Loading...

Loading...
நூல்கள்
௨௭ ஹதீஸ்கள்
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நேர்மையான காசாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார். இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن ابي بردة، قال اخبرني جدي ابو بردة، عن ابيه ابي موسى الاشعري رضى الله عنه قال قال النبي صلى الله عليه وسلم " الخازن الامين الذي يودي ما امر به طيبة نفسه احد المتصدقين
அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (ஒருமுறை) நபி (ஸல்) அவர் களை நோக்கிச் சென்றேன். அப்போது என்னுடன் (என்) ‘அஷ்அரீ’ குலத்தைச் சேர்ந்த இருவரும் இருந்தனர். (அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் அரசாங்கப் பதவி கேட்டார்கள்; நான் (நபி (ஸல்) அவர்களிடம்), ‘‘இவ்விருவரும் பதவி கேட்பார்கள் என்பது (முன்பே) எனக்குத் தெரியாது” என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், எவர் பதவியை விரும்புகிறாரோ அவருக்கு நாம் ‘ஒருபோதும் பதவி கொடுக்க மாட்டோம்’ அல்லது ‘பதவி கொடுப்ப தில்லை’ என்று பதிலளித்தார்கள். அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يحيى، عن قرة بن خالد، قال حدثني حميد بن هلال، حدثنا ابو بردة، عن ابي موسى رضى الله عنه قال اقبلت الى النبي صلى الله عليه وسلم ومعي رجلان من الاشعريين، فقلت ما علمت انهما يطلبان العمل. فقال " لن او لا نستعمل على عملنا من اراده
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், ‘‘அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்தததில்லை” என்று (ஒருமுறை) கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘‘நீங்களுமா?” என்று கேட்டார்கள். ‘‘ஆம். மக்காவாசிகள் கொடுத்த சில ‘கீராத்’கள் கூலிக்காக நான் ஆடு மேய்த்திருக்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித் தார்கள்.4 அத்தியாயம் :
حدثنا احمد بن محمد المكي، حدثنا عمرو بن يحيى، عن جده، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " ما بعث الله نبيا الا رعى الغنم ". فقال اصحابه وانت فقال " نعم كنت ارعاها على قراريط لاهل مكة
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்காவிலிருந்து புலம்பெயர்ந்து மதீனாவுக்குச் சென்றபோது) நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் ‘பனுத் தீல்’ குலத்தைச் சேர்ந்தவரும் பின்னர் பனூ அப்தி பின் அதீ குலத்தைச் சேர்ந்தவருமான ஒரு மனிதரை பயண வழிகாட்டியாக இருக்கக் கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் திறமையான வழிகாட்டியாக இருந்தார். அம்மனிதர் ஆஸ் பின் வாயிலின் குடும்பத்தாருடன் நட்புறவு ஒப்பந்தம் செய்திருந்தார்; மேலும், அவர், குறைஷி இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் அவரை நம்பித் தம்முடைய இரு ஊர்தி ஒட்டகங்களை அவரிடம் ஒப்படைத்து, மூன்று இரவுகள் கழித்து ‘ஸவ்ர்’ குகைக்கு வந்து சேருமாறு வாக்குறுதி வாங்கியிருந்தார்கள். அம்மனிதர் மூன்றாம் நாள் காலையில் அவ்விருவரின் ஊர்தி ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (மதீனாவை நோக்கிப்) புறப்பட்டார்கள். அவர்களுடன் (அபூபக்ரின் முன்னாள் அடிமையான) ஆமிர் பின் ஃபுஹைரா என்பாரும் சேர்ந்துகொண்டார். ‘பனுத் தீல்’ கூட்டத்தைச் சேர்ந்த அந்த வழிகாட்டி அம்மூவரையும் மக்காவிற்குக் கீழே கடற் கரை வழியாக அழைத்துச் சென்றார். அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام، عن معمر، عن الزهري، عن عروة بن الزبير، عن عايشة رضى الله عنها واستاجر النبي صلى الله عليه وسلم وابو بكر رجلا من بني الديل ثم من بني عبد بن عدي هاديا خريتا الخريت الماهر بالهداية قد غمس يمين حلف في ال العاص بن وايل، وهو على دين كفار قريش، فامناه فدفعا اليه راحلتيهما، ووعداه غار ثور بعد ثلاث ليال، فاتاهما براحلتيهما، صبيحة ليال ثلاث، فارتحلا، وانطلق معهما عامر بن فهيرة، والدليل الديلي فاخذ بهم اسفل مكة وهو طريق الساحل
நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் (மதீனா பயணத்தில்) ‘பனுத் தீல்’ குலத்தைச் சேர்ந்த ஒருவரை (பயண வழிகாட்டுவதற்காகக்) கூலிக்கு அமர்த்தினார்கள். அவர் குறைஷி இறைமறுப்பாளர்களின் மதத்தில் இருந்தார். நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) அவர்களும் தம்முடைய இரு ஊர்தி ஒட்டகங்களை அவரிடம் கொடுத்து ‘‘மூன்று இரவுகள் கழித்து (எங்கள் ஒட்டகங்களுடன்) ‘ஸவ்ர்’ குகைக்கு வர வேண்டும்” என்று அவரிடம் வாக்குறுதி வாங்கினார்கள். அவ்வாறே அவரும் மூன்றாம் நாள் காலையில் அவர்களின் ஊர்தி ஒட்டகங்களுடன் அவர்களிடம் வந்தார். அத்தியாயம் :
حدثنا يحيى بن بكير، حدثنا الليث، عن عقيل، قال ابن شهاب فاخبرني عروة بن الزبير، ان عايشة رضى الله عنها زوج النبي صلى الله عليه وسلم قالت واستاجر رسول الله صلى الله عليه وسلم وابو بكر رجلا من بني الديل، هاديا خريتا وهو على دين كفار قريش، فدفعا اليه راحلتيهما، وواعداه غار ثور بعد ثلاث ليال براحلتيهما صبح ثلاث
حدثنا يعقوب بن ابراهيم، حدثنا اسماعيل ابن علية، اخبرنا ابن جريج، قال اخبرني عطاء، عن صفوان بن يعلى، عن يعلى بن امية رضى الله عنه قال غزوت مع النبي صلى الله عليه وسلم جيش العسرة فكان من اوثق اعمالي في نفسي، فكان لي اجير، فقاتل انسانا، فعض احدهما اصبع صاحبه، فانتزع اصبعه، فاندر ثنيته فسقطت، فانطلق الى النبي صلى الله عليه وسلم فاهدر ثنيته وقال " افيدع اصبعه في فيك تقضمها قال احسبه قال كما يقضم الفحل ". قال ابن جريج وحدثني عبد الله بن ابي مليكة، عن جده، بمثل هذه الصفة ان رجلا، عض يد رجل، فاندر ثنيته، فاهدرها ابو بكر رضى الله عنه
حدثنا يعقوب بن ابراهيم، حدثنا اسماعيل ابن علية، اخبرنا ابن جريج، قال اخبرني عطاء، عن صفوان بن يعلى، عن يعلى بن امية رضى الله عنه قال غزوت مع النبي صلى الله عليه وسلم جيش العسرة فكان من اوثق اعمالي في نفسي، فكان لي اجير، فقاتل انسانا، فعض احدهما اصبع صاحبه، فانتزع اصبعه، فاندر ثنيته فسقطت، فانطلق الى النبي صلى الله عليه وسلم فاهدر ثنيته وقال " افيدع اصبعه في فيك تقضمها قال احسبه قال كما يقضم الفحل ". قال ابن جريج وحدثني عبد الله بن ابي مليكة، عن جده، بمثل هذه الصفة ان رجلا، عض يد رجل، فاندر ثنيته، فاهدرها ابو بكر رضى الله عنه
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மூசா (அலை), களிர் (அலை) ஆகிய) இருவரும் (ஒரு கிராமத்திற்குச்) சென்றார் கள். (அவர்களுக்கு அவ்வூரார் உணவளிக்க மறுத்துவிட்டனர்.) அங்கு ஒரு சுவர் கீழே விழலாமா என யோசித் துக்கொண்டிருந்தது. உடனே (களிர்) தமது கையை உயர்த்தினார். அது நேராக நின்று விட்டது. அப்போது மூசா (அலை) அவர்கள் களிர் (அலை) அவர்களிடம், ‘‘நீர் விரும்பியிருந்தால் இதற்குக் கூலி வாங்கி யிருக்கலாமே!” என்று கூறினார்கள். இதை உபை பின் கஅப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. ‘‘களிர் (அலை) அவர்கள் தமது கையை உயர்த்தினார்கள்” என்று சொன்ன போது, அறிவிப்பாளர் சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் (களிர் (அலை) அவர்களைப் போல) கையை உயர்த்திக் காட்டி, ‘இப்படி’ என்று கூறினார்கள். ‘‘சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள், ‘களிர் (அலை) அவர்கள் சுவரைத் தமது கரத்தால் தடவ, அதுநேராக நின்றுவிட்டது’ என்று கூறியதாகவே நான் நினைக்கிறேன்” என்று அறிவிப்பாளர் யஅலா பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள். மேலும், சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (நீர் விரும்பியிருந்தால் இதற்குக்) கூலி பெற்றிருக்கலாம்; அதை நாம் (நமது உணவுக்குப்) பயன்படுத்தியிருக்கலாம் (என்று மூசா (அலை) அவர்கள் கூறினார்கள்). அத்தியாயம் :
حدثنا ابراهيم بن موسى، اخبرنا هشام بن يوسف، ان ابن جريج، اخبرهم قال اخبرني يعلى بن مسلم، وعمرو بن دينار، عن سعيد بن جبير، يزيد احدهما على صاحبه، وغيرهما قال قد سمعته يحدثه عن سعيد قال قال لي ابن عباس رضى الله عنهما حدثني ابى بن كعب قال قال رسول الله صلى الله عليه وسلم " فانطلقا فوجدا جدارا يريد ان ينقض ". قال سعيد بيده هكذا، ورفع يديه فاستقام، قال يعلى حسبت ان سعيدا قال. فمسحه بيده فاستقام {قال} "لو شيت لاتخذت عليه اجرا ". قال سعيد اجرا ناكله
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: உங்களுக்கும் (உங்களுக்குமுன்) வேதம் வழங்கப்பட்ட இரண்டு சமுதாயத் தாருக்கும் உவமையானது, ஒரு மனிதரால் வேலைக்கு அமர்த்தப்பட்ட கூலியாட்களின் நிலையாகும். ‘‘ஒரு கீராத் கூலிக்குக் காலையிலிருந்து நண்பகல்வரை எனக்கு வேலை செய்பவர் யார்?” என்று அம்மனிதர் கேட்டார். யூதர்கள் (அவ்வாறு) வேலை செய்தார்கள். பிறகு, ‘‘நண்பகலிலிருந்து அஸ்ர் தொழுகைவரை ஒரு கீராத் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று அவர் கேட்டார். கிறித்தவர்கள் (அவ்வாறு) வேலை செய்தார்கள். பிறகு, ‘‘அஸ்ரிலிருந்து சூரியன் மறையும்வரை இரண்டு ‘கீராத்’கள் கூலிக்கு எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று அவர் கேட்டார். (முஸ்லிம்களான) நீங்கள்தான் அ(ப்படி வேலை செய்த)வர்கள். இதனால் யூதர்களும் கிறித்தவர் களும் கோபமுற்று, ‘‘நாங்கள் செய்த வேலை அதிகம்; கூலியோ குறைவு; ஏன்?” என்று கேட்டனர். அதற்கு அவர், ‘‘உங்களுக்கு உரியதை நான் குறைத்திருக்கிறேனா?” என்று கேட்டார். அவர்கள் ‘‘இல்லை” என்றனர். ‘‘சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது எனது (தனிப்பட்ட) அருளாகும்; நான் விரும்பியவருக்கு அதைக் கொடுப்பேன்” என்று அவர் கூறினார்.7 இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا سليمان بن حرب، حدثنا حماد، عن ايوب، عن نافع، عن ابن عمر رضى الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال " مثلكم ومثل اهل الكتابين كمثل رجل استاجر اجراء فقال من يعمل لي من غدوة الى نصف النهار على قيراط فعملت اليهود، ثم قال من يعمل لي من نصف النهار الى صلاة العصر على قيراط فعملت النصارى ثم، قال من يعمل لي من العصر الى ان تغيب الشمس على قيراطين فانتم هم، فغضبت اليهود والنصارى، فقالوا ما لنا اكثر عملا، واقل عطاء قال هل نقصتكم من حقكم قالوا لا. قال فذلك فضلي اوتيه من اشاء
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கும் யூதர்கள் மற்றும் கிறித்தவர்களுக்கும் உவமையானது, ஒரு மனிதர் வேலை வாங்கிய பணியாளர்களின் நிலையாகும். ‘‘ஒவ்வொரு கீராத் கூலிக்கு (காலையிலிருந்து) நண்பகல்வரை எனக்காக வேலை செய்பவர் யார்?” என்று அம் மனிதர் கேட்டார். யூதர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள்; பிறகு கிறித்தவர்கள் ஒவ்வொரு கீராத் கூலிக்காக வேலை செய்தார்கள். பிறகு அஸ்ரிலிருந்து சூரியன் மறையும்வரை, இரண்டிரண்டு கீராத்கள் கூலிக்கு (முஸ்லிம்களாகிய) நீங்கள்தான் வேலை செய்கிறீர்கள். எனவே, யூதர்களும் கிறித்தவர்களும் கோபமுற்று, ‘‘நாங்கள் வேலை செய்தது அதிகம்; கூலியோ குறைவு” என்றனர். அதற்கு அவர், ‘‘உங்கள் உரிமையில் எதையேனும் குறைத்து உங்களுக்கு நான் அநீதியிழைத்தேனா?” என்று கேட்டார். அவர்கள், ‘‘இல்லை” என்றனர். ‘‘சிலருக்கு நான் அதிகமாகக் கொடுப்பது எனது தனிப்பட்ட அருளாகும்; நான் விரும்பியவருக்கு அதைக் கொடுப்பேன்” என்று அம்மனிதர் கூறினார். இதை அப்துல்லாஹ் பின் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள். அத்தியாயம் :
حدثنا اسماعيل بن ابي اويس، قال حدثني مالك، عن عبد الله بن دينار، مولى عبد الله بن عمر عن عبد الله بن عمر بن الخطاب رضى الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال " انما مثلكم واليهود والنصارى كرجل استعمل عمالا فقال من يعمل لي الى نصف النهار على قيراط قيراط فعملت اليهود على قيراط قيراط، ثم عملت النصارى على قيراط قيراط، ثم انتم الذين تعملون من صلاة العصر الى مغارب الشمس على قيراطين قيراطين، فغضبت اليهود والنصارى وقالوا نحن اكثر عملا واقل عطاء، قال هل ظلمتكم من حقكم شييا قالوا لا. فقال فذلك فضلي اوتيه من اشاء
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: ‘‘மூவருக்கெதிராக மறுமை நாளில் நான் வழக்குரைப்பேன்” என்று உயர்ந் தோன் அல்லாஹ் கூறுகின்றான்: ஒருவர் என் பெயரால் சத்தியம் செய்துவிட்டுப் பிறகு மோசடி செய்தவர். மற்றொருவர், சுதந்திரமான மனிதனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவர்; அடுத்தவர், கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் (நன்கு) வேலை வாங்கிக் கொண்டு, கூலி கொடுக்காமல் இருந்தவர் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்). இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا يوسف بن محمد، قال حدثني يحيى بن سليم، عن اسماعيل بن امية، عن سعيد بن ابي سعيد، عن ابي هريرة رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " قال الله تعالى ثلاثة انا خصمهم يوم القيامة رجل اعطى بي ثم غدر، ورجل باع حرا فاكل ثمنه، ورجل استاجر اجيرا فاستوفى منه ولم يعطه اجره
நபி (ஸல்) அவர்கள்கூறினார்கள்: முஸ்லிம்கள், யூதர்கள், கிறித்தவர்கள் ஆகியோரின் நிலையானது, குறிப்பிட்ட கூலிக்கு, ஒருநாள் முழுக்க இரவுவரை தனக்காக வேலை செய்யும்படி ஒரு மனிதரால் அமர்த்தப்பட்ட கூட்டத்தாரின் நிலையை ஒத்திருக்கிறது. (அவர் முதலில் ஒரு கூட்டத்தாரை கூலிக்கு அமர்த்தினார்;) அவர்கள் நண்பகல்வரை வேலை செய்துவிட்டு, ‘‘நீர் எங்களுக்குத் தருவதாகக் கூறிய கூலி எங்களுக்குத் தேவையில்லை; (இதுவரை) நாங்கள் செய்த வேலை வீண்தான்” எனக் கூறினார்கள். அப்போது கூலிக்கு அமர்த்தியவர் அவர்களிடம், ‘‘இவ்வாறு செய்யாதீர்கள்! உங்கள் எஞ்சிய வேலைகளையும் பூர்த்தி செய்யுங்கள்! கூலியையும் முழுமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள்!” எனக் கூறினார். அவர்கள் (ஏற்க) மறுத்து (வேலையை) விட்டுவிட்டனர். அவர்களுக்குப்பின், வேறுசிலரை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்களிடம் அவர், ‘‘இன்று எஞ்சியுள்ள நேரத்தைப் பூர்த்தி செய்யுங்கள்; அவர்களுக்குத் தருவதாகக் கூறிய கூலியை உங்களுக்குத் தருகிறேன்” என்றார். அவர்கள் அஸ்ர் (மாலை) தொழுகை வரை வேலை செய்துவிட்டு, ‘‘உமக்காக நாங்கள் செய்த வேலை வீண்தான். எங்களுக்காக நீர் நிர்ணயித்த கூலியையும் நீரே வைத்துக்கொள்ளும்!’ என்றனர். அவர் ‘‘உங்கள் எஞ்சிய வேலையைப் பூர்த்தி செய்யுங்கள்! பகலில் இன்னும் சிறிது நேரமே மிச்சமுள்ளது” என அவர்களிடம் கூறினார். அவர்கள் (வேலை செய்ய) மறுத்துவிட்டனர். பிறகு அன்றைய பொழுதில் எஞ்சிய நேரத்தில் வேலை செய்வதற்காக மற்றொரு கூட்டத்தாரை அவர் வேலைக்கு அமர்த்தினார். அவர்கள் சூரியன் மறையும்வரை எஞ்சிய நேரத்தில் வேலை செய்தனர். இதனால், அவர்கள் முதலிரண்டு கூட்டத்தாரின் கூலியையும் சேர்த்து முழுமையாகப் பெற்றுக் கொண்டனர். இதுதான் (முஸ்லிம்களாகிய) இவர்களுக்கும் இவர்கள் ஏற்றுக்கொண்ட (இஸ்லாம் என்ற) ஒளிக்கும் உவமையாகும்.8 இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن العلاء، حدثنا ابو اسامة، عن بريد، عن ابي بردة، عن ابي موسى رضى الله عنه عن النبي صلى الله عليه وسلم قال " مثل المسلمين واليهود والنصارى كمثل رجل استاجر قوما يعملون له عملا يوما الى الليل على اجر معلوم، فعملوا له الى نصف النهار فقالوا لا حاجة لنا الى اجرك الذي شرطت لنا، وما عملنا باطل، فقال لهم لا تفعلوا اكملوا بقية عملكم، وخذوا اجركم كاملا، فابوا وتركوا، واستاجر اجيرين بعدهم فقال لهما اكملا بقية يومكما هذا، ولكما الذي شرطت لهم من الاجر. فعملوا حتى اذا كان حين صلاة العصر قالا لك ما عملنا باطل، ولك الاجر الذي جعلت لنا فيه. فقال لهما اكملا بقية عملكما، فان ما بقي من النهار شىء يسير. فابيا، واستاجر قوما ان يعملوا له بقية يومهم، فعملوا بقية يومهم حتى غابت الشمس، واستكملوا اجر الفريقين كليهما، فذلك مثلهم ومثل ما قبلوا من هذا النور
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களில் மூன்று பேர் (ஒன்றாக) நடந்து சென்றனர்; இறுதியில் (மலையில் இருந்த) குகையொன் றில் இரவைக் கழிப்பதற்காக தஞ்சம் புகுந்தனர்; அதில் அவர்கள் நுழைந்தவுடன் மலையிலிருந்து பெரும் பாறையொன்று உருண்டுவந்து குகையை அடைத்துவிட்டது. அப்போது அவர்கள், ‘‘நீங்கள் செய்த நற்செயலைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் உங்களை இந்தப் பாறை’லிருந்து காப்பாற்றாது” என்று தமக்குள் கூறிக் கொண்டனர். அவர்களில் ஒருவர், ‘‘இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் அவர்களுக்குப் பால் (கறந்து) கொடுப்பதற்குமுன் என் குடும்பத்தாருக்கோ பணியாளர்களுக்கோ பால் கொடுப்பதில்லை. ஒரு நாள் ஒன்றைத் தேடி தொலை தூரத்துக்குச் சென்றதால், என் தாயும் தந்தையும் உறங்கிய பிறகே நான் திரும்ப முடிந்தது. அவர்களுக்காக நான் பால் கறந்து வந்தபோது, அவ்விரு வரும் உறங்கிக்கொண்டிருக்கக் கண்டேன். அவர்களுக்குப் பால் கொடுப்பதற்குமுன், என் குடும்பத்தாருக்கோ என் அடிமை களுக்கோ பால் கொடுப்பதை நான் விரும்பவில்லை. எனவே, அவர்கள் விழிப்பதை எதிர்பார்த்து கைகளில் பாத்திரத்தை ஏந்திக்கொண்டு காத்திருந் தேன். வைகறை நேரம் வந்துவிட்டது. அப்போதுதான் அவர்கள் விழித்தார்கள்; பின்னர் தமக்குரிய பாலை (வாங்கி) அருந்தினர். இறைவா! நான் இதை உனது அன்பை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக் கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்றுவாயாக!” எனப் பிரார்த்தித்தார். உடனே பாறை சற்று விலகியது. ஆனால், அவர்களால் வெளியேற இயலவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மற்றொருவர், ‘‘இறைவா! என் தந்தை யின் சகோதரரின் மகள் ஒருத்தி இருந்தாள்; அவள் எனக்கு மனிதர்களிலேயே மிகவும் விருப்பமானவளாக இருந்தாள். நான் அவளை அடைய விரும்பினேன்; அவள் என்னிடமிருந்து விலகிச் சென்றாள். அவளுக்குப் பஞ்சம் நிறைந்த ஆண்டு ஒன்று வந்தபோது, (பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு) என்னிடம் வந்தாள்; நான் அவளை அடைய அவள் எனக்கு வழிவிட வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் நூற்று இருபது பொற்காசுகளை அவளுக்கு நான் கொடுத்தேன். அவளை என் வசப்படுத்தி (உறவு கொள்ள முனைந்து)விட்டபோது, ‘‘முத்திரையை அதற்கான (மணபந்தத்தின்) உரிமையின்றி உடைப்பதற்கு உனக்கு நான் அனுமதி தரமாட்டேன்” என்று அவள் கூறி விட்டாள். உடனே அவளுடன் உறவு கொள்ளும் பாவத்(தைச் செய்வ)திலிருந்து விலகிக் கொண்டேன்; அவள் எனக்கு மனிதர்களிலேயே மிகவும் விருப்பமானவளாக இருந்தும் அவளை விட்டுத் திரும்பி விட்டேன்; நான் அவளுக்குக் கொடுத்த தங்க நாயணத்தை (அவளிடமே) விட்டு விட்டேன். இறைவா! உனது அன்பை நாடி இதை நான் செய்திருந்தால், நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்றுவாயாக!” என்று பிரார்த்தித்தார். உடனே பாறை (சற்று) விலகியது; ஆயினும், அவர்களால் வெளியேற முடியவில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்றாமவர், ‘‘இறைவா! நான் சில ஆட்களைக் கூலிக்கு அமர்த்தி, அவர்களது கூலியையும் கொடுத்தேன். ஆனால், (அவர்களில்) ஒரே ஒருவர் மட்டும் தமது கூலியை (வாங்காமல்) விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அவரது கூலியை நான் முதலீடு செய்து, அதனால் செல்வம் பெருகியிருந்த நிலையில் சிறிது காலத்திற்குப்பின் அவர் என்னிடம் வந்தார். ‘‘அல்லாஹ்வின் அடியாரே! எனது கூலியை எனக்குக் கொடுப்பீராக!” என்று அவர் கூறினார். ‘‘நீர் பார்க்கின்ற இந்த ஒட்டகங்கள், மாடுகள், ஆடுகள், அடிமைகள் எல்லாம் உமது கூலியிலிருந்து கிடைத்தவைதான்” என்று நான் கூறினேன். அதற்கு அவர் ‘‘அல்லாஹ்வின் அடியாரே! என்னைக் கேலி செய்யாதீர்!” என்றார். ‘‘நான் உம்மைக் கேலி செய்யவில்லை” என்று நான் கூறினேன். அவர் அனைத்தையும் ஒன்று விடாமல் எடுத்துக்கொண்டு ஓட்டிச் சென்றுவிட்டார். இறைவா! இதை நான் உனது அன்பை நாடிச் செய்திருந்தால் நாங்கள் சிக்கிக்கொண்டிருக்கும் இந்தப் பாறையை எங்களைவிட்டு அகற்றுவாயாக!” எனப் பிரார்த்தித்தார். உடனே பாறை முழுமையாக விலகியது. அவர்கள் வெளியேறிச் சென்றனர். இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். அத்தியாயம் :
அபூமஸ்ஊத் அல்அன்சாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யும்படி எங்களுக்குக் கட்டளை யிட்டால், எங்களில் ஒருவர் கடைவீதிக்குச் சென்று, சுமைதூக்கி இரு கையளவு (ஒரு ‘முத்’) தானியம் கூலியாகப் பெற்று அதைத் தர்மம் செய்வார். ஆனால், இன்று அவர்களில் சிலருக்கு நிச்சயமாக ஓர் இலட்சம் பொற்காசுகள் உள்ளன. ‘‘அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் தம் மையே இவ்வாறு (‘அவர்களில் சிலருக்கு’ என்று) குறிப்பிட்டதாக நாம் கருதுகிறோம்” என அறிவிப்பாளர் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அத்தியாயம் :
حدثنا سعيد بن يحيى بن سعيد، حدثنا ابي، حدثنا الاعمش، عن شقيق، عن ابي مسعود الانصاري رضى الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا امر بالصدقة انطلق احدنا الى السوق فيحامل فيصيب المد، وان لبعضهم لماية الف، قال ما نراه الا نفسه
தாவூஸ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: சந்தைக்கு வரும் வணிகர்களை இடைமறித்து வாங்குவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். ‘‘கிராம வாசிக்காக உள்ளூர்வாசி விற்றுத் தரக் கூடாது” என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான், ‘‘இப்னு அப்பாஸ் அவர்களே! கிராமவாசிக்காக உள்ளூர்வாசி விற்கக் கூடாது என்பதன் பொருள் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இடைத் தரகராக இருக்கக் கூடாது’ என்றார்கள்.9 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا عبد الواحد، حدثنا معمر، عن ابن طاوس، عن ابيه، عن ابن عباس رضى الله عنهما نهى رسول الله صلى الله عليه وسلم ان يتلقى الركبان، ولا يبيع حاضر لباد. قلت يا ابن عباس ما قوله لا يبيع حاضر لباد قال لا يكون له سمسارا
கப்பாப் பின் அல்அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் (இரும்பு வேலை தெரிந்த) கொல்லனாக இருந்தேன்; (இணை வைப்பாளரான)ஆஸ் பின் வாயில் என்பவரிடம் கூலிக்கு வேலை செய்தேன். எனக்குரிய கூலி அவரிடம் தேங்கிவிட்டது; அதை கேட்பதற்காக அவரிடம் நான் சென்றபோது அவர், ‘‘நீர் முஹம்மதை நிராகரிக்காமல் இருக்கும் வரை உமக்குரியதை நான் தரமாட்டேன்” என்றார். நான், ‘‘நீ செத்து, பிறகு (மறுமையில் உயிருடன்) எழுப்பப்படும்வரை அல்லாஹ்வின் மீதாணையாக அது நடக்காது” என்றேன். ‘‘நான் செத்து, திரும்ப (உயிருடன்) எழுப்பப்படுவேனா?” என்று அவர் கேட்டார். நான், ‘‘ஆம்!” என்றேன். அதற்கு அவர், ‘‘அப்படியானால் அங்கே எனக்குப் பொருட்செல்வமும் மக்கட் செல்வமும் கிடைக்கும். அப்போது உமக்குரியதைத் தந்துவிடுகிறேன்” என்றார். அப்போதுதான், ‘‘நம் வசனங்களை நிராகரித்துவிட்டு, (மறுமையிலும்) நான், நிச்சயமாக பொருட்செல்வமும் மக்கள் செல்வமும் வழங்கப்படுவேன் என்று கூறியவனை (நபியே) நீர் பார்த்தீரா!” (19:77) எனும் வசனத்தை அல்லாஹ் அருளினான். அத்தியாயம் :
حدثنا عمر بن حفص، حدثنا ابي، حدثنا الاعمش، عن مسلم، عن مسروق، حدثنا خباب، قال كنت رجلا قينا فعملت للعاص بن وايل فاجتمع لي عنده فاتيته اتقاضاه فقال لا والله لا اقضيك حتى تكفر بمحمد. فقلت اما والله حتى تموت ثم تبعث فلا. قال واني لميت ثم مبعوث قلت نعم. قال فانه سيكون لي ثم مال وولد فاقضيك. فانزل الله تعالى {افرايت الذي كفر باياتنا وقال لاوتين مالا وولدا}
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபித்தோழர்களில் சிலர் ஒரு பயணம் மேற்கொண்டார்கள். அவர்கள் பயணம் செய்து (வழியில்) ஓர் அரபுக் குலத்தார் (தங்கியிருந்த இடத்துக்கு) அருகில் தங்கினார்கள். நபித்தோழர்கள் அக்குலத் தாரிடம் விருந்து கேட்டபோது அவர்களுக்கு விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அச்சயமம் அக்குலத்தாரின் தலைவனை தேள் கொட்டிவிட்டது. அவனுக்காக அவர்கள் எல்லா முயற்சி களையும் செய்துபார்த்தனர்; எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. அப்போது அவர்களில் சிலர், ‘‘இதோ! இங்கே நமக்கு அருகில் தங்கியிருக்கும் கூட்டத்தாரிடம் நீங்கள் சென்றால், அவர்களிடம் (இதற்கு மருந்து) ஏதேனும் இருக்கலாம்” என்று கூறினர். அவ்வாறே அவர்களும் நபித்தோழர் களிடம் வந்து, ‘‘கூட்டத்தாரே! எங்கள் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது; அவருக்காக அனைத்து முயற்சிகளையும் செய்தோம்; (எதுவுமே) அவருக்குப் பயன் அளிக்கவில்லை. உங்களில் எவரிடமாவது (மருந்து) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டனர். அப்போது, நபித்தோழர்களில் ஒருவர், ‘‘ஆம்! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஓதிப்பார்க்கிறேன்; என்றாலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உங்களிடம் விருந்து கேட்டு நீங்கள் விருந்து தராததால் எங்களுக்கென்று ஒரு கூலியை நீங்கள் தராமல் ஓதிப்பார்க்க முடியாது” என்றார். அவர்கள் (முப்பது ஆடுகள் கொண்ட) ஓர் ஆட்டு மந்தை அளிப்பதாகப் பேசி ஒப்பந்தம் செய்தனர். நபித்தோழர் ஒருவர், தேள் கொட்டப்பட்டவர்மீது ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்...’ என்று ஓதி (இலேசாக) உமிழ்ந்தார். உடனே பாதிக்கப்பட்டவர். கட்டுகளிலிருந்து அவிழ்த்து விடப்பட்டவரைப் போன்று நடக்க ஆரம்பித்தார். வேதனையின் அறிகுறியே அவரிடம் தென்படவில்லை. பிறகு, அவர்கள் பேசிய கூலியை முழுமையாகக் கொடுத்தார்கள். ‘‘இதைப் பங்கு வையுங்கள்” என்று ஒருவர் கேட்டபோது, ‘‘நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைக் கூறி, அவர்கள் என்ன கட்டளையிடுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளாமல் அவ்வாறு செய்யக் கூடாது” என்று ஓதிப்பார்த்தவர் கூறினார். நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்கள் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘‘அது (அல்ஹம்து அத்தியாயம்) ஓதிப்பார்க்கத் தக்கது என்று உமக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டுவிட்டு, ‘‘நீங்கள் செய்தது சரிதான்; அந்த ஆடுகளை உங்களுக்கிடையே பங்கிட்டுக்கொள்ளுங்கள்! உங்களுடன் எனக்கும் ஒரு பங்கை ஒதுக்குங்கள்” என்று கூறிவிட்டுச் சிரித்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அத்தியாயம் :
حدثنا ابو النعمان، حدثنا ابو عوانة، عن ابي بشر، عن ابي المتوكل، عن ابي سعيد رضى الله عنه قال انطلق نفر من اصحاب النبي صلى الله عليه وسلم في سفرة سافروها حتى نزلوا على حى من احياء العرب فاستضافوهم، فابوا ان يضيفوهم، فلدغ سيد ذلك الحى، فسعوا له بكل شىء لا ينفعه شىء، فقال بعضهم لو اتيتم هولاء الرهط الذين نزلوا لعله ان يكون عند بعضهم شىء، فاتوهم، فقالوا يا ايها الرهط، ان سيدنا لدغ، وسعينا له بكل شىء لا ينفعه، فهل عند احد منكم من شىء فقال بعضهم نعم والله اني لارقي، ولكن والله لقد استضفناكم فلم تضيفونا، فما انا براق لكم حتى تجعلوا لنا جعلا. فصالحوهم على قطيع من الغنم، فانطلق يتفل عليه ويقرا {الحمد لله رب العالمين} فكانما نشط من عقال، فانطلق يمشي وما به قلبة، قال فاوفوهم جعلهم الذي صالحوهم عليه، فقال بعضهم اقسموا. فقال الذي رقى لا تفعلوا، حتى ناتي النبي صلى الله عليه وسلم فنذكر له الذي كان، فننظر ما يامرنا. فقدموا على رسول الله صلى الله عليه وسلم فذكروا له، فقال " وما يدريك انها رقية ثم قال قد اصبتم اقسموا واضربوا لي معكم سهما ". فضحك رسول الله صلى الله عليه وسلم. وقال شعبة حدثنا ابو بشر سمعت ابا المتوكل بهذا
அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (அடிமையாயிருந்த) அபூதைபா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு குருதி உறிஞ்சி எடுத்தார்கள்; அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு ‘ஸாஉ’ அல்லது இரண்டு ‘ஸாஉ’கள் உணவு கொடுக்குமாறு கட்டளையிட்டார்கள். மேலும், அவருடைய உரிமையாளர்களிடம் பேசி, அவர் செலுத்த வேண்டிய வரியைக் குறைத் தார்கள். அத்தியாயம் :
حدثنا محمد بن يوسف، حدثنا سفيان، عن حميد الطويل، عن انس بن مالك رضى الله عنه قال حجم ابو طيبة النبي صلى الله عليه وسلم، فامر له بصاع او صاعين من طعام، وكلم مواليه فخفف عن غلته او ضريبته
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுத்தவருக்கு, அவருக்கான கூலியைக் கொடுத்தார்கள். அத்தியாயம் :
حدثنا موسى بن اسماعيل، حدثنا وهيب، حدثنا ابن طاوس، عن ابيه، عن ابن عباس رضى الله عنهما قال احتجم النبي صلى الله عليه وسلم، واعطى الحجام اجره
இப்னு அப்பாஸ் அவர்கள் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துக்கொண்டார்கள். குருதி உறிஞ்சி எடுத்தவருக்கான கூலியை அவரிடம் கொடுத்தார்கள். அ(வ்வாறு குருதி உறிஞ்சி எடுப்பதற்காகக் கூலி பெறுவ)தை வெறுக்கத் தக்கதாகக் கருதியிருந்தால் நபி (ஸல்) அவர்கள் அவருக்குக் (கூலி) கொடுத்திருக்கமாட்டார்கள்.13 அத்தியாயம் :
حدثنا مسدد، حدثنا يزيد بن زريع، عن خالد، عن عكرمة، عن ابن عباس رضى الله عنهما قال احتجم النبي صلى الله عليه وسلم واعطى الحجام اجره، ولو علم كراهية لم يعطه
حدثنا ابو اليمان، اخبرنا شعيب، عن الزهري، حدثني سالم بن عبد الله، ان عبد الله بن عمر رضى الله عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول " انطلق ثلاثة رهط ممن كان قبلكم حتى اووا المبيت الى غار فدخلوه، فانحدرت صخرة من الجبل فسدت عليهم الغار فقالوا انه لا ينجيكم من هذه الصخرة الا ان تدعوا الله بصالح اعمالكم. فقال رجل منهم اللهم كان لي ابوان شيخان كبيران، وكنت لا اغبق قبلهما اهلا ولا مالا، فناى بي في طلب شىء يوما، فلم ارح عليهما حتى ناما، فحلبت لهما غبوقهما فوجدتهما نايمين وكرهت ان اغبق قبلهما اهلا او مالا، فلبثت والقدح على يدى انتظر استيقاظهما حتى برق الفجر، فاستيقظا فشربا غبوقهما، اللهم ان كنت فعلت ذلك ابتغاء وجهك ففرج عنا ما نحن فيه من هذه الصخرة، فانفرجت شييا لا يستطيعون الخروج ". قال النبي صلى الله عليه وسلم " وقال الاخر اللهم كانت لي بنت عم كانت احب الناس الى، فاردتها عن نفسها، فامتنعت مني حتى المت بها سنة من السنين، فجاءتني فاعطيتها عشرين وماية دينار على ان تخلي بيني وبين نفسها، ففعلت حتى اذا قدرت عليها قالت لا احل لك ان تفض الخاتم الا بحقه. فتحرجت من الوقوع عليها، فانصرفت عنها وهى احب الناس الى وتركت الذهب الذي اعطيتها، اللهم ان كنت فعلت ذلك ابتغاء وجهك فافرج عنا ما نحن فيه. فانفرجت الصخرة، غير انهم لا يستطيعون الخروج منها. قال النبي صلى الله عليه وسلم وقال الثالث اللهم اني استاجرت اجراء فاعطيتهم اجرهم، غير رجل واحد ترك الذي له وذهب فثمرت اجره حتى كثرت منه الاموال، فجاءني بعد حين فقال يا عبد الله اد الى اجري. فقلت له كل ما ترى من اجرك من الابل والبقر والغنم والرقيق. فقال يا عبد الله لا تستهزي بي. فقلت اني لا استهزي بك. فاخذه كله فاستاقه فلم يترك منه شييا، اللهم فان كنت فعلت ذلك ابتغاء وجهك فافرج عنا ما نحن فيه. فانفرجت الصخرة فخرجوا يمشون