Loading...

Loading...
நூல்கள்
௨௬ ஹதீஸ்கள்
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் என் சிறிய தாயார் மைமூனா (ரலி) அவர்களது வீட்டில் ஓர் இரவு தங்கினேன். ஒரு தலையணையின் அகலவாட்டில் நான் படுத்துக்கொண் டேன். நபி (ஸல்) அவர்களும் அவர் களின் துணைவி (மைமூனா) அவர்களும் அந்தத் தலையணையின் நீள வாட்டில் படுத்துக்கொண்டனர். நபி (ஸல்) அவர்கள் இரவின் பாதிவரை, அல்லது அதற்குச் சற்று முன்புவரை, அல்லது அதற்குச் சற்றுப் பின்புவரை தூங்கினார்கள். பிறகு அவர்கள் விழித்து அமர்ந்தார்கள். தமது கையால் தமது முகத்திலிருந்து தூக்க(க் கலக்க)த்தை அகற்றிவிட்டு ‘ஆலு இம்ரான்’ அத்தி யாயத்தின் கடைசிப் பத்து வசனங்களை ஓதினார்கள். பிறகு தொங்கவிடப்பட்ட தோல்பாத் திரத்தை நோக்கிச் சென்று அதிலிருந்து அழகிய முறையில் அங்கத் தூய்மை (உளூ) செய்து தொழலானார்கள். நானும் எழுந்து அவர்கள் செய்தது போலவே செய்து, அவர்களின் (இடது) பக்கத்தில் நின்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது வலக் கரத்தை என் தலை மீது வைத்து எனது வலக்காதைப் பிடித்து (வலப் புறத்திற்கு) திருப்பினார்கள். இரண்டு ரக்அத்கள், பின் இரண்டு ரக்அத்கள், மேலும் இரண்டு ரக்அத்கள், பிறகு இரண்டு ரத்அத்கள், பிறகு இரண்டு ரக்அத்கள், மீண்டும் இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பின்னால் வித்ர் தொழுதுவிட்டுப் படுத்துக்கொண் டார்கள். தொழுகை அறிவிப்பாளர் (முஅத்தின்) வந்ததும் எழுந்து சுருக்க மாக இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு சுப்ஹு தொழுவித்தார்கள்.3 அத்தியாயம் :
حدثنا عبد الله بن يوسف، اخبرنا مالك، عن مخرمة بن سليمان، عن كريب، مولى ابن عباس انه اخبره عن عبد الله بن عباس رضى الله عنهما انه بات عند ميمونة ام المومنين رضى الله عنها وهى خالته قال فاضطجعت على عرض الوسادة، واضطجع رسول الله صلى الله عليه وسلم واهله في طولها، فنام رسول الله صلى الله عليه وسلم حتى انتصف الليل او قبله بقليل او بعده بقليل، ثم استيقظ رسول الله صلى الله عليه وسلم فجلس، فمسح النوم عن وجهه بيده، ثم قرا العشر ايات خواتيم سورة ال عمران، ثم قام الى شن معلقة فتوضا منها، فاحسن وضوءه، ثم قام يصلي. قال عبد الله بن عباس رضى الله عنهما فقمت فصنعت مثل ما صنع، ثم ذهبت فقمت الى جنبه، فوضع رسول الله صلى الله عليه وسلم يده اليمنى على راسي، واخذ باذني اليمنى يفتلها بيده، فصلى ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم ركعتين، ثم اوتر، ثم اضطجع حتى جاءه الموذن، فقام فصلى ركعتين خفيفتين، ثم خرج فصلى الصبح
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஆரம்பக் காலத்தில்) நபி (ஸல்) அவர்கள் தொழும்போது அவர்களுக்கு நாங்கள் முகமன் (சலாம்) கூறுவோம். அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் கூறுவார்கள். நாங்கள் (அபிசீனியாவின் மன்னர்) நஜாஷியிடமிருந்து திரும்பிய போது நபியவர்களுக்கு ‘சலாம்’ கூறினோம். அவர்கள் எங்களுக்குப் பதில் சலாம் கூறவில்லை. (தொழுது முடித்ததும்) “நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன” என்று கூறினார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابن نمير، حدثنا ابن فضيل، حدثنا الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله رضى الله عنه قال كنا نسلم على النبي صلى الله عليه وسلم وهو في الصلاة فيرد علينا، فلما رجعنا من عند النجاشي سلمنا عليه فلم يرد علينا وقال " ان في الصلاة شغلا
حدثنا ابن نمير، حدثنا اسحاق بن منصور، حدثنا هريم بن سفيان، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم نحوه
ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களது காலத்தில் நாங்கள் தொழுகையில் பேசிக்கொண்டி ருந்தோம். எங்களில் ஒருவர் தம் தோழரிடம் (சொந்தத்) தேவை குறித்துப் பேசுவார். இந்நிலையில், “(அனைத்துத்) தொழு கைகளையும் (குறிப்பாக) நடுத் தொழுகை யையும் பேணி(த் தொழுது)வாருங்கள்” (2:238) எனும் இறைவசனம் அருளப் பெற்றது. அதன்பின் (தொழுகையில்) பேசக் கூடாது என்று கட்டளையிடப் பட்டோம். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا عيسى هو ابن يونس عن اسماعيل، عن الحارث بن شبيل، عن ابي عمرو الشيباني، قال قال لي زيد بن ارقم ان كنا لنتكلم في الصلاة على عهد النبي صلى الله عليه وسلم، يكلم احدنا صاحبه بحاجته حتى نزلت {حافظوا على الصلوات} الاية، فامرنا بالسكوت
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: பனூஅம்ர் பின் அவ்ஃப் கூட்டத் தாரிடையே சமரசம் செய்து வைப்பதற் காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டார் கள். தொழுகை நேரம் வந்ததும் பிலால் (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, “நபி (ஸல்) அவர்கள் (தங்கள் பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா?” என்று கேட்டார்கள். “நீங்கள் விரும்பினால் செய்கிறேன்” என அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறி னார்கள். பிலால் (ரலி) அவர்கள் தொழுகைக்கு இகாமத் கூறியதும் அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னே சென்று தொழுவிக்கலானார்கள். சற்று நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் வரிசைகளைப் பிளந்து கொண்டு நடந்து வந்து முதல் வரிசை யில் நின்றார்கள். உடனே மக்கள் கைதட்டலானார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தொழுகையில் திரும்பிப் பார்க்காதவராக இருந்தார்கள். மக்களின் கைதட்டல் மிகுந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் வரிசையில் நிற்பதைக் கண்டார்கள். “அங்கேயே நிற்பீராக” என்று நபி (ஸல்) அவர்கள் சைகை மூலம் தெரிவித்தார் கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் தம் கைகளை உயர்த்தி அல்லாஹ்வைப் புகழ்ந்து (திரும்பாமல்) பின்புறமாகவே நடந்து பின்னால் நின்றுகொண்டார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் முன்னே சென்று தொழுவித்தார்கள்.4 அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا عبد العزيز بن ابي حازم، عن ابيه، عن سهل رضى الله عنه قال خرج النبي صلى الله عليه وسلم يصلح بين بني عمرو بن عوف، وحانت الصلاة، فجاء بلال ابا بكر رضى الله عنهما فقال حبس النبي صلى الله عليه وسلم فتوم الناس قال نعم ان شيتم. فاقام بلال الصلاة، فتقدم ابو بكر رضى الله عنه فصلى، فجاء النبي صلى الله عليه وسلم يمشي في الصفوف يشقها شقا حتى قام في الصف الاول، فاخذ الناس بالتصفيح. قال سهل هل تدرون ما التصفيح هو التصفيق. وكان ابو بكر رضى الله عنه لا يلتفت في صلاته، فلما اكثروا التفت فاذا النبي صلى الله عليه وسلم في الصف، فاشار اليه مكانك. فرفع ابو بكر يديه، فحمد الله، ثم رجع القهقرى وراءه وتقدم النبي صلى الله عليه وسلم فصلى
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் தொழுகையில் ‘அத்தஹிய் யாத்’ ஓதும்போது (சிலரது) பெயரைக் குறிப்பிட்டு, ஒருவர்மீது மற்றவர் ‘சலாம்’ கூறிவந்தோம். இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்கள், “அத்தஹிய்யா(த்)து லில்லாஹி வஸ்ஸலவா(த்)து வத்தய்யிபா(த்)து, அஸ்ஸலாமு அலை(க்)க அய்யுஹந் நபிய்யு வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பர(க்)கா(த்)துஹு, அஸ்ஸலாமு அலைனா வ அலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன்; அஷ்ஹது அன் லா இலாஹ இல்லல் லாஹு வ அஷ்ஹது அன்ன முஹம்ம தன் அப்துஹு வரசூலுஹு” (சொல், செயல், பொருள் வடிவிலான எல்லாக் காணிக்கைகளும் அல்லாஹ்வுக்கே உரியன. நபியே! உங்கள்மீது அல்லாஹ் வின் சாந்தியும் அருளும் அருள்வள மும் ஏற்படட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள்மீதும் அல்லாஹ்வின் சாந்தி ஏற்படட்டுமாக! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நான் உறுதிமொழி கிறேன். முஹம்மத் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் நான் உறுதிமொழி கிறேன்) என்று கூறுங்கள்! இவ்வாறு நீங்கள் கூறினால் வானம் மற்றும் பூமியிலுள்ள எல்லா நல்லடியார்களுக்கும் சலாம் கூறியவர்களாவீர்கள்” எனக் குறிப்பிட்டார்கள். அத்தியாயம் :
حدثنا عمرو بن عيسى، حدثنا ابو عبد الصمد عبد العزيز بن عبد الصمد، حدثنا حصين بن عبد الرحمن، عن ابي وايل، عن عبد الله بن مسعود رضى الله عنه قال كنا نقول التحية في الصلاة ونسمي، ويسلم بعضنا على بعض، فسمعه رسول الله صلى الله عليه وسلم فقال " قولوا التحيات لله والصلوات والطيبات، السلام عليك ايها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين، اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله، فانكم اذا فعلتم ذلك فقد سلمتم على كل عبد لله صالح في السماء والارض
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தஸ்பீஹ் (சுப்ஹானல்லாஹ் எனக்) கூறுதல் ஆண்களுக்குரியதாகும்; கைதட்டுதல் பெண்களுக்குரியதாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا علي بن عبد الله، حدثنا سفيان، حدثنا الزهري، عن ابي سلمة، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " التسبيح للرجال والتصفيق للنساء
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தஸ்பீஹ்’ கூறுதல் ஆண்களுக்குரிய தாகும்; கைதட்டுதல் பெண்களுக்குரிய தாகும். இதை சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يحيى، اخبرنا وكيع، عن سفيان، عن ابي حازم، عن سهل بن سعد رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " التسبيح للرجال والتصفيح للنساء
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: முஸ்லிம்கள் திங்கட்கிழமை ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தனர். அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுக்குத் தொழு வித்துக்கொண்டிருந்தார்கள். (மரணத் தறுவாயிலிருந்த) நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களின் அறையில் உள்ள திரையை விலக்கி அணிவகுத்து நிற்கும் மக்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே புன்னகைத்தவாறு திடீரென அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுவிக்க வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் (ரலி) அவர்கள் திரும்பாமல் பின்வாக்கில் திரும்பலானார்கள். நபி (ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியால் மக்களுக்குத் தொழுகையில் குழப்பம் நேரும் நிலை ஏற்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் தொழுது முடியுங்கள்’ என்று தமது கையால் சைகை செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து திரையைத் தொங்கவிட்டார்கள். அன்றைய தினமே அவர்கள் இறந்து விட்டார்கள். அத்தியாயம் :
حدثنا بشر بن محمد، اخبرنا عبد الله، قال يونس قال الزهري اخبرني انس بن مالك، ان المسلمين، بينا هم في الفجر يوم الاثنين، وابو بكر رضى الله عنه يصلي بهم ففجاهم النبي صلى الله عليه وسلم قد كشف ستر حجرة عايشة رضى الله عنها فنظر اليهم، وهم صفوف، فتبسم يضحك، فنكص ابو بكر رضى الله عنه على عقبيه، وظن ان رسول الله صلى الله عليه وسلم يريد ان يخرج الى الصلاة، وهم المسلمون ان يفتتنوا في صلاتهم فرحا بالنبي صلى الله عليه وسلم حين راوه، فاشار بيده ان اتموا، ثم دخل الحجرة وارخى الستر، وتوفي ذلك اليوم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (முற்காலத்தில்) ஒரு பெண்மணி, ஆசிரமம் ஒன்றில் இருந்த தம் மகனை ‘ஜுரைஜ்!’ என்று அழைத்தார். ஜுரைஜ் “இறைவா! என் தாயா? என் தொழு கையா? (யாரைக் கவனிப்பேன்)” என்று (மனதிற்குள்) கூறினார். மீண்டும் அப்பெண் ‘ஜுரைஜ்!’ என்று அழைத்த போது “இறைவா! என் தாயா? என் தொழுகையா?” என்று (மனத்திற்குள்) கூறினார். (மூன்றாவது முறையாகவும்) ‘ஜுரைஜ்!’ என்று அழைத்தார். அப்போதும் அவர் “இறைவா! என் தாயா? என் தொழுகையா?” என்று கூறினார். அப்போது அப்பெண் “இறைவா! விபசாரிகளின் முகத்தில் விழிக்காமல் ஜுரைஜ் இறக்கக் கூடாது” என்று துஆ செய்தார். ஆடு மேய்க்கும் பெண் ணொருத்தி ஜுரைஜுடைய ஆசிரமத்திற்கு வந்துசெல்பவளாக இருந்தாள். அவள் ஒரு குழந்தையைப் பெற்றாள். இந்தக் குழந்தை யாருக்குப் பிறந்தது என்று அவளிடம் கேட்கப்பட்டபோது, “ஜுரைஜுக்குத்தான்; அவர் தமது ஆசிரமத்திலிருந்து இறங்கிவந்து இவ்வாறு செய்துவிட்டார்” என்று அவள் கூறினாள். “தனது குழந்தையை எனக்குப் பிறந்தது எனக் கூறும் அப்பெண் எங்கே?” என்று ஜுரைஜ் கேட்டுவிட்டு, அவள் பெற்ற குழந்தையை நோக்கி, “சிறுவனே! உன் தந்தை யார்?” எனக் கேட்டார். அதற்கு அக்குழந்தை “ஆடு மேய்க்கும் இன்னார்” என விடையளித்தது. இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.6 அத்தியாயம் :
وقال الليث حدثني جعفر، عن عبد الرحمن بن هرمز، قال قال ابو هريرة رضى الله عنه قال رسول الله صلى الله عليه وسلم " نادت امراة ابنها، وهو في صومعة قالت يا جريج. قال اللهم امي وصلاتي. قالت يا جريج. قال اللهم امي وصلاتي. قالت يا جريج. قال اللهم امي وصلاتي. قالت اللهم لا يموت جريج حتى ينظر في وجه المياميس. وكانت تاوي الى صومعته راعية ترعى الغنم فولدت فقيل لها ممن هذا الولد قالت من جريج نزل من صومعته. قال جريج اين هذه التي تزعم ان ولدها لي قال يا بابوس من ابوك قال راعي الغنم
முஐகீப் பின் அபீஃபாத்திமா (ரலி) அவர்கள் கூறியதாவது: சஜ்தா செய்யும்போது மண்ணைச் சமப்படுத்திக்கொண்டிருந்த மனிதரை நோக்கி “நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு தடவை மட்டும் செய்வீராக” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا ابو نعيم، حدثنا شيبان، عن يحيى، عن ابي سلمة، قال حدثني معيقيب، ان النبي صلى الله عليه وسلم قال في الرجل يسوي التراب حيث يسجد قال " ان كنت فاعلا فواحدة
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: கடுமையான வெப்பத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதிருக்கி றோம். எங்களில் ஒருவருக்குத் தமது முகத்தைத் தரையில் வைக்க இயலாத போது, தமது ஆடையை விரித்து அதில் சஜ்தா செய்வார். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا بشر، حدثنا غالب، عن بكر بن عبد الله، عن انس بن مالك رضى الله عنه قال كنا نصلي مع النبي صلى الله عليه وسلم في شدة الحر، فاذا لم يستطع احدنا ان يمكن وجهه من الارض بسط ثوبه فسجد عليه
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழும்போது நபி (ஸல்) அவர்களை நோக்கி என் கால்களை நான் நீட்டிக்கொண்டிருப் பேன். அவர்கள் சஜ்தா செய்யும்போது என்னை விரலால் குத்துவார்கள். உடனே கால்களை நான் மடக்கிக்கொள் வேன்; அவர்கள் எழுந்ததும் கால்களை நீட்டிக்கொள்வேன். அத்தியாயம் :
حدثنا عبد الله بن مسلمة، حدثنا مالك، عن ابي النضر، عن ابي سلمة، عن عايشة رضى الله عنها قالت كنت امد رجلي في قبلة النبي صلى الله عليه وسلم وهو يصلي، فاذا سجد غمزني فرفعتها، فاذا قام مددتها
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு தொழுகை யைத் தொழுதார்கள். (தொழுது முடித்த தும்) “ஷைத்தான் எனக்குமுன் தோன்றி, என் தொழுகையை முறித்துவிட முயன் றான். அவன்மீது அல்லாஹ் எனக்குச் சக்தி அளித்தான். அவன் குரல்வளையை நான் பிடித்துவிட்டேன். அவனை ஒரு தூணில் கட்டிவைத்து காலையில் நீங்களெல்லாரும் பார்க்க வேண்டுமென விரும்பினேன். ‘இறைவா! எனக்குப்பின் யாருக்கும் வழங்காத ஆட்சியை எனக்கு வழங்குவாயாக! (38:35) என்று நபி சுலைமான் (அலை) அவர்கள் கூறி யது என் நினைவுக்கு வந்தது. (அதனால் அவனை விட்டுவிட்டேன்) இழிந்த நிலையில் அவனை அல்லாஹ் விரட்டி யடித்துவிட்டான்” என்று கூறினார்கள். நள்ர் பின் ஷுமைல் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘குரல்வளையைப் பிடித் தேன்’ என்பதைக் குறிக்க மூலத்தில் ‘தஅத்து’ எனும் சொல் ஆளப்பட்டுள்ளது. இதற்கு ‘குரல்வளையை நெரித்தேன்’ என்பது பொருளாகும். (சில பிரதிகளில்) ‘தஃஅத்து’ என இடம்பெறுகிறது. இதற்கு ‘பிடித்துத் தள்ளினேன்’ என்பது பொருளா கும். “அவர்கள் அன்று நரகத்தில் தள்ளப் படுவர்” (52:13) எனும் வசனத்தில் இச்சொல்லே (யுதஃஊன) ஆளப்பட்டுள் ளது. இருப்பினும், முதலாவது உச்சரிப்பே உகந்ததாகும். அத்தியாயம் :
حدثنا محمود، حدثنا شبابة، حدثنا شعبة، عن محمد بن زياد، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم انه صلى صلاة قال " ان الشيطان عرض لي، فشد على ليقطع الصلاة على، فامكنني الله منه، فذعته، ولقد هممت ان اوثقه الى سارية حتى تصبحوا فتنظروا اليه فذكرت قول سليمان عليه السلام رب هب لي ملكا لا ينبغي لاحد من بعدي. فرده الله خاسيا ". ثم قال النضر بن شميل فذعته بالذال اى خنقته وفدعته من قول الله {يوم يدعون} اى يدفعون والصواب، فدعته الا انه كذا قال بتشديد العين والتاء
அஸ்ரக் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நாங்கள் ‘அஹ்வாஸ்’ எனுமிடத்தில் ‘ஹரூரிய்யா’ கூட்டத்தாருடன் போர் செய்துகொண்டிருந்தோம்.7 அப்போது ஆற்றோரத்தில் ஒரு மனிதர் தமது வாகனப் பிராணியின் கடிவாளத்தை ஒரு கையில் பிடித்துக் கொண்டு தொழுதுகொண்டிருந்தார். வாகனம் அவரை இழுக்க அவரும் அதைத் தொடர்ந்தார். அவர் அபூபர்ஸா (ரலி) என்ற நபித் தோழராவார். அப்போது காரிஜிய்யாக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் “இறைவா! இந்தக் கிழவரைத் தண்டிப்பாயாக” எனக் கூறினார். அந்தப் பெரியவர் தொழுது முடித்த தும், “நீங்கள் கூறியதை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களுடன் ஆறு அல்லது ஏழெட்டுப் போர்களில் பங்கெடுத்திருக் கிறேன். நபி (ஸல்) அவர்கள் மார்க் கத்தை இலகுவாக்கியிருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன். என் வாகனத்தை அதன் மேயும் இடத்துக்கு ஓட விட்டு விட்டு, கவலையுடன் நான் செல்வதை விட என் வாகனத்துடன் திரும்பிச் செல்வதே எனக்கு விருப்பமானது” எனக் கூறினார்.8 அத்தியாயம் :
حدثنا ادم، حدثنا شعبة، حدثنا الازرق بن قيس، قال كنا بالاهواز نقاتل الحرورية، فبينا انا على جرف نهر اذا رجل يصلي، واذا لجام دابته بيده فجعلت الدابة تنازعه، وجعل يتبعها قال شعبة هو ابو برزة الاسلمي فجعل رجل من الخوارج يقول اللهم افعل بهذا الشيخ. فلما انصرف الشيخ قال اني سمعت قولكم، واني غزوت مع رسول الله صلى الله عليه وسلم ست غزوات او سبع غزوات وثمانيا، وشهدت تيسيره، واني ان كنت ان اراجع مع دابتي احب الى من ان ادعها ترجع الى مالفها فيشق على
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) சூரிய கிரகணம் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று நீண்ட அத்தியாயம் ஒன்றை ஓதித் தொழுதார்கள். பிறகு நீண்ட நேரம் ருகூஉ செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தி மற்றோர் அத்தியாயத்தைத் தொடங்கி ஓதினார்கள். பிறகு மற்றொரு ருகூஉ செய்து முடித்தார்கள். சஜ்தாவும் செய்தார்கள். இவ்வாறே இரண்டாவது ரக்அத்திலும் செய்தார்கள். பின்னர் “சூரிய, சந்திர கிரகணங்கள் இரண்டும் அல்லாஹ்வின் சான்றுகளில் உள்ளவை. எனவே இவற்றை நீங்கள் கண்டால் அவை உங்களைவிட்டு விலக்கப்படும்வரை தொழுங்கள். எனக்கு வாக்களிக்கப்பட்ட அனைத்தை யும் இந்த இடத்தில் நான் கண்டேன். நான் முன்னே செல்வதுபோல் நீங்கள் என்னைக் கண்டபோது சொர்க்கத்தின் ஒரு திராட்சைப் பழக்கொத்தைப் பிடிக்க முயன்றேன். நான் பின்னே செல்வது போல் என்னை நீங்கள் கண்டபோது நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியை அழித்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். நரகத்தில் அம்ர் பின் லுஹை என்பவரையும் கண்டேன். அவர்தான் சாயிபா எனும் (கால்நடை களை சிலைகளுக்கு நேர்ச்சை செய்யும்) வழிபாட்டை உருவாக்கியவர்” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل، اخبرنا عبد الله، اخبرنا يونس، عن الزهري، عن عروة، قال قالت عايشة خسفت الشمس، فقام النبي صلى الله عليه وسلم فقرا سورة طويلة، ثم ركع فاطال، ثم رفع راسه، ثم استفتح بسورة اخرى، ثم ركع حتى قضاها وسجد، ثم فعل ذلك في الثانية، ثم قال " انهما ايتان من ايات الله، فاذا رايتم ذلك فصلوا حتى يفرج عنكم، لقد رايت في مقامي هذا كل شىء وعدته، حتى لقد رايتني اريد ان اخذ قطفا من الجنة حين رايتموني جعلت اتقدم، ولقد رايت جهنم يحطم بعضها بعضا حين رايتموني تاخرت، ورايت فيها عمرو بن لحى وهو الذي سيب السوايب
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் ‘கிப்லா’ திசையில் (சுவரில்) எச்சிலைக் கண்டார்கள். பள்ளியில் இருந்தவர்களைக் கடிந்துகொண்ட துடன் “அல்லாஹ் உங்களுக்கு முன்னே இருக்கிறான். எனவே, யாரேனும் தொழுதுகொண்டிருந்தால் கண்டிப்பாக எச்சில் உமிழ வேண்டாம்” எனக் கூறிவிட்டு, இறங்கிவந்து தமது கையால் அதைச் சுரண்டினார்கள். “உங்களில் யாரேனும் உமிழ்ந்தால் தமது இடப் புறத்தில் உமிழட்டும்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறி னார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد، عن ايوب، عن نافع، عن ابن عمر رضى الله عنهما ان النبي صلى الله عليه وسلم راى نخامة في قبلة المسجد، فتغيظ على اهل المسجد وقال " ان الله قبل احدكم، فاذا كان في صلاته، فلا يبزقن او قال لا يتنخمن ". ثم نزل فحتها بيده. وقال ابن عمر رضى الله عنهما اذا بزق احدكم فليبزق على يساره
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தொழும்போது தம் இறை வனுடன் உரையாடுகிறார். எனவே, அவர் தமக்கு முன்னாலோ வலப் புறமாகவோ கண்டிப்பாக எச்சில் துப்ப வேண்டாம். எனினும், இடப் புறமாக தமது இடப் பாதத்தின் அடியில் துப்பட்டும்.9 இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد، حدثنا غندر، حدثنا شعبة، قال سمعت قتادة، عن انس رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " اذا كان في الصلاة فانه يناجي ربه، فلا يبزقن بين يديه ولا عن يمينه، ولكن عن شماله تحت قدمه اليسرى
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: மக்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழும்போது, சிறிதாக இருந்த காரணத் தால் தம் கீழங்கிகளைக் கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். எனவேதான், “ஆண்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலி ருந்து) தலையை உயர்த்த வேண்டாம்” என்று பெண்களிடம் கூறப்பட்டது.11 அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، اخبرنا سفيان، عن ابي حازم، عن سهل بن سعد رضى الله عنه قال كان الناس يصلون مع النبي صلى الله عليه وسلم وهم عاقدو ازرهم من الصغر على رقابهم، فقيل للنساء " لا ترفعن رءوسكن حتى يستوي الرجال جلوسا
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தொழும்போது, அவர்களுக்கு நான் ‘சலாம்’ கூறுவேன். அவர்கள் பதில் ‘சலாம்’ கூறுவார்கள். நாங்கள் (அபிசீனியாவிலிருந்து) திரும்பி வந்தபோது அவர்களுக்கு ‘சலாம்’ கூறினேன். எனக்கு அவர்கள் பதிலளிக்கவில்லை. தொழுது முடித்ததும், “நிச்சயமாக தொழுகைக்கு என்று சில அலுவல்கள் உள்ளன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن ابي شيبة، حدثنا ابن فضيل، عن الاعمش، عن ابراهيم، عن علقمة، عن عبد الله، قال كنت اسلم على النبي صلى الله عليه وسلم وهو في الصلاة فيرد على، فلما رجعنا سلمت عليه فلم يرد على وقال " ان في الصلاة شغلا