ஹதீஸ்கள்
#3169
ஸஹீஹ் அல்-புகாரீ - Jizyah and Peace Treaties
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: கைபர் வெற்றி கொள்ளப்பட்டபோது நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தடவப் பட்ட ஆடு ஒன்று அன்பளிப்பாகத் தரப்பட்டது.19 (விஷயம் தெரிந்தவுடன்) நபி (ஸல்) அவர்கள், ‘‘இங்கேயுள்ள யூதர்களை எனக்காக ஒன்றுகூட்டுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே, அவர்கள் ஒன்றுகூட்டப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டார்கள். (அவர்களிடம்) நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் உங்களிடம் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்கப் போகிறேன். நீங்கள் என்னிடம் அதைப் பற்றி உண்மை சொல்வீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த யூதர்கள், ‘‘சரி (உண்மை சொல்கிறோம்)” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘உங்கள் தந்தை யார்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், ‘‘இன்னார்” என்று பதிலளித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘பொய் சொன்னீர்கள். மாறாக, உங்கள் தந்தை இன்னார்தான்” என்று கூறினார்கள். அவர்கள், ‘‘நீங்கள் சொன்னது உண்மைதான்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நான் ஒரு விஷயத்தைப் பற்றிக் கேட்டால் அதைப் பற்றி நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?” என்று (மீண்டும்) கேட்டார்கள். அவர்கள், ‘‘சரி சொல்கிறோம், அபுல்காசிமே! இனி நாங்கள் பொய் சொன்னால் எங்கள் தந்தை விஷயத்தில் நாங்கள் பொய் சொன்னதை நீங்கள் அறிந்துகொண்டதைப் போன்றே அதையும் அறிந்துகொள்வீர்கள்” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘நரகவாசிகள் யார்?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘நாங்கள் அதில் சில காலம் மட்டுமே இருப்போம். பிறகு எங்களுக்குப் பதிலாக அதில் நீங்கள் நுழைவீர்கள்” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘அதில் நீங்கள் இழிவுபட்டுப் போவீர்களாக! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அதில் உங்களுக்குப் பதிலாக ஒருபோதும் நுழையமாட்டோம்” என்று கூறினார்கள். பிறகு, ‘‘நான் ஒரு விஷயத்தைப் பற்றி உங்களிடம் கேட்டால் நீங்கள் என்னிடம் உண்மை சொல்வீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘சரி, அபுல்காசிமே!” என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘இந்த ஆட்டில் நீங்கள் விஷம் கலந்திருக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘ஆம் (கலந்திருக்கிறோம்)” என்று பதில் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘‘ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று கேட்டார்கள். அவர்கள், ‘‘நீங்கள் பொய்யராக இருந்(து விஷத்தின் மூலம் இறந்)தால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம். நீங்கள் இறைத்தூதராக இருந்தால் உங்களுக்கு அ(ந்த விஷமான)து தீங்கு செய்யாது” என்று பதிலளித்தார்கள்.20 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، حدثنا الليث، قال حدثني سعيد، عن ابي هريرة رضى الله عنه قال لما فتحت خيبر اهديت للنبي صلى الله عليه وسلم شاة فيها سم فقال النبي صلى الله عليه وسلم " اجمعوا الى من كان ها هنا من يهود ". فجمعوا له فقال " اني سايلكم عن شىء فهل انتم صادقي عنه ". فقالوا نعم. قال لهم النبي صلى الله عليه وسلم " من ابوكم ". قالوا فلان. فقال " كذبتم، بل ابوكم فلان ". قالوا صدقت. قال " فهل انتم صادقي عن شىء ان سالت عنه " فقالوا نعم يا ابا القاسم، وان كذبنا عرفت كذبنا كما عرفته في ابينا. فقال لهم " من اهل النار ". قالوا نكون فيها يسيرا ثم تخلفونا فيها. فقال النبي صلى الله عليه وسلم " اخسيوا فيها، والله لا نخلفكم فيها ابدا ثم قال هل انتم صادقي عن شىء ان سالتكم عنه ". فقالوا نعم يا ابا القاسم. قال " هل جعلتم في هذه الشاة سما ". قالوا نعم. قال " ما حملكم على ذلك ". قالوا اردنا ان كنت كاذبا نستريح، وان كنت نبيا لم يضرك
Metadata
- Edition
- ஸஹீஹ் அல்-புகாரீ
- Book
- Jizyah and Peace Treaties
- Hadith Index
- #3169
- Book Index
- 11
Grades
- -
