايتوني بكتف اكتب لكم كتابا لا تضلوا بعده ابدا ". فتنازعوا ولا ينبغي عند نبي تنازع فقالوا ما له اهجر استفهموه. فقال " ذروني، فالذي انا فيه خير مما تدعوني اليه فامرهم بثلاث قال اخرجوا المشركين من جزيرة العرب، واجيزوا الوفد بنحو ما كنت اجيزهم ". والثالثة خير، اما ان سكت عنها، واما ان قالها فنسيتها. قال سفيان هذا من قول سليمان
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப் பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது.19 (விஷயம் தெரிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இங்கேயுள்ள யூதர்களை எனக்காக ஒன்றுகூட்டுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, அவர்கள் ஒன்றுகூட்டப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள், ‘‘சரி (உண்மை சொல்கிறோம்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தந்தை யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘இன்னார்” என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தான்” என்று கூறினார்கள். அவர்கள், ‘‘நீங்கள் சொன்னது உண்மைதான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். அவர்கள், ‘‘சரி சொல்கிறோம், அபுல்காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்துகொண்டதைப் போன்றே அதையும் அறிந்துகொள்வீர்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நரகவாசிகள் யார்?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘நாங்கள் அதில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்குப் பதிலாக அதில் நீங்கள் நுழைவீர்கள்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதில் நீங்கள் இழிவுபட்டுப் போவீர்களாக! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்குப் பதிலாக ஒருபோதும் நுழையமாட்டோம்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘சரி, அபுல்காசிமே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘ஆம் (கலந்திருக்கிறோம்)” என்று பதில் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது” என்று பதிலளித்தார்கள்.20 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، قال حدثني سعيد، عن ابي هريرة رضى الله عنه قال لما فتحت خيبر اهديت للنبي صلى الله عليه وسلم شاة فيها سم فقال النبي صلى الله عليه وسلم " اجمعوا الى من كان ها هنا من يهود ". فجمعوا له فقال " اني سايلكم عن شىء فهل انتم صادقي عنه ". فقالوا نعم. قال لهم النبي صلى الله عليه وسلم " من ابوكم ". قالوا فلان. فقال " كذبتم، بل ابوكم فلان ". قالوا صدقت. قال " فهل انتم صادقي عن شىء ان سالت عنه " فقالوا نعم يا ابا القاسم، وان كذبنا عرفت كذبنا كما عرفته في ابينا. فقال لهم " من اهل النار ". قالوا نكون فيها يسيرا ثم تخلفونا فيها. فقال النبي صلى الله عليه وسلم " اخسيوا فيها، والله لا نخلفكم فيها ابدا ثم قال هل انتم صادقي عن شىء ان سالتكم عنه ". فقالوا نعم يا ابا القاسم. قال " هل جعلتم في هذه الشاة سما ". قالوا نعم. قال " ما حملكم على ذلك ". قالوا اردنا ان كنت كاذبا نستريح، وان كنت نبيا لم يضرك
ஆஸிம் அல்அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், (தொழுகையில் ஓதப்படும்) யிகுனூத்’ எனும் சிறப்பு துஆ பற்றிக் கேட்டேன். அவர்கள், ‘‘ருகூஉ செய்வதற்கு முன்னால் (ஓத வேண்டும்)” என்று கூறினார்கள். ‘‘ருகூஉக்குப் பின்னால் (குனூத் ஓத வேண்டும்)” என்று நீங்கள் கூறியதாக இன்னார் நினைத்துக்கொண்டிருக்கிறார்” என்று நான் சொன்னேன். அதற்கு அவர்கள், ‘‘அவர் பொய் சொன்னார்” என்று கூறினார்கள். பிறகு அவர்கள், நபி (ஸல்) அவர்களைக் குறித்து, ‘‘அவர்கள் பனூ சுலைம் குலத்தாரின் சில கிளை’ன ருக்கு எதிராக ஒரு மாதம் ருகூஉக்குப் பின் யிகுனூத்’ ஓதினார்கள்” என்று அறிவித்தார்கள். அப்போது அவர்கள், ‘‘நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் நாற்பது அல்லது எழுபது பேரை இணைவைப்பாளர்கள் சிலரிடம் அனுப்பிவைத்தார்கள் லிஎன்று (அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டவர்கள் நாற்பது பேரா, எழுபது பேரா என்னும்) சந்தேகத்துடன் கூறினார்கள்லி அவர்களுக்கு இவர்கள் இஸ்லாத்தை எடுத்துரைக்க, அவர்கள் இவர்களைக் கொன்றுவிட்டார்கள். அப்போது பனூ சுலைம் குலத்தாருக்கும் நபி (ஸல்) அவர்களுக்குமிடையே ஒரு சமாதான ஒப்பந்தம் இருந்துவந்தது. ஆகவே, அவர்கள்மீது கோபமடைந்ததைப் போன்று வேறெவர்மீதும் நபி (ஸல்) அவர்கள் கோபமடைந்து நான் பார்த்த தில்லை.21 அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا ثابت بن يزيد، حدثنا عاصم، قال سالت انسا رضى الله عنه عن القنوت. قال قبل الركوع. فقلت ان فلانا يزعم انك قلت بعد الركوع، فقال كذب. ثم حدثنا عن النبي صلى الله عليه وسلم انه قنت شهرا بعد الركوع يدعو على احياء من بني سليم قال بعث اربعين او سبعين يشك فيه من القراء الى اناس من المشركين، فعرض لهم هولاء فقتلوهم، وكان بينهم وبين النبي صلى الله عليه وسلم عهد، فما رايته وجد على احد ما وجد عليهم
உம்மு ஹானீ பின்த் அபீதாலிப் (ரலி)22 அவர்கள் கூறியதாவது: மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்களை, அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மறைத்துக் கொண்டிருக்க, அவர்கள் குளித்துக் கொண்டிருப்பதைக் கண்டேன். அப்போது, அவர்களுக்கு நான் சலாம் உரைத்தேன். அவர்கள், ‘‘யார் அது?” என்று கேட்டார் கள். நான், ‘‘அபூதாலிபின் மகள் உம்மு ஹானீ” என்று பதிலளித்தேன். உடனே அவர்கள், ‘‘உம்மு ஹானீயே! வருக! வருக! (உங்களுக்கு நல்வரவு கூறுகிறேன்)” என்று சொன்னார்கள். அவர்கள் குளித்து முடித்ததும் ஒரே ஆடையை (மேனியில்) சுற்றியவர்களாக எழுந்து நின்று எட்டு ரக்அத்கள் தொழுதார்கள். நான், ‘‘அல்லாஹ்வின் தூதரே! என் தாயின் மகன் (என் சகோதரர்) அலீ, நான் புகலிடம் அளித்திருக்கும் ஒரு மனிதரைலி ஹுபைராவின் மகனான இன்னாரைலி தாம் கொல்லப்போவதாகக் கூறுகிறார்” என்று சொன்னேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘உம்மு ஹானியே! நீ அபயம் அளித்தவருக்கு நாமும் அபயம் அளித்துவிட்டோம் (ஆகவே கவலை வேண்டாம்)” என்று கூறினார்கள். (நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற) அந்த நேரம் முற்பகல் நேரமாக இருந்தது.23 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن ابي النضر، مولى عمر بن عبيد الله ان ابا مرة، مولى ام هاني ابنة ابي طالب اخبره انه، سمع ام هاني ابنة ابي طالب، تقول ذهبت الى رسول الله صلى الله عليه وسلم عام الفتح فوجدته يغتسل، وفاطمة ابنته تستره، فسلمت عليه فقال " من هذه ". فقلت انا ام هاني بنت ابي طالب. فقال " مرحبا بام هاني ". فلما فرغ من غسله قام، فصلى ثمان ركعات ملتحفا في ثوب واحد، فقلت يا رسول الله، زعم ابن امي علي انه قاتل رجلا قد اجرته فلان بن هبيرة. فقال رسول الله صلى الله عليه وسلم " قد اجرنا من اجرت يا ام هاني ". قالت ام هاني وذلك ضحى
யஸீத் பின் ஷரீக் அத் தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அலீ (ரலி) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, ‘‘அல்லாஹ்வின் வேதத்தையும் இந்த ஏட்டில் உள்ளதையும் தவிர, நாங்கள் வாசிக்கின்ற புத்தகம் வேறெதுவும் எங்களிடம் இல்லை. இந்த ஏட்டில் காயங் களுக்கான பழிவாங்கல்கள் (ஸகாத்தாகவும் உயிரீட்டுத் தொகையாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது விவரங்கள் ஆகியன குறிப்பிடப்பட்டுள்ளன. ‘‘மேலும், (அதில் கூறப்பட்டுள்ள தாவது:) மதீனா நகரம் ‘அய்ர்’ மலைக்கும் (உஹுத் மலை அமைந்துள்ள) இன்ன இடத்திற்கும் இடையிலுள்ள பகுதிவரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தில் இல்லாத) புதிய ஒன்றை உருவாக்குகிறாரோ அல்லது (அவ்விதம்) புதிதாக ஒன்றை உருவாக்குபவருக்குப் புகலிடம் கொடுக்கின்றாரோ அவர்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் மக்கள் அனைவரின் சாபமும் ஏற்படும். அவரிடமிருந்து கடமையான வழிபாடோ கூடுதல் வழிபாடோ எதுவும் ஏற்கப்படாது. ‘‘விடுதலை செய்யப்பட்ட அடிமை ஒருவன் தன்(னை விடுதலை செய்த) எஜமானர்கள் அல்லாத வேறொருவரை எஜமானர்களாக்கிக்கொண்டால், அவன் மீதும் அவ்வாறே (சாபம்) ஏற்படும். முஸ்லிம்களில் எவர் அடைக்கலம் தந்தாலும் அது ஒன்றேயாகும். (அது மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகக் கருதப்பட வேண்டியதேயாகும்.) ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவன் முறிக்கின்றானோ அவன்மீதும் அவ்வாறே (சாபம்) ஏற்படும்.24 அத்தியாயம் :
حدثنا محمد، اخبرنا وكيع، عن الاعمش، عن ابراهيم التيمي، عن ابيه، قال خطبنا علي فقال ما عندنا كتاب نقروه الا كتاب الله، وما في هذه الصحيفة فقال فيها الجراحات واسنان الابل، والمدينة حرم ما بين عير الى كذا، فمن احدث فيها حدثا او اوى فيها محدثا، فعليه لعنة الله والملايكة والناس اجمعين، لا يقبل منه صرف ولا عدل، ومن تولى غير مواليه فعليه مثل ذلك، وذمة المسلمين واحدة، فمن اخفر مسلما فعليه مثل ذلك
சஹ்ல் பின் அபீஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபித்தோழர்களான) அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் கைபர் பிரதேசத்தை நோக்கிச் சென்றார்கள். அன்று அங்கு (முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமிடையே) சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (கைபருக்குச் சென்றதும்) அவர்களிருவரும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டனர். அப்துல்லாஹ் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு, இரத்த வெள்ளத்தில் மிதந்தபடி விழுந்து கிடக்க, அவர்களிடம் முஹய்யிஸா (ரலி) அவர்கள் வந்தார்கள். பிறகு அவர்களை அடக்கம் செய்தார்கள். பிறகு மதீனா வந்தார்கள். அப்போது (கொல்லப்பட்டவரின் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் (அவருடைய சகோதரர்) ஹுவய்யிஸா பின் மஸ்ஊத் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் தொடங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘‘பெரியவர்களைப் பேச விடு. பெரியவர் களைப் பேச விடு” என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் (ரலி) அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் மௌனமாகிவிட்டார்கள். பிறகு முஹய்யிஸா (ரலி) அவர்களும் ஹுவய்யிஸா (ரலி) அவர்களும் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘(அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களை இன்னார்தான் கொலை செய்தார் என்று) சத்தியம் செய்து நீங்கள் உங்கள் கொலையாளிக்கு (தண்டனையளித்துப் பழிவாங்கிக்கொள்ளும்) உரிமை பெற்றுக்கொள்கிறீர்களா?” என்று கேட் டார்கள். அதற்கு அவர்கள், ‘‘நாங்கள் எப்படிச் சத்தியம் செய்வோம்? நாங்கள் அங்கே (கொலை நடந்த இடத்தில்) இருக்கவில்லை; கொலை செய்தவனை (கொலை செய்யும்போது) பார்க்கவும் இல்லையே!” என்று கூறினார்கள். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘‘அப்படியென்றால், யூதர்கள் (தாங்கள் அப்துல்லாஹ்வைக் கொல்லவில்லை என்பதற்கு) ஐம்பது பேர் சத்தியம்செய்து உங்களிடம் தமது குற்றமற்ற தன்மையை நிரூபிக்கட்டும்!” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘‘இறைமறுப்பாளரான சமுதாயத்தாரின் சத்தியங்களை நாம் எப்படி (நம்பி) எடுத்துக்கொள்வது?” என்று கேட்டார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள், தாமே (அப்துல்லாஹ் பின் சஹ்ல் அவர்களின் கொலைக்கான) உயிரீட்டுத் தொகையை (அவரது சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் சஹ்ல் அவர்களுக்குக் கொடுத்துவிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا بشر هو ابن المفضل حدثنا يحيى، عن بشير بن يسار، عن سهل بن ابي حثمة، قال انطلق عبد الله بن سهل ومحيصة بن مسعود بن زيد الى خيبر، وهى يوميذ صلح، فتفرقا، فاتى محيصة الى عبد الله بن سهل وهو يتشحط في دم قتيلا، فدفنه ثم قدم المدينة، فانطلق عبد الرحمن بن سهل ومحيصة وحويصة ابنا مسعود الى النبي صلى الله عليه وسلم، فذهب عبد الرحمن يتكلم فقال " كبر كبر ". وهو احدث القوم، فسكت فتكلما فقال " اتحلفون وتستحقون قاتلكم او صاحبكم ". قالوا وكيف نحلف ولم نشهد ولم نر قال " فتبريكم يهود بخمسين ". فقالوا كيف ناخذ ايمان قوم كفار فعقله النبي صلى الله عليه وسلم من عنده
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அபூசுஃப்யான் பின் ஹர்ப் அவர்கள், (தாம் இஸ்லாத்தைத் தழுவுவதற்கு முன்பு) ஷாம் (சிரியா) நாட்டிற்கு குறைஷியரின் வணிகக் குழு ஒன்றில் சென்றிருந்தபோது (கிழக்கு ரோமானிய மன்னர்) ஹிரக்ளீயஸ் தமக்கு ஆளனுப்பி தமது அவைக்கு வரச் சொன்னதாகவும், அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷி இறை மறுப்பாளர்கள் தொடர்பாகத் தம்முடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலகட்டத்தில் நடந்ததாகவும் அறிவித் தார்கள்.29 அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن يونس، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله بن عتبة، اخبره ان عبد الله بن عباس اخبره ان ابا سفيان بن حرب اخبره ان هرقل ارسل اليه في ركب من قريش كانوا تجارا بالشام في المدة التي ماد فيها رسول الله صلى الله عليه وسلم ابا سفيان في كفار قريش
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுக்கு (ஒரு தடவை) சூனியம் செய்யப்பட்டது. அதன் வாயி லாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்ததாக அவர்கள் எண்ணிக்கொள்ளும் படி அவர்களுக்குப் பிரமையூட்டப்பட் டது.30 அத்தியாயம் :
حدثني محمد بن المثنى، حدثنا يحيى، حدثنا هشام، قال حدثني ابي، عن عايشة، ان النبي صلى الله عليه وسلم سحر حتى كان يخيل اليه انه صنع شييا ولم يصنعه