Loading...

Loading...
நூல்கள்
௭௬ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் எனக்கு அருளியுள்ள நல்வழி மற்றும் கல்விக்கு உதாரணமா கிறது, ஒரு நிலத்தில் பெய்த பெருமழை போன்றதாகும். அந்த நிலத்தில் நல்ல பகுதியும் உண்டு. அது நீரை உள்வாங்கிக் கொண்டது; அதில் புல்லும் அதிகமான பச்சைச் செடிகொடிகளும் முளைத்தன. அந்த நிலத்தில் தரிசும் உண்டு. அது நீரை (உள்வாங்காமல்) தேக்கிவைத்துக் கொண்டது. அதை இறைவன் மக்களுக் குப் பயன்படச்செய்தான். மக்கள் அருந் தினர்; (தம் கால்நடைகளுக்கும்) புகட்டினர்; விவசாயமும் செய்தனர். அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் பெய்தது. அது (ஒன்றுக்கும் உதவாத) வெறும் கட்டாந்தரை. அது தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளவும் இல்லை; அதில் புற்பூண்டுகளை முளைக்கவுமில்லை. இதுதான், அல்லாஹ்வின் மார்க்கத்தை விளங்கி, அல்லாஹ் எனக்கு அருளியதன் மூலம் பயனடைந்து, தாமும் கற்றுப் பிறருக்கும் கற்பித்தவருக்கு உதாரணமாகும்; அவ்வாறே, அல்லாஹ் எனக்கு அருளியதை ஏறிட்டுப் பார்க்காமலும், எனக்கு அருளப்பெற்ற அல்லாஹ்வின் நல் வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிற வனுக்கும் உவமையாகும்.17 இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அபூஅப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகின்றேன்: இஸ்ஹாக் பின் ராஹவைஹி (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவற்றில் இன்னும் சில நிலங்களும் உள்ளன. அவை தண்ணீரை உறிஞ்சிக்கொள்கின்றன” என்று இடம்பெற்றுள்ளது. (இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள ‘கீஆன்’ என்பதன் பன்மை ‘காஉ’ என்பதாகும்.) ‘காஉ’ என்பதற்கு ‘தண்ணீர் தேங்காத பூமி’ என்பது பொருள். ‘ஸஃப் ஸஃப்’ என்பதற்கு ‘சம நிலம்’ என்பது பொருள். அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، قال حدثنا حماد بن اسامة، عن بريد بن عبد الله، عن ابي بردة، عن ابي موسى، عن النبي صلى الله عليه وسلم قال " مثل ما بعثني الله به من الهدى والعلم كمثل الغيث الكثير اصاب ارضا، فكان منها نقية قبلت الماء، فانبتت الكلا والعشب الكثير، وكانت منها اجادب امسكت الماء، فنفع الله بها الناس، فشربوا وسقوا وزرعوا، واصابت منها طايفة اخرى، انما هي قيعان لا تمسك ماء، ولا تنبت كلا، فذلك مثل من فقه في دين الله ونفعه ما بعثني الله به، فعلم وعلم، ومثل من لم يرفع بذلك راسا، ولم يقبل هدى الله الذي ارسلت به ". قال ابو عبد الله قال اسحاق وكان منها طايفة قيلت الماء. قاع يعلوه الماء، والصفصف المستوي من الارض
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கல்வி அகற்றப்படுவதும், அறியாமை நிலைப்படுவதும், மது (மலிவாக) அருந்தப் படுவதும், விபசாரம் பரவலாய் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறி விக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا عمران بن ميسرة، قال حدثنا عبد الوارث، عن ابي التياح، عن انس، قال قال رسول الله صلى الله عليه وسلم " ان من اشراط الساعة ان يرفع العلم، ويثبت الجهل، ويشرب الخمر، ويظهر الزنا
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: எனக்குப் பின்னர் வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபி மொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப்போகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன்: கல்வி குறைந்துபோவதும், அறியாமை வெளிப்படுவதும், விபசாரம் (பரவலாக) நடப்பதும், ஐம்பது பெண்களுக்கு, அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து, ஆண்கள் குறைந்துபோவதும் மறுமை நாளின் அடையாளங்களில் அடங்கும்.20 அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا يحيى، عن شعبة، عن قتادة، عن انس، قال لاحدثنكم حديثا لا يحدثكم احد بعدي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " من اشراط الساعة ان يقل العلم، ويظهر الجهل، ويظهر الزنا، وتكثر النساء ويقل الرجال، حتى يكون لخمسين امراة القيم الواحد
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, (கனவில்) என்னிடம் ஒரு பால் கோப்பை கொண்டு வரப்பட்டது. (அதிலிருந்த பாலை) நான் (தாகம் தீர) அருந்தினேன். இறுதியில் என் நகக்கண்கள் ஊடே (பால்) வெளிவரக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த) மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன்” என்று கூறினார்கள். மக்கள். “இதற்கு (இந்தப் பாலுக்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்க, அதற்கு அவர்கள் ‘அறிவு’ என்று பதிலளித்தார்கள்.21 அத்தியாயம் :
حدثنا سعيد بن عفير، قال حدثني الليث، قال حدثني عقيل، عن ابن شهاب، عن حمزة بن عبد الله بن عمر، ان ابن عمر، قال سمعت رسول الله صلى الله عليه وسلم قال " بينا انا نايم اتيت بقدح لبن، فشربت حتى اني لارى الري يخرج في اظفاري، ثم اعطيت فضلي عمر بن الخطاب ". قالوا فما اولته يا رسول الله قال " العلم
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ‘மினா’வில் தம்மிடம் மக்கள் கேள்வி கேட்பதற்காக (ஒட்டகத்தின் மீது அமர்ந்து) இருந்தார்கள். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “நான் (சட்டம்) தெரியாமல் குர்பானி (பலி) கொடுப்பதற்கு முன்பே என் தலைமுடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; இப்போது குர்பானி கொடுத்துக்கொள்வீராக!” என்றார்கள். மற்றொருவர் வந்து, “நான் தெரியாமல் கல் எறிவற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “குற்றமில்லை; இப்போது கல் எறிந்து கொள்வீராக!” என்றார்கள். (அன்றைய தினம் பின்னால் செய்ய வேண்டிய) சில கிரியைகள் முன்னால் செய்யப்பட்டுவிட்டதாகவும் (முன்னால் செய்ய வேண்டிய) சில கிரியைகள் பின்னால் செய்யப்பட்டுவிட்டதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோதெல்லாம் “குற்றமில்லை; (விடுபட்டதைச்) செய்யுங்கள்” என்றே சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل، قال حدثني مالك، عن ابن شهاب، عن عيسى بن طلحة بن عبيد الله، عن عبد الله بن عمرو بن العاص، ان رسول الله صلى الله عليه وسلم وقف في حجة الوداع بمنى للناس يسالونه، فجاءه رجل فقال لم اشعر فحلقت قبل ان اذبح. فقال " اذبح ولا حرج ". فجاء اخر فقال لم اشعر، فنحرت قبل ان ارمي. قال " ارم ولا حرج ". فما سيل النبي صلى الله عليه وسلم عن شىء قدم ولا اخر الا قال افعل ولا حرج
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது ஒருவர், “நான் கல்லெறிவதற்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘குற்றமில்லை’ எனத் தமது கையால் சைகை காட்டினார்கள். மற்றொருவர், “குர்பானி கொடுப்பதற்குமுன்பே தலை முடியை மழித்துவிட்டேன்” என்றார். அதற்கும் நபி அவர்கள் ‘குற்றமில்லை’ எனத் தமது கையால் சைகை செய்தார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا وهيب، قال حدثنا ايوب، عن عكرمة، عن ابن عباس، ان النبي صلى الله عليه وسلم سيل في حجته فقال ذبحت قبل ان ارمي، فاوما بيده قال ولا حرج. قال حلقت قبل ان اذبح. فاوما بيده ولا حرج
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், “(உலக முடிவு நாளின்போது) கல்வி கைப்பற்றப்பட்டுவிடும்; அறியாமையும் குழப்பங்களும் வெளிப் பட்டு (பரவி)விடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும்” என்று கூறினார்கள். அப்போது ‘ஹர்ஜ்’ என்றால் என்ன, அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்கப்பட்டது. நபியவர்கள் தமது கையால் ‘இப்படி’ என்று கொலை செய்வதைப் போன்று பாவனை செய்து காட்டினார்கள். அத்தியாயம் :
حدثنا المكي بن ابراهيم، قال اخبرنا حنظلة بن ابي سفيان، عن سالم، قال سمعت ابا هريرة، عن النبي صلى الله عليه وسلم قال " يقبض العلم، ويظهر الجهل والفتن، ويكثر الهرج ". قيل يا رسول الله وما الهرج فقال هكذا بيده، فحرفها، كانه يريد القتل
அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (சூரிய கிரகணம் ஏற்பட்டபோது,) நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது (மக்களுடன்) ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “மக்களுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா (ரலி) அவர்கள் வானை நோக்கி(த் தமது கையால்) சைகை செய்தார்கள். அப்போது மக்கள் தொழுதுகொண்டிருந்தார்கள். எனவே, ‘சுப்ஹானல்லாஹ்’ (அல்லாஹ் தூயவன்) என்று ஆயிஷா கூறினார்கள். அப்போது “(இது மக்களைப் பாதிக்கும்) ஏதேனும் அடையாளமா?” என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் ‘ஆம்’ என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்றுகொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் கிறக்கமுற்றேன். (கிறக்கம் நீங்க) என் தலைமீது தண்ணீரை ஊற்றலானேன். (தொழுகை முடிந்ததும்) நபி (ஸல்) அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, பின்வருமாறு கூறினார்கள்: எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் இந்த இடத்தில் (தொழுகையில் இருந்தபோது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும், எனக்கு (பின்வருமாறு) இறைவனிடமிருந்து (வஹீ) அறிவிக்கப்பட்டது: நீங்கள் உங்கள் மண்ணறைகளில் (கப்றில் பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு ‘நிகரான’ அல்லது ‘நெருக்க மான’ அளவுக்குச் சோதிக்கப்படுவீர்கள். அப்போது (கப்றில் அடக்கம் செய்யப்பட்டவரிடம்), “இந்த மனிதரைப் பற்றி உமக்கு என்ன தெரியும்?” என்று (நபியாகிய என்னைப் பற்றிக்) கேட்கப் படும். அப்போது ‘இறைநம்பிக்கையாளர்’ அல்லது ‘உறுதி கொண்டவர்’ “இவர் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) ஆவார்கள்; அவர்கள் எங்களிடம் தெளிவான சான்றுகளையும் நல்வழியை யும் கொண்டுவந்தார்கள்; நாங்கள் (அவர்களது அழைப்பை) ஏற்றோம்; அவர்களைப் பின்பற்றினோம்; இவர் முஹம்மத் (ஸல்) அவர்கள்தான்” என்று மும்முறை கூறுவார். அப்போது (கேள்வி கேட்ட வானவர்களின் தரப்பிலிருந்து), “பயன் பெற்றவராக நீர் (நிம்மதியோடு) உறங்குவீராக!” என்றும் “நிச்சயமாக நீர் (இறைத்தூதரான) இவரைப் பற்றி இத்தகைய உறுதியான நம்பிக்கையுடையவராகவே (உலகில்) இருந்தீர் என்று நாங்கள் அறிந்திருந்தோம்” என்றும் கூறப்படும். ‘நயவஞ்சகனோ’ அல்லது ‘சந்தேகப்பேர்வழியோ’, “எனக்கு எதுவும் தெரியாது; மக்கள் (அவரைப் பற்றி) ஏதோ சொல்லக் கேட்டேன். எனவே, நானும் அது போன்று கூறினேன்” என்பான். -அறிவிப்பாளர் ஃபாத்திமா பின்த் அல்முன்திர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (‘நிகரான’ அல்லது ‘நெருக்கமான’ ஆகிய) இவற்றில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அவ்வாறே, (இறை நம்பிக்கையாளர் அல்லது உறுதி கொண்டவர் ஆகிய) இவ்விரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. மேலும், (நயவஞ்சகன் அல்லது சந்தேகப்பேர்வழி ஆகிய) இவ்விரண்டில் எதை அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. அத்தியாயம் :
அபூஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (பஸ்ராவின் ஆளுநராயிருந்த) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மக்களுக் கும் இடையே நான் (பாரசீக மொழியில்) மொழி பெயர்க்கக்கூடியவனாக இருந் தேன். (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அப்துல் கைஸ் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தபோது ‘இம் மக்கள் யார்?’ அல்லது ‘இத்தூதுக் குழுவினர் யார்?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு மக்கள், “(இவர்கள்) ரபீஆ குடும்பத்தார்” என்றார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் “இழிவுக்குள்ளாகாமலும் மனவருத்தத்திற்குள்ளாகாமலும் (தாமாக முன்வந்து இஸ்லாத்தை ஏற்ற நிலையில்) வருகை புரிந்துள்ள ‘சமுதாயமே’ அல்லது ‘தூதுக்குழுவே’ வருக!” என்று (வாழ்த்துக்) கூறினார்கள். அத்தூதுக் குழுவினர், “நாங்கள் வெகு தொலைவிலிருந்து உங்களிடம் வந்துள்ளோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே (எதிரிகளான) ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்களின் இந்தக் குடும்பத்தார் (நாம் சந்திக்க முடியாதபடி தடையாக) உள்ளனர். எனவே, (போர் நிறுத்தம் செய்யப்படும்) புனித மாதங்கள் தவிர மற்ற மாதங்களில் எங்களால் தங்களிடம் வர முடியவில்லை. எனவே, தெளிவான ஆணையொன்றை எங்களுக்குப் பிறப்பியுங்கள்! அதை நாங்கள் எங்களுக்குப் பின்னால் உள்ளவர்களுக்குத் தெரிவிப்போம். அ(தைச் செயல்படுத்துவ)தன் மூலம் நாங்களும் சொர்க்கம் செல்வோம்” என்று கேட்டுக்கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நான்கு விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்; நான்கு விஷயங்களை அவர்களுக்குத் தடை செய்தார்கள். 1. வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் ஒருவனையே நம்புமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, “அல்லாஹ் ஒருவனையே நம்புதல் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் “அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்” என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ் வின் தூதர் என்றும் உறுதி கூறுவது. 2. தொழுகையைக் கடைப்பிடிப்பது. 3. ஸகாத் வழங்குவது. 4. ரமளான் மாதம் நோன்பு நோற்பது. (இவையன்றி,) போரில் கிடைக்கும் பொருட்களிலிருந்து ஐந்தில் ஒரு பாகத்தை (அல்லாஹ்வுக்காக) நீங்கள் வழங்க வேண்டும்” என்று கூறினார்கள். (மது ஊற்றிவைக்கப் பயன்படும்) சுரைக்காய் குடுவை, மண்சாடி, தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றைப் பயன்படுத்த வேண்டாமென அவர்களுக்குத் தடை விதித்து, “இவற்றை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்; உங்களுக்குப் பின்னால் இருப்போருக்கு அறிவித்துவிடுங்கள்” என்றும் சொன்னார்கள். அறிவிப்பாளர்களில் ஒருவரான ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும் மரப் பீப்பாய்’ என்றும் நபி (ஸல்) அவர்கள் சிலவேளை குறிப்பிட்டுள்ளார்கள்.22 அத்தியாயம் :
حدثنا محمد بن بشار، قال حدثنا غندر، قال حدثنا شعبة، عن ابي جمرة، قال كنت اترجم بين ابن عباس وبين الناس فقال ان وفد عبد القيس اتوا النبي صلى الله عليه وسلم فقال " من الوفد او من القوم ". قالوا ربيعة. فقال " مرحبا بالقوم او بالوفد غير خزايا ولا ندامى ". قالوا انا ناتيك من شقة بعيدة، وبيننا وبينك هذا الحى من كفار مضر، ولا نستطيع ان ناتيك الا في شهر حرام فمرنا بامر نخبر به من وراءنا، ندخل به الجنة. فامرهم باربع، ونهاهم عن اربع امرهم بالايمان بالله عز وجل وحده. قال " هل تدرون ما الايمان بالله وحده ". قالوا الله ورسوله اعلم. قال " شهادة ان لا اله الا الله وان محمدا رسول الله، واقام الصلاة، وايتاء الزكاة، وصوم رمضان، وتعطوا الخمس من المغنم ". ونهاهم عن الدباء والحنتم والمزفت. قال شعبة ربما قال النقير، وربما قال المقير. قال " احفظوه واخبروه من وراءكم
உக்பா பின் அல்ஹாரிஸ் (ரலி) கூறியதாவது: நான் அபூஇஹாப் பின் அஸீஸ் (ரலி) அவர்களின் மகளை மணந்துகொண் டேன். அப்போது ஒரு பெண்மணி என்னிடம் வந்து “உக்பாவே! உங்களுக்கும் நீங்கள் மணந்துகொண்டுள்ள பெண்ணுக் கும் (உங்கள் மழலைப் பருவத்தில்) நான் பாலூட்டியிருக்கிறேன் (இந்த வகையில் நீங்கள் இருவரும் பால்குடிச் சகோதரரர் கள் ஆவீர்கள்)” என்று கூறினார். நான், “நீங்கள் எனக்குப் பாலூட்டியது எனக்குத் தெரியாது; (நான் மணமுடித்துக் கொண்டபோது) நீங்கள் எனக்கு (இதைத்) தெரிவிக்கவுமில்லை” என்று கூறினேன். ஆகவே, (இப்பிரச்சினைக்குத் தீர்வு காண மக்காவிலிருந்து) நான் மதீனாவி லிருந்த நபி (ஸல்) அவர்களை நோக்கிப் பயணம் செய்து, அவர்களிடம் (இது குறித்து) வினவினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “(இவ்வாறு) கூறப்பட்டுவிட்ட பிறகு எப்படி (நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும்)?” என்று கூறினார்கள். ஆகவே, நான் அவளைவிட்டுப் பிரிந்து விட்டேன். அவளும் வேறொரு கணவனை மணந்துகொண்டாள். அத்தியாயம் :
حدثنا محمد بن مقاتل ابو الحسن، قال اخبرنا عبد الله، قال اخبرنا عمر بن سعيد بن ابي حسين، قال حدثني عبد الله بن ابي مليكة، عن عقبة بن الحارث، انه تزوج ابنة لابي اهاب بن عزيز، فاتته امراة فقالت اني قد ارضعت عقبة والتي تزوج بها. فقال لها عقبة ما اعلم انك ارضعتني ولا اخبرتني. فركب الى رسول الله صلى الله عليه وسلم بالمدينة فساله، فقال رسول الله صلى الله عليه وسلم " كيف وقد قيل ". ففارقها عقبة، ونكحت زوجا غيره
உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நானும் அன்சாரிகளில் ஒருவரான என் அண்டை வீட்டுக்காரரும் பனூ உமய்யா பின் ஸைத் குலத்தாரின் குடியிருப்பில் வசித்துவந்தோம். -அது மதீனாவின் மேடான கிராமப் பகுதிகளில் ஒன்றாகும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களின் அவைக்கு) நாங்கள் (இருவரும்) முறைவைத்துச் சென்று கொண்டிருந்தோம். அவர் ஒரு நாள் செல்வார்; நான் ஒரு நாள் செல்வேன். நான் சென்றால், நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (வஹீ) உள்ளிட்ட அன்றைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டுவந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அவ்வாறே, அவர் சென்று வரும் போதும் அதைப் போன்றே செய்வார். (ஒரு நாள்) தம்முடைய முறை வந்தபோது, என் அன்சாரி நண்பர் (சென்றுவிட்டு வந்து) என் வீட்டுக் கதவைப் பலமாகத் தட்டி னார். “அவர் (உமர்) அங்கே இருக்கி றாரா?” என்றும் கேட்டார். நான் பதறிப்போய் அவரை நோக்கி வெளியே வந்தேன். அப்போது அவர் (நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டார்கள் என்ற வதந்தியைக் கேள்விப்பட்டு) “ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டிருக்கிறது” என்றார். உடனே நான் (என் மகள்) ஹஃப்ஸாவிடம் சென்றேன். அங்கே அவர் அழுதுகொண்டிருந்தார். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களையெல்லாம் மணவிலக்குச் செய்துவிட்டார்களா?” என்று நான் கேட்டேன். அதற்கு அவர், “எனக்குத் தெரியவில்லை” என்றார். பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, “நீங்கள் உங்கள் துணைவியரை மணவிலக்குச் செய்துவிட்டீர்களா?” என்று நின்றுகொண்டே கேட்டேன். நபியவர்கள் ‘இல்லை’ என்றார்கள். உடனே நான் ‘அல்லாஹ் மிகப் பெரியவன்’ (அல்லாஹு அக்பர்) என்று சொன்னேன். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، ح قال ابو عبد الله وقال ابن وهب اخبرنا يونس، عن ابن شهاب، عن عبيد الله بن عبد الله بن ابي ثور، عن عبد الله بن عباس، عن عمر، قال كنت انا وجار، لي من الانصار في بني امية بن زيد، وهى من عوالي المدينة، وكنا نتناوب النزول على رسول الله صلى الله عليه وسلم ينزل يوما وانزل يوما، فاذا نزلت جيته بخبر ذلك اليوم من الوحى وغيره، واذا نزل فعل مثل ذلك، فنزل صاحبي الانصاري يوم نوبته، فضرب بابي ضربا شديدا. فقال اثم هو ففزعت فخرجت اليه فقال قد حدث امر عظيم. قال فدخلت على حفصة فاذا هي تبكي فقلت طلقكن رسول الله صلى الله عليه وسلم قالت لا ادري. ثم دخلت على النبي صلى الله عليه وسلم فقلت وانا قايم اطلقت نساءك قال " لا ". فقلت الله اكبر
அபூமஸ்ஊத் (உக்பா பின் அம்ர்) அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் (நபி (ஸல்) அவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! இன்ன மனிதர் (இமாமாக நின்று தொழுகை நடத்தும் போது) தொழுகையை எங்களுக்கு நீட்டிக்கொண்டே போவதால் என்னால் பெரும்பாலும் (கூட்டுத்) தொழுகையை அடைந்துகொள்ள முடிவதில்லை” என்று கூறினார். (இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் உரையாற்றலானார்கள்.) முன் எப்போதும் நான் கண்டிராத அளவுக்குக் கடும் கோபத்தை அன்றைய உரையில் நான் நபி (ஸல்) அவர்களிடம் கண்டேன். (அவ்வுரையில்) “மக்களே! நீங்கள் வெறுப்பூட்டுபவர்களாகவே உள்ளீர்கள். யார் மக்களுக்குத் தொழுகை நடத்தினா லும் அவர் சுருக்கமா(கவே தொழுவி)க் கட்டும். ஏனெனில், (தொழவந்த) மக்களில் நோயாளிகள், பலவீனமானவர்கள், (பல்வேறு) அலுவல் உடையோர் இருப்பார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن كثير، قال اخبرنا سفيان، عن ابن ابي خالد، عن قيس بن ابي حازم، عن ابي مسعود الانصاري، قال قال رجل يا رسول الله، لا اكاد ادرك الصلاة مما يطول بنا فلان، فما رايت النبي صلى الله عليه وسلم في موعظة اشد غضبا من يوميذ فقال " ايها الناس، انكم منفرون، فمن صلى بالناس فليخفف، فان فيهم المريض والضعيف وذا الحاجة
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் (வந்து), கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதன் முடிச்சை’ அல்லது ‘அதன் பையையும் அதன் உறையையும்’ (அதன் முழு விவரங்களை) நீ அறிந்து வைத்துக்கொள். பிறகு ஓராண்டுக் காலம் அதைப் பற்றி (மக்களுக்கு) அறிவிப்புச் செய். அதற்குப் பிறகு அதை நீ பயன் படுத்திக்கொள். அதன் உரிமையாளர் வந்துவிட்டால் அதை அவரிடம் கொடுத்து விடு” என்றார்கள். “அப்படியானால் வழிதவறி வந்துவிட்ட ஒட்டகம் (பற்றிய சட்டம் என்ன)?” என்று அம்மனிதர் கேட்டார். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள் கோபப்பட்டார்கள். எந்த அளவுக் கென்றால், ‘அவர்களின் கன்னங்கள் இரண்டும் சிவந்துவிட்டன’ அல்லது ‘அவர்களின் முகம் சிவந்துவிட்டது’. பிறகு, “அதைப் பற்றி உமக்கு என்ன (அக்கறை)? அதனுடன்தான் அதன் தண்ணீர் பையும் அதன் கால் குளம்புகளும் உள்ளனவே! அது (நீரருந்த தானாக) நீர் நிலைக்குச் செல்கிறது; மரத்தில் (இலை தழைகளை) மேய்ந்துகொள்கிறது. எனவே, அதை அதன் உரிமையாளரே பிடித்துக் கொள்ளும்வரை (அதன் போக்கில்) விட்டுவிடு” என்று கூறினார்கள். “அப்படியானால் வழிதவறி வந்த ஆடு (குறித்து என்ன சொல்கிறீர்கள்)?” என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “அது உனக்கு உரியது; அல்லது (உரிமை யாளரோ மற்றவரோ அதைப் பிடித்தால் அது) உம்முடைய அந்தச் சகோதரருக் குரியது. (அவ்வாறு யாருமே அதைப் பிடித்துச் செல்லாவிட்டால்) ஓநாய்க்கு உரியது” என்று கூறினார்கள். அத்தியாயம் :
حدثنا عبد الله بن محمد، قال حدثنا ابو عامر، قال حدثنا سليمان بن بلال المديني، عن ربيعة بن ابي عبد الرحمن، عن يزيد، مولى المنبعث عن زيد بن خالد الجهني، ان النبي صلى الله عليه وسلم ساله رجل عن اللقطة فقال " اعرف وكاءها او قال وعاءها وعفاصها، ثم عرفها سنة، ثم استمتع بها، فان جاء ربها فادها اليه ". قال فضالة الابل فغضب حتى احمرت وجنتاه او قال احمر وجهه فقال " وما لك ولها معها سقاوها وحذاوها، ترد الماء، وترعى الشجر، فذرها حتى يلقاها ربها ". قال فضالة الغنم قال " لك او لاخيك او للذيب
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களுக்குப் பிடிக்காத சில விஷயங்கள் பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டது. இவ்வாறு அவர்களிடம் அதிகமாகக் கேள்விகள் கேட்கப்பட்டபோது அவர்கள் கோபப்பட்டார்கள். பின்னர் மக்களிடம் “நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்” என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், “என் தந்தை யார்?” என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் “ஹுதாஃபாதான் உன் தந்தை” என்று பதிலளித்தார்கள். உடனே மற்றொருவர் எழுந்து “என் தந்தை யார், அல்லாஹ்வின் தூதரே?’ என்று கேட்க, “உம்முடைய தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த ‘சாலிம்’ தான்” என்றார்கள். (இம்மாதிரியான கேள்விகளால்) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் தென்பட்ட (கோபத்)தைக் கண்ட உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மெய் யாகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகி றோம்” என்றார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، قال حدثنا ابو اسامة، عن بريد، عن ابي بردة، عن ابي موسى، قال سيل النبي صلى الله عليه وسلم عن اشياء كرهها، فلما اكثر عليه غضب، ثم قال للناس " سلوني عما شيتم ". قال رجل من ابي قال " ابوك حذافة ". فقام اخر فقال من ابي يا رسول الله فقال " ابوك سالم مولى شيبة ". فلما راى عمر ما في وجهه قال يا رسول الله، انا نتوب الى الله عز وجل
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் தமது வீட்டிலிருந்து) வெளியே வந்தபோது, (மக்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபப்படும் விதத்தில் கேள்விக்குமேல் கேள்வி கேட்டனர். அப்போது) அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா (ரலி) அவர்கள் எழுந்து, “என் தந்தை யார்?” என்று கேட்டார். “ஹுதாஃபாதான் உன் தந்தை” என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பின்பு “என்னிடம் கேளுங்கள்” என்று அடிக்கடி கூறினார்கள். (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமாற்றத்தைக் கண்ட) உடன் உமர் (ரலி) அவர்கள் (நபியருகில்) முழங்கால்களில் மண்டியிட்டு அமர்ந்து, “நாங்கள் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராகவும் மனப்பூர்வமாக ஏற்றோம்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் மௌனமானார்கள். அத்தியாயம் :
حدثنا ابو اليمان، قال اخبرنا شعيب، عن الزهري، قال اخبرني انس بن مالك، ان رسول الله صلى الله عليه وسلم خرج، فقام عبد الله بن حذافة فقال من ابي فقال " ابوك حذافة ". ثم اكثر ان يقول " سلوني ". فبرك عمر على ركبتيه فقال رضينا بالله ربا، وبالاسلام دينا، وبمحمد صلى الله عليه وسلم نبيا، فسكت
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் முகமன் (சலாம்) கூறினால், மூன்று முறை கூறுவார்கள்; ஒரு விஷயத்தைச் சொன்னால், அதை மூன்று முறை (திரும்பச்) சொல்வார்கள். அத்தியாயம் :
حدثنا عبدة، قال حدثنا عبد الصمد، قال حدثنا عبد الله بن المثنى، قال حدثنا ثمامة بن عبد الله، عن انس، عن النبي صلى الله عليه وسلم انه كان اذا سلم سلم ثلاثا، واذا تكلم بكلمة اعادها ثلاثا
அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத் தைச் சொன்னால், தாம் கூறுவது நன்கு புரிந்துகொள்ளப்பட வேண்டும் என்பதற் காக மும்முறை அதைத் திரும்பத் திரும்பச் சொல்வார்கள். மக்களிடம் வந்தால் அவர்களுக்கு மும்முறை முகமன் (சலாம்) சொல்வார்கள். அத்தியாயம் :
حدثنا عبدة بن عبد الله، حدثنا عبد الصمد، قال حدثنا عبد الله بن المثنى، قال حدثنا ثمامة بن عبد الله، عن انس، عن النبي صلى الله عليه وسلم انه كان اذا تكلم بكلمة اعادها ثلاثا حتى تفهم عنه، واذا اتى على قوم فسلم عليهم سلم عليهم ثلاثا
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் மேற்கொண்ட ஒரு பயணத்தில் அல்லாஹ்வின் (ஸல்) அவர்கள் எங்களுக்குப் பின்னே (பிந்தி) வந்துகொண்டிருந்தார்கள். அஸ்ர் தொழுகையின் நேரம் எங்களை நெருங்கிவிட்ட நிலையில் நாங்கள் (அவசர அவசரமாக) அங்கத் தூய்மை (உளூ) செய்துகொண்டிருக்கும்போது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் (கால்களை முறைப்படி கழுவாமல்) எங்கள் கால்கள் மீது தண்ணீர் தொட்டுத் தடவி (மஸ்ஹு செய்து)கொள்ளலானோம். (அதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள், “குதிகால்க(ளைச் சரியாகக் கழுவாதவர்க)ளுக்கு நரகம்தான்” என்று இரண்டு அல்லது மூன்று தடவை தமது குரலை உயர்த்திச் சொன்னார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، قال حدثنا ابو عوانة، عن ابي بشر، عن يوسف بن ماهك، عن عبد الله بن عمرو، قال تخلف رسول الله صلى الله عليه وسلم في سفر سافرناه فادركنا وقد ارهقنا الصلاة صلاة العصر ونحن نتوضا، فجعلنا نمسح على ارجلنا، فنادى باعلى صوته " ويل للاعقاب من النار ". مرتين او ثلاثا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று பேருக்கு (அல்லாஹ்விடத் தில்) இரட்டை நன்மைகள் கிடைக்கும். 1. வேதக்காரர்களில் ஒருவர், தம் (சமூகத்திற்கு நியமிக்கப்பட்ட) இறைத் தூதர்மீதும் (இறுதித் தூதர்) முஹம்மத் (ஸல்) அவர்கள்மீதும் நம்பிக்கை கொண்டார். 2. ஓர் அடிமை, அல்லாஹ்வின் கடமைகளையும் தம் உரிமையாளரின் கடமைகளையும் நிறைவேற்றினான். 3. ஒருவரிடம் அடிமைப் பெண்ணொருத்தி இருந்தாள். அவளுக்கு அவர் ஒழுக்கம் கற்பித்து, அதை செம்மையாகச் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அதையும் செம்மையாகச் செய்தார். பிறகு அவளை அடிமைத் தளையிலிருந்து விடுதலை செய்து, அவளை அவரே மணந்தும்கொண்டார். (இம்மூவருக்கும் இரட்டை நன்மைகள் உண்டு.) இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவ ரான) சாலிஹ் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த நபிமொழியை அறிவித்த) பின்னர் ஆமிர் அஷ்ஷஅபீ (ரஹ்) அவர்கள் (தம்மிடம் சட்ட விளக்கம் கேட்.டுவந்த ‘குராசான்’வாசி ஒருவரிடம்), “(சிரமம்) ஏதுமில்லாமலேயே இந்தக் கல்வியை நாம் உங்களுக்கு வழங்கியிருக் கிறோம். இதைவிடச் சிறிய பிரச்சினை களுக்காக மதீனாவுக்கு (வாகனங்களில்) பயணம் மேற்கொள்ளப்பட்டது உண்டு” என்று கூறினார்கள். அத்தியாயம் :
اخبرنا محمد هو ابن سلام حدثنا المحاربي، قال حدثنا صالح بن حيان، قال قال عامر الشعبي حدثني ابو بردة، عن ابيه، قال قال رسول الله صلى الله عليه وسلم " ثلاثة لهم اجران رجل من اهل الكتاب امن بنبيه، وامن بمحمد صلى الله عليه وسلم والعبد المملوك اذا ادى حق الله وحق مواليه، ورجل كانت عنده امة {يطوها} فادبها، فاحسن تاديبها، وعلمها فاحسن تعليمها، ثم اعتقها فتزوجها، فله اجران ". ثم قال عامر اعطيناكها بغير شىء، قد كان يركب فيما دونها الى المدينة
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பெருநாள் தினத்தில் உரையாற்றி விட்டு) பெண்கள் செவியுறும் விதத்தில் தாம் பேசவில்லை என்று எண்ணியவர்களாக (பெண்கள் இருக்கும் பகுதிக்கு) பிலால் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். அங்கு பெண்களுக்கு அறிவுரை கூறிவிட்டு, தர்மம் செய்யும்படி வலியுறுத்தினார் கள். அங்கிருந்த பெண்கள் தங்கள் காதணிகளையும் மோதிரங்களையும் (கழற்றிப்) போடலானார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையின் ஓரத்தில் அவற்றைப் பெற்றுக்கொண்டிருந்தார்கள் என நான் உறுதியளிக்கிறேன். (இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அய்யூப் அஸ்ஸக்தீயானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ‘நான் உறுதியளிக்கிறேன்’ என்று அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்களா, அல்லது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் இஸ்மாயீல் பின் உலய்யா (ரஹ்) அவர் களது அறிவிப்பில், ‘நான் உறுதியளிக்கி றேன்’ என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக (ஐயப்பாடின்றி) அறிவிக்கப் பட்டுள்ளது. அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، قال حدثنا شعبة، عن ايوب، قال سمعت عطاء، قال سمعت ابن عباس، قال اشهد على النبي صلى الله عليه وسلم او قال عطاء اشهد على ابن عباس ان رسول الله صلى الله عليه وسلم خرج ومعه بلال، فظن انه لم يسمع النساء فوعظهن، وامرهن بالصدقة، فجعلت المراة تلقي القرط والخاتم، وبلال ياخذ في طرف ثوبه. وقال اسماعيل عن ايوب عن عطاء وقال عن ابن عباس اشهد على النبي صلى الله عليه وسلم
حدثنا موسى بن اسماعيل، قال حدثنا وهيب، قال حدثنا هشام، عن فاطمة، عن اسماء، قالت اتيت عايشة وهي تصلي فقلت ما شان الناس فاشارت الى السماء، فاذا الناس قيام، فقالت سبحان الله. قلت اية فاشارت براسها، اى نعم، فقمت حتى تجلاني الغشى، فجعلت اصب على راسي الماء، فحمد الله عز وجل النبي صلى الله عليه وسلم واثنى عليه، ثم قال " ما من شىء لم اكن اريته الا رايته في مقامي حتى الجنة والنار، فاوحي الى انكم تفتنون في قبوركم، مثل او قريبا لا ادري اى ذلك قالت اسماء من فتنة المسيح الدجال، يقال ما علمك بهذا الرجل فاما المومن او الموقن لا ادري بايهما قالت اسماء فيقول هو محمد رسول الله جاءنا بالبينات والهدى، فاجبنا واتبعنا، هو محمد. ثلاثا، فيقال نم صالحا، قد علمنا ان كنت لموقنا به، واما المنافق او المرتاب لا ادري اى ذلك قالت اسماء فيقول لا ادري، سمعت الناس يقولون شييا فقلته